recent posts...

Monday, December 01, 2008

Las Vegas செல்லும் பயணிகள் கவனத்திர்க்கு...நீல ஆண் குழு சகிக்கலை...

லாஸ் வேகஸ் நகரத்திர்க்கு, ஜூதாடப் போற ஐடியா இருந்து, இவ்ளோ தூரம் வந்துட்டமே, அப்படியே ஒரு ஷோவும் பாத்துட்டுப் போயிடலாம்னு ஐடியா உங்களுக்கு வரும்னா, Blue Man Group என்ற ஷோ பக்கம் தலை வச்சும் படுத்துடாதீங்க.
டிக்கெட் ஒருத்தருக்கு, கிட்டத்தட்ட $100.
ஆனா, நிகழ்ச்சி மகா மகா மகா தண்டம். ஏகன் கூட பல்லக் கடிச்சிக்கிட்டு பாத்திடலாம். இத்த மூணு நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல்ல.

என் விரிவான, ஆங்கில புலம்பல் இங்கே.

'நீல ஆண் குழுவை' தவிர்த்துப் பார்த்தால், லாஸ் வேகஸ் ஒரு அழகிய நகரம். பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாலும், ஒவ்வொரு தடவையும், புச்ச்சா இருக்கும் பாக்க.
'சீப்பா' பொழுது போக்க சிறந்த இடம்.
அமெரிக்க பொருளாதாரம், சுருங்கி விட்ட இத்தருணங்களில், லாஸ் வேகஸை சுற்றி உள்ள, பதினெட்டு பட்டி மக்களும், தங்கள் விடுமுறையை, வேறு எங்கும் பறந்து செல்லாமல், இங்க தான் கழிப்பாங்களாம்.
நானும் என் விடுமுறையை அங்குதான் கழித்தேன்.

சென்ற வீக்-எண்ட், அங்க செம கூட்டம்.

நான் சுட்ட சில லாஸ் வேகஸ் படங்கள். நிறை குறைகளை கூறுங்கள்.
(Flickrலும் பார்க்கலாம்)

பாரிஸ் பாரிஸ் ஜூதாட்ட விடுதி


ஏதோ ஒரு பூ


பாரிஸ் பாரிஸ் வாசலில் உள்ள கலைஅம்சம் (18+?)


வெனீஷியன் ஜூதாட்ட விடுதியினுள்

வெனீஷியன் அரங்கினுள்


இன்னொரு பூபி.கு: மும்பையில் இவ்வளவு நடந்தும், ஒரு நாள் பரபரப்பு அடங்கியதும், நாமும் நம் மத்த வேலைகளைப் பாக்கப் போயிடறோம். அரசாங்கமும், மத்த வேலையை பாக்க போயிடராங்க. இதுதான் கேவலமான யதார்த்தம் :(

btw, மாறன் ப்ரதர்ஸ், மீண்டும் ஜோதீல ஐக்கியமாயிட்டாங்களாமே.
தினகரன் ஆஃபீஸ்ல, இவங்க முட்டிக்கிட்ட போது, செத்தவனெல்லாம் ஐயோ பாவம். :(

எல்லோரும் இன்புற்றிருப்பதே அல்லாது வேறொன்றறியேன் பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராபாஆஆஆஆஆரமே!

15 comments:

Vinitha said...

nalla post.

ange test engineer velai patri eluthungal.

SurveySan said...

Vinitha, Danks!

//ange test engineer velai patri eluthungal.//

புரீலியே. யூ மீன், test engineer வேலை வாய்ப்பு, இங்க கலிஃபோர்னியால இருப்பதை பத்தியா?

Vinitha said...

Yes. If you can point out exclusive H1B co's, would be great.

I have some experience, and thought of exploring. I have a BCA and finishing my MBA now.

Heard from friends that Test Engineering jobs are in great demand.

ILA said...

//that Test Engineering jobs are in great demand.//
I beg a pardon, Most of the Testing/QA jobs are being offshored and hence QA profiles are considered to be low(ie. low salary). However there are lot of openings for QA, you could give a shot, all the very best.

மாயவரத்தான்.... said...

Hello Mugamoodiyarae..oops..sorry Survesan Sir,

Venetianla unga moonji maadhiriyae varanju koduppangalae..ukkandhu varanjukkalayaaa?!

ராஜ நடராஜன் said...

நாம லாஸ் வேகாஸெல்லாம் எங்கே போறோம்ன்னு நினைச்சு என்னமோ ஏதோன்னு ஆங்கிலத் தொடுப்புக்குப் போனா....

Radha Sriram said...

அவ்வளவு மோசமாவா இருக்கு??

Radha Sriram said...

அவ்வளவு மோசமாவா இருக்கு??

SurveySan said...

Vinitha,

//Heard from friends that Test Engineering jobs are in great demand.
///

is it? i havent checked lately. see ILA's response.

i dont have much info on that, but if I find something, i will post.

SurveySan said...

Mayavarathan sir,

///Hello Mugamoodiyarae..oops..sorry Survesan Sir,///

enna kodumainga idhu?


////Venetianla unga moonji maadhiriyae varanju koduppangalae..ukkandhu varanjukkalayaaa?!////

adhu, pala dhadava varanjaachu, vera idangalil.

vayasaayaachu, ini indha moonjiya varanju ennaagap povudhunnu, vittutten. :)

SurveySan said...

Raja Natarajan,

//நாம லாஸ் வேகாஸெல்லாம் எங்கே போறோம்ன்னு நினைச்சு என்னமோ ஏதோன்னு ஆங்கிலத் தொடுப்புக்குப் போனா....//

ponaaa? :)

SurveySan said...

Radha,

///அவ்வளவு மோசமாவா இருக்கு??///

Absolutely!!! total crap! :(

Udhayakumar said...

boss, even i was there. might be we crossed each other in Las Vega Blvd :-)

SurveySan said...

udhayakumar,

////boss, even i was there. might be we crossed each other in Las Vega Blvd :-)////

boss, முன்னாடியே சொல்லியிருந்தா, அந்த பக்கமே வராம எஸ்கேப்பிருப்பேனே ;)
just kidding.

அடுத்த முறை முன் அறிவிப்பு வெளியிட்டு வாரேன். ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.............................................................................................................
..................