recent posts...

Monday, October 08, 2007

சச்சின் ஓய்வெடுக்கணுமா?

சச்சின் யாரு என்ன ஏதுன்னெல்லாம் விலாவாரியா நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்ல.
பலப் பல வருஷங்களா, கன்னா பின்னான்னு வெளாசி, நமக்கெல்லாம் பெருமை சேர்த்த சுப்பீரியர் ஆட்டக்காரர் அவர்.

சமீக காலமாய் அவரின் தொடர் சறுக்கல்களால், அவரை போட்டு பிச்சு பிடுங்கராங்க்ய எல்லாரும்.

எல்லாரும் ரிட்டையர் ஆகவேண்டியதுதான்.
நம்ம சச்சினுக்கு டைம் ஆயிடுச்சா? இன்னும் ஜூஸ் இருக்கா அவருக்குள்ள?

இத படிச்சுக்கோங்க,

இப்ப வாக்குங்க

நம்ம சச்சின் ஒரு நாள் பந்தையங்களில் இருந்து ஓய்வெடுக்கணுமா?


நன்றி...

5 comments:

Anonymous said...

innikkenna retirement day vaa?

ஸ்ருசல் said...

சச்சின் போன்ற பெரிய வீரரின் ஓய்வினைப் பற்றி சாதாரண ரசிகர்கள் பேசுவது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை என்றே நான் நினைக்கிறேன்.

சச்சின் ஓய்வினைப் பற்றி முடிவெடுக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. பழையதையும் நினைத்துப் பாருங்கள்.

சென்ற தொடரில் கூட அபாரமாக விளையாடினாரே? அதிகபட்ச ரன் குவித்த வீரரும் அவரே.

ஏன் அவர் மீது இப்படி ஓர் கொலை வெறி அனைவருக்கும்?

வந்தியத்தேவன் said...

நன்றிகள் சேர்வேசன்
நானே உங்களுக்கு இப்படி ஒரு சார்வே நடாத்தச் சொல்லி மின்னஞ்சல் அனுப்ப இருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள்.

SurveySan said...

அனானி,

ரிட்டையர்மெண்ட் டே?


ஸ்ருசல்,
நீங்க சொல்றது புரியுது. ஆனா, எல்லாருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும்ல. அத தெரிஞ்சுக்கத் தான் இது :)
எனக்கு கொலைவெறியெல்லாம் இல்லீங்க. என்ன பொறுத்த வரைக்கும் அவர் ஒரு மெகா ஹீரோ! தலையில் தூக்கி கொண்டாடப் பட வேண்டியவர்.

வந்தியத்தேவன்,
உங்க பதிவு பாத்ததும்தான் சர்வே ஐடியா மொளச்சது ;)

Anonymous said...

சச்சின் போன்ற பெரிய வீரரின் ஓய்வினைப் பற்றி சாதாரண ரசிகர்கள் பேசுவது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை என்றே நான் நினைக்கிறேன்