குருவாயூர் கோயில் போயிருந்தீங்கன்னா ஏசுதாஸ் பாட்டு பல கேட்டிருப்பீங்க. காலங்காத்தால 5 மணிக்கெல்லாம் எழுந்து சில் தண்ணில குளிச்சு சந்தனம் பூசிக்கிட்டு கோயில் நடையில் நடந்து போகும்போது, சைட்ல இருக்கர கேசட் கடையில ஏசுதாஸ், சித்ரா பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும்.
சன்தன வாசனையும், உடன் நடந்து செல்லும் கேரள வாசிகளும், வாசலில் அலங்காரத்துடன் நிற்கும் பெரிய யானைகளும், அந்த கோயிலின் மென்மையும், அமக்களமான ரகம்.
அந்த ரம்ய சூழல் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவிசிச்சாதான் புரியும்.
சில வருஷங்களுக்கு முன் குருவாயூர் சென்ற போது, ஏசுதாஸின் ஒரு பாட்டு, கட்டிப்போட்டு இழுத்துது. ஒண்ணும் புரியலன்னாலும், அவரின் குரலும், அந்த பாட்டின் இனிமையும் ஆளக் கரச்சுடும். குடஜாத்ரியில் (Kudajadriyil) என்று தொடங்கும் பாடல்.
இன்னிக்கு அந்த பாட்ட தேடிட்டு இருக்கும்போது, ஒரு பெண் அந்த பாடலை பாடிய வீடியோ கிடைத்தது (some Asianet program). ரொம்ப அழகா பாடியிருக்காங்க Anne Amie.
கேட்டுப் பாருங்க.
ஏசுதாஸ் பாடியது, யாரிடமாவது இருந்தால், வலையேற்றவும் :) எங்க கெடைக்குதுன்னு சொன்னீங்கன்னாலும் நல்லா இருக்கும்.
Anne Amie பாடிய இன்னொரு மலையாளப் பாடல். இதுவும் நல்லா இருந்தது. இந்த பாடலை கேட்டு ஜட்ஜஸ் கொடுத்த விளக்கங்களும் அருமை. :)
MSV petition படித்து உங்கள் சப்போர்ட் கொடுங்கள்!
Jana Gana Mana பெயர் பதியாவதங்க, பெயர் பதிந்து பாடல் அனுப்பாதவங்க, எல்லாருக்கும் டூ!
4 comments:
முதல் பாட்டு ரொம்ப சூப்பர் சார்!!
ரொம்ப நல்லாவே பாடியிருக்காங்க!!
இதெ பாடலை யேசுதாஸ் பாடியிருந்தால் எப்படி இருக்கும்னு நினைக்கும்போதே புல்லரிக்குது!! :-)
இணையத்தில் கிடைத்தால் தயவு செய்து சொல்லுங்கள்!! :-)
கண்டிப்பா சொல்றேன் சார்.
கானா பிரபாவக் கேட்டுப் பாக்கலாம் :)
amman song?
அம்மன்? ஐ திங்க் ஸோ! :)
Post a Comment