recent posts...

Sunday, March 22, 2009

ஜெய் சன்னகேசவா! ஆஸ்கார் தரத்தில் ஒரு குலுதெ படம்!

இதற்கு முன் இப்படி வந்ததேயில்லை. ஆபத்தின் விளிம்பில் இருக்கும் துரியோதனன். துரியோதனன் இடுப்பில் வெடிகுண்டு?
கட்டுண்டு கிடக்கும் ஹீரோ.
காப்பது எப்படி? கீழே சிதறிக்கிடக்கும் மூன்று துப்பாக்கி குண்டு.
துரிதமாய் செயல்படுகிறார் ஹீரோ.
சடால் என்று கீழே விழுந்து, புல்லட்டை தன் வாயால் பச்சிளம் பாலகனைப் போல் கவ்வி எடுத்து.. அடாடாடாடாடாடா.. சமீபத்தில் பார்த்த Shoot'em Upல் கூட இவ்வளவு தடாலடி கவுந்தடி சீன்கள் இல்லை.
சிம்ப்ளீ சூப்பர்ப்!


மேலே துப்பாக்கி புல்லட் என்றால். இனி, நிஜ புல்லெட்டு. ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏற ஹீரோவின் பைக் துரத்தல்.
லாவகமாக ரயிலின் மொட்டை மாடியில் மைக்கில் தாவி, கம்பார்ட்மெண்ட் டு கம்பார்ட்மெண்ட் எக்கி, ரயிலுக்கு முன்னால் ஜிவ்வென்று இறங்கி, ஸ்ஸ்ஸ். கலக்கல்!
ஆராயாதீங்க, அனுபவிங்க்!Cliffhangerல் தேவயில்லாமல் மலையில் ஏறி அங்கும் இங்கும் தாவுவார் சில்வஸ்டார் ஸ்டலோன்.
இங்கே, கயிறும் இல்லை, கவலையும் இல்லை.
அஞ்சாநெஞ்சன், நமது ஹீரோ, சுவாய்ங்க் சுவாய்ங்க் என்று மலையேறும் அழகோ அழகு. ஆபத்தில் சிக்கியிருக்கும் முயலை டைவ் அடித்து பிடிக்கும் லாவகம். நச்!கடைசியாக, ஜெய் சென்னகேசவா! இதை நீங்க ஏற்கனவே பாத்திருக்காட்டி, நீங்க இதுநாள் வரை இழந்ததை விவரிக்க வார்த்தகள் பத்தா.
குறிப்பா, ஹீரோ மீசையை சுண்டிவிடும் அழகு, காணக் கண் கோடி வேணும்!
எஞ்சாய் மாடி!


வில்லுக்கு ராமரு
வில்லனுக்கு ராவணரு
டீக்கு நாயரு
சீனுக்கு நயன்தாரு
பசிச்சா சோரு
ஸ்டைலுக்கு வேர யாரு?

நம்ம பாலகிருஷ்ணகாரு,
நுவ்வே சாட்சாத் ஹீரோவுலு!
நுவ்வுக்கு ஜனகோடி செப்புது வந்தனமுலு!

வாழ்க வளர்க!

5 comments:

ஆ! இதழ்கள் said...

ஆண்டவா.... எப்படிப்பா இப்படியேல்லாம் தேடிப் பாக்குறீங்க... காலங்காத்தால எனக்கு இது தேவையா?

இந்த ஆள இந்தியன் ரெயில்வேல் சேத்துவிட்டா ஜெய் சன்னகேசவானு மூணுதடவ சொல்லி சொல்லியே ரயிலெல்லாம் ஓட்டுவானே, ஒரு செலவில்லாம இதேல்லாம் யோசிக்கவே மாட்றீங்க.

ஆனா மலையக்காட்டிலும் கர்லிங் பெருசாருக்கு.

எனக்கும் அவன துரியோதனனாத்தான் தெரியும்.

SurveySan said...

ஆ!, வந்தனமுலு!

//எனக்கும் அவன துரியோதனனாத்தான் தெரியும்.//

அத்துஸ்ரீ மஹாபாரத்து கதா!

Anandha Loganathan said...

It seems you are fan of Balakrishna. If it continued we would also become his fan.

How did you find these !!!. What we did wrong ?. Why are you torturing us?.

Jai balakrishna !! instead of saying Jai Hanuman.

Really it was fun to watch these.

ச்சின்னப் பையன் said...

ஆஹா!!! இன்னிக்கு முழுக்க இதை நினைச்சி சிரிக்க வெச்சிட்டீங்க... வாழ்க பாலகிருஷ்ணா!! வாழ்க சர்வேசன்!!!

:-))))))))))))

SurveySan said...

Ananda, Chinnappayyan,

danks for the visit :)

Jai balakrishna! :)