recent posts...

Saturday, October 06, 2007

எதிர் கவிதை - திருந்தாத ஜென்மமடா நீ!

ஒருத்தர் சூப்பரா ஒரு கவிதை எழுதினா, அதே ஸ்டைலில் நமக்கு தெரிஞ்சத கிறுக்கி எழுதர இன்னோரு கவிதை தான் "எதிர் கவிதை" - (definition உதவி காயத்ரி). ஒரிஜினலில் இருக்கும் சுவை இருக்கக் கூடாது (well, முயற்சி பண்ணாலும் சுவையா எழுத நமக்கு வராதுங்கரது வேற விஷயம்), ஒரு நையாண்டி கலந்த நடை அவசியம்.

சுயமா கவிதை எழுதரது பயங்கர கஷ்டம். ஆனா, இந்த எதிர் கவிதை எழுதரது ரொம்ப ஈஸி.

காயத்ரி எழுதிய முதன் முதலாக என்ற கவிதைக்கான எனது எதிர் கவிதை "திருந்தாத ஜென்மம் நீ!", கீழே.
படிச்சுட்டு கருத்ஸ் சொல்லுங்க.

---------- ---------- ---------- ----------
சுள்ளென்ற கத்திரி வெயில் போலவும்,
வெந்த புண்ணில் மிளகாய் பொடி போலவும்,
நறுக்கென்ற கிள்ளு போலவும்,
சூப்பர் இருட்டடி போலவும்,

உன்னை நையப் புடைக்க வேண்டி
நான் தீட்டிய திட்டங்களெல்லாம் வீணாய்ப் போயின

மழையில் நனையும் எருமை நீ,
கத்திரியில் சன் பாத் எடுக்கும் காக்கை நீ,

சரி தான்,

திருந்தாத ஜென்மம் நீயெனத்தெரிந்த பின்
வேறென்ன செய்ய,

சீ என்று விட்டுத்தள்ளுவதைத் தவிர.
---------- ---------- ---------- ----------

உங்கள் கனத்த கரவொலிக்கு நன்றி நன்றி.
ஹி ஹி, அடிக்க வராதீங்க, அப்படியே, எனது முந்தைய படைப்புகளையும் படிக்க தவறாதீர்கள்

1) காயத்ரியின் இழந்த மழைக்கான எதிர் கவிதை, இழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு

2) நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடிக்கான எதிர் கவிதை, சீ... நீ எனக்கு வேண்டாமடா.

படித்து பரவசமடையுங்கள். அப்படியே, நீங்களும், உங்களுத்துத் தெரிஞ்சத எதிர்-கவிதையாக்கி, கவிஞராயிடுங்க.

புதுசா கவிதை எழுதரவங்க, என் கிட்ட சொன்னீங்கன்னா, அதுக்கு எதிர் கவிதை எழுதி மேலும் புகழ் சேர்க்க முயல்வேன் ;)


மீ த எஸ்கேப்! ;)

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின்னூட்டத்திலேயே பார்த்தேன்..
அதை தனியா பதிவே ஆக்கியாச்சா.. ;) நல்லாத்தான் இருக்கு திருந்தாத ஜென்மம் கவிதை.

SurveySan said...

முத்துலெட்சுமி,

சான்ஸூ கெடச்சா விடமாட்டோம்ல.

நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டீங்க, இனி எதிர் கவிதை மயம்தான்.
கவிஞர்களே உஷார் ;)

Anonymous said...

nalla irundhadhunnu solla mudiyala survs. aana paravalla.

SurveySan said...

அனானி, பரவால்லயா?

அதுவே, பெரிய மெடல் தான் :)

Anonymous said...

aana paravalla.

VSK said...

எதிர் லாவணி மாதிரி, எதிர் கவிதையா!

ம்ம்ம்,.... நானும் எழுதியிருக்கேன்!
:))

நல்லா இருக்கு!

SurveySan said...

நன்றி VSK,

டைம் இருக்கும்போது, எடுத்து வுடுங்க ஒண்ணு இதுக்கு ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................