இதோ போடறேன், இதோ போடறேன்னு சொல்லி இழுத்து, ஒரு வழியா தனது குறும் படத்தை வலை ஏத்திட்டாரு நமது சக பதிவர் உண்மைத் தமிழன் அவர்கள்.
புனிதப் போர் என்ற தலைப்பில் மிக நீநீநீநீண்ண்ண்ண்ட ஒரு குறும் படம்.
ஆமாங்க, கிட்டத்தட்ட 12 நிமிஷம் ஓடுது.
உ.தமிழனின் பதிவுகள் படிச்சிருந்தீங்கன்னா, அவரைப் பற்றி ஓரளவுக்கு ஒரு புரிதல் கிட்டும்.
எல்லாத்தையும், பெரூரூரூசா அனுபவிச்சு ஆராஞ்சு சொல்லும் வல்லமை கொண்டவரு.
இவரது அஞ்சாதே விமர்சனம் படித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். அஞ்சாதே பதிவு எழுதி முடித்து, பப்ளிஷ் செய்யும்போது, "insufficient disk space" error வந்ததாக ப்ளாகர் அலுவலகத்தில் பரவலாக ஒரு பேச்சு உண்டு.
அப்படிப்பட்ட உ.தமிழன், குறும் படத்தையும் பெறும் படமாக எடுத்தது கொஞ்சம் இம்சை.
குறும்படத்தின் சிறப்பே, ஐந்தாறு நிமிடத்தில், விறு விறு என்று காட்டி, சுவாரஸ்யமாக முடிப்பது;
பு.போரில், ஆரம்ப 5 செக்கண்டுகள், சுவாரஸ்யமா, முழு முகம் தெரியா ஒரு 'வில்லனின்' பேச்சோடு தொடங்கியது;
ஆனா தொடர்ந்து, ஒரு ஏழெட்டு வில்லன்ஸ், வரிசையா பேசினது டார்ச்சர் ஆயிடுச்சு. ( ஏழெட்டா, இல்ல பத்து பன்னெண்டான்னு தெரியல, நடுவுல, ஓட்டிட்டேன் :) )
கடைசியில் முடியும் 'திருப்புமுனையும்' மொக்கைதான்.
இந்த மொக்கைத் தனம், நம்மை போன்ற கும்மிகளின் மத்தியில் சில காலமாய் புழங்குவதால் இருக்கலாமென்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இது இவரின் முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.
முதல் முயற்சியே, மக்கள் தொலைக்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது அவருக்கும் பெருமை, அவரால் நமக்கும் பெருமை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்!
பு.போரினால் விளைந்த இன்னொரு பெருமை, தமிழ் திரை உலகிற்கு (அட்லீஸ்ட் குறு உலகிர்க்கு), உ.தமிழனால், ஏழெட்டு (பத்து, பன்னெண்டா?) புதிய வில்லன்கள் கிடைத்துள்ளனர்.
பெருமாள் பிச்சையையும், காதல் அப்பாவையும், ஆதிஷ் வித்யார்தி, பிரகாஷ் ராஜ் எல்லாம் பாத்து அலுத்துடுச்சு, பு.போரில் இருந்து, வில்லனுங்களை எடுத்துக் கொள்ளுமாறு, திரை உலகை, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதிவுலகில் இருந்து ஏதாவது ஒரு பதிவருக்கு, அந்த கடைசியில் பேசும் ஹீரோவாக, சான்ஸ் கொடுக்காததர்க்கு என் கண்டனங்களைப் பதிகிறேன்.
உண்மைத் தமிழன், அடிச்சு ஆடுங்க!
அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் சீக்கிரம் கொடுத்து விடுகிறேன்.
ஒரே கண்டிஷன்:
நம்ம KRS ஹீரோவாகவும், கோவி கண்ணன் வில்லனாகவும், தருமி ஹீரோக்கு அப்பாவாகவும், நடிகை ஜெயப்ரதா ஹீரோவின் அம்மாவாகவும், லக்கி காமெடியனாகவும், வெட்டிப்பயல் கதையும், ஜ்யோவ்ராம் சுந்தர் வசனமும், CVR போட்டோகிராபியும் வச்சு எடுக்கணும். உங்க பேர டைரக்ட்டரா போட்டுக்கங்க, ஆனா, வேற யாரையாவது வச்சு தான் படம் எடுக்கணும். சொல்லிப்புட்டேன் ;)
பி.கு: சும்மா டமாஸுக்கு. மெய்யாலுமே, வாழ்த்துக்கள் உ.தமிழன். எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்!
20 comments:
அவ்வ்வ்வ்வ்வ்!
திட்டறீங்களா பாராட்டறீங்களா?
கார்மேகராஜா,
//அவ்வ்வ்வ்வ்வ்!//
relax. adutha padam nallaa koduppaaru :)
பரிசல்காரன்,
//திட்டறீங்களா பாராட்டறீங்களா?//
;) avlo thiramayaava ezhudhiyirukken?
hope, i am not offending anyone.
aana, podhu vazhkkaikku vandhuttaale, idhellaam adjust panniththaana aaganum :)
என்ன அநியாயம்.......
படத்துலே பெண்களே கிடையாதா?
ஹீரோவுக்கு அம்மாவா திரிஷாவைப் போடலாம்.
என்ன KRS & தருமி,
என் செலக்ஷன் OK?
உங்களுக்கு ஓர் அழைப்பு: A for Apple - Tag by Ravishankar « Snap Judgment
முன்னாடியே நன்றி சொல்லிடறேன் :)
துளசி, நல்ல வேளை ஞாபகப் படுத்தினீங்க.
ஹீரோவுக்கு அம்மாவா ஜெயப்ரதா கால்ஷீட் வாங்கிடலாம்.
அப்பதான், தருமி நடிக்க ஒத்துப்பாரு :)
பா.பாலா, அழைப்புக்கு நன்னி.
நாளைக்கு ஒரு ரெண்டு மணி நேரம், மீட்டிங் ரூம் புக் பண்ணி, இந்தப் பதிவ போட்டுடறேன் ;)
பா.பாலா, அழைப்புக்கு நன்னி.
நாளைக்கு ஒரு ரெண்டு மணி நேரம், மீட்டிங் ரூம் புக் பண்ணி, இந்தப் பதிவ போட்டுடறேன் ;)
//கோவி கண்ணன் வில்லனாகவும்,//
சாப்ட் வில்லன் கேரக்டர் என்றால் ஓகே.
படத்தில் பாலியல் வன்கொடுமை செய்வது போன்று காட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
:)
மிஸ்தர் சர்வேசன்...! என்னியப் பார்த்தா வில்லனாக தெரியுதா ?
லக்கி உ.த.வைப் பிரிச்சு மேஞ்சிருக்காரு,நீங்க திட்டறா மாதிரிப் பாராட்றீங்க !
கண்ணனின் வேண்டுகோளைப் பார்த்தீங்களா ?
கோவி,
//மிஸ்தர் சர்வேசன்...! என்னியப் பார்த்தா வில்லனாக தெரியுதா ?//
;) சும்மா டமாசுக்குதான். ஆனா, இப்பெல்லாம் வில்லன்ஸ் டீஜண்ட்டானவங்களாதான வராங்க ;)
குறும்படத்தின் ட்விஸ்டே அதுதாங்க.
அறிவன்,
//நீங்க திட்டறா மாதிரிப் பாராட்றீங்க !//
அப்படியா தெரியுது? :)
சர்வேசன் அண்ணே..
நன்றிகள்ண்ணே.. அல்லாரும் சொல்ற மாதிரி நிறைய தப்புகள் இருக்கத்தான் செய்யுது. அதுக்கு நான் மட்டுமே காரணமில்லை. முருகனும்கூடத்தான்..
நான் ரசித்ததை அஞ்சாதேயில் எழுதினேன்.. எனக்குத் தெரிந்ததை குறும்படமாக ஆக்கினேன்.. நான் போக வேண்டிய தூரம் மிக, மிக அதிகம் என்பது எனக்கும் தெரியும்..
குறும்படங்களில் 15 நிமிடங்களுக்குள்ளும் சொல்லப்படலாம்..
5 நிமிடத்தில் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தில் கதை தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. தாங்கள் முன் வர முடியுமா?
செலவு மிக, மிக குறைவுதான்.. ஒரு 40,000 ரூபாய் ஆகும். அம்புட்டுத்தான்..
///செலவு மிக, மிக குறைவுதான்.. ஒரு 40,000 ரூபாய் ஆகும். அம்புட்டுத்தான்..//
I am planning to conduct a kadhai,thiraikadhai,vasanam potti pretty soon.
if not 40,000, i will atleast give a 4000 prize money :)
இப்ப முடிஞ்ச போரா?அல்லது வேறயா?
என்னங்க ... இங்க என்னென்னமோ நடந்திருக்கு ... நம்மள வச்சி ஒரு டிஸ்கஷனே நடந்திருக்கு ...
//தருமி ஹீரோக்கு அப்பாவாகவும், நடிகை ஜெயப்ரதா ஹீரோவின் அம்மாவாகவும், ...//
ஆஹா...தலீவா... எங்க உங்க காலு....?!
// துளசி: ஹீரோவுக்கு அம்மாவா திரிஷாவைப் போடலாம்.
என்ன KRS & தருமி,//
//சர்வேசன்: ஹீரோவுக்கு அம்மாவா ஜெயப்ரதா கால்ஷீட் வாங்கிடலாம்.
அப்பதான், தருமி நடிக்க ஒத்துப்பாரு :)//
எப்படிங்க இப்படி கண்டுபிடிச்சீங்க... ஆனாலு உங்க தங்க மனசு யாருக்குங்க வரும் .. சீக்கிரம் ஆக வேண்டியதைப் பாருங்க... அப்படியே..மெளனமான நேரம்னு 'அவுங்க' சலங்கை ஒலில பாடிட்டு நிக்கறது மனசுல ஓடுதுங்க.......
ரொம்ப ஈரமா போச்சோ?!
தருமி, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
நேரத்தோட நீங்க வந்து கால்ஷீட் கொடுக்காததால், ஜெயப்ரதா மேடம், வேர கமிட்மெண்ட்டு கொடுத்திட்டாங்க ;)
குஷ் ஓகேவா? :)
//நேரத்தோட நீங்க வந்து கால்ஷீட் கொடுக்காததால்...//
ஆயிரத்தெட்டு கமிட்மென்ட்... அதுக்காக இப்படியா! .. பொன்னு வைக்கிற இடத்தில (குஷ்)பூ வைக்கிறேன்னு சொல்றீங்க. என்ன பண்றது .. producer நீங்க சொல்றீங்க .. என்ன பண்றது...சரி.. சரி.. பிக்ஸ் பண்ணிடுங்க........
அரை மனத்தோடு .........
Post a Comment