recent posts...

Thursday, July 31, 2008

Mixture - சூப்பர் பல்ட்டி, PiT, தனம் ராஜா,சென்னை, குசேலன்...

அ.


கலக்கறாங்கோ இல்ல? 08/08/08க்காக வெயிட்டிங்.
இந்த முறையும் ஒண்ணும் தேராதுன்னு பட்சி சொல்லுதாம்.

ஆ.
PiTன், ஓராண்டு நிறைவை ஒட்டி மெகா போட்டி நடக்குது.

அம்மாடியோவ், நாட்கள் ஓடரதே தெரீல.

வயசாவுது! :(

வருஷம்ஸ் may come
and வருஷம்ஸ் may go
வீ நெவர் change!

இ.
ராஜா மெய்யாலுமே காணாமதான் போயிக்கிட்டிருக்காரு. பலரும் ஊர்ஜீதமும் பண்ணிட்டாங்க.
'தனம்'னு ஒரு படம் வந்திருக்கு. ராஜா மூஜிக்.
ஹ்ம். என்னத்த சொல்ல. ஒண்ணு ரெண்டு, ஓ.கே.
ஆஸ்தான பாடகி, பவதாரணி பாடியிருக்காங்க. ஹ்ம்.
சித்ரா, ஜானகி, spb, யேசுதாஸ், உண்ணி, இவிகயெல்லாம் பாட வரமாட்றாங்களா?

"கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள" என்று ஒரு இஸப் பாட்டும் உண்டு.

ஈ.
ஒடம்ப கட்டுமஸ்தா வச்சுக்கலாம்னு, இப்பெல்லாம், ஓவரா வெளையாட ஆரம்பிச்சாச்சு.
வாலிபாள், டென்னிஸ் எல்லாம் கூட நடக்குது.
என்ன, பாதி நேரம் பந்துக்கு பின்னாடி ஓடரதுக்கே சரியா இருக்கு.

இங்க ரெண்டு மூணு தெருவுக்கு ஒரு பெரிய பார்க், பல வெளையாட்டுக்கள் வெளையாட இலவச வசதி, ராத்திரி கூட லைட் போட்டு வெளையாட ஏற்பாடுன்னு சொகுசு பண்ணி வச்சிருக்கானுவ. எங்க ஊர்ல இருக்கர பார்க்கெல்லாம் பாக்க இங்க சொடுக்குங்க.

நம்ம சொந்த ஊர்ல (சென்னை) மைதானம் எங்க இருக்குன்னு யோசிச்சு பாத்தேன். ஸ்கூல் படிக்கர காலத்துல ஃப்ளட் லைட் மேச்செல்லாம் வெளையாடின பெரிய மைதானமெல்லாம் ஃப்ளாட் கட்டி மூடிட்டான்.
இப்பெல்லாம் பசங்க எங்கப் போய் வெளையாடரங்க?

ஒரு ஏக்கருக்கு, ஒரு பார்க்கு கட்ட இடம் விடணும்னு சட்டமெல்லாம் இருக்காமே? அது எல்லாம் புஸ்ஸா?

BSNL ஆளுகளே, லஞ்சம் கேக்கறாங்கன்னு ஒரு பதிவர் போட்டிருந்தது ஞாபகத்துல வந்து தொலைக்குது. தலைவர் புதுப் படம் பாத்து கருத்ஸ் சொல்லரதலையே பிஜியா இருக்காரு. MP எல்லாம் 25 கோடி பொட்டீல வாங்கரானாமேன்னு ஒலகம் பூரா, போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிட்டானுவ.
தண்ணிப் பிரச்சனை வராம இந்த வருஷம் சென்னை தப்பிச்சிடலாம்னு சில பேர் சொல்லராங்க. எங்க வீட்ட சுத்தி சில பேர் வீட்டுக் கெணத்துல தண்ணி லேது. 150 அடி போர் போட்டெல்லாம் தண்ணி கெடைக்கலையாம்.
ஆனா, 2004ஐ விட, 2007ல் பூமியில் தரைநீரின் மட்டம் உயர்ந்திருக்காம்.

நல்லது நடந்தா சரிதான்.

உ.
குசேலன்? அட, என்னத்தங்க சொல்றது?
இதோட மூலப் படம் மலையாளத்துல மம்முட்டி நடிச்சத போன மாசம் பாத்தேன்.
ஆர்ப்பாட்டம் இல்லாம அவரும் ஒரு பதினஞ்சு நிமிஷம் வந்துட்டுப் போவாரு. படமும், ஆர்ப்பாட்டம் இல்லாம, எதமா இருக்கும்.
குசேலன்ல தலைவரு ஒரு மணி நேரம் வராராம். ரெண்டு பாட்டெல்லாம் பாடராராம். பேட்டியெல்லாம் குடுக்கறாராம்.
வியாபார தந்திரமோ என்னமோ, படத்தின் 'ஹீரோ' பேரும் படமும் எங்கையும் காணும்.
படம் எப்படி இருக்கும்னு அனுமானிக்க முடியுது.
கண்டிப்பா தியேட்டர்ல போய் பாக்கரதா இல்ல.
DVD எப்படியும் ஒரு மாசத்துல வந்துடும். அப்பாலிக்கா பாத்துக்கலாம்னு விட்டாச்சு.
தியேட்டர்ல $20.50க்கு விக்கரானுவ. Dark Knightக்கு $9 தான்.
என்ன கொடுமைங்க இது?

சிவாஜி, தசாவதாராமெல்லாம், நெறைய செலவு பண்ணி, ஒலகத்தரத்துக்கு எடுத்துட்டாங்க, அவங்கள ஊக்குவிக்கலாம்னு, எல்லாரும் $15 கொடுத்து பாத்திருப்போம்.

குசேலனுக்கு இன்னாத்துக்கு $20.50 கேக்கறாங்க?

அமெரிக்க வாழ் மக்களே, $20.50 கொடுத்து பாத்துட்டு, திருப்தியா இருந்ததான்னு ஒரு வரீல சொல்லுங்கய்யா. கீழையோ, வலது பக்க பொட்டிலயோ வாக்குங்க.

எந்த மாதிரி படமெடுத்தாலும், எம்புட்டு கேட்டாலும் கொடுத்து பாக்கர, உங்கள மாதிரி தைரியசாலிகளால்தான் இதெல்லாம் தொடர்கதையா நடக்குது ;)

latest additions:
லக்கியாரின் குசேலன் = குப்பை
VSKன் படமா சார் இது?

ஹாப்பி ப்ரைடே!பி.கு: 6-packs நானுன்னு யாரும் வயிறு எரிஞ்சு பொக விட வேணாம். நானுல்ல அது.

9 comments:

SurveySan said...

படம் பாத்தவங்க வாக்கு போட்டுடுங்கப்பா.

ரெண்டு விமர்சனம் படிச்சதுல தெரிஞ்சுடுச்சு, படத்தின் ரிஜல்ட் என்னாகும்னு :)

கோவி.கண்ணன் said...

//குசேலனுக்கு இன்னாத்துக்கு $20.50 கேக்கறாங்க?//

காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ....
காற்றுள்ள போதே ...


தூற்றிக்கொள் !

VIKNESHWARAN said...

:)

SurveySan said...

கோவி,

//காற்றுள்ள போதே ...


தூற்றிக்கொள் !//

ஏமாளியா இருந்தாதான விடுவோம்?
எல்லாரையும் உஷாராக்கும் நமது வாக்கெடுப்பு என்று நம்புவோமாக :)

ILA said...

//$20.50 கொடுத்து பாத்துட்டு//
DVDla varattum. kodumai

SurveySan said...

vikneshwara, :)


ILA,
///DVDla varattum. kodumai//
periya kodumainga idhu. aanaa, business magnettu avanga ellaam. adhaan poondhu velayaadaraanga.
kovi sonna maadhiri kaatrulla podhe...

SurveySan said...

தூள்! = Dhool not Thool

;)


yaaro 3 punniyavangal தூள்!nu solraanga.

SurveySan said...

64% - nallalla!

Anandha Loganathan said...

//கலக்கறாங்கோ இல்ல? 08/08/08க்காக வெயிட்டிங்.
இந்த முறையும் ஒண்ணும் தேராதுன்னு பட்சி சொல்லுதாம்.//

இதுக்கு பட்சி எல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம். மாவட்ட, மானில, தேசிய அளவில் னம்ம ரேஞ்சு என்னான்னு தெரியும் இல்ல.