இன்னிக்கு ஒரு ட்ரெயினிங்குக்கு போயிருந்தேன். அதில ட்ரெயின் பண்ணவரு, ஒரு சுவாரஸ்யமான மேட்டர சொன்னாரு.
25 பேர் இருந்தோம். எல்லாரையும் எழுந்து நிக்க சொல்லி, கைய மேல தூக்கி ஆட்டச் சொன்னாரு.
அப்பரம், கைய கட்டச் சொன்னாரு.
எவ்ளோ பேரு, வலது கைய மேல வச்சு கை கட்டறீன்ங்கன்னாரு.
25 ல, 14 பேரு, வலது கைய மேல வச்சு கட்டராங்க.
மிச்ச பேரு இடது கைய மேல வச்சு கட்டராங்க.
அதாகப் பட்டது, கிட்டத்தட்ட 50% ஆளுங்க வலது கையும், 50% இடது கையும் மேல வெக்கராங்க.
இதோ இவரு இடது கைய மேல வச்சிருக்காரு பாருங்க:
ஒரு கூட்டத்துல, எல்லாரையும் கை கட்டச் சொன்னா, இந்த மாதிரிதான் 50:50 வருமாம்.
இதுக்கு என்ன காரணம்னு சரியாத் தெரியலயாம் - அநேகமா, மொத்த ஜனத்தொகையில, 50% ஆளுங்க வலது கை மேல வெக்கரவங்களாவும், 50% இடது கை மேல வெக்கரவங்களாவும் இருக்கலாம், அதனால ஒரு கூட்டத்துக்கு ரேண்டமா வர ஆளுங்கள்ளயும் இந்த விகிதாச்சாரம் வரலாங்கரது என் கணிப்பு ;)
சரி, நம்ம கூட்டத்துல இத்த டெஸ்ட் பண்ணலாம்னு ஒரு சர்வே கீழ போட்டிருக்கேன்.
எழுந்து நில்லுங்க
கைய மேல தூக்குங்க
கை கட்டுங்க
வலது கை மேல வச்சு கட்டறீங்களா, இடது கையா? உண்மையான பதில வாக்குங்க ;)
நன்றி!
இந்த மேட்டர, உங்க கும்பல்லயும் நடத்திப் பாத்து, பின்னூட்டுங்க ரிஜல்ட்ட :)
பி.கு: நாளைக்கு இன்னொரு சுவாரஸ்ய மேட்டருடன் சந்திக்கிறேன்.
8 comments:
வலது - மேலே.
எனக்கும் வலது தான்.
75% 25%னு இருக்கு இப்போ.
பாப்போம், 50 50 ஆகுதான்னு.
நாளை வரை பொறுத்திருந்து ரிஜல்ட சொல்லறேன் ;)
என் அலுவலகத்தில் உள்ள 7 நபர்களில் 4ன்கு பேர் வலது 3பேர் இடது இதையும் உங்கள் சர்வேயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இடது கை தான் எனக்கு!
lets see if 50:50 works in the first 100 votes :)
தூரிகா, 7ல 4 பக்காவா வந்திருக்குப் பாருங்க ;)
சர்வேசா
பாட்டுக்கள் அப்புறம் வரும், இப்போதைக்கு நிரந்தர வாக்குச் சாவடி றேடியோஸ்பதியின் முன் பக்கத்தில் அமைத்திருக்கின்றேன், பார்க்கவும்
Thank You Praba!
btw, 60% 40% la irukku ;)
Post a Comment