recent posts...

Sunday, March 08, 2009

Memento (ஆங்கில கஜினி?) - திரைப் பார்வை

கஜினி படம் வந்ததும், இந்தப் படம் Memento என்ற ஆங்கிலப் படத்தின் காப்பின்னு பல இடங்களில் சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க.
கஜினியை,முதலில் இந்தியிலும், பின்னர் தமிழிலும் பார்த்துவிட்டு, Memento எப்படா கையில் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருந்தேன்.
உண்மையை கண்டறிந்து சொல்லும் தார்மீகப் பொறுப்பு தலை மேல் ஒக்காந்ததால், ஏகப்பட்ட தலை வலி.
வலி நிவாரணியாக, எங்க ஊர் லைப்ரரில, இந்த டிவிடி ஆப்டுது.
நேத்துதான் பாத்தேன்.
சுடச் சுட கருத்ஸை சொல்லாட்டி, தல சுக்கு நூறா வெடிச்சிடும்னு நான் நம்பரதால, உடனே தட்டச்ச ஆரம்பிச்சுட்டேன்.

first things first. கஜினி Mementoவின் காப்பியா?

கண்டிப்பா லேது!

முருகதாஸ் Mementoவிலுருந்து எடுத்துக்குட்ட விஷயம் ரொம்ப கம்மி.

ஹீரோக்கு short term memory loss.
மனைவியைக்/காதலியை கொன்றவனை பழிவாங்கணும்.
ஒடம்புல பச்சக் குத்தி வச்சுப்பான்.
எல்லாத்தையும் போலராய்டு கேமரால பதிஞ்சு வச்சுப்பான்.

இம்புட்டுதான், Mementoவிலுருந்து, முருகதாஸ் எடுத்துக்கிட்ட விஷயம். இந்த மூண வச்சுக்கிட்டு, கஜினியை நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி, அருமையா கடை, திரைக்கதை அமைச்சு கொடுத்திருக்காரு. அவருக்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு, இனி Mementoவை பாப்போம்.

இன்னொரு விஷயம், Mementoக்கும் கஜினிக்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கு. அதை கடைசீல சொல்றேன்.அருமையான படம். ஹீரோவா நடித்திருக்கும் Guy Pearce அலட்டிக்காம நடிச்சிருக்காரு. ஆரம்ப சிலக் காட்சிகளில், என்னடா இவரு, பழி வாங்கப் போறேங்கறாரு கொஞ்சமாவது மூஞ்சீல அதக் காட்டவேணாமா? ஒரு கோவம் ஒரு கத்தல் ஏதாவது இருக்க வேணாமான்னு தோண்ற அளவுக்கு அலட்டிக்காம அமைதியா நடிச்சிருக்காரு.

முதல் பத்து நிமிஷம், கொட்டாவி விடர மாதிரி தான் ஆரம்பிக்கறாங்க. அப்பரம், இவங்க கதை சொல்லும் பாணி புரிஞ்சதும், அடுத்தது என்னன்னு ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது.

படத்தின் பெரிய பலம், கதை சொல்லப்பட்டிருக்கும் விதம்.
முதல் சீன்லேருந்து, கடைசி சீனுக்கு பயணிக்கும் மற்ற படங்கள் போலல்லாமல், கடைசி சீன்லேருந்து, முதல் சீனுக்கு பயணிக்கும் எடிட்டிங். அட்டகாசமான புத்திசாலித்தனம் இது.

ரெண்டு மூணு தடவை பாத்து ரசிக்கக் கூடிய வகையில் இருக்கு, இந்த விதமான எடிட்டிங் நுட்பம். வேர ஏதாவது படம் இந்த மாதிரி வந்திருக்கான்னு எனக்கு நினைவிலில்லை. தெரிஞசா சொல்லுங்க.

ஹீரோ, முதல் சீனில் ஒரு பாழடஞ்ச பில்டிங்கில் ஒருத்தர கூட்டிக்கிட்டு வந்து, போட்டுத் தள்ளிடுவாரு. அதுக்கு அடுத்த சீன்ல, அந்த பில்டிங்குக்கு எப்படி/ஏன் வராருங்கரது இருக்கும். இப்படியே பின்னோக்கி நகர்ந்து கொண்டே வரும்.

ஹீரோவுக்கு இருக்கும் short term memory lossஐ சில பேர், அவங்களுக்கு சாதகமா பயன் படுத்திப்பாங்க. அந்தக் காட்சிகளெல்லாம் இந்த பின்னோக்கி நகர்வதால் 'நச்'னு அமஞ்சிருக்கு.
ஹீரோவுக்கு, உதவுவதாய் வரும் ஒரு பெண், ஒரு சீனில், மூக்கில் ரத்தத்துடன் வந்து ஹீரோகிட்ட, என்ன ஒரூத்தன் அடிச்சுட்டான், நீ போய் அவன திரும்பி அடிக்கணும்னு சொல்லுவா. இவனும் போய் அந்த ஆள அடிச்சுட்டு வந்துடுவான்

அதுக்கு முன்னாடி சீன்ல பாத்தா, இந்தப் பொண்ணு, ஹீரோவை ரொம்பக் கேவலமா பேசி எரிச்சல் மூட்டி, ஹீரோவின் கையாலேயே தன் மூக்கில் ஒரு குத்து விடும்படி செஞ்சிருப்பா. ஹீரோவுக்குதான் short term memory lossஆச்சே, தான் தான் அடிச்சேன்னு ஞாபகம் இருக்காது, அடுத்த சீன்ல, எவனோ என்ன அடிச்சுட்டான், அவன போய் நீ அடின்னு சொன்னதூம்,போய் வேலைய முடிச்சுட்டு வந்துடுவான்.

இப்படி ரசிக்கும்படியான பல காட்சிகள் படத்தில்.

இந்தப் படத்தின் பெரிய திருப்புமுனை ( படம் பாக்கலாம்னு நெனைக்கறவங்க, இத்தோட அப்பீட் ஆயிக்கோங்க. இல்லாட்டா, சஸ்பென்ஸ் ஒடஞ்சுடும் )
....
......
........
இந்த படத்தில் ஹீரோவை கடைசியில் anti-ஹீரோவாக முடித்திருக்கும் டெக்னிக்.

வில்லனை, ஒரு போலீஸ்காரர் துணையுடன் ஹீரோ எப்பவோ புடிச்சு போட்டுத் தள்ளியிருப்பாரு. ஆனால், அவனை சாகடிச்சதையே மறந்திருப்பாராம்.
அதனால, திரும்ப திரும்ப வில்லன் பெயர் கொண்ட மற்றவர்களை தேடிப் போட்டுத் தள்றதையே வேலையா செஞ்சுக்கிட்டு இருப்பாரு.
ஒரு கட்டத்தில், இவர் வாழ்க்கையில் இருக்கும் ஒரே 'பிடிப்பு', இந்த சுவாரஸ்யமான வில்லன் வேட்டை தான் என்கிற லெவலுக்கு வந்துடுவாரு.

உடன் இருக்கும் போலீஸ்காரரும், உண்மையை அப்பப்ப எடுத்துச் சொல்லி, ஹீரோகிட்ட, வில்லனை தான் சாகடிச்சாச்சே, ஊரை விட்டுப் போய் வேர பொழப்பப் பாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
ஒரு கட்டத்தில், இந்த போலீஸு, நம்ம சுவாரஸ்யமான வேட்டையில் குறுக்கே நிக்கரான்னு, அவனையே, 'வில்லன்'ன்னு பச்சை குத்திக்கிட்டு கடைசில போட்டுத் தாக்கிடறாரு.
முதல் சீனில், இந்தப் போலீஸை சாகடிக்கரத காமிப்பாங்க. ஆனா, படம் முழுக்க, இவரு ஹீரோ கூடவே சுத்திக்கிட்டு இருப்பாரு. இவன் தான் வில்லனோன்னு ஒரு சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் அவிழ்க்காமல் அருமையான நகர்வு.

பத்தாம் வகுப்பில், ஷெர்-ஷா-சூரி'யின் வீரப்ரதாபங்களை எழுதுங்கர கேள்விக்கு பக்கம் பக்கமா கைவலிக்க எழுதரமாதிரி, நானும் அடிச்சுத் தள்ளிட்டேன். I dont think i made justice, in depicting the scenes from the movie ;)

so, படம் பாக்காதவங்க, கண்டிப்பா தேடிப் பிடிச்சு பாருங்க.
கண்டிப்பா ரசிப்பீங்க!

பி.கு: ஆங்கில ரெவ்யூ, புகழாரங்கள் இங்கே
Consensus: Memento's fragmented, complex narrative is skillfully executed, keeping audiences guessing. Overall, critics find it to be a highly original, clever movie.

26 comments:

Suresh said...

Arumai boss kandipa thedi pidichu vangi pakuran.

சரவணகுமரன் said...

வித்தியாசமான படமா இருக்கும் போல... படம் பார்க்க பலரை தூண்டியிருப்பீங்க...

அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

T.V.Radhakrishnan said...

பார்த்திருக்கிறேன்..ஆங்கில சப்டைடிலுடன்..அருமையான படம்

ஆ! இதழ்கள் said...

ஹீரோக்கு short term memory loss.
மனைவியைக்/காதலியை கொன்றவனை பழிவாங்கணும்.
ஒடம்புல பச்சக் குத்தி வச்சுப்பான்.
எல்லாத்தையும் போலராய்டு கேமரால பதிஞ்சு வச்சுப்பான்.//

The best parts i liked in the movie Ghajini are the above ones. :(

but since you said that it is completely a different screen play... Lemme try to watch it.

Super alasal... thanksungo....

SurveySan said...

Suresh,

///Arumai boss kandipa thedi pidichu vangi pakuran.//

Danks boss! let me know if you enjoyed it ;)

SurveySan said...

சரவணகுமரன்,

////வித்தியாசமான படமா இருக்கும் போல////

கண்டிப்பா. இதுக்கு முன்னாடியும், பின்னாடியும்,இப்படி ஒரு டெக்னிக்ல படம் வரலன்னே தோணுது.
perfect original!

////படம் பார்க்க பலரை தூண்டியிருப்பீங்க...///

இப்படி தூண்டி தூண்டி ரணகளமாகாம இருந்தா சரி. ;)

SurveySan said...

அப்பாவி தமிழன்,

அழைப்புக்கு நன்னி.

SurveySan said...

T.V.Radhakrishnan,

///பார்த்திருக்கிறேன்..ஆங்கில சப்டைடிலுடன்..அருமையான படம்////

பாத்துட்டு பதிவெழுதாம இருந்தா எப்படி? ப்ளாகர் சாமி கண்ணெல்லாம் குத்தாதா? :)

SurveySan said...

ஆ! இதழ்கள்,

//The best parts i liked in the movie Ghajini are the above ones. :(//

hm. but, we should just look at as an 'inspiration' not a lift.

///but since you said that it is completely a different screen play... Lemme try to watch it.///

pls do, and let me know how it went :)

SurveySan said...

Memento trailer

http://www.youtube.com/watch?v=0vS0E9bBSL0

Karthick Krishna CS said...

/இந்த விதமான எடிட்டிங் நுட்பம். வேர ஏதாவது படம் இந்த மாதிரி வந்திருக்கான்னு எனக்கு நினைவிலில்லை. தெரிஞசா சொல்லுங்க//

iam sure u r aware of non-linear narration in films... actually memento's narration goes in 2 directions.. end to start (shown in color) followed by start to end (shown in B&W)...
here is the list of some movies which uses non-linear narration

-pulp fiction
-solaris
-following (by the same director)
-the prestige(by the same director)
-Eternal Sunshine of the Spotless Mind
-irreversible
-5x2
-kill bill

search in wiki for more films...
run lola run too fall under non linear category...

கொண்டோடி said...

உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டீர்கள்.

என்கருத்துப்படி கஜனி மெமன்டோவின் படியெடுப்புத்தான். ஆனால் இதைச் சொல்ல நான் விரும்புவதில்லை. காரணம் ஒன்றுதான். இந்த ஒப்பீட்டாலேயே கஜனியை சிறந்த படமாகக் கருத வேண்டி வந்துவிடலாமென்பது தான் அது.

கதையில் மேலதிகச் சேர்க்கை (பின்னே? இரண்டரை மணிநேரம் மக்களைத் தாக்காட்ட வேண்டுமே), கதைசொல்லப்பட்ட விதத்தில மாற்றம் இருந்தாலும்கூட இந்தப்படத்தை மூலமாக வைத்துத்தான் படமெடுத்தோம் என்று ஒத்துக்கொள்ளும் நேர்மையாவது இருந்திருக்க வேண்டும்.
திரைக்கதையமைப்பு மாற்றப்பட்டதை முருகதாசின் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் புகழ்ந்திருந்தார் ரவிசங்கர்.
என்னைக் கேட்டால் மூலத்தைப் போன்று சொல்லியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் 'மசாலா'க் கதையொன்றைச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன திறமையிருக்கிறது? எங்கள் இரசனை அப்படியிருக்கிறது.

மெமன்டோ பற்றி சில வருடங்களின் முன்பு நந்தன் (அல்லது நந்தா?) என்ற வலைப்பதிவர் விலாவாரியாக எழுதியிருந்தார்.

ஒருமுறை மட்டும் பார்த்துவிடும் படமன்று இது. குறைந்தது இரண்டு முறையாவது பார்த்தால்தான் படத்தை அனுபவிக்க முடியும், The Sixth Sense போல.

SurveySan said...

thanks Karthick.

btw, i hated kill bill.
and didnt realise eternal sunshine is shown in 'reverse' :)
have to watch it again.

SurveySan said...

கொண்டோடி,
///என்னைக் கேட்டால் மூலத்தைப் போன்று சொல்லியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் 'மசாலா'க் கதையொன்றைச் சொல்லியிருக்கிறார்///

இது கரெக்ட்டு. மெமெண்டோ மாதிரி அப்படியே எடுத்திருந்தா, கண்டிப்பா யாருக்கும் புரிஞ்சுருக்காது.
நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி மாத்தீ கொடுத்தது நல்லாவே இருந்தது கஜினியில்.


/////இந்தப்படத்தை மூலமாக வைத்துத்தான் படமெடுத்தோம் என்று ஒத்துக்கொள்ளும் நேர்மையாவது இருந்திருக்க வேண்டும்.////

கரீட்டு. அது தப்புதான். ஆனா, அப்படி டைட்டிலில் போட்டுட்டா, அப்பரம் அவங்களுக்கு மொய் எழுதாம இருக்க முடியுமா? அதனால தான் கௌரவமா, போடாம விட்டுருப்பாங்க ;)

thenali said...

இந்த படத்தை இந்தி கஜினி வந்த நேரத்தில் பார்த்தேன். (ஆரம்பத்தில் கதை புரியாமல் விக்கிபீடியாவிற்குப் போய் கதை தலைகீழாக ஓடுகிறது எனத் தெரிந்து படத்தை தொடர்ந்தேன். இவர்களின் கிரியேட்டிவிட்டியை நம்முடையதுடன் ஒப்பிட்டு வருத்தம்தான் மிஞ்சியது!

ஹாலிவுட் பாலா said...

மன்னிக்கனும் சர்வேசன்,

”....இந்தப் படத்தின் பெரிய திருப்புமுனை....” -ன்னு ஆரம்பிச்சி நீங்க சொல்லியிருக்கற அத்தனை விசயங்களும் தவறான முறையில் நீங்க கதையை புரிஞ்சிட்டு இருக்கீங்கன்னு தெரியுது.

உங்க கிட்ட இன்னும் அந்த டிவிடி இருந்தா.. அதை இன்னொரு முறை பாருங்க.

இந்த படத்தோட டிவிடி 2 வெர்சன்ல கிடைக்கும். 1-டிவிடி & 2-டிவிடி கலக்டர்ஸ்/ஸ்பெசல் எடிசன்.

ஸ்பெசல் எடிசன் கிடைச்சா.. அதில் 2-ஆவது டிவிடி-யில்.. சில கேள்விகளுக்கு... ‘C'-ன்னு பதில் அளிச்சீங்கன்னா.. படத்தை Chronological முறையில் பார்க்கலாம். அந்த டிவிடி கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. இந்த டிவிடி-யை ரீவைண்ட் பண்ணி.. பண்ணி பாருங்க.

என்னை கேட்டா. பெஸ்ட்.. இதோட டைரக்டர்ஸ் கமெண்ட்ஸை கேட்டுகிட்டே படம் பார்க்கறதுதான் ரொம்ப நல்லது.

என்னோட இந்த பின்னூட்டம் உங்க விமர்சனத்தை பத்தி இல்லை. கதையை நீங்க சொல்லிய விதம்தான்.
----------

என்னோட Draft-ல 2 வாரமா வச்சிருக்கேன். நான் எழுதியிருக்கற விதத்தை படிக்கறவங்க நிராகரிக்க வாய்ப்பு அதிகம்.

இருந்தாலும்.. உங்க பதிவை படிச்ச பின்னாடி என்னோடதையும் பப்ளிஸ் பண்ணலாம்னு இருக்கேன்.

முடிந்தால் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

No hard feelings..!! Cheers :-))

ஹாலிவுட் பாலா said...

அதேபோல.. இது நான்-லீனியர் வகையில் பல்ப் ஃபிக்சன் மாதிரி சேர்க்க முடியாது.

இந்த திரைக்கதை முறைக்கு Reverse Chronological-ன்னு பேரு. இந்த மாதிரி.. நிறைய படங்கள் வந்து இருக்கு.

Karthick Krishna CS said...

@ஹாலிவுட் பாலா

chronological முறையில் செய்யாத எந்த ஒரு விஷயமுமே non-linear என்றே நினைக்கிறேன். இல்லையெனில் தெளிவுப்படுத்தவும். டாரன்டீனோவும், நோலனும் அடிக்கடி பயன்படுத்தும் narration style..

ஹாலிவுட் பாலா said...

@கார்த்திக்...

நான் ஒரு கமா போட மறந்ததில்... சொல்ல வந்த அர்த்தம் மாறிடுச்சி.

நீங்க குறிப்பிட்டது போல மெமண்ட்டோ நிச்சயமா நான் - லீனியர் தான். ஆனால் இதை தனியே Reverse Chronologic-க்னு பிரிச்சி இருக்காங்க.

நீங்க குறிப்பிட்ட Eternal Sunshine of the Spotless Mind, 5X2, irreversible எல்லாம் இந்த வகை. அதை முழுக்க உபயோகிச்சிருக்க இருக்க மாட்டாங்க.

இந்த திரைக்கதை முறையை கையாண்ட விதத்தில்.. மெமண்டோதான் பெஸ்ட்...!!

Karthick Krishna CS said...

@ஹாலிவுட் பாலா
அதே அதே... இதி அடுத்த சிறப்பு என்னனா, ஒரே சமயத்துல பின்னோக்கியும், முன்னோக்கியும் பயணிக்கும் திரைக்கதை.. அதை கலர், கருப்பு வெள்ளைனு வேறுபடுத்திய விதம்.. எல்லாமே சூப்பர்...

SurveySan said...

ஹாலிவுட் பாலா, உங்க பதிவில் நான் போட்ட பின்னூட்டம் இங்கேயும் காப்பி/பேஸ்ட்: :)
http://hollywoodbala.blogspot.com/2009/03/memento-2000.html

------
voila! செம ரெவ்யூ! அட்டகாசம்.
விமர்சனமும், ரிவர்ஸ்ல எழுதியிருந்தா, உலகிலேயே முதல் முறையாக.. புகழ் உங்களூக்கு கிடைச்சிருக்கும் ;)

////‘நீ கூட நான் தேடும் ஜான் ஜி’யாக இருக்கலாம் என நினைக்கும் லென்னி, டெடியின் கார் நம்பர் ப்ளேட்டை தன் தொடையில் பச்சை குத்திக்கொள்கிறான்./////

எனக்கென்னமோ, அப்படி தெரியல. அந்த சீன்ல, ஹீரோ வில்லன் ஆகிடறான்.

புத்திமதி சொல்ல ஆரம்பிக்கும் டெடியை, 'மார்க்' பண்ணி வச்சுக்கிட்டு, தன் விளையாட்டை தொடருகிறான்.
அதுக்கேத்த மாதிரி voice overs வருமே.

excellent review!

I still have the rental DVD... here are the dialogues said by Teddy in the last scene.

teddy: you dont want the truth, you makeup your own truth.

teddy: all you do is moan. you are live in a dream kid. a dead wife to pine for. a sense of purpose to your life. a romantic quest you wouldnt end. you are not a killer. thats why you are so good at it.

Lennys voice over: i am not a killer. i just some who wanted to make things right. can i just let myself forget what you just told me.
and then he writes 'dont trust his lies'. can i just let myself forget what you made me do. ( and then he burns the old pictures which shows that he killed a 2 john Gs so far ). i just want another puzzle to solve. another john G to look for. you are a John G. so you could be my John G.
do i lie to myself to be happy. in your case teddy, yes i will.

and then he drives off on the porsche and gets the license tattood :)

hope it helps

amazing movie, the more you watch it, the more entertainment it provides.

SurveySan said...

karthick,

//ஒரே சமயத்துல பின்னோக்கியும், முன்னோக்கியும் பயணிக்கும் திரைக்கதை//

good point.

SurveySan said...

/////என்னோட Draft-ல 2 வாரமா வச்சிருக்கேன். நான் எழுதியிருக்கற விதத்தை படிக்கறவங்க நிராகரிக்க வாய்ப்பு அதிகம்.

இருந்தாலும்.. உங்க பதிவை படிச்ச பின்னாடி என்னோடதையும் பப்ளிஸ் பண்ணலாம்னு இருக்கேன்./////

:) என் எழுத்தை படிச்சு பல புதிய எழுத்தாளர்கள் உருவாகராங்க.
எல்லாம் என் தெறமையான எழுத்து தரும் தெகிரியம்தான் ;)

ஹாலிவுட் பாலா said...

சர்வேசன்...,

டைரக்டர்.. டெடியை பத்தி சொன்னது என்னன்னா.. அவன் உண்மையும் சொல்கிறான்... பொய்யும் சொல்கிறான்..!! ஆனா எது உண்மை, எது பொய்ன்னு சொல்லலை.

அதை தீர்மானிக்கிற பொறுப்பு நம்ம கிட்ட கொடுத்துடுறார்.

You are a John G, you could be my John G-ன்னு சொல்லுறதுதான்... லென்னி... டெடியோட கார் நம்பரை எழுதி வைக்க காரணம். மத்தபடி.. டெடி.. அவனுக்கு இடையூறா இருக்கறான்னு இல்லை.

டெடி அவனுக்கு இடையூறுன்னு அவன் கொல்லனும்னா.. அங்கயே கொல்லலாமே.

அவனுக்கு எல்லா ஜான் ஜி-யையும் கொல்லுற ஐடியாவும் இல்லைன்னுதான் தோணுது. உண்மையான ஜான் ஜி-யை கண்டுபிடிக்கனும். ஹைய்யோ.. விட்டா.. இன்னொரு பெரிய பதிவு எழுதற மாதிரி.. வார்த்தைகள் வந்துட்டே இருக்கு.

ஒன்னேயொன்னு...

//ஒரு கட்டத்தில், இந்த போலீஸு, நம்ம சுவாரஸ்யமான வேட்டையில் குறுக்கே நிக்கரான்னு, அவனையே, 'வில்லன்'ன்னு பச்சை குத்திக்கிட்டு கடைசில போட்டுத் தாக்கிடறாரு.//

இது நிச்சயமா தவறு. அந்த டாட்டூவை.. ஜான் ஜி- யோட நம்பர்ன்னு நாடலிதான் லென்னிக்கு சொல்லுறா.

அந்த கேள்வியை நான் அல்ரெடி.. கேட்டிருக்கேன். அது தற்செயலா.. இல்லை ப்ளானான்னு.

ஆனா.. நாமதான் மண்டையை பிச்சிக்கறோம். நோலனோ.. முருகதாஸோ.. இல்லை..!!

உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி சர்வேசன் சார்.

நான் அப்பீட்டு ஆய்க்கிறேன்.

SurveySan said...

ஹாலிவுட்பாலா,

நோலனுக்கே தெரியாத விடையை நாம ஆராய்ச்சி பண்றதுதான், படத்தின் வெற்றி :)

டெடியும் ஜான்.ஜி தான்னு தெரிஞ்சப்பரம், எதுக்காக அவன் லைசன்ஸ் ப்ளேட்டை எழுதி வச்சுக்கிட்டு எஸ்கேப் ஆகணும்?

ரெண்டு காரணங்கள்.
1) தேடிக் கொல்லும் 'த்ரில்லுக்காகத்தான்'.
2) ஜான் ஜியின் கார்தான்னு confirm பண்ணிட்டு சாகடிக்க.

#2வா இருந்தா, அங்கையே இருக்கர ஆளுகிட்ட, ட்ரைவர் லைசன்ஸ் பிடுங்கிப் பாத்து, அங்கையே போட்டு தள்ளிருக்கலாமே?

எனக்குத் தெரிஞ்சு #1தான் செட்டாகுது.
voice overம் அதைத் தானே சொல்ல்லுது?

// i just want another puzzle to solve. another john G to look for. you are a John G. so you could be my John G.
do i lie to myself to be happy. in your case teddy, yes i will.//

?