recent posts...

Thursday, March 26, 2009

கடைசி பதிவு

Randy Pausch, Carnegie Mellon Universityல் பேராசிரியாக பணி புரிந்தவர்.
2006ல், தனது 46 வயதில், தனக்கு pancreatic cancer இருப்பதை அறிந்து கொண்டவர், அதற்கு அடுத்த நாட்களில், மரணம் அருகாமையில் இருப்பதைக் கண்டு, எஞ்சி இருக்கும் நாட்களை பயனுள்ளதாக வாழ்ந்து கழித்தவர்.
ஜூலை 2008ல் இவர் இறந்து விட்டார்.

இறப்பதர்க்கு முன், பல இடங்களுக்கும் சென்று, 'Last Lecture' என்ற தலைப்பில், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கை லட்சியத்தை அடைய என்னென்ன வழிகளில் செயல்படணும், வாழ்க்கைக்கு எது தேவை, எது அனாவசியம் போன்ற, பலருக்கும் பயனான செய்திகளை அருமையான விதத்தில் பேசிப் பரப்பினார்.

மரணம் அருகாமையில் திடமா இருக்கும்போது, எவ்ளோ பேருக்கு இந்தத் தெம்பு இருக்கும்?

நமது பதிவுலக அனுராதா போல், இவரும் தனது அனுபவங்களை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார், இறப்பதர்க்கு ஒரு மாதம் முன்வரை.

இவரின் Last Lecture விரிவுரையின் வீடியோ கீழே. இதில் அவர் கூறியுள்ள சில விஷயங்கள்.
* (விதியைப் பற்றி) We cannot change the cards we are dealt, just how we play the hand
* Experience is what you get when you didn’t get what you wanted
* brick walls are there to stop the people who don’t want it badly enough.
* Find the best in everybody. Just keep waiting no matter how long it takes. No one is all evil. Everybody has a good side, just keep waiting, it will come out.
* It’s not about how to achieve your dreams. It’s about how to lead your life. If you lead your life the right way, the karma will take care of itself. The dreams will come to you.



இந்த வீடியோவில், ரேண்டி தன் மனைவி குழந்தைகளுக்கு, இறப்பதர்க்கு சில நாட்களுக்கு முன்,தன் மனநிலையை விவரிக்கும் காட்சி.


என் முந்தைய பதிவில், சொன்ன மாதிரி,

மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம்.

இருக்கும் வரை, நல்லவிதமா, யாருக்கும் டார்சர் கொடுக்காம வாழுங்க.
முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாவும் இருங்க.

வாழ்க்கை வாழ்வதர்க்கே!

Make each day count!

பி.கு: last lecture எப்படி கடைசி பதிவானது?
ஹ்ம். பதிவுலக ட்ரான்ஸ்லேஷன் அப்படித்தான் :)

13 comments:

கோபிநாத் said...

அண்ணாச்சி நல்லாவே கிளப்புரிங்க பிதியை..;))

நல்ல பதிவு...;)

ஏற்கனவே இந்த வீடியோவை நம்ம சந்தோஷ் அண்ணாச்சி ஒருமுறை போட்டுயிருக்காரு.

ராமலக்ஷ்மி said...

கோபிநாத் said...
// நல்ல பதிவு...;)//

உங்களை வழிமொழிகிறேன் கோபிநாத்!

//அண்ணாச்சி நல்லாவே கிளப்புரிங்க பீதியை..;))//

இதையும் அழுத்தமாக வழிமொழிகிறேன் கோபிநாத்:)!

கோவி.கண்ணன் said...

பதிவர் ரத்னேஷ் ஒரு பதிவில் கடைசி பதிவில் எப்போதும் "இது கடைசி பதிவு" என்று எழுதப்பட்டு இருக்காது என்பதே உண்மை.

"கடைசி பதிவு" என்பது எப்போதும் எழுதபட்டு இருக்காது

:)

நிகழ்காலத்தில்... said...

\\இருக்கும் வரை, நல்லவிதமா, யாருக்கும் டார்சர் கொடுக்காம வாழுங்க.
முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாவும் இருங்க.

வாழ்க்கை வாழ்வதர்க்கே!\\

nice...

SurveySan said...

கோபிநாத்,

//அண்ணாச்சி நல்லாவே கிளப்புரிங்க பிதியை..;))
//

:) வெள்ளிக் கெழமல்ல :)

SurveySan said...

ராமலக்ஷ்மி,

//இதையும் அழுத்தமாக வழிமொழிகிறேன் கோபிநாத்:)!//

ஹிஹி:) அவ்ளோ சீக்கரம் போயிடவமா? :)

SurveySan said...

கோவி,

//பதிவர் ரத்னேஷ் ஒரு பதிவில் கடைசி பதிவில் //

அவருக்கு நல்ல மகசூல் இருந்தது. இங்க ஈஈஈஈஈஈஈ ;)

SurveySan said...

அறிவே தெய்வம்,

//nice...//

Danks!

ராமலக்ஷ்மி said...

//ஹிஹி:) அவ்ளோ சீக்கரம் போயிடவமா? :)//

அதானே:))! சரி நானும் இதையெல்ல்லாம் சொல்லி பீதி கிளப்பியிருக்கிறேன்தான், என்ன ஒரு வித்தியாசம் நீங்கள் அடுத்தடுத்த நாள் போட்டுத் தாங்கியிருக்கிறீர்கள்:)!

இதோ, உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ, எனது வலைப்பூவில் நீங்கள் முதன் முதலில் பின்னூட்டமிட்டது கீழ் வரும் கவிதைக்கு:

எல்லார்க்கும் இனியவராய்...

மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இம்
மண்ணில் ஒருபிடியும் நமக்குச் சொந்தமில்லை
விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக்
கொண்டு போவது எதுவுமில்லை!
தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத்
தரையினிலே நாம்வாழும் நல்வாழ்வு
கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
கரைசேரும் நாளினிலே கூட வருமோ?

எண்ணி எண்ணிக் கொடுத்திடுவார்
எண்ணியே வாழ்ந்திடுவார்; எப்படிக்
காத்திட பெருக்கிட என்பதைத் தாண்டி
பகிர்ந்திடல் எனவொன்று உண்டெனில் பதறிடுவார்!
எண்ணுகின்ற கத்தை தாள்களிலே
உண்மையில் ஒன்றுகூட நம்மோடு
பின்னாளில் வாராது என்பதனை உணர்ந்த
பின்னாலும் அதை சவுகரியமாய் மறந்திடுவார்!

நிலத்துக்கு எல்லை வகுத்து
உனதெனது என்பார்
பெருகி ஓடும் நீரினையும்
தனது தனது என்பார்!
ஒருவனே தேவன் எனப் போற்றிட
மறுத்துக் கலகம் செய்வார்
ஒன்றே குருதியின் நிறம்-இதை
மறந்து உலகம் பதறிடச் செய்வார்!

நேசமானவரும் நெருக்கமில்லாதவரும்
பாசமானவரும் பார்த்தே இராதவருமாய்
எத்தனையோ பேரினை-எமன்
நித்தம் சொடக்கிடும் நேரத்துக்குள்
சொர்க்கமோ நரகமோ சுருட்டிக்
கொண்டு போகிறான்; விரட்டி
வரும் காலனின் சுருக்கு விழும்
நேரமோ எவருக்கும் நிச்சயமில்லை!

அத்தனையும் தெரிந்திருந்தும்
அடுத்தவரை மதிப்பதில்லை
அன்பை ஏன் கொடுப்பதில்லை
கடமை ஏன் செய்வதில்லை?
சாதியின் பெயரால் சாடுதலும்
மற்ற மதத்தினரை மதியாதலும்
மொழியின் பெயரால் மோதுதலும்
போதும் போதும் போதுமே!

வேதங்கள் வாசித்து விட்டு
வேறு விதமாய் நடந்திடலாகாது
கீதைதனைப் படித்து விட்டு
கீழ்த்தரமான காரியங்களில்
இறங்கிடுதலும் ஈடுபடுதலுமாகாது!
குர்ரான் ஓதிவிட்டு நற்
குண நலன்களை மறந்திடலாகாது
முரண்பாடுகளின் மொத்த உருவங்களாய்
என்றைக்கும் இருந்திடலாகாது!

புதியவராய் மாறிடலாமே
புனர்ஜென்மம் எடுத்திடலாமே
கண்ணியமாய் நடந்திடலாமே
புண்ணியங்கள் சேர்த்திடலாமே!
இப்பூவுலகில் இறைவன் நம்மை
இட்டு வைத்திருக்கும் நாட்களிலே
எல்லார்க்கும் இனியவராய்
இருந்து விட்டுப் போகலாமே!
*** *** *** *** *** *** ***

SurveySan said...

ராமலக்ஷ்மி, உங்களின் கவிதை கண்டிப்பா ஞாபகம் இருக்கு. ஆனா, இதுக்குதான் என் முதல் பின்னூட்டங்கரது ஞாபகம் இல்லை. time flies.

/////கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
கரைசேரும் நாளினிலே கூட வருமோ?//

மிக்க சரி. ஆனா, இப்பெல்லாம், கரைசேர வரைக்கும் ஆகரதில்லை. முன்னாடியே காணாம பூடுது. ஸ்டாக்கிலும், மற்ற வழிகளிலும் ;0

சென்ஷி said...

:-)

பகிர்வுக்கு நன்றி சர்வேசன்

Subankan said...

டச் பண்ணிட்டீங்கண்ணா!

SurveySan said...

senshil, subankan,

Danks! :)