ரொம்ப நாளைக்கப்பரம் நம்ம பதிவர் வட்டத்துல ஒரு நல்ல கதை வந்திருக்கு.
Sydney Porterனு ஒரு எழுத்தாளர் இருந்தாரு.
அவர் சிறுகதைகள் ரொம்பப் ப்ரபலம்.
அதுவும் குறிப்பா, இவரின் கதைகள் ஒவ்வொண்ணும், படிக்கவே விறு விறுன்னு இருக்கும். ஆரம்பிச்சதும், டாப் கியர்ல ஓடி, திடீர்னு க்ளைமாக்ஸ் பாத்தா, நம்ம நெனச்சே பாக்க முடியாத மாதிரி முடியும்.
O-Henryன்ற புனைப் பெயர்ல எழுதர Sydney Porterன் இந்த திடீர்-திருப்பம் கொண்ட கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
திடீர்-திருப்பம் கொண்ட கதைகளை O-Henry turn கொண்ட கதைன்னு சொல்லும் அளவுக்கும், இவரின் இந்த 'ட்விஸ்ட்' ப்ரபல்யம்.
பள்ளிக்கூடக் காலத்துல இவரின் இரண்டு கதைகள் படித்த ஞாபகம் இருக்கு.
அந்த மாதிரி ஸ்டைலில் நம்ம செல்வன் ஒரு கதை எழுதியிருக்காரு.
தேன்கூடு சிறுகதைப் போட்டி நடத்திய காலத்தில், மாசத்துக்கு மாசம் வித்யாசமா, பத்து பதினைந்து நல்ல கதைகள் தேறிட்டிருந்தது. (எம்மையும் எழுத்தாளனாக்கிய காலமல்லோ ;) )
அழகான, ஆரோக்ய சூழல் இருந்த காலம் எல்லாம் மலையேறிப் போய், கூடைக்குள் நண்டுகள் போல் நம் பதிவுலகில் நிலை மாறிக் கொண்டு வருகிறது. நல்ல பொழுது போக்கு விஷயங்கள் படிக்க, விகடனுக்கும், குமுதத்துக்கும் அல்லாட வேண்டியிருக்கு.
ஆனாலும், அவ்வப்போது தோன்றும் அழகு கவிதைகளும், ஆழ்ந்த சிந்தனைகளும், நையாண்டித் துணுக்குகளும், மொக்கு மொக்கென்று மொக்கும் மொக்கைகளும், மனதுக்கு திருப்தி அளிக்காமல் இல்லை.
இந்த வரிசையில் சமீபத்தில் படித்த செல்வனின் விறு விறு கதையும் ஒன்று. படிச்சுப் பாருங்க.
பி.கு: "சிறுகதை 2007" போட்டி வெச்சு ரூ.4000 (ரூ.1000 கதை எழுதுபவருக்கு, ரூ.3000 உதவும் கரங்களுக்கு) பரிசு கொடுக்கலாம்னு ஐடியா. போட்டி வச்சா கலந்துக்குவீங்களா? ஓட்டுங்க, ஒரு பின்னூட்டமும் போடுங்க. இந்த வருஷத்த ஆரோக்யமா, கலக்கலா முடிப்போம். நன்றி! (ஸ்பான்ஸர்ஸ் வரவேற்க்கப்படுகிறார்கள் - II, III பரிசெல்லாம் கொடுத்து கலக்கலாம் ;) )
பி.கு: பின்னூட்டத்தில், கதைப் போட்டியில் கலந்துக்குவீங்களான்னு மறக்காம சொல்லுங்க. அப்படியே, சமீபத்தில் நீங்கள் படித்ததில் பிடித்தது என்னதுன்னும் சொல்லிட்டுப் போங்க. ;)
16 comments:
$ல வேண்டாம். ரூபாய்ல பரிசு கொடுத்தா நான் வாரென்.
அனானி, எல்லாம் நேரம் ;)
அப்படியே செஞ்சுரலாம் : )
கலக்கிப் புடுவோம்னு சொன்ன ரெண்டு பேரும், பின்னூட்டாம போயிட்டீங்களே சாமிகளா.. பின்னூட்டங்கப்பா.
20 கதாசிரியர்கள் தேறினா, போட்டி நன்னா இருக்கும் ;)
போட்டியிலே என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். :) :) :0
சர்வ்ஸ்,
கதிரு எழுதிய மாணிக்கம் பொண்டாட்டி படிச்சி பாருங்க...
நான் சமிபத்திலே படித்து ரொம்பவே ரசித்த கதை இது... :)
வினையூக்கி,
கவலையே படாதீங்க, கண்டிப்பா கோதால சேத்துக்கறேன். இப்பதைக்க நீங்க தான் கோதால இருக்கீங்க.
இதுவரை வாக்களித்த மீதி ஏழு பேரு யாருன்னு சொல்லாம போயிட்டாங்க ;)
ராம், தம்பியின் கதையை அளித்தமைக்கு நன்னி. படிச்சுப் பாக்கறேன். :) நீங்க கத எழுதலியா?
அமுக தொண்டரே,
பெங்களூர்ல இருந்த மெரட்டராங்களா?
இப்படி மெரட்டரவங்களெல்லாம் புஸ்ஸுனு புஸ்வாணமா போறததான் பாத்திருக்கமே.
Ignore them, and continue blogging.
கொஞ்ச நாள் கொறச்சிட்டு வால சுருட்டிட்டு ஓடிடுவாங்க.
ஆரோக்ய சூழல் உருவாகிக்க்ட்டுதானுங்க இருக்கு.
இல்லன்னா, உருவாக்குவோம் :)
(தொலைபேசி எண், ஐ.பி, இதெல்லாம் இருந்ததால உங்க பின்னூட்டம் போடல).
கதை எழுதரவங்க இல்லியா?
/ராம், தம்பியின் கதையை அளித்தமைக்கு நன்னி. படிச்சுப் பாக்கறேன். :) நீங்க கத எழுதலியா?///
தலைப்பு சொல்லுங்க..... முயற்சி பண்ணி பார்க்கலாம்.... :)
சிங்கம் களத்திலே இறங்கும்
Ram,
//தலைப்பு சொல்லுங்க..... முயற்சி பண்ணி பார்க்கலாம்.... :)//
:) Arivippu koodiya viraivil varum :)
Murali Kannan,
Singleaa vandhu asaththunga :)
போட்டியிலே என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
நானும் கோதாவில் குதிக்கிறேன்....
கதையுடன், மிக விரைவில்....
ஓ கதை எழுதினா இங்க பின்னூட்டனுமா?
ஊட்டீட்டேன்
என்னயும் சேத்துபிங்களா அங்கிள்? :P
Post a Comment