recent posts...

Showing posts with label photos macro. Show all posts
Showing posts with label photos macro. Show all posts

Sunday, August 24, 2008

ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்...

வித விதமா கலர் கலரா பல பூக்களை எடுத்தாச்சு.

இந்தப் பூக்களை தாங்கி நிக்கர, பூ-தாங்கிகளை எடுக்கவேணாமா?

இந்த லென்ஸ் திருப்பிப் போட்டு மேக்ரோ க்ளோஸ்-அப் எடுக்கரதுக்கு பொறுமையின் சிகரமா இருக்கணும் போலருக்கு.
லேசா காத்தடிச்சாலும், செம டார்ச்சர்.

நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;)

இனி, பூ-தாங்கிகளைப் பாப்பமா?





~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ..இன்னா அழகு, இன்னா பேச்சு.. பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Sunday, July 13, 2008

குட்டிப் புகைப் படங்கள் சில

PiTல் சென்ற வாரத்தில் Macro படங்கள் 'சீப்பா' எடுப்பது எப்படின்னு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதிய பிறகு, எனது Canon Rebelக்கு 'reversal ring' என்ற கருவியை வாங்கினேன் ($8 from ebay).

இந்த reversal ring இருந்தா, லென்ஸை திருப்பி வைத்து எடுக்கும்போது, லென்ஸ் கீழே விழுந்து விடுமென்ற பயமில்லாமல் க்ளிக்கலாம்.

ஆனா, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள பெண்டு கழளுது.
மிக அருகாமையில் உள்ள படத்தை ஃபோக்கஸ் செய்யும்போது, சிறு சிறு அசைவும், படத்தை கெடுத்து விடுகிறது.
Tripod கண்டிப்பா தேவைப்படுது.

மொத்தத்தில், இந்த 'சீப்' டெக்னிக்ல மேக்ரோ படங்கள் எடுப்பது, ஒரு எரிச்சலூட்டம் விளையாட்டுதான். ஆனா, இதன்மூலம் கிடைக்கும் அழகான படங்களைப் பார்க்கும்போது, எரிச்சல் போய், திருப்தி வரலாம்.

நான் இன்னும் அழகான படங்கள் எடுக்க முயற்சிக்கலை. அதுக்கு, tripod, reversal ring, camera எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு ஏதாவது பூந்தோட்டத்துக்குத்தான் போவணும்.

இப்போதைக்கு, வூட்டுக்குள்ளயே க்ளிக்கின மேக்ரோ படங்கள் உங்கள் பார்வைக்கு.
கருத்ஸ் சொல்லுங்க. நன்றி!

1) கிட்டார் கம்பி


2) அரிசி


3) நகம் நறுப்பான்


4) ஜீரகம்


5) ஒப்பனை சாதனம்


6) மீசை & கிருதா திருத்துவான்


என் சமீபத்திய படங்களை Flickrல் காண இங்கே சொடுக்கவும்.