recent posts...

Thursday, September 27, 2007

நீ... உங்கப்பாவுக்கு....?

வாங்க வாங்க வாங்க.
இன்னிக்கு ஒரூ சுவாரஸ்யமான மேட்டர சொல்றேன்னு சொல்லியிருந்தேனே, அதான் இந்த பதிவு.

அதாகப் பட்டது, நம்ம தமிழ 'கம்ப்பேர்' பண்ணும்போது ஆங்கிலம் ஒரு துக்கடா பாஷை என்பதை யாரும் மறுக்க முடியாது.
சும்மா 26 எழுத்த வச்சுக்கிட்டு அவங்களும் எவ்ளோ தான் படம் காட்ட முடியும்?

நம்ம பாஷைல இருக்கர ஒரு 'ரிச்னஸ்' தொர பாஷேல மிஸ்ஸிங்.

இல்லங்கறீங்களா?

அப்ப, இத்த எப்படி இங்கிலீஷ்ல கேக்கரதுன்னு சொல்லிட்டுப் போங்க.

* நீ உங்கப்பாவுக்கு எத்தினியாவது கொழந்த?

என்னது? நாக்கு பெரளுதா?
யோசிங்க வரும்.
எனக்குத் தெரிஞ்ச விடைய அப்பாலிக்கா பின்னூட்டறேன்.

உங்களுக்கு தெரிஞ்ச வித்தைய காட்டுங்க.

பி.கு1: நெல்லை சிவா, MSVக்காக நான் போட்ட பெட்டிஷனுக்கு ஒரு சூப்பர் பதிவு போட்டு நச்சுனு விளம்பரம் கொடுத்திருக்காரு பாருங்க. நன்றி நெல்லையாரே!
நேத்து வர சின்னப் பயலெல்லாம் டாக்டர் பட்டம் அந்த பட்டம் இந்த பட்டம்னு வாங்கிட்டிருக்கானுவ. ஒரு பயலும் நம்ம MSVய கண்டுக்க மாட்றாங்க. கிர்ர்ர்ர்ர்ர்னு எரிச்சல் வருது, நெனைக்கும்போதே

பி.கு2: கானா பிரபா, கேளுங்கள் தரப்படும்னு, நாம கேக்கர பாட்டையெல்லாம் அள்ளி அள்ளி வீசராரு. இளையராஜா வீட்டுக்கு ஏதாவது சுரங்க பாதை கட்டி, ராவுல போயி சி.டி எல்லாம் கெளப்பிட்டு வராரான்னு தெரியல. எந்த பாட்ட கேட்டாலும் டகால்னு எடுத்து விடறாரு.. ரேடியோஸ்பதி, தொடர்ந்து கலக்குது.. அவரும் MSVக்காக ஒரு வெளம்பரம் போட்டிருக்காரு. அவருக்கும் நன்னி!

பயலுவளா, MSVக்கு ரொம்ப வயசாவரதுக்கு முன்னாடி, எப்படியாச்சும் ஒரு பத்மவிபூஷனனையோ, பத்மபூஷனனயோ வாங்கிக் கொடுக்கணுங்க.

சாதாரண ஆளா அவரு?

லதா மங்கேஷ்கருக்கு, பாரத்ரத்னா கொடுத்த அரசு MSV ய கண்டுக்காம இருக்கரது, அயோக்கியத்தனம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சொல்லிப்புட்டேன்!!!

25 comments:

Anonymous said...

what number child are you for father

SurveySan said...

மடிப்பாக்கம், கேள்விக்கு பதில் 1,
அதேஎ கேள்வி உன்ன கேட்டா நீ சொல்லுவ 11 :)

SurveySan said...

மடிப்பாக்கம்,

என்னது? கணக்கே இல்லியா? அச்சச்சோ, கஷ்டமாச்சே? எப்படி சமாளிச்சாங்க?

11ன்னுன்னுல்ல நெனச்சேன் ;)

கூகிள் ஆண்டவர் உதவி நமக்கு என்னிக்கும் உண்டு.

Anonymous said...

இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட ஞாபகம் இருக்கு.
எங்கன்னுதான் தெரியல சர்வ்ஸ்.

Howmanieth son are you to your father?

Anonymous said...

How many'th son you are to your father?
This is atleast 12 years old quiz......

k4karthik said...

//அப்ப, இத்த எப்படி இங்கிலீஷ்ல கேக்கரதுன்னு சொல்லிட்டுப் போங்க.

* நீ உங்கப்பாவுக்கு எத்தினியாவது கொழந்த?
//

NEE UNGAPPAVUKKU ETHINIYAVATHU KULANDHE?

SurveySan said...

Howmanieth is not a english word :)

SurveySan said...

//NEE UNGAPPAVUKKU ETHINIYAVATHU KULANDHE?//

Kaala kaattu raasa :)

சிவபாலன் said...

சர்வேசன்

உட்காந்து யோசிப்பிங்களா?! ஹா ஹா..

எப்படி இப்படி எல்லாம்..

எனினும் நல்ல கேள்வி..!

பதில் தெரிஞ்சதும் ஒரு நடை நம்ம பதிவுக்கு வந்து சொல்லிட்டுப் போயிடுங்க.. :)

Boston Bala said...

எனக்கும் இதே மாதிரி சந்தேகம் சமீபத்தில் வந்தது... Stepbrother, stepsister, half brother, half sister - இதையெல்லாம் தமிழில் எப்படி சொல்வது!

Boston Bala said...

என்னங்க... இடுகையில் மட்டுறுத்தல் இல்லேன்னு சொல்றீங்க... இங்கே பார்த்தால் இருக்கிறதே! (இதுதான் வார்ப்புருவில் ஒன்று வைத்து பதிப்பில் பிறிதொன்று வைப்பதோ ;)

SurveySan said...

சிவபாலன், விடை வந்ததும் சொல்லி அனுப்பறேன். எனக்குத் தெரிஞ்ச விடையாவது சொல்றேன் ;)

பா.பாலா,
Stepbrother - படி சகோதரன்
stepsister - படி சகோதரி
half brother - பாதி சகோதரன்
half sister - உங்களுக்கே தெரியும் :)

ராமயணத்துல விபீஷணன், ராவணனின் யாருன்னு எப்படி சொல்லியிருக்காங்கன்னு பாத்தா விடை கிடைக்கலாம் :)

//இடுகையில் மட்டுறுத்தல் இல்லேன்னு சொல்றீங்க... இங்கே பார்த்தால் இருக்கிறதே!///

டெக்னிக்கு இது. அப்பதான், எல்லாரும் ஃப்ரீயா அடிப்பாங்க, மட்டுறுத்தல் பயமில்லாம.
எனக்கும் பொழுது போகுது, அதெல்லாம் படிச்சு மட்டுறுத்தும்போது :)
மேல மடிப்பாக்கம் கமெண்ட்டு, அப்படி வந்த ஒண்ணுதான்.

MSATHIA said...

what is your chronological number among your siblings?

செக்கு- cheque /check இல்லீங்கோ.. எண்ணை ஆட்ற செக்கு அதுக்கு துரை பாஷைல என்னாங்கோ?
தெரிலைன்னா அப்பாலிக்கா வாரேன்.

அரை பிளேடு said...

"ஹவ் மெனி எல்டர் பிரதர்ஸ் அண்டு எல்டர் சிஸ்டர்ஸ் யூ ஹவ்" அப்படின்னு கேளுங்க.

எல்டர் பிரதர்ஸ்+ எல்டர் சிஸ்டர்ஸ்+1 தான் உங்க ஒரிஜினல் கேள்விக்கு ஆன்ஸர். :)

SurveySan said...

Sathia, நல்லாவே இருக்கு உங்க பதில்.

எனக்குத் தெரிந்த விடை
Where do you stand among your fathers progeny?

எங்க இங்கிலீஷ் வாத்தி சின்ன வயசுல சொன்னது ;)

1/2ப்ளேடு,
ஹா ஹா. எப்படியாச்சும் விடை வந்தா போதும்னா, இப்படியும் கேக்கலாம்.

Are you the 3rd son?
answer: No No, I am the 2nd ;)

SurveySan said...

செக்கு?

oil machine :)

MSATHIA said...

oil expeller.

-சத்தியா

SurveySan said...

uh huh! almost got it :)

dondu(#11168674346665545885) said...

இக்கேள்வியையும் வேறு பல கேள்விகளையும் வைத்து நான் போட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/12/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

What is your philial order to your father?

Anonymous said...

What is your philial order to your father?

SurveySan said...

Dondu, thanks for the interesting link. so, you are saying we cant expect to find a 'equivalent' statement in english ?

Anony, you mean Filial ?

சிவபாலன் said...

சர்வேசன்

சுவாரசியமான இடுக்கை.

//Where do you stand among your fathers progeny? //

பதிலுக்கு நன்றி!


இடுக்கைக்கு நன்றி!

dondu(#11168674346665545885) said...

ஆம் சர்வேசன் அவர்களே. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அது அம்மொழி பேசுபவர்களின் கலாச்சார சூழலால் பல நூற்றாண்டுகளின் பரிணாமத்தில் உண்டானது.

உதாரணத்துக்கு எனது இப்பதிவில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக தீவிரவாதியின் பெயரையே மாற்றினேன். அது பற்றி விளக்கம் அப்பதிவின் பின்னூட்டங்களில். இன்னொரு பதிவையும் இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். அதன் ஆங்கில மூலம் அதிலேயே சுட்டப்பட்டுள்ளது.

ஆகவே கீழே கூறப்பட்ட உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//அதாகப் பட்டது, நம்ம தமிழ 'கம்ப்பேர்' பண்ணும்போது ஆங்கிலம் ஒரு துக்கடா பாஷை என்பதை யாரும் மறுக்க முடியாது.
சும்மா 26 எழுத்த வச்சுக்கிட்டு அவங்களும் எவ்ளோ தான் படம் காட்ட முடியும்?//

எழுத்துக்களின் எண்ணிக்கை இங்கு எங்கே வந்தது? அதற்கும் மொழி வளத்துக்கும் சம்பந்தமே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

ரொம்ப லேட்டா சொல்றேனோ? பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி :)