recent posts...

Sunday, July 13, 2008

குட்டிப் புகைப் படங்கள் சில

PiTல் சென்ற வாரத்தில் Macro படங்கள் 'சீப்பா' எடுப்பது எப்படின்னு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதிய பிறகு, எனது Canon Rebelக்கு 'reversal ring' என்ற கருவியை வாங்கினேன் ($8 from ebay).

இந்த reversal ring இருந்தா, லென்ஸை திருப்பி வைத்து எடுக்கும்போது, லென்ஸ் கீழே விழுந்து விடுமென்ற பயமில்லாமல் க்ளிக்கலாம்.

ஆனா, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள பெண்டு கழளுது.
மிக அருகாமையில் உள்ள படத்தை ஃபோக்கஸ் செய்யும்போது, சிறு சிறு அசைவும், படத்தை கெடுத்து விடுகிறது.
Tripod கண்டிப்பா தேவைப்படுது.

மொத்தத்தில், இந்த 'சீப்' டெக்னிக்ல மேக்ரோ படங்கள் எடுப்பது, ஒரு எரிச்சலூட்டம் விளையாட்டுதான். ஆனா, இதன்மூலம் கிடைக்கும் அழகான படங்களைப் பார்க்கும்போது, எரிச்சல் போய், திருப்தி வரலாம்.

நான் இன்னும் அழகான படங்கள் எடுக்க முயற்சிக்கலை. அதுக்கு, tripod, reversal ring, camera எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு ஏதாவது பூந்தோட்டத்துக்குத்தான் போவணும்.

இப்போதைக்கு, வூட்டுக்குள்ளயே க்ளிக்கின மேக்ரோ படங்கள் உங்கள் பார்வைக்கு.
கருத்ஸ் சொல்லுங்க. நன்றி!

1) கிட்டார் கம்பி


2) அரிசி


3) நகம் நறுப்பான்


4) ஜீரகம்


5) ஒப்பனை சாதனம்


6) மீசை & கிருதா திருத்துவான்


என் சமீபத்திய படங்களை Flickrல் காண இங்கே சொடுக்கவும்.

11 comments:

SurveySan said...

good night! :)

Anonymous said...

அருமை :)

Sathiya said...

அருமையான படங்கள்! வீட்டுக்குள்ளேயே இப்படி எடுத்திருக்கீங்க, வெளியில போயி எடுத்தா இன்னும் அட்டகாசமா இருக்கும் போல! நான் உங்க பதிவ பார்த்துட்டு இந்த மாதிரி inverter இல்லாம முயற்சி பண்ணி பார்த்தேன். எக்கச்சக்கமான Macro Magnification கிடைக்குது ஆனா பென்ட் என்னமோ கயண்டிடுது!

கப்பி | Kappi said...

கலக்கல் படங்கள்!

SurveySan said...

Xavier, thanks.

SurveySan said...

sathiya,

Nanri :)

Yes. 'bendu' too much kazhaludhu, if the object is a shaking object like a flower ;)

but, its worth the effort.

SurveySan said...

Kaips,

Mikka Nanri :)

Boston Bala said...

வாவ்!!!!

கைப்புள்ள said...

படங்கள் நல்லாருக்கு. உங்களைப் பத்தி நெறைய தெரிஞ்சிக்க முடிஞ்சது.

நீங்க கிடார் வாசிக்கத் தெரிஞ்ச மீசை வச்ச அரிசி சாப்பிடும் ஒரு மனிதர்.
:)

எப்படி நம்ம துப்பறிதல்?

SurveySan said...

தாங்க் யூ பாலா! :)

SurveySan said...

கைப்புள்ள,

"நகமிருக்கும்" விட்டுட்டீங்களே :)

கிட்டார் வச்சிருக்கேன் - ஆனா, வாசிக்கத் தெரிஞ்சவன்னு சொன்னா அழுதுடுவேன் ;)