Lake Tahoe ஒரு அருமையான ஊரு. கலிஃபோர்னியாவுக்கும் நெவாடாவுக்கும் நடுவில் அமைந்த, ஆயிரத்தி அறுநூறடி ஆழமும், 114 கி.மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரீரீரீரீய லேக்.
ரொம்ப ரம்யமான இடம்.
குளிர்காலத்தில், பனிச்சறுக்கு விளையாட்டு இங்கே ரொம்பப் ப்ரபல்யம்.
நான் இருக்கும் இடத்திலிருந்து, ஒரு மூணு மணி நேர தூரத்தில் இருக்குமிடம் ஆதலால், வூட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாரையும் ஒரு தபா இங்க கூட்டிக்கிட்டு போய் காட்டிடுவேன்.
எல்லாதடவையும் போல், இம்முறையும் அப்படி ஒரு உலா சென்றிருந்தேன்.
பனிக்காலம் ஆதலால், வெள்ளை வெளேர்னு எல்லா இடமும், பனி நிறைந்து ரம்யமா இருந்தது. இந்த ஊர் காரனெல்லால், மலை மேலிருந்து சர்ர்ர்ர்ர்ருனு சறுக்கி வர எல்லா ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள்.
நாம, வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் ரகம். வெறும் போட்டோ பிடிப்பதோடு சரி. ரிஸ்க் எல்லாம் எடுக்கரதில்லை. மலை அழகா இருக்கு, சருக்கினு வரவங்க அழகா இருக்காங்க, படம் பிடிச்சப்பமா, ஃபிளிக்கர்ல போட்டோமா, வாழ்க்கையை வாழ்ந்தோமான்னு இருக்கரதுதானே நம் வழி?
இம்முறை கொஞ்சம் வித்யாசமா, Dog Sled பண்ணலாம்னு ஒரு ஐடியா இருந்தது. அதாவது, நாம ஜம்முனு ஒரு நாற்காலியில் உட்கார, எட்டு நாய்கள் நம்மை இஸ்துக்கினு ஐஸ் வெளி மேல் ஓடுமாம். அட இது என்னடா நாய்க்கு வந்த கொடுமைன்னு தோணிச்சு. நல்ல வேளையா, அதுல போரதுக்கு டிக்கெட் கெடைக்கல. எல்லா நாயும் பிசியாம்.
நாய்க் கொடுமை செய்ய முடியாமல் போன என் கும்பலுக்கு ஒரே சோகம். சரி இவ்ளோ தூரம் வந்துட்டமே, எத்தையாவது செய்யணும்னு, அங்கே ஹோட்டலின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த பெரிய ஐஸ் ரிங்குக்கு போனாங்க. ice skate செய்ய தோதுவாக பெரிய ஐஸ் வட்டம் அமைக்கப்பட்ட இடம் அது. எல்லாரும், skateஐ கால்ல மாட்டிக்கிட்டு சுவாய்ங்க் சுவாய்ங்க்னு ரொம்ப ஜம்முனு போயிக்கிட்டு இருந்தாங்க. நம்மாளுங்க யாருக்கும் ஸ்கேட்டிங் எல்லாம் தெரியாது. கடைக்காரன், லன்ச் டைம் ஆவுது, கடைய மூடப் போறேன், வேணும்னா அரை மணி நேரம் பண்ணிக்கங்க, காசு தரவேணாம் ஸ்கேட் ஷூவுக்குன்னான்.
காசு தரவேணாம்னா லேசுல விட்ருவமா? எல்லாரும் ஆளுக்கொரு ஷூவ வாங்கிக்கிட்டோம்.
குட்டி குட்டிப் பசங்களெல்லாம், சர்ர்ர் சர்ர்ர்னு செம அழகா அந்த வட்டத்தை சுத்தி சுத்தி வந்தாங்க. என் கும்பலில் எல்லாரும், தத்தக்கா பித்தக்கான்னு விழுந்து பொறண்டு, ஓரத்தில் இருந்த கம்பியை பிடிச்சுக்கிட்டு தில் விக்ரம் மாதிரி நடை பழகினாங்க.
நான் எல்லாரையும் படம் புடிச்சிட்டு, கடைசியா உள்ள கால வச்சேன்.
சத்தியமா சொல்றேன் சாமிகளா, இதெல்லலம் வேடிக்கப் பாக்கதான் ஈஸி. உள்ள கால வச்சப்பரம்தான் தெரியுது, வெளீல நிக்கரது எவ்ளோ ஈஸியா இருக்குன்னு.
வழுக்குது. கால் ஒரு எடத்துல நிக்கல. ஓரத்துல இருக்கர கம்பியை, மனசுல கந்த ச்ஷ்டிக் கவசம் சொல்லிக்கினே கெட்டியா புடிச்சுக்குனேன்.
பதினெஞ்சு நிமிஷத்துல, ரெண்டடி போயிருப்பேன். திரும்ப ரிட்டர்ன் ஆக, இன்னும் 15 நிமிஷம் ஆகும்னு தெரிஞ்சதால, கொஞ்சம் அப்படியே நின்னு ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன்.
அப்ப ஒரு க்யூட்டான குட்டிப் பாப்பா பக்கத்தில் வந்துது.
பாப்பா: "ஹாய், என்ன முடியலியா? இப்படி மூச்சு வாங்குது"
நானு: "யா யா, ஃபர்ஸ்ட் டைம் ஃபார் மீ."
பாப்பா: "ஹ்ம். இதெல்லாம் சின்ன வயசுலையே கத்துக்கணும். அப்பதான் ஈஸியா வரும்"
நானு: "யா யா, நான் சின்ன வயசுல ரொம்ப சோம்பேரியா இருந்துட்டேன்"
பாப்பா: (மனசுக்குள்ள) அதான் பாத்தாலே தெரியுதே, வந்துட்டானுங்க, கால்ல ஸ்கேட்ட மாட்டிக்கிட்டு. ஆணிய புடுங்கணோமா, வால் மார்ட் போய் வேடிக்கப் பாத்தோமான்னு இல்லாம, உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்?
நானு: (இதுக்குமேல இங்க நின்னா மருவாத கெட்டுடும்னு தெரிஞ்சதும்) ஓ.கே, ஐ காட் டு கோ. ஹாவ் ஃபன்!
பாப்பா: "ஓ.கே. பை, யூ காட் டு ப்ராக்டிஸ் எ லாட், டு ஸ்கேட் லைக் மீ"
அப்படீன்னு சொல்லிட்டு, சர்ர்ர்ர்னு ஒரு வட்டம் அடிச்சு காமிச்சா.
அப்பரம், முக்கி மொனகி, கரை சேர பதினெஞ்சு நிமிஷம் ஆச்சு எனக்கு.
ஐந்தில் வளையாதது, அப்பாலிக்கா வளையவே வளையாதுன்னு, தெரியாமயா சொல்லியிருக்காங்க?
ஏதோ, நம்மால முடிஞ்சது, பாப்பாவை ஒரு போட்டோ மட்டும் பிடிச்சேன்.( பாப்பாவின் அப்பா எங்கிருந்தாலும், இந்தப் பக்கம் வந்துடாதீங்க. வந்தாலும், என்ன அடிக்காதீங்க, போட்டோவை போட்டதுக்கு மன்னிச்சு விட்றுங்க. பின்னூட்டம் போட்டு திட்னீங்கன்னாலும் எடுத்துடுவேன் couldnt resist :) )
இந்த படத்தை எடுக்கும்போது, "lot of people like to take my pic when i skate"னு ஒரு பெருமிதமா சொன்னா. க்யூட் பாப்பா! முகத்தில் ஒரு பெருமிதம் தெரியுதுல்ல? :)
23 comments:
//"சிஸ்க்" எல்லாம் எடுக்கரதில்லை
எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க
Truth, Danks!
திருத்திட்டேன். :)
btw, மக்கள்ஸ், ஒரு ரைமுக்காக, 'வளையாது'ன்னு சொல்லிட்டேன்.
கண்டிப்பா, முயற்சி பண்ணா, எல்லாருக்கும், எல்லாமும், எந்த வயசுலையும் வளளயும்.
முயற்சி will triumph.
//ஐந்தில் வளையாதது, அப்பாலிக்கா வளையவே வளையாதுன்னு, தெரியாமயா சொல்லியிருக்காங்க? //
அவங்க எப்படிச் சொன்னாங்களோ 'அனுபவம் புதுமை'-ன்னு பாப்பாகிட்டே சிரிச்சுக்கிட்டே அழுது, நம்ம கிட்டே அழுதுகிட்டே சிரிச்சு சொல்லியிருக்கும் விதம் அருமை:)))!
//முயற்சி பண்ணா, எல்லாருக்கும், எல்லாமும், எந்த வயசுலையும் வளளயும்.
முயற்சி will triumph.//
உண்மைதான், என்ன.. ஐந்திலே சுலபமா வளையும். ’அப்பாலிக்கா’ சிரமப்பட்டுதான் முயற்சி எடுத்து முட்டி மோதித்தான் வளைக்கணும்:)!
//ஒரு மூணு மணி நேர தூரத்தில் இருக்குமிடம் ஆதலால், வூட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாரையும் ஒரு தபா இங்க கூட்டிக்கிட்டு போய் காட்டிடுவேன். //
துபாயில் இருக்கும் ஒரு விருந்தாளியையும் அங்க அழைச்சுக்கிட்டு போய் ஒரு தபா காட்டுங்களேன்!!!
(சூப்பரா இருக்கு இடம்)
நன்றி ராமலக்ஷ்மி :)
ஆமா, சர்வே... வளையறது கொஞ்சம் கஷ்டம்தான். என் பொண்ணு என்னைவிட வேகமா ஸ்கேட் பண்ணும்போது கொஞ்சம் பெருமையாவும், கொஞ்சம் ஏக்கமாவும் இருக்கும்னு சொல்லிகிறேன். டாஹோ தாண்டி அப்பாலிக்கா இருக்குற 'குட்டி வேகாஸ்' ரீனோ போயிருக்கீங்களா? மலைப் பாதையில் ட்ரைவ் சூப்பரா இருக்கும் :)
குசும்பன், கண்டிப்பா. எங்க வூட்டுக்கு விருந்தாளியா வந்தா கூட்டிக்கிட்டுப் போவேன் ;)
ஆனா, ஸ்கேட் பண்ணனும். அத்த ஃபோட்டோவெல்லாம் புடிச்சு, பப்ளிக்ல போட்டுடுவேன் ;)
வாவ், அந்தப் பாப்பாவின் முகம் divine. மற்றபடி உங்க பதிவு அட்டகாசம். நான் என்னதான் யூத் என்றாலும், பனிச் சறுக்கு கொஞ்சம் ரிஸ்க்தான் போல :)
அய்யனாரின் 'தூங்கும் ஏரிகள்' கவிதை ஏனோ ஞாபகம் வந்தது. உங்கள் பார்வைக்காக:
"சிறுவர்கள் சறுக்கிக்
குதூகலிக்கும்
இப்பனித் தரையின் கீழ்
ஏரிகள்
உறைபனி போர்த்தித்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.
கீஸ்லோவெஸ்கியின்
திரைப்படமொன்றில்
விழித்தெழும்
உறைபனி ஏரியொன்று
பசியில் சில சிறுவர்களை
விழுங்கி விடும்.
கவனம்,
உறைபனிக் காலங்களில்
சிறுவர்களை
விளையாட அனுப்பும் முன்
அவர்களின் இறக்கைகளை
சரிபாருங்கள்."
எவ்வளவு பொருத்தம் இல்ல.
அனுஜன்யா
தஞ்சாவூரான், கடந்த ஒரு மணி நேரமா எல்லாரும் ஸ்கேட் பண்ரதை யூட்யூப்ல பாத்து ஏக்கப் பெருமூச்சா விட்டுத் தள்றேன் ;)
இங்க பாருங்க, இன்னொரு பாப்பா, அசால்டா நிக்கரத
http://www.youtube.com/watch?v=jtEQuIXpCJo&feature=related
இந்த தடவ ரீனோ போகல. நீங்க சொல்ர ட்ரைவ் அருமையா இருக்கும்.
அனுஜன்யா, நன்றி.
எல்லாத்திலையும் ரிஸ்க் இருக்கு.
ஆனா, கத்துக்கிட்டா இது அருமையான விளளயாட்டு. :)
இந்தப் பயல பாருங்க:
http://www.youtube.com/watch?v=jx2R9--2QeI
என்றாவது ஒரு நாள் இப்படி சூவாய்ங்கணும் ;)
http://www.youtube.com/watch?v=aAcZ9L0w3aw&feature=related
http://cvrintamil.blogspot.com/2006/12/p.html
:)
CVR, same blood :)
ஐந்தில் வளையாதது வயசானா வளையாது//
unmai thaan
நான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் தாஹோ போனேன். இரவெல்லாம் பணி பெய்தது. கொண்டலாவில் 2000 அடி பயணம் செய்து மேலே போனால் அந்த இடமே சொர்க்கபுரி போல் இருந்தது. மறக்க முடியாத ஒரு பயணம் அது
இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே :)
////"lot of people like to take my pic when i skate"னு ஒரு பெருமிதமா சொன்னா. ////
இந்த இடம் ஏனோ ரொம்ப நல்லாருக்குன்னு தோணுது!
poornima,
நன்றி.
பிரேம்குமார்,
///இன்னும் நிறைய படங்கள் போட்டிருக்கலாமே :)//
போடணும். இன்னும் 'டச்' பண்ணலை மற்றவை எல்லாம்.
pappu,
//இந்த இடம் ஏனோ ரொம்ப நல்லாருக்குன்னு தோணுது!//
:) அவ சொன்னதும் அழகுதான். சொன்னதும், எங்க கூட்டம் மொத்தமும் புடைசூழ பல க்ளிக்கு க்ளிக்கினேன்.
சூப்பர்ங்க
இங்கையும் அந்த மாதிரி ஒரு இடம் செயற்கையாக இருக்கு...நம்ம பதிவர்கள் எல்லாம் போயி ஆப்பு வாங்கிய இடம் அது..;)))
\\பாப்பா! முகத்தில் ஒரு பெருமிதம் தெரியுதுல்ல? :)
\\
ஆமாம்...ஆமாம் ;))
Post a Comment