recent posts...

Tuesday, September 25, 2007

OFF-Shoreஐ வாழ விடுங்கள்!

அயல்நாட்டு நிறுவனங்கள் பல தங்கள் அலுவலக வேலைகளில் பலவற்றை out-source (தமிழ்?) செய்வது எல்லாருக்கும் தெரியும்.

இதில் கணிப்பொறி வேலைகள் தான் அதிகமா out-source செய்யப்படுது.

ஒரு மணி நேரத்துக்கு $50 லிருந்து $200 வரை செலவாக வேண்டிய வேலையை, $15 லிருந்து $40 க்குள் இந்த out-sourceங் மூலம் லாபகரமாக முடித்துக் கொள்ள முடிகிறது.

அதைத் தவிர, வேலையின் தேவைக்கேற்ப, ஆட்களை கூட்டிக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் மிகச் சுலபமாக முடிகிறது.

குறைந்த விலையுடன் சில சமயம், தலைவலியும் சேர்ந்து கிடைக்கும். கல்லூரி முடித்து வரும் கத்துக்குட்டிகள் பலரை ஊரில் உள்ள நிறுவனங்கள் வேலையில் அமர்த்தி, வேலையின் தரத்தை குறைத்து விடுவார்கள். அசலூரில் இருக்கும் நம்மவர்களுக்கு இதனால் பெருந்தொல்லை வருவதுண்டு.

இந்த தலைவலி தரும் ஏற்பாட்டில் தான் பல ப்ரச்சனையும் வரும்.

அசலூரில் இருக்கும் நம்மவர், ஒரு 'கெத்தாகத்' தான் இருப்பார்.

உள்ளூர்வாசிக்கு 'அடிப்படை' மரியாதை கூட சிலசமயங்களில் தருவதில்லை.

"ஹேய் மேன், நீ நாளைக்கு ராத்திரி 1 மணிக்கு வந்து இந்த வேலைய முடிச்சுடு."
"ஹேய் மேன். நாளன்னைக்கு காத்தால 5 மணிக்கு வந்துடணும். நான் இங்க வீட்டுக்கு கெளம்பரதுக்கு முன்னாடி உன் கிட்ட பேசணும்"
"ஹேய் மேன், பேஜர் குடுத்து எவ்ளோ நேரமாச்சு. 10 நிமிஷத்துல கால் பண்ணாம என்னா பண்ணிட்டிருந்த"
"ஹேய் மேன், இந்த சின்ன மேட்டர் ஃபிக்ஸ் பண்ண இவ்ளோ நாளா? யூ guys are driving me nuts!"
"ஹேய் மேன், என்னா code அடிக்கர. ஒரு மண்ணாங்கட்டியும் புரியல. பொறுப்பே இல்லாம இருக்க. last warning. ஒழுங்கா அடி"
"ஹேய் மேன், என்ன english இது? எங்க படிச்ச நீ? தெரியலன்னா, உன் மேனேஜர் கேட்டு டைப் அடி. ப்ரூஃப் ரீட் பண்ண நான் என்ன உனக்கு வேலக்காரனா?"

இதில் call-centerல் வேலை பார்க்கும் உள்ளூர் வாசியின் நிலமை மேலும் கொடுமை.
கணிப்பொறி ஆளாவது பரவால்ல, முக்கால் வாசி அசலூர்காரன் நம்மாளாதான் இருப்பான். திட்டினாலும் பரவால்ல.

ஆனா, call-centerக்கு வர காளெல்லாம், முக்கால் வாசி துரை பேசரதுதான். பிடிச்சு கன்னா பின்னான்னு திட்டுவான். குறிப்பா, American express , Dell மாதிரி call-centerக்கு வரும் தொலை அழைப்புகள் தொல்லை ரகம்.

உள்ளூர்ல லோல் படும் நம்ம பசங்க, மன உளைச்சலுக்கு ஆளாவாங்கன்னு நெனைக்கறேன்.
சும்மாவா, டக்கு டக்குனு வேலைய வுட்டு வேலை தாவராங்க?

அசலூர் வாழ் மக்கள், யோசித்து, கொஞ்சம் பக்குவமாய் அணுக யோசிக்க வேண்டும்.
நம்ம off-shore மக்களை அனுசரணையுடன் வழி நடத்தி, முன்னேர உதவி பண்ணனும்.

Don't torture them!

உங்க அனுபவம் எப்படி? எல்லா எடத்துலயும் இப்படி தானா?

16 comments:

Anonymous said...

Life is beautiful in Bangalore

Anonymous said...

நீங்க வேற ! . நம்ம ஃப்ரன்டு ஒருத்தர் கம்பனில வாதாடி போராடி ஆன்சைட் போனார். அவர் Off shore ல இருக்கறவங்கள வேலை செய்ய சொன்னா, "நீ தான, ஆன்சைட் வேனும்னு போன, நீயே வேலை செய்"னு சொல்லிடாங்க, பாவம் அவரு.

மங்களூர் சிவா said...

பிரச்சனை கால் சென் டரிலோ, சாப்ட்வேர் கம்பெனியிலோ மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் உள்ளது.

இடத்துக்கு தக்க முன்ன பின்ன இருக்கும்.

CVR said...

நீங்க ஒரு தப்பான கண்ணோட்டத்தை தருவதாக எனக்கு படுகிறது!! அதுவும் இப்படி வசனம் எல்லாம் போட்டு ஆன்சைட் ஆளுங்க எல்லாம் ஏதோ வில்லன்கள் ரேஞ்சுக்கு கலாய்க்கறீங்க!! :-)

இது பத்தி எழுத ஆரம்பிச்சேன்!!
ஆனா பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போயிட்டே இருந்ததால நிறுத்திட்டேன்!
இது எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி புரிய வெக்க முடியாது!!!
பட்டா தான் தெரியும் ஆன்சைட்டு அவலங்கள்!!!

MSATHIA said...

\\இது எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி புரிய வெக்க முடியாது!!!
பட்டா தான் தெரியும் ஆன்சைட்டு அவலங்கள்!!!\\\

உண்மை.

-சத்தியா.

MSATHIA said...

ஆமா இதென்ன குழப்பம் உங்க பதிவுல

---Post a Comment (not moderated)
அப்பிடின்னு பின்னூட்ட தொடுப்பு சொல்லுது, சொடுக்கினா..

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

"ஹேய் மேன், இந்த சின்ன மேட்டர் ஃபிக்ஸ் பண்ண இவ்ளோ நாளா? "

:-)

சத்தியா

மீட்டர்பாலா said...

ஆன்சைட்டு என்பது இருவகை

1. வெளிநாட்டிலேயே வாழ்பவர்கள் (துரைகளும், உங்களை போன்றவர்களும்)

2. ஆப்ஷோரிலிருந்து வந்து onsiteக்கு வந்து அந்தந்த ப்ராஜக்டுக்கு வேலை செய்பவர்கள் (மற்றும் offshore கூட coordinate செய்பவர்கள்)

இதில் #1 பாடு சந்தோசம் தான். பெருசா ஒன்னும் க‌ஷ்ட‌ம் இல்ல‌.

#2 ப‌ட‌றபாடு இருக்கே, அதோகதிதான். #1க‌ளையும் சமாளிக்க‌னும். ஊர்ல‌ இருக்க‌ற‌ அல்ல‌கைக‌லையும் ச‌மாளிக்க‌னும். இதுவே அமெரிக்காவா இருந்தாக்கா ட‌புல் சிப்ட் வேல‌ செய்ய‌னும்.

#2வே நாட்டின் (???) த‌லைசிற‌ந்த‌ குடிம‌க‌ன் என‌ வாக்க‌ளிக்கிறேன்.

நீங்க‌ளும் கொஞ்ச‌ம் மேட்ட‌ற‌ தெரிந்துகொண்டு ப‌திவுபோட‌லேமே? அரைவேக்காடால்ல‌ இருக்கு?

வெட்டிப்பயல் said...

//பட்டா தான் தெரியும் ஆன்சைட்டு அவலங்கள்!!!//

ரிப்பீட்டே!!!

உரலுக்கு ஒரு பக்கம் இடினா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி ;)
(Off-shore and Client)

SurveySan said...

anony1, //Life is beautiful in Bangalore//

Life is beautiful everywhere! not just Bangalore :)

anony2,

//அவர் Off shore ல இருக்கறவங்கள வேலை செய்ய சொன்னா, "நீ தான, ஆன்சைட் வேனும்னு போன, நீயே வேலை செய்"னு சொல்லிடாங்க, பாவம் அவரு//

:) ippadiyum nadakkudhaa. I think there will be issues on both sides, but whatever I have observed so far - there is a tendancy that off-shore guys are 'chottaa' :)

will answer the rest, later tonight ;)

SurveySan said...

மங்களூர் சிவா,

//பிரச்சனை கால் சென் டரிலோ, சாப்ட்வேர் கம்பெனியிலோ மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் உள்ளது.
இடத்துக்கு தக்க முன்ன பின்ன இருக்கும்.//

எல்லா இடத்திலும், off-shoreனா ஒரு எளக்காரமாதான் ஹேண்டில் பண்றாங்கன்னுதான் நானும் நெனைக்கறேன்.
பாவம், நம்ம பசங்க, வளத்து வுடுவோம்னு யாரும் ட்ரை பண்றதுல்ல.

SurveySan said...

cvr,

//நீங்க ஒரு தப்பான கண்ணோட்டத்தை தருவதாக எனக்கு படுகிறது!! அதுவும் இப்படி வசனம் எல்லாம் போட்டு ஆன்சைட் ஆளுங்க எல்லாம் ஏதோ வில்லன்கள் ரேஞ்சுக்கு கலாய்க்கறீங்க!!//

எல்லாரும் இப்படின்னு சொல்லலங்க. exceptions are there, like me ( ha ha ha :) ).

//இது பத்தி எழுத ஆரம்பிச்சேன்!!
ஆனா பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போயிட்டே இருந்ததால நிறுத்திட்டேன்!
இது எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி புரிய வெக்க முடியாது!!!
பட்டா தான் தெரியும் ஆன்சைட்டு அவலங்கள்!!!//

தனிப் பதிவா போடுங்க. எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும், உங்க பக்க நியாயத்த :)

SurveySan said...

sathia,

//அப்பிடின்னு பின்னூட்ட தொடுப்பு சொல்லுது, சொடுக்கினா..//

விஷயம் தெரியாதா உங்களுக்கு? மாடரேஷன் இல்லாமதான் வச்சிருந்தேன். நடுவுல ஒருத்தன் பூந்து அத மிஸ்-யூஸ் பண்ணி, என் சுதந்திரத்த பறிச்சுட்டான்.

கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் ;)

மாத்த நேரமில்ல :)

SurveySan said...

மீட்டர் பாலா,

//#2வே நாட்டின் (???) த‌லைசிற‌ந்த‌ குடிம‌க‌ன் என‌ வாக்க‌ளிக்கிறேன்.
நீங்க‌ளும் கொஞ்ச‌ம் மேட்ட‌ற‌ தெரிந்துகொண்டு ப‌திவுபோட‌லேமே? அரைவேக்காடால்ல‌ இருக்கு?//

இக்கரைக்கு அக்கரை பச்ச மாதிரி போலருக்கு. நான் #1 தான்.
ஆனா, நான் பாத்த வரைக்கும் #1 கிட்டயிருந்து, off-shore பசங்க கஷ்டப் படரத பாத்திருக்கேன்.

#2 பசங்க சந்தோஷமாதான் இருக்காங்க. off-shore டீம் பொறுத்து இவங்க கஷ்டங்கள் கூடக் கொறச்சு இருக்கலாம் ;)

SurveySan said...

வெட்டி,

//உரலுக்கு ஒரு பக்கம் இடினா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி ;)
(Off-shore and Client)//

அது சரி.
off-shoreகிட்ட எரிஞ்சு விழும் பழக்கம் இருக்கா? இல்ல பக்குவமா வேல வாங்குவீங்களா?

அவங்க உங்க கிட்ட எரிஞ்சு விழறாங்களா?

விலாவாரியா சொல்லுங்க, தெரிஞ்சுக்கலாம் ;)

CVR said...

////cvr,

//நீங்க ஒரு தப்பான கண்ணோட்டத்தை தருவதாக எனக்கு படுகிறது!! அதுவும் இப்படி வசனம் எல்லாம் போட்டு ஆன்சைட் ஆளுங்க எல்லாம் ஏதோ வில்லன்கள் ரேஞ்சுக்கு கலாய்க்கறீங்க!!//

எல்லாரும் இப்படின்னு சொல்லலங்க. exceptions are there, like me ( ha ha ha :) ).///

Working as an onsite coordinator for an indian IT services company is a looooooot different than working for an MNC.
Both are whole different ball games altogether!!!



//இது பத்தி எழுத ஆரம்பிச்சேன்!!
ஆனா பெருச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போயிட்டே இருந்ததால நிறுத்திட்டேன்!
இது எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி புரிய வெக்க முடியாது!!!
பட்டா தான் தெரியும் ஆன்சைட்டு அவலங்கள்!!!//

தனிப் பதிவா போடுங்க. எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும், உங்க பக்க நியாயத்த :)////

I dont like to clean my dirty laundry in public!! :-)

///
அவங்க உங்க கிட்ட எரிஞ்சு விழறாங்களா?

விலாவாரியா சொல்லுங்க, தெரிஞ்சுக்கலாம் ;)////
colleagues kitta pecchu vaangaradhoda worser things are there in work

damager kitta irundhu pecchu vaangaradhu,client kitta irundhu pecchu vaangaradhu,vendor kitta irundhu pecchu vaangaradhu are far more iritating!!!
kashtappattu client kitta valartha confidence offshore sariya vela pannama pocchunna eppadi irukkum theriyuma???
Offshore sariya vela pannalana,we are the ones who need to face the music and do the damage control!!!
sorry thappaayidicchu next time thappu varaama paathukkaromnu sollittu,next time-um same thappu panna client kitta eppadi mooja poi kaataradhu??/?

there are thousand other things!!! exhudhara alavukku porumai illa,BP egirittu pogudhu!!!
vishayatthai sariya therinjukkaama over-a generalise pannitteenga surveysan,adhuvum dialogue ellam pottu you have made it look bad and have created a wrong impression.

I have been in offshore and i had been angry on my onsite too,at that time!! but once i came here i could empathise with my onsite guy inthe previous project!!
whenever an offshore guy gets shouted over,there is fat chance that his counterpart in onsite might have endured a lot more so that he has to pass a tiny bit across,to reveal the seriousness.!!

Like i said,this cant be explained in comments!! there is just so much to say,and can be realised only through experience!!

SurveySan said...

CVR, //Like i said,this cant be explained in comments!! there is just so much to say,and can be realised only through experience!!//

my experience so far has seen issues in both sides, but I think off-shore is seen as a 'lower tribe' by on-site folks, largely.

that thinking has to change ;)

sometimes, making off-shore work is a challenge too. i have on-site folks frustration due to this - but this is inability on on-site front to manage stuff :)