recent posts...

Thursday, December 18, 2008

திரட்டி அரசியல் - ரேஸ் ஆரம்பம்

அண்ணனுக்கு அண்ணன், பதிவுலகக் கண்ணன், கருத்து கந்தசாமி என்று பலராலும் 'அன்புடன்' அழைக்கப்படும் கோவி கண்ணனின், திரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம்! என்ற பதிவை படிச்சிருப்ப்பீங்க.

அவரு என்னா சொல்றாருன்னா,
"பதிவர்களால் பாராட்டி பேசப்படும் திரட்டியே முதலிடத்திற்கு வரும் - ©கோவி கண்ணன்.

மெய்தானே?

ஃபான்ஸ் இருந்தாதானே சூப்பர் ஸ்டாராக முடியும்?

நீங்க எந்த திரட்டிக்கு ஃபானு?

யோசிச்சுக் குத்துங்க.

சிறந்த பதிவு போட்டிகள் அவங்க நடத்தட்டும், சிறந்த திரட்டி போட்டியை நான் நடத்திட்டுப் போறேன் ;)


சர்வே கொம்பேனியாருக்கு உதவ நினைப்பவர்கள், சர்வே பொட்டியை உங்க பதிவில் போட்டு விளம்பரப் படுத்தலாம் ;)



pic source: http://pcweenies.blogspot.com/2007/08/el-aggregator.html

வெற்றி பெறும் திரட்டியின் பெயரில், ரூ.101 எங்க ஊரு உண்டியலில் காணிக்கையாக போடப்படும் ;)

ஸ்டார்ட் மீஜிக்!

ஹாப்பி வெள்ளி!

19 comments:

SurveySan said...

யாருக்கு வாக்குனீங்கன்னு, வெக்கப்படாம சொல்லிட்டுப் போங்க ;)

என் வாக்கு, தமிழ்மணத்துக்கு ;)

SurveySan said...

இதுல ஏதாவது மிஸ் ஆயிடுச்சுன்னா சொல்லிட்டுப் போங்க ;)

////அண்ணனுக்கு அண்ணன், பதிவுலகக் கண்ணன், கருத்து கந்தசாமி என்று பலராலும் 'அன்புடன்' அழைக்கப்படும் கோவி கண்ணனின்////

உ.ம்
அ) சின்னத் திரை நடிகைகளின் பாடிகார்ட்? ;)
ஆ)

தமிழ் பிரியன் said...

தமிழ் மணம்!

SurveySan said...

மற்ற திரட்டிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அங்கே பதிவையொ வாக்குப் பெட்டியையோ இணைக்கவும், நன்னி!

ராமலக்ஷ்மி said...

தமிழ் மணம்.

நினைத்ததை பதிந்திட வலைப்பூ.

பதிந்ததை பகிர்ந்திட
கருத்து பெற்றிட
பதில் தந்திட மட்டுமின்றி..

மற்றவர் பதிவுகள் கண்டிட
பின்னூட்டம் பின்னிட
வழி செய்து..

தமிழின் மணத்தை
தரணியெங்கும் பரப்பும்
தமிழ் மணத்துக்கே..

எல்லோரும்
போடுங்கம்மா ஓட்டு
போடுங்கய்யா ஓட்டு:)!

ஆயில்யன் said...

// ராமலக்ஷ்மி said...
தமிழ் மணம்.

நினைத்ததை பதிந்திட வலைப்பூ.

பதிந்ததை பகிர்ந்திட
கருத்து பெற்றிட
பதில் தந்திட மட்டுமின்றி..

மற்றவர் பதிவுகள் கண்டிட
பின்னூட்டம் பின்னிட
வழி செய்து..

தமிழின் மணத்தை
தரணியெங்கும் பரப்பும்
தமிழ் மணத்துக்கே..

எல்லோரும்
போடுங்கம்மா ஓட்டு
போடுங்கய்யா ஓட்டு:)!
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

/SurveySan said...
யாருக்கு வாக்குனீங்கன்னு, வெக்கப்படாம சொல்லிட்டுப் போங்க ;)

என் வாக்கு, தமிழ்மணத்துக்கு ;)
//

:)))

மீ டூ தமிழ்மணம் :)

கிரி said...

நான் தமிழ்மணத்திற்கு வோட் போட்டேன்..

தமிளிஷும் எனக்கு பிடித்த திரட்டி தான், ஆனால் ஒரு வோட் தான் என்பதால் தமிழ்மணம் தற்போதைய ஒரே ச்சாய்ஸ்.

//ராமலக்ஷ்மி said...
போடுங்கம்மா ஓட்டு
போடுங்கய்யா ஓட்டு:)!//

போட்டாச்சு! போட்டாச்சு!! :-))

Jeeves said...

தமிழ்மணம் தான்

SurveySan said...

Ramalakshmi,
Amogam. kaivasam ellaathukku kavidhai readyaa irukku :)

செந்தழல் ரவி said...

என்னை பொறுத்தவரை தமிழ்ஷ் திரட்டியே அல்ல...

தமிழ்ஷ் வலைப்பதிவுகளை மட்டும் திரட்டுவது கிடையாது...

தட்ஸ்தமிழ்ல் இருந்தோ வேறு தளத்தில் இருந்தோ கூட தமிழ்ஷ்ல் லிங்க் தரலாம்...

வெறும் வலைப்பதிவுகளை மட்டும் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், கணிமை ஆகியவையே திரட்டி !!!

தமிழ்மணம் மற்றும் தமிழ்ஷ் நாம சேர்த்தால்தான் காட்டும்...

தமிழ்வெளி மற்றும் சங்கமம் ஆட்டோமேட்டிக்காக திரட்டுகிறது...

தமிழ்மணம் மற்றும் தமிழ்ஷ்லும் இந்த வசதி இருந்தா "நன்னா" இருக்கும்...

செந்தழல் ரவி said...

ஆ) டவுசர்கள் அவிழாமல் காக்கும் காவலன் :)))

SurveySan said...

//தமிழ்ஷ் வலைப்பதிவுகளை மட்டும் திரட்டுவது கிடையாது...
//

yep. tamilish is more like Digg or de.liciou.us

SurveySan said...

Tamilish.com (19) (38.78%)
TamilManam.Net (24) (48.98%)

ILA said...

அனைத்துப் பதிவுகளையும் திரட்ட ஆரம்பித்திருக்கிறது சங்கமம். சங்கமம் திரட்டியாக இன்னும் உருவாகவே இல்லை என்பது என் எண்ணம். காரணம் நான் மத்த மொழிகளில் BLOGKUT காட்டும் ஆர்வத்தை தமிழுக்கு காட்டவில்லை. காரணம் ஒன்றுதான். அது தமிழ்மணம்.என் தாய் வீடு இல்லீங்களா தமிழ்மணம்.

SurveySan said...

இளா,

blogkut பாத்தேன். அதில் இணைவது எப்படி?

ஹோம் பேஜி, கூகிள் விளம்பரம், பச்சை கலர்ல இருக்கே, அதன் கலரை மாத்தலாம் நீங்க ;)

SurveySan said...

வாக்காதவங்க வாக்குங்க.

கோவி.கண்ணன் said...

இது எப்ப வந்தது ?

எப்படியோ நான் சொல்லிய படி தமிழ்மணம் தான் முன்னாடி வந்திருக்கு.

:)

SurveySan said...

yes. ஆனா, டமிலிஷ் இஸ் catching up. :)