அசத்தலா முடிஞ்சிருக்கு பட்டறை.
நேரடி ரிப்போர்ட் ஒவ்வொண்ணும் பாக்க பாக்க, அடடா மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணிச்சு.
ரொம்ப அழகா ஆர்கனைஸ் பண்ணி, நடத்தியிருக்காங்க.
இதன் மூலம் புதிய பதிவர்களின் வருகை அதிகரிக்கும்னே தோணுது.
நல்லது.
கொஞ்ச நாளைக்கு மொக்கை பதிவுகள் போடரது கம்மி பண்ணிக்கணும். புதுசா வரவங்க அத பாத்து, "இதுக்கா இந்த பில்டப்புன்னு" திரும்ப ஓடிடக் கூடாது :) ( நீ மொதல்ல நிறுத்துன்னு சொல்றது, நல்லாவே கேக்குது :) ).
பாஸ்டன் பாலா பட்டறை பற்றி வரும் எல்லா பதிவையும் தொகுக்கறாரு இங்கே.
நான் புதுசா சொல்ல ஒண்ணும் இல்ல, அங்க போய் எல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.
அருமையா நடத்தி முடிச்ச நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றீஸும்.
லேசுபட்ட காரியம் இல்ல நீங்க எல்லாரும் செஞ்சது. Hats off!
நீங்கள் பட்டறை பத்தி என்ன நெனைக்கறீங்க? அடுத்த பட்டறை எங்கே வெக்கலாம்?
என் பங்குக்கு ஒரு சர்வே, கீழே :)
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
8 comments:
neenga varaadhadhudhaan periya kurai.
nalla velai nee varala. huge success.
Bad anony's!
chummaa.
சர்வேசன்,
எல்லாத்துக்கும் சர்வேவா. நீங்க என்ன சர்வேயர் ஜெனரல் ஆஃப் இந்தியாவா? முதல் சர்வேக்கு அட்டகாச வெற்றி எனப்போட்டேன். குறைகளை காணாக்கூடது இதில் எல்லாம், தன்னார்வ செயல் இது. அடுத்து நடக்கும் பட்டறைக்கு உங்கள் தேர்வு எதுவும் எனக்கு ஒத்து போகவில்லை.
சென்னை, அடுத்து சென்னைக்கு அன்மையில் உள்ள அடுத்து உள்ள ஒரு நகரம் அல்லது சென்னைப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில்(இது மிக முக்கியம், அடுத்த கட்டத்திற்கு வலைப்பதிவை நகர்த்த உதவும்) வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாம்(அதான் பட்டரை) என அப்படியே நகர்தல் நன்மை பயக்கும். சும்மா இங்கே இருந்து இன்னொரு நகரம் என ஜம்ப் அடிச்சா என்ன பயன்.
இப்போ சென்னை மாநகரை வலைப்பதிவு படை கைப்பற்றியாச்சு அடுத்தது அன்டை நகரை தான் குறி வைக்கனும்! உ.ம் பாண்டி, கடலூர் என பட்டறைக்கான இடத்தினை மாற்றலாம் அல்லது வேலூர் கூட போகலாம்.
//எல்லாத்துக்கும் சர்வேவா. நீங்க என்ன சர்வேயர் ஜெனரல் ஆஃப் இந்தியாவா?//
Yes- you didn't knew? :)
என்னங்க சிங்கையை அப்படியே ஒரு ஓரமாக தள்ளீட்டிங்க.
சுமார் 12 பேராவது திரட்டிட மாட்டோம். :-))
வடுவூர்,
சிங்கைய விட்டது தப்புதான்.
அடுத்ததுக்கு அடுத்ததுல போட்டுடலாம் :)
Post a Comment