நாடோடி வாழ்க்கை ஆரம்பிச்சு சில பல வருஷம் ஆயிடுச்சு. கல்லூரி படிப்பின் போது, we change lives என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அப்பப் ப்ரபலமா இருந்த aptechல் சேர்ந்து ஆணி பிடுங்கக் கத்துக்கிட்டது இந்த அளவுக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க. கல்லூரி, அதுக்கப்பரம் உள்ளூர் வேலை, அதைத் தொடர்ந்து, மும்பை, டில்லி, சிங்கை என சுற்றி, கலிஃபோர்னியாவில் நகராம ஒக்காந்து சில பல வருஷமாயிடுச்சு.
ஆனாலும், ஒவ்வொரு வருடம், சென்னை போவது, தடங்கலில்லாமல் நடக்குது.
11 மாசம் முடிஞ்சதும், கை கால் எல்லாம் ஆட ஆரம்பிச்சுடும்.
ஊருக்கு போயிட்டு வந்தால்தான் ஆடரது நிக்கும்.
வருஷா வருஷம் போவதால், சென்னையில் நிகழும், பெரிய பெரிய மாற்றங்கள், strikingஆ எனக்கு தெரிஞ்சதில்லை.
ஆனாலும், இந்த முறை சென்றபோது, கத்திப் பாரா ப்ரிட்ஜும், ஏர்ப்போர்ட்டு ப்ரிட்ஜும், ரொம்பவே அசத்திடுச்சு.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பாத்த எம்.ஐ.டி ப்ரிட்ஜை, ஜூஜூபி ஆக்கிடுச்சு, கத்திப்பாரா.
இந்த விஷயங்களையெல்லாம் ஜரூரா, திட்டம் போட்டு, செஞ்சு முடிக்கரது யாரா இருந்தாலும், அவங்களுக்கு என் வந்தனமு!
இதையெல்லாம் தவிர, இன்னும் பலப் பல முன்னேற்றங்கள், சென்னையில் நடந்து வருகிறது.
T.R.Baluவும் தன் பங்குக்கு நெறையவே ரோடும், பஸ் ஸ்டாப்பும் கட்டறாரு. கலக்கல் பாலு! தொடரட்டும் பணி!
எவ்வளவோ பணிகள் நகரைச் சுற்றிலும் நடக்கரது ரொம்ப சந்தோஷத்தைத் தந்தாலும், மெயின் ரோட்டுக்கு இரு பக்கமும் உள்ள ஊர்களின் சாலைகள், தார் பாத்து பல வருஷம் ஆயிடுச்சு. குறிப்பா எங்க ஊர் ரோடு பாத்து, 7 வருஷம் ஆயிடுச்சு.
கொஞ்சம் கூட ப்ளானிங் இல்லாமல், ரோட்டைத் தோண்டுவதும், அப்படியே விட்டு விடுவதும் ரொம்பக் கேவலம்.
ரோடு போடப்படும் மெயின் ரோடுகளும் நான் ஏற்கனவே புலம்பியது போல் மேடாகிக் கொண்டே வருகிறது. இன்னும் கொஞ்ச வருடங்களில், நான் கடவுள் பாதாள லோகம் மாதிரி ஆயிடும் பல தெருக்கள்.
ஆனா, இதுக்கு வெறும் உள்ளூர் முனிசிபல் ஆளுங்களை மட்டும் குத்தம் சொல்லிப் ப்ரயோஜனமில்லை. நம்ம மேல பெரிய தப்பு இருக்கு. யாராவது போய் கேட்டாதான, பொறுப்பில்லாத முண்டங்கள் ஒழுங்கா வேலையை செய்யும்?
யாரும் கேட்க்காததால், போடாத ரோட்டை போட்டு விட்டதாய் சொல்லி, பணத்தை அபேஸ் பண்ணினாலும் பண்ணுவாங்க. தப்பு நம்ம மேலதான்.
ஒரு விஷயம் கவனிச்சேன். இங்க அமெரிக்கால, சொகுசா, நொறுக்குத் தீனி சாப்பிட்டுக்கிட்டு, டிவிடில படத்தை ஒடவிட்டுட்டு, காலை நீட்டிக்கிட்டு, லாப்-டாப்பில் பதிவு எழுதும்போது வரும் வேகமும் ரோஷமும், சொந்த ஊருக்கு போயி இந்த கண்றாவியெல்லாம் கண்கூடா பாக்கும்போது வர மாட்டேங்குது.
மிதமிஞ்சிய சோம்பேரித்தனம், அப்படியே என்னை ஆட்கொள்ளுது அங்க போயிட்டா!
என்ன கொடுமைடா சாமி? எதனால இப்படி? நம்ம ஊரு காத்து அப்படியா? வெயிலா? பொடியா? எது இப்படி அமுக்கி வைக்குது?
எதுவும் இல்லை. நான் அவ்ளவுதான் போலருக்கு.
பொது வாழ்க்கையில் ஒரு மண்ணையும் கழட்ட வக்கில்லா, சுயநல விரும்பி மட்டுமே!
ச! என்ன கேவலமான பிழைப்பு இது?
எப்படி மாத்திக்கரது என்னை? நம்மை? தெரீல! ஆராயணும்!
சுயநலம் இல்லாத, பலப் பல நல்லவங்க, சென்னையிலும் அதன் சுற்றுப் புறத்திலும், சைலண்ட்டா அவங்க வேலையை பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.
அப்படிப்பட்டவர்களில் ஒரு பெருந்தகை, உதவும் கரங்களின் வித்யாகர்.
எல்லா வருஷமும், அவரின் நிறுவனத்தைப் போய் பாக்கணும்னு தோணும். ஆனா, மேலே சொன்ன 'சோம்பேரித்தனம்' சூழ்ந்து, அதை விட முக்கியமான, ஊர் சுற்றுதல், சினிமா பார்த்தல், பீச்சுக்கு போதல்னு, ஒரு மாசம் ஓடிப் போயிடும்.
வழக்கம் போல, கிளம்பும்போது, 'sorry, i couldnt make it. schedule was hectic'னு ஒரு ராகம் பாடிட்டு கெளம்பிடரது.
இம்முறையும், அப்படி இப்படின்னு டயாய்க்கும் வேளையில், நண்பன் ஒருவனின் பிடிவாதத்தால், (மச்சி, உன்ன கார்ல கூட்டிக்கிட்டுப் போய், திரும்ப வீட்ல விட்டுடறேன் வா), உடன் சென்றேன்.
திருவேற்காட்டில் இருக்கும், உதவும் கரங்களின் சில மையங்களைக் காணச் சென்றோம்.
மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.
அங்க நடந்த விஷயத்தை கோர்வையா எழுத முடியுமான்னு தெரியல. ஒரு ஸ்லைட் ஷோ பாத்த எஃபெக்ட்டுதான் எனக்கு.
தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு.
குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.
சிக்னல்ல பச்சை விழுந்ததும், ஒரு விநாடி நின்னாகூட, பின்னாலிருந்து கத்தும் பல மேன்மக்களின் அவசர வாழ்க்கைய நெனச்சா சிரிப்புதான் வருது.
உதவும் கரங்களை வந்து பாத்தாலே பாதி உலகம் தெளிவாயிடுவங்கன்னு தோணுது.
(ஆனா, என் மாதிரி சுயநலவாதிகளுக்கு, அந்த எஃபெக்ட்டும் ரெண்டு நாளைக்குத்தான். வழக்கம் போல், லாப்டாப், டிவிடி, நொறுக்குத் தீனின்னு வாழ்க்கை சகஜமாயிடும்).
சும்மா சொல்லக்கூடாது, ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.
இது ஆரம்பிச்சு 25 வருஷத்துக்கு மேலாயிடுச்சு.
இங்க வளந்த பசங்களில் பலரே, இங்கு வாலண்டியர்ஸாய் வேலை செய்யும் அளவுக்கு உயர்ந்துடுச்சு.
பல பல பேர், இங்கிருந்து பறந்தோடி, வாழ்க்கையை நல்ல விதமா அமச்சுக்கிட்டிருக்காங்க.
இவர்களின் மையங்களில் வேலை செய்யும் சில இளைஞர்களும், பெண்களும் இங்கேயே ஆதரிக்கப்பட்டு வளர்ந்தவர்களாம். அவர்களின், மெச்சூரிட்டியும், அங்கே வேலை செய்யும் நேர்த்தியும் பார்த்தாலே, உதவும் கரங்களின் தரம் நன்கு புரிகிறது.
குழந்தைகள் காப்பகத்தின், சுத்தமும் பராமரிப்பும் அருமை. ரொம்ப அட்டகாசமா வச்சிருக்காங்க. பொறுப்பா பாத்துக்கராங்க எல்லாரையும்.
நீங்களும், சென்னைக்கு போகும் போது, கண்டிப்பா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடுங்க. போகும் போது, உங்கள் பழைய துணி மணிகள், பொம்மைகள், புத்தகங்கள், இப்படி எதையாவது கொண்டு போய் கொடுத்தா சந்தோஷமா வாங்கிப்பாங்க.
திருவேற்காடு கோயிலின் அருகில் இருக்கிறது இவர்களின் மையம்.
போக முடியாதவங்க, உதவும் கரங்களின் பல முயற்சிகளுக்கு பண உதவி செய்ய இங்கே செல்லலாம்.
மொத்தத்தில், ரொம்ப திருப்திகரமான ட்ரிப்பு.
ஒரே கொடுமை, என் கேமரா கொண்டு போகலை. வெட்டி பந்தா பண்ற மாதிரி ஆயிடுமோன்னு நெனச்சு விட்டுட்டேன். அங்க போனப்பரம் என் நண்பனின் 'ஓட்ட' கேமராவில், கிடைச்சதை லபக்கினேன் ;)
1) முதியோர் காப்பகம் + மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான 'அடைக்கலம்'
2) எவனாவது வரானா? போரடிக்குதே.
3) என்னடா, எதையாச்சும் பேசுவன்னு பாத்தா, ஃபோட்டோ பிடிக்கர.
(ரொம்ப சத்தமே இல்லாம பேசினாரு பெருசு. சினிமா எல்லாம் பாக்கரதுல்லையாம். டிவி எப்பயாச்சும் பாக்கரதோட சரி)
4) சுகவாசிகள். எல்லா இடமும் பஞ்சு மெத்தைதான் இவங்களுக்கு. நாமதான் ஒதுக்கி வச்சிடறோம்.
5) குழந்தைகள் காப்பகம் செல்லும் வழி. செம க்ளீனா வச்சிருக்காங்க.
6) சில தேவதைகள்!
7) Main building. வழிகாட்டும் பெண், இங்கேயே வளர்ந்து, படித்து, வாலண்ட்டியராய் இருப்பவர்.
உதவும் கரங்கள் வித்யாகருக்கும், வாலண்டியர்சுக்கும், நன்கொடை அளிக்கும் அன்பர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!
தொடரட்டும் உங்கள் பணி!
பி.கு: சென்னை விசிட் அனுபவங்கள், தொடரும். ;)
19 comments:
இந்த எடத்துலதான் இருக்கு குழந்தைகள் காப்பகம்
http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=13.074676,80.122637&sll=13.074446,80.123055&sspn=0.002717,0.003433&ie=UTF8&t=h&z=16
மலர்வனம் இங்கே இருக்கு
http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=13.06746,80.123768&sll=13.067214,80.123801&sspn=0.002717,0.003433&ie=UTF8&t=h&z=16
நான் நேரில் சென்று பார்த்ததில்லை.
ஆனால் கேள்விப்பட்டிருக்கேன். சமயங்களில் பிள்ளைகள் பிறந்தநாள் போன்ற வற்றிற்கு பணம் அனுப்பிவைத்ததோடு சரி.
வித்யாசாகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
வித்யாசாகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வித்யாசாகர் = வித்யாகர்
நல்ல பதிவு. வித்யாகர் சேவை வாழ்வின் மீதான நம்பிக்கைகளை வலுவூட்டும். நண்பர் தூண்டுதலிலாவது சென்று வந்த உங்களுக்கும் ஒரு வாழ்த்து.
அனுஜன்யா
நான் போன வருஷம் போயிட்டு வந்தேன்.
மனசு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்திச்சு
அட சென்னை வந்துட்டு போய்ருக்கீங்க...தெரியாமப்போச்சே...பார்த்துருக்கலாமே :(
///லாப்-டாப்பில் பதிவு எழுதும்போது வரும் வேகமும் ரோஷமும், சொந்த ஊருக்கு போயி இந்த கண்றாவியெல்லாம் கண்கூடா பாக்கும்போது வர மாட்டேங்குது.//
உண்மையை ஒத்துக்கறீங்க. அதுக்காகவே பாரட்டறேன்.
இந்த மாதிரி முயற்சி செய்து பாத்ததுக்கு நன்றிகள் அதப்பத்தி பதிவெழுதி நாலு பேற தூண்டி விடறது நல்ல முன்மாதிரி.
அனைவரின் கருத்ஸுக்கும் நன்னி!
Sathia,
//இந்த மாதிரி முயற்சி செய்து பாத்ததுக்கு நன்றிகள் அதப்பத்தி பதிவெழுதி நாலு பேற தூண்டி விடறது நல்ல முன்மாதிரி.
//
correct. தொடர்ந்து செய்வேன் ;)
அப்துல்லா,
///அட சென்னை வந்துட்டு போய்ருக்கீங்க...தெரியாமப்போச்சே...பார்த்துருக்கலாமே :(//
:) இந்த ட்ரிப்பு, ரொம்பவே பிஜியாயிடுச்சு.
பதிவர் சந்திப்பு கூட, ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சு.
PiT குழுவுடன் போட்ட ப்ரோக்ராமும் முடியில.
அடுத்த முறை முன்னேற்பாட்டோட வரேன் ;)
//ஒரு விஷயம் கவனிச்சேன். இங்க அமெரிக்கால, சொகுசா, நொறுக்குத் தீனி சாப்பிட்டுக்கிட்டு, டிவிடில படத்தை ஒடவிட்டுட்டு, காலை நீட்டிக்கிட்டு, லாப்-டாப்பில் பதிவு எழுதும்போது வரும் வேகமும் ரோஷமும், சொந்த ஊருக்கு போயி இந்த கண்றாவியெல்லாம் கண்கூடா பாக்கும்போது வர மாட்டேங்குது./////
Its all about the system dear!! :)
When you are so used to seeing things done perfectly you get angry when something goes a littttttle out place!
When you are soooooo used to seeing everything out of place,where will you start??
CVR,
///When you are soooooo used to seeing everything out of place,where will you start??///
yep! but, we have to start somewhere. if noone does anything about these things, TN/chennai will be inhabitable in 20 years :)
நேரம் ஒதுக்கி அங்கு சென்றதோடு மட்டுமின்றி அத்தனை விவரங்களையும் எப்படி செல்வது என்பதற்கான மேப் வரை சுட்டிகளுடன் கொடுத்திருப்பதற்கு நன்றி. வித்யாகரின் சேவையுள்ளம் பிரமிக்க வைக்கக் கூடிய ஒன்று. நம்மால் இயன்ற உதவிகளை இது போன்ற இல்லங்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்குச் செய்து வர வேண்டும்.
//உங்கள் பழைய துணி மணிகள், பொம்மைகள், புத்தகங்கள், இப்படி எதையாவது கொண்டு போய் கொடுத்தா சந்தோஷமா வாங்கிப்பாங்க.//
உண்மைதாங்க. இது குறித்து என் சில அனுபவங்களை ஒரு பதிவாகவே விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே அமுதாவின் பதிவொன்றிலும் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.
நன்றி ராமலக்ஷ்மி.
வித்யாகர் ப்ரமிப்புதான். கொஞ்சம் பேருக்கு மட்டும்தான், இப்படி மத்தவங்களுக்கு உதவணும், அதுக்கே வாழ்க்கையை அற்பணிக்கணும்னு தோணுது. இவர் செய்வது பெரிய சேவை.
நம்மாலானது, அவரின் தேவையை முடிஞ்சளவுக்கு பூர்த்தி செய்யரதுதான்.
//என் நண்பனின் 'ஓட்ட' கேமராவில்//
நண்பரின் காமிராவுக்கு ஆயிரம் நன்றிகள்:)!
அந்த //சில தேவதைகள்// உள்ளம் கொள்ளை கொள்கிறார்கள்.
இந்தத் தேவதைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வுக்காக நான் எழுதிய புன்னகைப் பூவே பூமிகா பதிவு இங்கே.
உங்களது இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் அதுவும் இடம் பெற்றிருக்க விரும்பி பதிந்துள்ளேன். நன்றி.
எனது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அருமையான பதிவு. அழகான படங்களுக்கும், பண உதவி செய்யவும், மற்றும் பல விவரங்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி.
//இவர் செய்வது பெரிய சேவை.
நம்மாலானது, அவரின் தேவையை முடிஞ்சளவுக்கு பூர்த்தி செய்யரதுதான்.//
சரியாகச் சொன்னீர்கள்.
Post a Comment