recent posts...

Monday, March 23, 2009

IE8 சொதப்பிட்டாங்க போல?

நான் ரொம்ப காலமாவே Internet Explorerன் (IE) ரசிகன்.
Netscape கொடி கட்ட பறந்த காலத்திலேயே, IEன் எளிமையான தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அப்பரம், நெருப்பு நரி (FireFox) வந்து பெரிய சவால் விட்டிருந்தாலும், எனக்கு IE வேலை செய்யும் வேகமும், IEன் ஸ்லீக் டிசைனும்தான் மிகவும் பிடித்திருந்தது.

கணினியில் எல்லா ப்ரவுஸரும், இருந்தாலும், (கூகிளின் க்ரோம் உட்பட), 99% நான் உபயோகிப்பது IE தான்.
பல ஃபைல்களை தரவிறக்கம் செய்ய மட்டுமே, நெருப்பு நரியை உபயோகப் படுத்துவேன். நெருப்பு நரியின் download manager தன்னிகரில்லா பேருதவி புரியும் டூல்.

IE8 வந்ததும் போன வாரம் டவுன்லோடி, ஆசை ஆசையா நிறுவியாச்சு.

தோற்றத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. டக்குனு கண்ணுல பட்ட மாற்றங்கள்

* Links இப்போ Favouritesனு ஆகிப் போச்சு. WebSlice என்று ஒரு புது விஷயம். 'webslice' வசதி கொடுக்கும் இணைய பக்கங்களை உங்க ஃபேவரைட்டில் சேர்த்துக் கொண்டால், அந்த பக்கங்களுக்கு போகாமலே, ப்ரிவ்யூ பார்க்கும் வசதி. அதைத் தவிர, அந்த பக்கங்களில் ஏதாவது மாற்றங்கள் வந்தால், IE உங்களுக்கு அதை தெரியப்படுத்தும். (விரல் விட்டு எண்ணக் கூடிய சில பக்கங்களைத் தவிர வேர யாரும் இன்னும், webslice வசதி செய்து கொடுக்கலை)

* கூகிள் க்ரோமில் உள்ள in cognito வசதி, IE8ல் In Private browsing. பலானதைப் பாக்க உபயோகமான வசதி இது.

* Compatibility viewன்னு ஒரு பொத்தான். standardsக்கும் microsoftக்கும் ஆயிரம் மைல் தூரம். IE8ல் இன்னும் பலப் பல non-standard விஷயங்கள் செஞ்சிருக்காங்க போலருக்கு. IE8ல் சரியாகத் தெரியாத பக்கங்களை, இந்த பொத்தான் க்ளிக்கினால், IE8 கொசுவத்தி சுத்தி IE7ன் நிலைக்குப் போய் இந்த பக்கத்தை நல்லாக் காட்ட முயற்சிக்குமாம். எல்லாம் நேரம்தான்.

இதெல்லாம் சரிதான், ஆனா IE8ல் சர்வேசன் பக்கத்தை திறந்ததும் ஒரு பெரிய ஏமாற்றம். பழைய IEல் நச்சுனு திறக்கும் என் பக்கம், IE8ல் ஒவ்வொரு கட்டமும் மெதுவா திறந்து, ஆரம்ப மூன்று விநாடிகள் அசிங்கமா இருக்கு. இதுக்கு முனாடி, நெருப்பு நரிதான் இப்படி பண்ணிட்டு இருந்தது. இப்ப IE8ம் இதன் வரிசையில். கீழப் பாத்தீங்கன்னா, இந்த பதிவின் இரு புறமும், சிகப்பு வரி பளிச்னு தெரியுது பாருங்க. ரிஃப்ரெஷ் ஸ்பீடா இருந்தா, அந்த சிகப்பு சட்டுனு மறஞ்சுடும். IE8ல் ஆர அமரதான் சரியாகுது.
ஹ்ம். சொதப்பிட்டாங்களே!


அடுத்த பெரிய முட்டாள்தனம் download manager இன்னும் IEல் இல்லாதது. நெருப்பு நரியும், க்ரோமும், இணையத்திலிருந்து விஷயங்களை, தரவிறக்கம் செய்வதர்க்கு அருமையான download manager தந்துள்ளார்கள். IE8 இன்னும் அந்த வேலையை ஆரம்பிக்கல.
இப்பவும், ஒவ்வொரு ஃபைலா அடிச்சு அடிச்சு எறக்க வேண்டியதாயிருக்கு.
பைரஸி கொறைக்க இப்படி ஒரு ஏற்பாடோ? :(
மகா சொதப்பல்!!!

இன்னொரு பெரிய முட்டாள்தனம், https:// பக்கங்களுக்குப் போகும்போது பார்த்தேன். ப்ளாகரில் பின்னூட்ட விண்டோவுக்கு போனீங்கன்னா, அந்தப் பக்கம் https:// பக்கம். அதாவது, பாஸ்வேர்டெல்லாம் வாங்குவதால், நீங்கள் அடிப்பதை, encrypt செய்து, சந்தேக பாஷையில்தான் ப்ளாகர் தளத்துக்கு IE அனுப்பும். ( இது ஏன்னு தெரியாதவங்களுக்கு அப்பாலிக்கா தனிப் பதிவு போடறேன் ).
கொடுமை, என்னென்னா, இந்த https பக்கங்களில், சில விஷயங்கள் crypt செய்யப்படாமலும் இருக்கும். ப்ளாகர் ப்ரொஃபைல் படங்கள் ஒரு உதாரணம்.
இப்படி, கலப்பட பக்கங்களுக்குச் செல்லும்போது ( இணையத்தில் 80% இப்படிப் பட்ட பக்கங்களே ), IE ஒரு வார்னிங் கொடுக்கும். அதாவது, "ஏ மனிதா, நீ பார்க்கும் பக்கம் உரலில் https இருந்தாலும், இந்தப் பக்கத்தில் எல்லா விஷயங்களும் அப்படிப்பட்டதல்ல. crypt செய்யப்படாத்தை உனக்குப் பார்க்க வேண்டுமா?"ன்னு கேக்கும்.
பழைய IEக்களில், 'Yes' என்பது defaultஆக இருக்கும். Enter அடிச்சதும், "சரி காட்டித் தொலை" என்பது அர்த்தம். ப்ரொஃபைல் படங்கள் எல்லாம் தெரிந்து விடும்.
IE8ல் 'Yes' 'காட்ட வேண்டாம்' என்று பொருள் எடுத்துக்கொள்கிறது. ஸோ, enter அடிக்க முடியாது. எலியால் No அடிக்க வேண்டும்.

சொதப்பல்ஸ்!!!


நீங்க ஏதாவது கவனிச்சீங்களா?

18 comments:

SurveySan said...

compatibility view க்ளிக்கினால், என் பக்கம் பழைய படி நல்லாவே தெரியுது.

ஸோ, ப்ளாகர் ஏதாவது செய்யணும்.
இல்ல, நானு டெம்ப்ளேட்டை மாத்தணும். :(

SurveySan said...

மேலே சொல்லியுள்ள குறைகளைக் களையும் வழி தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க, புண்ணியமாப் போவும் ;)

ஆ! இதழ்கள் said...

இன்னும் உங்கள் வலை வேகம் கூட்டினால் சரியாகுமோ?

ஆ! இதழ்கள் said...

வலை வேகம் = netspeed?

:(

மு.மயூரன் said...

IE7, Firefox இனை விட வேகமானது என்று நீங்கள் சொல்லித்தான் புதிதாக அறிகிறேன். என்னுடைய எல்லா நண்பர்களும் Firefox இற்கு மாறிய காரணம், IE மிக மெதுவாக பக்கங்களைத் திறப்பதுதான் (பின்னர் FF இன் வேறு வசதிகளால் கவரப்பட்டார்கள்).

உங்களுடைய வலைப்பக்கம் IE இல் வேகமாகவும் FF இல் மெதுவாகவும் திறப்பதை வைத்து இந்த முடிவுக்கு நீங்கள் வந்திருப்பீர்களானால், உங்களுடம் சிறு கேள்வி. உங்கள் வலைப்பக்கம் w3c standards இற்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டதா? அல்லது IE ல் மட்டுமே சோதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதா?

Poornima Saravana kumar said...

// SurveySan said...
மேலே சொல்லியுள்ள குறைகளைக் களையும் வழி தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க, புண்ணியமாப் போவும் ;)

//

என்ன புண்ணியம்னு சொல்லுங்க அப்ப தான் நான் சொல்லுவேன்:))

CVR said...

அதெல்லாம் இருக்கட்டும்!!
என்னுடைய பதிவுல படங்களை ஒழுங்கா காட்டுதா இந்த வெர்ஷன்????
அந்த பக்கை இன்னும் சரி செய்யலனா இந்த வெர்ஷனும் ரிஜிட்டட்!!!!

CVR said...

புது க்ரோம் பீட்டா வெர்ஷன் பாத்தீங்களா??
25% அதிக வேகமானதுன்னு சொல்றாய்ங்க!

தமிழ் பிரியன் said...

http://majinnah.blogspot.com/2008/04/ie-8.html
beta வெர்ஷனிலேயே நொந்து போய் நான் போட்ட பதிவு 2008 ஏப்ரலில்..

SurveySan said...

CVR, pic is still shown 'cut' in ie8 :(

but, that could be your template issue :)

SurveySan said...

Mayooran,

//உங்கள் வலைப்பக்கம் w3c standards இற்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டதா? அல்லது IE ல் மட்டுமே சோதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதா//

no idea. i have to check. whatever blogger provides, must be w3c compliant. but not sure what the template standards are.

CVR said...

//but, that could be your template issue :)///

குப்புற விழுந்தாலும் யார் மீசையிலேயோ மண் ஒட்டலையாம்.

நெருப்புநரியில ஒழுங்கா தெரியுது,க்ரோம்ல ஒழுங்கா தெரியுது!!உங்க ப்ரௌசர் தான் பிரச்சினை பண்ணுது!!
செல்லாது செல்லாது!! :P

SurveySan said...

ஆ! இதழ்கள்,
//இன்னும் உங்கள் வலை /


இல்லீங்க. என்னுது ஸ்பீடான இணைப்புதான்.

SurveySan said...

Poornima Saravana Kumar,

//என்ன புண்ணியம்னு சொல்லுங்க அப்ப தான் நான் சொல்லுவேன்:))//

சர்வேசனுக்கு சேவை பண்ணா, சுவர்கலோக ப்ரார்த்தி கிட்டும் ;)

SurveySan said...

தமிழ் பிரியன்,

//http://majinnah.blogspot.com/2008/04/ie-8.html
beta வெர்ஷனிலேயே நொந்து போய் நான் போட்ட பதிவு 2008 ஏப்ரலில்..//

ஹ்ம். விதி வலியது ;)

SurveySan said...

CVR, //குப்புற விழுந்தாலும் யார் மீசையிலேயோ மண் ஒட்டலையாம்.

நெருப்புநரியில ஒழுங்கா தெரியுது,க்ரோம்ல ஒழுங்கா தெரியுது!!உங்க ப்ரௌசர் தான் பிரச்சினை பண்ணுது!!
செல்லாது செல்லாது!! :P//

ஹ்ம். acid testஎல்லலம் பாஸ் பண்ணிடுச்சே IE8. பில் லஞ்சம் கொடுத்திருப்பாரோ,? :)

சந்தோஷ் = Santhosh said...

அநாநி ஆப்சன் இல்லாத காரணத்தினால் பில் கேட்ஸ் என்னைய அவர் சார்பா போட சொன்ன பின்னூட்டம்..

உலகம் இன்னுமா IE நம்பிட்டு இருக்கு அய்யோ அய்யோ..உங்கல எல்லா நினைச்சா எனக்கு பாவமா இல்ல இருக்கு..

CVR said...

@சந்தோஷ்!!!!
LOL~!! :D