recent posts...

Sunday, July 06, 2008

உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் (உ.ஆ.தொ) படங்கள்

அதென்ன உயர்ந்த ஆற்றல்மிகு தொடர்னா கேக்கறீங்க? வேறொண்ணுமில்லை.
ஆங்கிலத்தில் High-Dynamic-Rangeன் தமிழாக்கம் (நன்றி தமிழ் விக்சனரி) தான் இது. சுருக்கமா HDRனு சொல்லுவாங்க. அதாவது, உ.ஆ.தொ.

PiTல் HDR படங்கள்னா என்னா, அதை எப்படி எடுப்பதுன்னு ஒரு சிறு பாடம் நடத்தியிருந்தோம்.

அந்த HDR நுட்பத்தை பயன்படுத்தி, என் சமீபத்திய சுற்றுலாவின் போது, கலிபோர்னியாவில் க்ளிக்கிய படங்களை கீழே டப்பா கட்டி காட்டியுள்ளேன்.

HDRக்கு ரெண்டு விதமான ரசிகர்கள் இருக்காங்க. ஒரு கும்பல், ஆஹான்னு ரசிச்சு பாப்பாங்க. இன்னொரு கும்பல், இது ரொம்ப செயற்கைத்தனமா இருக்குன்னு ஓரங்கட்டிடுவாங்க.

நீங்க எப்படி? கருத்ஸ் சொல்லுங்க!

ஒரிஜினல் படங்களை என் Flickr பக்கத்துலயும் பாத்து கருத்ஸ் சொல்லாம். சொல்லுங்க. நன்றி!

படத்தை க்ளிக்கினால் பெரிதாய் பார்க்கலாம். பாருங்க. :)

1) Yosemite National Park, California


2) Yosemite Falls


3) Grizzly Falls, Kings Canyon Park, California


4) Half Dome from Glacier Point, Yosemite


5) Half Dome and Yosemite Valley from Glacier Point


6) Mirror Lake, Yosemite


7) Mirror Lake, Yosemite


8) Mirror Lake, Yosemite - கொஞ்சம் சிரமப்பட்டு எடுத்த படம் இதுதான். சில்லென்ற தண்ணீருக்குள் இறங்கி நீர் மட்டத்தில் எடுத்த படம். ஜாலியான அனுபவம். கண்ணாடி மாதிரி தண்ணீரும் இந்த சூழலும், லேசுல மறக்காது :)


இவை அனைத்தும் PhotoMatix கொண்டு உ.ஆ.தொ ஆக்கப்பட்டவை.

11 comments:

SurveySan said...

3 exposures of 7th pic is available here
http://www.esnips.com/web/surveysan2005-Pictures/

Sathiya said...

இந்த ஹைடர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். போன வாரம் தான் நானும் இந்த போடோமேடிக்ஸை தரையிறக்கி ஒரு படத்தை முயற்சி செய்து பார்த்தேன். சரியா வரலை. திரும்பவும் முயற்சி செய்யணும். உங்க படங்கள் எல்லாம் சூப்பர். இதுல செயற்கை தனம் இருப்பது உண்மை தான், அனால் அதுவும் ரசிக்கும் படியாக ஒரு ஓவியத்தை போல் இருப்பது ரசிக்க வைக்கிறது!

SurveySan said...

sathiya, நன்றி.

எனக்கும் இந்த HDR மோகம் கொஞ்ச நாளா பிடிச்சு ஆட்டிப் படைக்குது :)

ஆனா, சில படங்களில், செயற்கைத் தனம் ஓவராயிடுது.
ஆனா, வசீகரிக்கும் குணம் கொண்டவை இந்த HDR வகையராக்கள்.

முயற்சி செஞ்சு பாருங்க. பதிவா போடுங்க, வந்து கருத்ஸ் சொல்றோம் ;)

திவாண்ணா said...

Freeware check out!
http://qtpfsgui.sourceforge.net/download.php

http://qtpfsgui.wiki.sourceforge.net/Qtpfsgui+Manual

திவாண்ணா said...

interesting how HDR came about!
http://www.openexr.com/index.html

ராமலக்ஷ்மி said...

ஒரிஜனல்கள் ஒரு விதமான அழகென்றால் இவை சத்யா கூறியிருப்பது போல வேறு விதமான அழகு. DSLR-ல் மட்டும்தானே இது சாத்தியம்? HDR பற்றிய பதிவில் அந்த ஹால் படத்தை எடுத்ததே தாங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது என் அனுமானம். ஜீவ்ஸின் பதிவில் சும்மாதானே கேட்டிருக்கிறீர்கள் அது யார் வீட்டு ஹால் என:))?

SurveySan said...

திவா, நன்றி. இந்த மாதிரி நல்ல கண்டுபிடிப்புக்கள் ஒண்ணு இராணுவத்துக்காக நடக்குது, இன்னொண்ணு சினிமாக்காக ;)

SurveySan said...

ராமலக்ஷ்மி,

pseudo-HDR எல்லா கேமராக் கொண்டும் எடுக்கலாம்.
ஆனா, வேறு வேறு exposureல் எடுத்து இணைக்கப்படும் real HDRக்கு manual mode வசதியுள்ள டிஜி கேமரா தேவைதான்.

ஜீவ்ஸ் பதிவில் அந்தக் கேள்வியை நான் கேக்கலை. பதில்தான் சொல்லியிருகேன் ;)

Anonymous said...

சர்வேசன், என்னுடைய HDR முயற்சியை இங்குக் காணலாம். என்னுடையது DSLR அன்று. என்னிடம் முக்காலியும் (tripod) இல்லை. எனவே நான் எடுத்த 3 வித்தியாசமான exposure படங்கள் ஒரே நிலையில் இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆகவே HDR படம் சரியாக வராமல் இருக்கலாம். ஆனாலும் ஒரு ஆசை தான். என்னுடய கருத்து என்னவென்றால் HDR படங்கள், நாம் நமது கண்ணால் பார்ப்பது(அந்த அளவுக்கு இல்லையென்றாலும்) போன்ற ஒரு விளைவை கொடுக்கும் முயற்சி.

மோகன்.

Anonymous said...

Picture 5) Half Dome and Yosemite Valley from Glacier Point is superb!
Mohan.

SurveySan said...

நன்றி மோகன்.