இதில், ஏறத்தாழ 92.3% விஷயங்கள் டுபாங்கூர்/கப்சா/கழிசடை/வெத்து வகையைச் சேர்ந்தவை.
அபரிதமான சக்தியை அதனுள் அடக்கியிருந்தும், மேற்சொன்ன இத்யாதி இத்யாதி மேட்டர்களால், அதன் முழுப்பலனும் இன்னும் கிட்டவில்லை.
இனி வரப்போகும் 930 ஆண்டுகளில் அது கிட்டப் போவதும் இல்லை.
* ஹாட்மெயிலை திறந்தால், என்னை லாட்டரி கோடீசுவரனாக்குவதாக வரும் 17 மடல்கள்;
* யாஹூவைத் திறந்தால், நைஜீரியாவில் உயிர் விட்ட உயர்திரு.டேனியல் டென்சொங்கப்பாவின், பலகோடி ரூவாய் பெறுமானமுள்ள டயமண்ட் குவாரிக்கு, வாரிசு இல்லாததால், $2140 பணத்தை செலுத்தி, என்னை வாரிசாக்கும்படி வற்புறுத்தும் 13 மடல்கள்;
* ஜி.மெயிலை திறந்தால், வீட்டிலுருந்தபடி, தினசரி 30 நிமிடம் செலவு செய்து, இணையவழி வேலை செய்தால், மாதம் சில லட்சங்கள் ஈட்டலாம் வகை 9 மடல்கள்;
ஹ்ம். இதையெல்லாம் பொறுத்துக்கலாம்.
இதுக்கு மேல பெரிய கொடுமை, ஏழு மலை, ஏழு கடல் கடந்து அம்பேரிக்கா வந்தும், இங்குள்ள சீல பிரகஸ்பதிகள், திருமலையான் ஃபோட்டோவை மடலில் அனுப்பி, இத்த படிச்சுட்டு இன்னும் எட்டு பேருக்கு அனுப்பலன்னா, குடும்பம் கந்தலாயிடுங்கர ரீதியில் வரும் மடல்கள்.
இந்தக் கொடுமையின் நடுவில் வரும் ஒரே நல்ல மேட்டரு, சில உருப்படியான ஜாலியான மேட்டரு. சமீபத்தில் வந்த கலைஞரின் டைரிக் குறிப்பு ஒரு உதாரணம்.
இணையத்தின் வீச்சு இன்னும் நம்ம ஊர்ல பெருசா இல்லை. நகரவாழ் மக்களிடையே, கிட்டத்தட்ட 6% ஆளுங்க கிட்ட இணைய கணெக்ஷன் இருக்கும். கிராமத்தில், இது .01% கிட்டதான் இருக்கும்.
இணையத்தின் துணையில்லாமலே, டகால்ஜி செய்வதில் நுங்கெடுத்தவர்கள், இனி வரும் காலங்களில், இணையத்தின் துணை கொண்டு, ரூம் போட்டு யோசிச்சு என்னென்ன செய்வாங்களோன்னு நெனச்சா, திகிலாவுது.
புள்ளையார் பால் குடிச்சது, இணையம்னா எங்கே இணையணும்னு கேட்ட காலத்திலேயே, ரெண்டே நாள்ள காஷ்மீர்லேருந்து கன்யாகுமரி கடந்து, சிங்கை, அமெரிக்காவரை புரளி பரவி எல்லோரையும் சொம்பும் ஸ்பூனும் தூக்க வைத்தது.
இணையம் முழுவீச்சில் உபயோகப்படுத்தப்படும் காலங்களில், தேங்கால பாம், தக்காளீல ஜாம் புரளிகளெல்லாம் ஒரே நொடியில் பரப்பப்படும் அபாயம் இருக்கு.
சரி, இப்ப என்னாத்துக்கு, வெள்ளிக்கெழம அதுவுமா, ஏதோ நோன்பு காலத்துல ஓதர மாதிரி, ரொம்ப நல்லவன் வேஷம் போடரன்னு கேக்கறீங்களா?
ஒண்ணுமில்லை ப்ரதர், கொஞ்ச நாளுக்கு முன்னாடி, இது பில் கேட்ஸ் வீடில்லைன்னு ஒரு வரலாற்று முக்கியத்டுவம் வாய்ந்த பதிவிட்டிருந்தேன்.
நான் மேற்சொன்ன, 'சுவாரச்யமான' மடல் வகையைச் சேர்ந்த ஒரு ஈ.மடல் அது. நண்பரிடமிருந்து.
ரொம்ப அருமையான ஒரு பங்களாவின் படங்களுடன் வந்த மடல்.
அந்த வீடு, ஜெ.ஜெ'வின் கொடநாடு பங்களா என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
மிக அருமையாக, ஷாஜஹான் அரண்மனை கணக்கா இருந்தது, வாய் பிளக்க வைத்தது.
தலைவிக்கு அப்படியொரு வீடு கட்டுவது பெரிய விஷயமில்லை என்பது தெள்ளத் தெளிவாக மண்டையில் பட்டாலும், படங்களில் ஏதோ வில்லங்கம் இருப்பதாய் தெரிந்தது.
'மழை நீர் சேகரிப்பை' அமல் படுத்திய தாணைத் தலைவி என்ற ஒரே காரணத்துக்காக, களமிறங்கி, தலைவிக்காக ஐந்து நிமிடம் ஒதுக்கி, புலன் விசாரணையைத் துவங்கினேன்.
ஒரு படத்தை, கூர்ந்து ஆராய்ந்த போது, இது தங்கத் தலைவியின் மீது அபாண்ட கரி தேய்க்கும் முயற்சி என்பது எமக்கு புலனானது.
அது இஸ்லாமியர் யாருக்கோ சொந்தமான வீடு என்பது படத்தில் இருக்கும் ஒரு உருது படத்தை பார்த்ததும் புரிந்தது.
அந்தப் படங்களை பதிவில் ஏற்றி, சக வலைஞர்களுக்கு, ஸ்லம்டாக் மில்லியனர் அனில் கபூர் கணக்காக, இது யாரு பங்களான்னு கேட்டபோது, தயாநிதி மாறன் முதல், ஷாருக்கான், முஷாரஃப் வரை அனைவரின் பெயரும் அலசி ஆராயப் பட்டது.
ஆனா, ஆச்சரியமான ஆச்சரியம், ஒருத்தரும், ஜெ.ஜெ பேரை சொல்லவே இல்லை.
இதுலேருந்து என்னா தெரீதுன்னா, அநேகமா எல்லாரும், ஜெ.ஜெ வை மறந்துட்டோம்.
அவங்க பெரிய பெரிய வெகேஷன் எடுத்துக்கிட்டு பங்களாவில் ஓய்வெடுத்த நேரம், திருமாக்கள் உ.விரதம் இருந்தும், வை.கோ சும்மானாக்கும் எத்தயாவது பேசிக் கொண்டும், ராமதாசுகள் அறிக்கை விட்டுக் கொண்டும், கலைஞர்கள் டைரிக் குறிப்பு எழுதி ப்ரபலப்படுத்தியும், சுவாமிகள் முட்டையடி வாங்கியும், சேர்ந்தவர்கள் பிரிந்து கொண்டும், பிரிந்தவர்கள் சேர்ந்து கொண்டும், நம் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தார்கள்.
ஆனா, ஜெ.ஜெ காணாம போயி மொத்தமா ப்ரபல்யத்தை இழந்துட்டாங்க.
எலெக்ஷன் டைம் ஆரம்பிச்சாச்சுன்னு யாராவது சொல்லியிருக்கணும். அதான், தூசு தட்டி எழுந்து சென்னைக்கு வந்து அவங்களும் அ.உ.விரதம் இருந்து, எனக்கு இன்னும் அரசியல் மறக்கலை, நானும் உள்ளேன் ஐயான்னு சொல்லியிருக்காங்க.
எல்லாம் சரி, அந்த பங்களா யாருதுங்க? ஷாருக்? முஷாரஃப்?
யாருதா இருந்தாலும், இம்புட்டு செலவு செஞ்சு கட்டியிருக்கீங்க, பாத்ரூம்ல ஒரு நல்ல Sony LEDடிவியா வாங்கி வைங்க, இன்னும் எதுக்கு பெத்த CRT டிவி?
(பி.கு: Sonyன் LED டிவியை இங்க ஒரு கடைல பாத்தேன். அடேங்கப்பா, டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்சுங்க. ப்ளேடு சைசுல இருக்கு, என்ன துல்யமா படம் தெரியுது. ஹ்ம்!)
ஹாப்பி வெள்ளி!
---- ---- ----
பி.கு: சமீபத்தில் நான் படித்து லயித்துப் போய, Sanjai காந்தியின் Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ - நெல் - ஆரம்பம் முதல் அறுவடை வரை, படிச்சுப் பாருங்க. அமக்களம்.
பி.கு2: நாட்டுக்கு நற்செய்தி சொல்லும் பலரும், இந்தத் தேர்தல் கணத்தில், நாட்டுக்கும் ஊருக்கும் உபயோகமா எதையாவது செய்யணும். நம்ம களத்தில் இறங்கி தேர்தல் பணி எல்லாம் பண்ண முடியாது. அட்லீஸ்ட், உங்க சுற்றத்தீல் இருப்பவர்களை, கண்டிப்பா வோட்டு போடச் சொல்லலாம். செய்யுங்க. சந்தோஷின் இந்தப் பதிவைப் பாருங்க. நீங்களும் பதிவப் போடுங்க. Please vote in this election and encourage everyone to vote, for a change! |
---- ---- ----
14 comments:
இது அராபிய ஸ்டைலில் இருக்கின்றது.. நாங்கள் வேலை செய்யும் அரண்மனையில் இது மாதிரி அறை எல்லாம் ஜூஜூபி... ;-))
thats LCD tv i guess
அப்பாடா! ஒருபடியாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள்:))!
//படத்தில் இருக்கும் ஒரு உருது படத்தை//
ம்ம், இண்டீரியரும் கூட இஸ்லாம் ஸ்டைலில் இருந்தபடியாலே உங்க க்விஸ் வரும் முன்னே ஷாருக் வீடு என்றதை நம்பத் தோன்றியது முதலில்:)!
//thats LCD tv//
அதுதான் ப்ளேட் போலன்னு சொல்லிட்டாரே அதேதான்:)!
Desperado,
no this is called OLED TV.
this is new.
much much much thinner than the LCD ones with amazing clarity.
12inch TVs costs around $2000 :)
புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு
தமிழ்பிரியன், அரண்மனையில வேலையா? அடேங்கப்பா.
வந்தா சுத்திக் காட்டுவீங்கல்ல? எந்தூரு? :)
ராமலக்ஷ்மி,
இணையத்தில், எதையும் நம்பாதீங்க :)
ttpian, இன்னா இதெல்லாம்?
மிகவும் நன்று..
Spam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி என்பதனை இங்கு பாருங்கள்
http://vinothkumarm.blogspot.com/2009/03/secure-your-mail-box-from-spams.html
அட.. சர்வேஸ்.. ரொம்ப நன்றி தல.. என்னடா சர்வேஸ் ப்ளாக்ல இருந்து நெறைய பேர் வந்திருக்காஙகளேன்னு வந்து பார்த்தேன். நெல் பற்றிய பதிவு உங்களுக்கு ரொம்ப பிடிச்சதா? ரொம்ப சந்தோஷம் சர்வேஸ். விரைவில் பருத்தி , கரும்பு பற்றியும் எழுத உள்ளேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தல. :)
இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், பொய் பொய்யா பேசுவங்க. காலேஜ்ல ஏதாவது நெட் அல்லது விக்கின்னு சொன்னாப் போதும் கடிச்சு வச்சிருவாங்க!
pappu, graphersurvey, sanjai,
Danks!
sanjai, edho nammala mudinjadhu. arumayaana padhivu adhu.
ஷாருக்குனு எனக்கு வந்தது ஆனா தேடிப்பாத்ததில் அவர் வீடில்லை என்று தெரிந்தது. பின்னர் புருனே சுல்தான் என்றார்கள்.
நம்மாள முடிஞ்சது பாத்துட்டு
ம்ம்ம்ம்ஹூஹூம்ம்ம்... ஒரு பெருமுச்சு விடுவது மட்டும்தான்.
Post a Comment