recent posts...

Tuesday, December 02, 2008

சோனியா 'காந்தி'யை புறக்கணிங்கோ மக்கா!

மொதல்ல இத்த படிங்க (Sonia’s presence in Delhi is costing India dearly ) . interesting read.

ஏன், சோனியா, நம்ம நாட்டுக்கு கேடுன்னு சொல்லிருக்காங்க.
ஆனா, ரொம்ப அழுத்தமான சாட்சிகளும், காரணங்களும் சொல்லப்படவில்லை.

ஒண்ணு மட்டும் ( என் பார்வையில் ) நிச்சயம்.

காங்கிரஸ் கட்சி, நம் நாட்டுக்கு பெருத்த சாபக்கேடு. ஆரம்ப காலங்களில் இருந்த ஒரு சில, தேச நலன் கருதிய, தலைகள் போன பிறகு, பல கிழடுகளும் சேர்ந்து கொண்டு, நாட்டை ஆட்டிப்படைப்பதும், நம்மை ஆண்டி ஆக்குவதும் 61 வருடங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

வேலை செய்யத் தெரிந்தவனையும் செய்ய விடாமல் மறிப்பதும், அடுத்தவன் காலை வாரி விடுவதும், அரசியலை கழுதை வியாபாரம் ஆக்கியதும், நம் நாட்டுக்கு சொல்லித் தந்த சிறப்பு, காங்கிரஸையே சேரும்.

வரும் தேர்தலில் காங்கிரஸை புறக்கணிப்போம்! அந்த கட்சி உடைந்து, உருத்தெரியாமல் போனால்தான், இந்தியா உறுப்படும்.
உடனே உறுப்படுதோ இல்லியோ, அட்லீஸ்ட், அதுதான் முதல்படி.
'காந்தி' பேரை களவாண்டு வச்சுக்கிட்டு, இவங்க பண்ற அலம்பு தாங்க முடியல்ல.

திடீர்-தாக்குதல்களை எல்லாம், எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாதுதான். ஆனால், ஏதோ ஒரு அசம்பாவிதம், நடக்கப் போவுதுன்னு, பல தகவல்கள் பல தரப்பிலிருந்து சொல்லப்பட்டும், அதை தடுத்து நிறுத்தமுடியாத அளவுக்கு, ஒரு சிஸ்டத்தை கட்டிக் காத்து வரும், சோனியாவும், சிங்கும், இனி நம்மை ஒரு நாளும் ஆளக் கூடாது.

சும்மா, எப்பவும் அரைக்கும் மாவையே திரும்ப அரச்சு, இனி என்ன செஞ்சு, பாதுகாப்பை வலுப்படுத்தப் போறோம்னு, ஒரு எழவையூம் செய்யக் காணோம். ஆட்சிக்கு வந்ததும், ஒரு சில நல்ல (pota) சட்டத்தையும் தூக்கிட்டாங்க.
இப்ப, பாக்கிஸ்தான் காரன், evidence காட்டு காட்டுன்னு, காட்டு கத்து கத்தறான்.
இந்த லட்சணத்துல, சிதம்பரம் கிட்டேயிருந்து, நிதித்துறையும், சிங்கே வாங்கிக்கிட்டாரு.
எங்கேருந்து இவங்க ஊரத் திருத்த போறாங்க?

சோனியா வாசிக்கர மகுடிக்கு ஆடரதுக்கே நேரம் சரியாயிருக்கும்.

வரும் தேர்தலில், ராகுல் ப்ரியங்காவெல்லாம், மந்திரியா கூட வராமப் பாத்துக்கணுமய்யா.
'காந்தி' பேருக்கு ஒரு தடா போடணும், அரசியலில் உபயோகித்துக் கொள்ள.

என்ன நெனைக்கறீங்க?

காங்கிரசுக்கு வாக்குவீங்களா? (வேண்டாங்க, ப்ளீஸ், நாட்டை காப்பாத்துங்க!)


பி.கு: வேர யாருக்கு வாக்கரதாம்னு கேட்டீங்கன்னா, அதுக்கான விடை எனக்குத் தெரியலை. தாய்லாந்து மாதிரி, ஆக்ருமான், பண்ணாதான், ஊரு உருப்படுமோ? :)

ஹ்ம்! :(

30 comments:

நல்லதந்தி said...

காங்கிரஸை கலைச்சிடுங்கன்னு அப்பவே காந்திஜி சொன்னாரு.அவரது பேச்சை கேட்டு இருந்தா நாடு இந்த அளவுக்கு குட்டிச்சுவர் ஆகி இருக்காது

SurveySan said...

சும்மா கலச்சுடுன்னு சொன்னா, பதவி வெறி பிடிச்சவங்க எப்படி கலைப்பாங்கா?
நாமளா விரட்டினாதான் உண்டு.

SurveySan said...

அந்த ஆங்கிலப் பதிப்பில்
//some one told me that a fish has the shortest memory, we indians must be giving a close fight, right now all news channels and buzz is about change and that enough is enough etc., and deep down every one knows that nothing is going to happen. NDTV, CNN and party will move on and so will our country, every body says india bashing is a favourite past time in pakistan, are we any different. so many times we accuse our neighbours but not even once have we shown to the world in concrete terms that they are our perpeterators. ///

இப்படி ஒருத்தர் கமெண்ட்டிருக்காரு.
உண்மையான கருத்து அது.

அதனால், இந்தப் பதிவை, மீண்டும், பலமுறை எலெக்ஷன் சமயத்தில், மீள்-பதிவு போட்டுக்கிட்டே இருக்கப் போறேன் ;)

குடுகுடுப்பை said...

அது யாரு சோனியான்னா?

SurveySan said...

//அது யாரு சோனியான்னா//

பாக்கரதுக்கு, மதர்.தெரேஸா மாதிரி இருப்பாங்க, ஆனா செய்யரதெல்லாம், தூள் படத்துல வர சொர்ணாக்கா மாதிரி :(

கோவி.கண்ணன் said...

யாருப்பா பொடியன்/சஞ்ஜெய் சீக்கிரம் இங்கே வரவும்.

Kamal said...

சர்வேசன்...பொடியன் சஞ்சய் இஸ் ஆன் த வே!!!!!
ரெடியாக இருக்கவும்!!! :)))))))

Kamal said...

அட..அதுக்குள்ள நம்ம கோவி சாரும் இதையேதான் சொல்லிருக்கார்...

SurveySan said...

கோவி, கமல்,

பிரீலியே :)

பொடியன், சோனியாவின், கொ.ப.செ'வா?

கோவி.கண்ணன் said...

//SurveySan said...

பிரீலியே :)

பொடியன், சோனியாவின், கொ.ப.செ'வா?
//

யாரப்பாத்து என்ன கேள்வி ?, இங்கே ஒரு அதகளமும், கூடவே ஒரு கொலையும் நடக்கறத்துக்குள்ளே, அஃதாவது அவரு பார்பதற்குள் பதிவை அழிச்சிட்டு, பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை போடுங்க :)

SurveySan said...

ஐயகோ,

பொடியனின், thinkcongress இப்பதான் பாக்கரேன். :)

'அன்னையை' ரொம்பவே தாங்கறாரு.

பொடியன் சார் பொடியன் சார், கோவிதான் சார், இப்படியெல்லாம் எளூதச் சொன்னாரு சார். நீங்க நல்லவங்க சார். நானும் நல்லவன் சார். ;)

கிரி said...

:-)))

கபீஷ் said...

சோனியா பத்தின கமெண்ட் தூள்(சோனியா=சொர்ணாக்கா)

நிஜமா நல்லவன் said...

/நல்லதந்தி said...

காங்கிரஸை கலைச்சிடுங்கன்னு அப்பவே காந்திஜி சொன்னாரு.அவரது பேச்சை கேட்டு இருந்தா நாடு இந்த அளவுக்கு குட்டிச்சுவர் ஆகி இருக்காது/

ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

பொடியன் சார்...நீங்க ப்ளாக் பக்கம் வரவே நேரம் இல்லைன்னு நேத்து தான் சொன்னீங்க....இப்ப நீங்க வந்தே ஆகவேண்டிய சூழ்நிலை வந்துடுச்சிங்கோ...:))

Anonymous said...

காங்கிரஸ் இல்லைன்னா வேற யாருக்கு ஆட்சியை கொடுக்கலாம் ? அத்துவானிஜிக்கு கொடுத்திடலாமா ஷர்வேஷன் ?

செந்தழல் ரவி

அஆ said...

இந்தியாவையே விற்கும் இந்த கும்பல் சீக்கிரமா ஓடனும்.

மருதநாயகம் said...

நீங்க மேற்கோள் காட்டுறதுக்கு கூட ஒரு வெளிநாட்டவர் தான் வேணுமா சர்வேஷன். நீங்களே இப்படி வெளிநாட்டவரை தூக்கி வைத்து ஆடும் போது சாமானியனை குறை சொல்வதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது

SurveySan said...

மருதநாயகம்,

////நீங்க மேற்கோள் காட்டுறதுக்கு கூட ஒரு வெளிநாட்டவர் தான் வேணுமா சர்வேஷன்///

வேதம் புதிது'ல அடிக்கர மாதிரி, அடிச்சுட்டீங்க :(

எனக்கே கேவலமாதான் இருக்கு இப்படி சொன்னது. ஆனா, உள்ளூர்ல, மேற்கோள் காட்ட யாரு இருக்கா?

ஒரு அஞ்சு நல்ல தலைவர்கள் பேர் சொல்லுங்களேன். எல்லாரும் சேந்து, நம்மால முடிஞ்ச, விளம்பரம் அவங்களுக்கு வரும் தேர்தல்களில் கொடுக்கலாம்.

குடுகுடுப்பை said...

SurveySan said...

//அது யாரு சோனியான்னா//

பாக்கரதுக்கு, மதர்.தெரேஸா மாதிரி இருப்பாங்க, ஆனா செய்யரதெல்லாம், தூள் படத்துல வர சொர்ணாக்கா மாதிரி :(

செல்வராகவன்னு ஒரு சினிமா டைரக்டர் இருக்காரே அவரு மனைவியா இப்படி ரவுசு வுடுராங்க.

SurveySan said...

செந்தழல் ரவி,

///அத்துவானிஜிக்கு கொடுத்திடலாமா ஷர்வேஷன் ?////

வட மொழி ப்ரயோகத்தை, தவிர்ப்போம்.
ஷர்வேஷன் = சர்வேசன் :))))

உங்க கேள்விக்கான விடை,பதிவுலயே சொல்லிட்டனே.
///பி.கு: வேர யாருக்கு வாக்கரதாம்னு கேட்டீங்கன்னா, அதுக்கான விடை எனக்குத் தெரியலை. தாய்லாந்து மாதிரி, ஆக்ருமான், பண்ணாதான், ஊரு உருப்படுமோ? :)
////

கோவி.கண்ணன் said...

//வட மொழி ப்ரயோகத்தை, தவிர்ப்போம்.//

:) நல்ல கூத்து. எழுத்தைச் சொல்கிறீர்களா ? சொற்களைச் சொல்கிறீர்களா ? ஜா, ஜி வடசொற்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் 'ப்ரயோகம்' என்று பயன்படுத்தி இருப்பது வடசொல்.

:)

ப்ரயோகம் > பயன்பாடு, புழக்கம்

கோவி.கண்ணன் said...

// SurveySan said...
மருதநாயகம்,

////நீங்க மேற்கோள் காட்டுறதுக்கு கூட ஒரு வெளிநாட்டவர் தான் வேணுமா சர்வேஷன்///

வேதம் புதிது'ல அடிக்கர மாதிரி, அடிச்சுட்டீங்க :(

எனக்கே கேவலமாதான் இருக்கு இப்படி சொன்னது. ஆனா, உள்ளூர்ல, மேற்கோள் காட்ட யாரு இருக்கா?

ஒரு அஞ்சு நல்ல தலைவர்கள் பேர் சொல்லுங்களேன். எல்லாரும் சேந்து, நம்மால முடிஞ்ச, விளம்பரம் அவங்களுக்கு வரும் தேர்தல்களில் கொடுக்கலாம்.
//

சோனியா ஜியை வெளிநாட்டுக்காரி என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்தம்மா புடவைக் கட்டி இந்தியராகத்தான் வாழ்கிறார்கள். இந்திய வழக்கப்படி பெண்ணுக்கு புகுந்தவீடே உடைமை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 300 ஆண்டுகளுக்கு முன்பே கனியன் பூங்குன்றனார் பாடிவிட்டார். நாம இன்னும் இங்கேயே தங்கிவிட்டவர்களை வெளிநாடு உள்நாடு என்று பார்க்கிறோம். சோனியா வந்து 30 ஆண்டுகள் ஆகிறது, அதற்கும் முன்பு வெளி நாட்டில் வந்தவர்களின் ஆண்டுகணக்கை நீட்டிக் கொண்டே போனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கனவாய் வழியாக வந்த வெளிநாட்டுக்காரர்களிடம் போய் நிற்கும். இதெல்லாம் தேவையா ?

ஒருவரை நிராகரிப்பதற்கு வெளிநாடு / உள்நாடு என்று சொல்வது அற்பவாதமாகவே படுகிறது.

சோனியாவிற்கு பிரதமர் பதவி என்பது இழுக்கு என்பதை ஒப்புக் கொள்கிறேன், காரணம் வெளிநாட்டினர் இந்தியாவைப் பற்றி நினைக்கும் போது இத்தாலி மேடம் இந்தியாவை ஆளுவதாகத்தான் சொல்வார்கள். ஆனால் சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று சொல்வதை ஏற்க முடியாது.

சோனியஜியை வெளிநாட்டுக்காரி என்று தூற்றி இருக்காவிட்டால் மன்மோகன் சிங்கிற்கு பதில் சரத்பவார் தான் பிரதமர் ஆகி இருப்பார் என்பது பலருக்கு தெரியாது.

SurveySan said...

கோவி, தப்பா எதையோ புரிஞ்சுக்கிட்டு, ஒரு பெரிய பின்னூட்டம் போட்டுட்டீங்க. இருந்தாலும் டாங்க்ஸ்! :)

இங்கே, சோனியா வெளிநாட்டுக்காரி என்பதால், யாரும் எரிச்சலோ கோபமோ படலை.

மருதநாயகம் கவலைப்பட்டது, நான் 'நல்ல' ஆட்களுக்கு மேற்கோளாக, தெரஸாவையோ/தாய்லாந்தையோ காட்டியதை ( atleast i think thats what he meant ).

என்னைப் பொறுத்தவரை, சோனியா மட்டுமில்லை, பெனாஸிரின் பொண்ணூ வந்து ஆண்டாலும் ப்ரச்சனையில்லை. ஆனா, உத்தமமா ஆளணும். hidden agenda எல்லாம் வச்சுக்கிட்டு, நாட்டை குட்டிச்சுவர் ஆக்கக்கூடாது.

SurveySan said...

குடுகுடுப்பை,

///செல்வராகவன்னு ஒரு சினிமா டைரக்டர் இருக்காரே அவரு மனைவியா இப்படி ரவுசு வுடுராங்க.///

என்ன கொடுமைங்க இது. நானே ரொம்ம்ப நாளைக்கப்பரம், சீரியஸா ஒரு பதிவு போட்டு, கல்லா கட்டிட்டு இருந்தா,கொஞ்சம் கூட நாட்டுப் பற்றே இல்லாம, இப்படி அடிக்கறீங்களே.

நீங்க இத்தாலி நாட்டுக்காரரா? :)

Anonymous said...

நல்ல பதிவு சர்வேசன்!!!
என்னை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் நம் இந்திய தேசத்தை ஆட்சி செய்யட்டும் ஆனால் நேரு குடும்பம் வேண்டாம்!! நேரு குடும்பம் என்பது மட்டுமே ஆட்சி செய்ய போதுமான தகுதியா? இல்லை காங்கிரஸ் மக்களுக்கு புதுசாக நன்மை ஏதும் செய்யாததால் நேரு குடும்பத்தின் பின் ஒளிந்து கொள்கிறதா ? இல்லை காங்கிரஸில் வேறு ஆளே இல்லையா?

lovely said...

மும்பை வெடிகுண்டு பற்றி உங்கள் முதல் பதிவை பார்த்து, நீங்கள் நல்ல நடுநிலை வியாதி என்று நினைதிருந்தேன், இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

SurveySan said...

suttapalam,

/// காங்கிரஸ் மக்களுக்கு புதுசாக நன்மை ஏதும் செய்யாததால் நேரு குடும்பத்தின் பின் ஒளிந்து கொள்கிறதா ? இல்லை காங்கிரஸில் வேறு ஆளே இல்லையா?///

திருத்தம்: பல வருஷங்களாகவே, காங்கிரஸ் மக்களுக்கு நன்மை ஏதும் செய்யத் தெரியாததால்...

SurveySan said...

lovely,

////இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.////

பிரீல. நீங்க, ரவி மாதிரி, எனக்கு, அத்வானி 'அக்மார்க்' முலாம் பூசரீங்களோ?

நான் நடுநிலை வியாதியான்னெல்லாம்ம் தெரியல. ஆனா, இன்றைய அரசியல்வியாதிகளில், யாரும், திறமையானவரா என் கண்ணுக்குத் தெரியல.

Infosys Nilenkani மாதிரி ஆட்கள், உண்மையான அக்கரையுடன், இருப்பதாய் தெரிகிறது. உத்தமர்களாயிரூந்தா, அவங்கெல்லாம், அரசியல் பக்கம் வரணும், என்பது மட்டுமே, இப்போதைக்கு என் நிலை.
http://www.hindu.com/thehindu/holnus/006200811251080.htm

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.............................................................................................................
..................