---------------- -----------
கவுஜ1: இழந்த தென்னங்கண்ணு
---------------- -----------
ராவோடு ராவாக உள்ளே
வந்து போயிருக்கிறது ஏதோ ஒண்ணு
ஆசையாய் நட்ட செடியெல்லாம்
வானம் பாத்து மல்லாந்து கிடக்கு
பச்சைப் புல்வெளியெல்லாம்
திட்டு திட்டாய் பெயர்ந்து கிடக்கு
எட்டிச் சென்று தேடியபோது
'பச்சாக்' என்று காலில் ஒட்டிய சாணி
நினைவூட்டியது, இத்தனை நாளாய் டிமிக்கி கொடுக்கும்
பக்கத்துத் தெரு டில்லி எருமையை!
---------------- -----------
---------------- -----------
கவுஜ2: இழந்த மதிப்பெண் (உண்மைக் கதை, கிட்டத்தட்ட :) )
---------------- -----------
+2 கணக்கு பரீட்ச்சை
கடைசி மணி அடிக்க இன்னும் ஐந்து நிமிடம்
எழுதியது எல்லாம் சரியான்னு சரி பார்க்கணுமே
கடைசி நிமிடம் வரை பக்கத்து பெஞ்சு
ரமேஷிடம் என் பேப்பர்...
'மச்சி' குட்ரா என்று காப்பி அடிக்க
பிடுங்கியவன் இன்னும் திருப்பித் தரவில்லை
அதோ வாத்தி வந்துவிட்டார், 'டேய்ய்ய்ய்ய் குட்ரா' என்ற என் கதரல்
தூக்கி வீசினான் என் பேப்பரை ரமேஷ்.
அவசரக் கட்டு கட்டி, இந்தாங்க சார் என்றேன்
நூறு வந்துடும்டா என்றேன் ரமேஷிடம்
நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ரமேஷ்
அந்த வருட பள்ளி ஆண்டு புத்தகத்தில்
100 வாங்கிய ரமேஷின் படம்
ஆண்டு புத்தகம் கண்ணில் படும்போதெல்லாம்
நான் 1 மார்க் ஸில்லி-மிஸ்ட்டேக்கில் விட்டதை
நினைவுட்டியபடி நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான் ரமேஷு!
---------------- -----------
இந்த வார நட்சத்திரம் காயத்ரியின் இழந்த மழையைப் பாத்த எஃபெக்ட்டு.
நீ எனக்கு வேண்டாமடி எஃபெக்ட்டுல நான் எழுதிய, நீ எனக்கு வேண்டாமடாவும் படிங்க. அதுக்கு மற்ற கவிஞர்களின் பின்னூட்டக் கவிதையையும் படிங்க.
இதுக்கும், உங்க பாணீல, பின்னூட்டக் கவுஜயோ, தனிப் பதிவோ போடுங்கோ!
;)
இந்த மாதிரி எல்லாரும் ஒரு inspiration தரா மாதிரி எழுதுங்க! கவித கவித!!
6 comments:
THAANGAMUDIYALADA SAAMI
தாங்குங்க சாமி. இதோ இன்னொண்ணு, இந்தா புடி!
------- --------- ---------
டொக்கு டொக்கு என்று தட்ட
சதா சர்வகாலமும் லேப்டேப்பு என் மடியில்
எப்ப பாத்தாலும் என்னதான் டைப்பரியோ
ஆத்திரமேறிய தங்கமணியின் கொடூரப் பார்வை
ஹி ஹி இதோ முடிஞ்சிடுச்சு
ஒவ்வொரு நாளும் இதே கதை
வாசலோரம் பிஞ்சு கிடக்கும்
துடைப்பக் கட்டை
அடி வாங்கிய அன்றைய இரவை
நினைவூட்டியபடி காற்றில் சாய்ந்தாடுது
------- --------- ---------
மீ ஸ்லீப்பி,
ஹாவ் எ குட் டே/நைட்டு!
பை!
THAANGAMUDIYALADA SAAMI
THAANGAMUDIYALADA SAAMI - REPEATU
மீட்டர் பாலா?
பேரக் கேட்டாலே சும்மா அதுருதே? யாருங்கண்ணா நீங்க? ஊருக்கு புச்சா?
அனானி,
ஒரு வளர்ந்த வரும் கவிஞர வளர் வுட மாட்டீங்களே? :)
Post a Comment