recent posts...

Tuesday, September 11, 2007

அன்புமணியின் தடாலடி ஐடியா

MBBSன்னா என்னான்னு ஒருத்தர் கேட்டிருந்தாரு. ஒரு மூணு நிமிஷம் யோசிச்சு முக்கி மொனகுனாதான் அதன் விரிவாக்கமே ஓரளவுக்கு ஞாபகம் வந்துது.
அந்த அளவுக்கு தான் மருத்துவப் படிப்பைப் பற்றிய என் அறிவு.

நோவாம ஒரு எடத்துல குந்திக்கினு ஆணி புடுங்கரதுதான் நம்ம பலம். அதுவும், இப்பெல்லாம் ஆணி அதிகமா புடுங்காம பொழுத ஓட்டரதுல, அந்த பலமும் கொறஞ்சுக்கிட்டே வருது. வெறும் வாய் உதார் விட்டே, வாரத்துல பாதி ஓடிடுது.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

MBBS படிக்கர பசங்க, அஞ்சு வருஷ கால படிப்புக்குப் பிறகு, ஒரு வருடம், கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேவை செய்யவேண்டும் என்று நமது தடாலடி அமைச்சர் அன்புமணி ஐயாவின் ஐடியாவைப் பற்றிப் படித்தேன்.
மருத்துவம் படிக்கரதுக்கு நம்ம பசங்க படர கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல. +2 வரைக்கும் கன்னா பின்னான்னு படிக்கணும், நுழைவுத் தேர்வு, அதிகப்படியான செலவு, கடினமான பாட திட்டம் என்று வாட்டி எடுத்து விடும்.

படிப்ப முடிச்சுட்டு அடுத்த கட்டத்துக்கு போகலாம்னு படிக்கரவனும், படிக்க வெக்கரவங்களும் ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிக்கிட்டே இருப்பாங்க.

வெறும் MBBSலயே முடியரதும் இல்ல, இவங்களின் படிப்பு. அதுக்கப்பறம் MD, MSனு வேட்டைக்கு கெளம்பி, வாழ்க்கைல ஒரு எட்டு, பத்து வருஷம் படிக்கவே ஓடிப்புடும்.
எல்லாம் முடிச்சுட்டு, ட்ரெயினிங் எல்லாம் கடந்து, கல்லாப் பெட்டி தொறக்கரதுக்குள்ள கிட்டத்தட்ட முப்பது வயசாயிடும்.

இப்படி இருக்கும்போது, அன்புமணி சார், இப்படி ஒரு கல்லத் தூக்கிப் போட்டிருக்காருன்னு பலர் வெம்பி வெதும்புவதைக் கண்டேன்.

மேலோட்டமா பாத்தா, என்னய்யா லூசுத்தனமா இருக்கேன்னுதான் தோணுது.

ஆனா, பல துறைகளிலும் பின் தங்கி உள்ள நம்ம ஊரப் பத்தி நெனச்சு பாருங்க.
80% மருத்துவர்கள்/மருத்துவமனைகள் தனியார் நிறுவனங்களின் வசம் உள்ளனவாம்.
கிராமப் புறங்களில் தேவையான மருத்துவ வசதி இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ( 25% தான் மருத்துவ வசதி இருக்காம்).

ஆள் பற்றாக்குறை கொண்ட சிங்கப்பூர் மாதிரி நாடுகளில், அனைவருக்கும், கட்டாய இராணுவப் பயிற்ச்சி உண்டு. அட, சூப்பர் ஐடியாவா இருக்கேன்னு, அதக் கேட்டா சொல்லத் தோணும்.

கிட்டத்தட்ட, அதே மாதிரி ஒரு ஐடியாவ நம்மூர்ல, இப்படி போட்டா, ஏன் சின்னபுள்ளத்தனமா இருக்கேன்னு தோணுது?
சொல்றவரு பா.ம.க அன்புமணி என்பதால் இருக்கலாமோ?

ஆர அமர யோசிச்சு பாருங்க. கிராமப் புற 'கட்டாய' சேவை, சும்மா இலவசமா செய்யவும் சொல்லல.
8000 முதல் 12000 வரை சம்பளம் தருவாங்களாம்.
தங்கும் வசதி இல்லாத, குக்கிராமத்திர்க்கு போக வேண்டாமாம். ஒவ்வொரு தாலூக்கிலும் இருக்கும் மருத்துவமனைகளில் உதவி புரிந்தால் போதுமாம்.

நல்ல விஷயம் தானே? ஒரு வருஷம் அனுபவம் கிட்டியது போலவும் இருக்குமே?
கிராமப் புறங்களில் மக்கள் படும் கஷ்டத்த பாத்தா மனித நேயமும் வரலாம், பிறகாலத்துல 'நல்ல' மருத்துவராக இருக்கவும் இதனால் ஒரு உந்துதல் கிட்டலாம்.

இந்த திட்டம் வேண்டாங்கறவங்க, எதுக்காக வேண்டாங்கறீங்க?
லம்ப்பா சம்பாதிக்க ஒரு வருஷ தாமதம் ஆகுமேன்னா?
வசதிகள் இல்லாத, தாலூக் மருத்துவமனைகளில் ஒரு வருஷம் இருந்தா, படிச்ச படிப்பு சரியா உபயோகப் படுத்தாம, விரையம் ஆயிடுமேன்னா?

வேறென்ன?

என்னக்கேட்டா, இந்த மாதிரி திட்டம் எல்லா professional படிப்புக்கும் கொண்டு வந்தா நல்லாருக்கும். ஒரு வருஷம் இல்லன்னாலும், படிப்பின் கடைசி 6 மாதங்கள், பசங்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உபயோகப் படுத்தலாம். ஒரு practical training மாதிரி இருக்கும்.

நம்ம பள்ளிக்கூடம், கல்லூரிகளில், மனதில் பதியும் படி பெருசா ஒண்ணும் சொல்லித் தரது இல்ல. வாத்தியும் செவனேன்னு சொல்லித் தந்தாங்க, நாங்களும் செவனேன்னு படிச்சு கரையேறினோம்.

மா.சிவகுமார் பாரதியார் கவிதை ஒண்ண பதிஞ்சிருந்தாரு. அவ்ளவு அழகான அந்த கவிதையை மனதில் பதியும் படி அன்னிக்கே சொல்லிக் கொடுத்திருந்தா, பலரின் வாழ்க்கை நல்ல படியா திசை திரும்பி, பலருக்கு ப்ரயோஜனமா இருந்திருக்கலாம்.

sorry, i divurge.

இந்த மாதிரி ஏதாவது தடாலடியா, creativeஆ மூளையக் கசக்கிப் பிழிஞ்சு புதுத் திட்டங்கள் கொண்டுவந்தாதான், நம்ம ஊர நல்ல படியா முன்னேத்த முடியும்.

இதுக்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்கள் யோசிக்கணும். சும்மா, அரசியல் பண்ணனுமேங்கறதுக்காக, எல்லா நல்ல விஷயங்களையும் தூக்கிக் கடாசாதீங்க.

சிலருக்கு இதனால், கஷ்டங்கள் வரலாம். ஆனா, நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா......

அன்புமணி சார், நீங்களும், இன்னும் கொஞ்சம் யோசிச்சு, திட்டத்த மெருகேத்துங்க.

My 2 cents (or paise) on this:

  • மிக நல்ல திட்டம்
  • எல்லாரும் இத செஞ்சே ஆவணும்னு தடாலடி பண்ணாம, சிலருக்கு விதிவிலக்கு கொடுக்கலாம். உ.ம் உடல் ஊனமுற்றவர்கள், சில பெண்கள், மேல் படிப்பு படிக்க விரும்புபவர்கள்?, etc...
  • ஒரு வருஷம் ஜாஸ்தி. 6 மாதம் ஆக்கலாம்.
  • மற்ற துறைகளுக்கும் இதை எப்படி செயல் படுத்துவது என்று பாருங்கள்
  • மாணவர்களோடு நில்லாமல், இந்த 'கட்டாய' பொது சேவையய, எல்லா குடிமகனும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ, ஒரு ரெண்டு மாசம் செஞ்சே ஆகணும்னு ஏதாவது பண்ணலாம்.

    நீங்களும் உங்க கருத்த சொல்லுங்க.

    வாழ்க பாரதம்!
  • 16 comments:

    SurveySan said...

    ஆளவந்தான் said...

    நல்லவேளையா தப்பிச்சீங்க. அன்புமணிய எதிர்த்து எழுதி இருந்தா இந்நேரம் குழலி உங்களை தமிழ்மணத்துல இருந்து நீக்கி இருப்பார்!

    Anonymous said...

    makes sense to me.

    Anonymous said...

    மகனை மான்ட்போர்டிலும், பேத்திகளை மாடர் டே விலும் படிக்கவைத்துவிட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கேட்டு போரடும் அய்யா...

    MBBS படித்து விட்டு ( இவர் கிராமப்புரத்தில் சேவை செய்தாரா ? ) மருந்து கம்பெனிகளுக்கு தரகு செய்யும் சின்ன அய்யா...

    ஹும்....

    Anonymous said...

    Good idea indeed!

    Anand

    SurveySan said...

    //மகனை மான்ட்போர்டிலும், பேத்திகளை மாடர் டே விலும் படிக்கவைத்துவிட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கேட்டு போரடும் அய்யா...

    MBBS படித்து விட்டு ( இவர் கிராமப்புரத்தில் சேவை செய்தாரா ? ) மருந்து கம்பெனிகளுக்கு தரகு செய்யும் சின்ன அய்யா...//

    silly argument.
    It doesn't really matter what his personal life is for this issue.

    We should look at whats best for the nation.

    SurveySan said...

    Anand, thanks.

    நிர்வாகி (Admin) said...

    படிச்சு முடிச்ச உடனே ஒரு வருசம் வேண்டாம். சின்ன பசஙக கத்துக்க்க ஏழை கிராமத்து பெருசுங்கதான் சிக்குச்சா? அட போங்கப்பா...

    இதுதான் என்னோட யோசனை:
    6வது மற்றும் 11வது வருடங்கள் "சேவை வருடங்கள்". அதாவது, படிப்ப முடிச்ச பிறகு 6வது மற்றும் 11வது வருடங்கள். மறுப்பவர்களின் மருத்துவச் சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

    அப்போ அவங்களுக்கு 5 மற்றும் 10 வருடங்கள் அனுபவம் இருக்கும், சேவையும் ஆச்சு.

    அன்பு சார், பட்டய கெளப்புரீங்க. நடத்துங்க. நடத்துங்க. ( ஹும், பெருசு, இதையும் அரசியல் ஆக்குதுது. என்ன தான் பண்ணறதோ)

    SurveySan said...

    //இதுதான் என்னோட யோசனை:
    6வது மற்றும் 11வது வருடங்கள் "சேவை வருடங்கள்". அதாவது, படிப்ப முடிச்ச பிறகு 6வது மற்றும் 11வது வருடங்கள். மறுப்பவர்களின் மருத்துவச் சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.
    //

    I like that.

    but, instead of 1 year, just 3 months is sufficient for every 5 years.
    ..and this should apply to ALL citizens, including our darn MLA and MPs.

    vow, this will bring a very welcome change in our society ;)

    வெற்றி said...

    சர்வேசன்,
    கனடாவில் பல மாநிலங்கள் புதிய மருத்துவ பட்டதாரிகளையும், வேறு நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களையும் கிராமப் புறங்களில் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பணியாற்ற வேண்டும் எனும் விதிமுறை உள்ளது.

    இப்போது இந்தியாவில் பலர் இவ் விடயத்தை விவாதிப்பது போல கனடாவிலும் பல மாநிலங்களில் இந்த விதிமுறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.

    நோவ ஸ்கோசியா எனும் மாநிலத்தில் சுகாதார அமைச்சர் இப்படியான விதிமுறையைக் கொண்டு வந்த போது நடந்த விவாதத்தை இங்கே படிக்கவும்.

    இலவசக்கொத்தனார் said...

    சர்வே போடலையா?

    SurveySan said...

    வெற்றி, தகவலுக்கு நன்றி!

    இவ்வளவு முன்னேறிய கனடாவே இப்பபடியெல்லாம் பண்ணும்போது, நம்ம நாட்டுல இத கண்டிப்பா பண்ணியே ஆகணும் :)

    கொத்ஸ்,
    சர்வே போட்டா, ஸைலண்டா குத்திட்டு போயிடறாங்க. கருத்து வெளில வரமாட்டரது :)

    கருத்தெல்லாம் வந்து முடியட்டும், அப்பறம் ஒரு குத்து குத்த சொல்லலாம் ;)

    நீங்க கருத்ஸ் சொல்லலியே?

    Anonymous said...

    அன்புமணி ஒரு விளம்பரத்துக்காக சொன்ன விஷயமெல்லாம் பெருசா எடுத்துக்காம போய் வேலையப் பாருங்கடே

    SurveySan said...

    vilambarathukku sonnnaaraa?

    ennayyaa solra anony?

    சதுக்க பூதம் said...

    This syatem is already there for B.Sc(Agri). Agriculture students needs to be in village for few months in their 4th year of study.It helps for the transfer of knowledge for both the side

    Doctor Bruno said...

    மூன்று வருடம் கிராமங்களில் வேலை (சும்மா செய்தால் தான் அது சேவை - சம்பளம் வாங்கினால் அது வேலை - அந்த சம்பளம் எவ்வளவு கம்மியாக இருந்தாலும் ;-) ) செய்தவன் என்ற முறையில் எனது கருத்து ----

    1. தமிழகத்தில் மருத்துவதுறையில் உள்ள காலியிடங்களில் (of all the "sanctioned posts") பெறும்பாலானவை மருத்துவக்கல்லூரிகளில் உள்ளது. கிராமப்புறங்களில் காலியிடம் கம்மி.

    2. When TNPSC calls for an exam for 300 vacancies in PHCs, there are 5000 application - this means that there are some 5000 guys ready to work in Primary Health Centres

    3. There are another 5000 guys who do not want to work in PHCS

    Very Simple Questions

    Why can't government give PERMANENT posting to all those who applied for TNPSC

    Why do they want to force those who are not willing ALSO to work in villages

    இது தான் குழப்பம்.....

    2005 அக்டோபரில் நடந்த TNPSC தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வில் rank பெற முடியாத (select ஆகாதவர்கள் அல்ல. -Rank and Selection are different-) சுமார் 800 பேர் இருக்கிறார்கள்..... அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கினாலே போதும்.....

    ஏன் மற்ற விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்தவேண்டும் என்று தெரியவில்லை !!!!

    SurveySan said...

    டாக்டர் ப்ரூனோ, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கேட்டிருக்கீங்க.

    விருப்பப்படரவங்க வரிசைல நிக்கும்போது, அவங்களுக்கு வேலை கொடுக்காம, மத்தவங்க ஏன் தள்ளி வுடணுங்கரது நல்ல கேள்வி.

    ஒரு வேள, சீப்பா வேல வாங்கலாம் மாணவர்கள என்கிற ஐடியாவோ? ஹ்ம்ம். அப்படி இருக்காது.

    வேற ஏதோ மேட்டரு இருக்கும். யாராச்சும் சொல்றாங்களான்னு பாக்கலாம்.

    அன்புமணிக்கு இந்த கேள்விய ஃபேக்ஸு அனுப்பலாம் :)