recent posts...

Thursday, October 23, 2008

Shoot 'em Up! ~ ராதாவுக்காக

ராதா ஸ்ரீராமின் அழைப்பை ஏற்று இந்தப் பதிவு. சினிமா தொடர் விளையாட்டு.
கம்ப்யூட்டர் படிக்கலன்னா, கலை உலகத்தில் ஏதாச்சும் வேல தேடியிருப்பேன். போஸ்டர் ஒட்டரது மாதிரி ஏதாச்சும். தியேட்டர்ல ஃபிலிம் ஓட்டர வேல கூட செஞ்சிருப்பேன்.
சினிமான்னா அவ்ளோ பிடிக்கும்.
யாருக்கு பிடிக்காதுங்கறீங்களா? நம்ம ஊர்ல இருக்கர ஒரே 'சீப்' பொழுதுபோக்கா எல்லாரும் அணுகும் வகையில் இருக்கரதால, நம்மாளுகள்ள 99%க்கு, 'பிடித்த பொழுதுபோக்கா' சினிமாவத்தான் சொல்லுவாங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர, மலையாளம், ஹிந்தி, இரானியன், ஃப்ரென்ச், சீன மொழிப் படமெல்லாம், சப் டைட்டில் இருந்தா பாப்பேன். கைல கெடைக்கர எல்லா படமும் பாப்பேன்.
ரொம்ப 'தாக்கிய' உலக மொழி படம், நிறையவே இருக்கு.
சட்டுனு ஞாபகம் வரது,
மனதை தாக்கிய படம், 'saving private ryan'ன் கடைசி அஞ்சு நிமிஷம்,
வயிறை தாக்கிய படம், Jim Carreyன் 'Dumb & Dumber',
சகலத்தையும் தாக்கிய படம், 'Children of heaven',
இதயத்தை தாக்கிய படம், ஆகாசதூது,
இப்படி சொல்லிக்கினே போலாம்....

ஆனா, மாரடோனா, ஃபுட்பால கால்ல தூக்கி அடிச்சு, ஸிஸர் கட் அடிச்சு, பொடீர்னு கோல்ல அடிப்பாரே, அப்படி போட்டு தாக்கின ஒரு படம், இந்த வாரம் பாத்த, Shoot 'em Up!
இந்த 'dark comedy'ன்னு சொல்லுவாங்களே, அதாவது, சிரிப்பு வரும், ஆனா, வாய் விட்டு சிரிக்க முடியாம, மூஞ்சிய சுளிச்சுக்கிட்டே சிரிக்கர மாதிரி காமெடி வகை இது. Dark comedyயிலும், Dark Action Comedy வேர. படத்தின் பேருக்கு ஏத்தா மாதிரி, படம் முழுக்க டுமீல் டுமீல் டூமீல்னு 200 வகையான துப்பாக்கிகளின் ரீங்காரம்தான்.
இதில் விசேஷம் என்னான்னா, இந்தப் படத்தை, அப்படியே, விஜய்காந்த் வச்சு, ரீ-மேக் பண்ணக் கூடிய அளவுக்கு, பல 'நச்' சீன்கள் உள்ளன.
சில விஜய்காந்த் ஸ்டைல் சீன்கள் கீழே:

 • படத்தின் மொத சீன், ஏதோ ஒரு பொண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். வில்லனுங்க தொறத்திக்கிட்டே வருவானுங்க. இதுல பொண்ணு நிறை மாச கற்பம் வேர. ஹீரோ கைதாங்கலா கூட்டிக்கிட்டு ஓடுவார். பொண்ணுக்கு ப்ரசவ வலி வந்ததும், இவரே ப்ரசவம் பாப்பாரு. ப்ரசவம் ஒரு கையால பாக்கும்போது, இன்னொரு கையால், துப்பாக்கியில் சுத்தி இருக்கரவங்கள டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல் டுமீல்னு சுட்டுக்கினே இருப்பாரு.
  கொழந்த பொறக்கும்.
  இங்கதான் டைரக்டர் வச்சாரு ஒரு 'பன்ச்'. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடிய ஹீரோ பாப்பாரா. இவரு என்ன் டாக்டரா, அதை கத்தியால் வெட்ட? நமுட்டு சிரிப்பு சிரிச்சிக்கிட்டே, துப்பாக்கியால் டுமீலுவாரு.
  அதுவரைக்கும், லாப்-டாப்பையும் டிவியையும் மாத்தி மாத்தி பாத்திட்டிருந்தவன், லாப்-டாப்பை சடார்னு, மூடி வச்சு, டிவிய முழுசா கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். என்னமா யோசிக்கறாங்கய்யா ஹாலிவுட்ல. :)

 • இன்னொரு காட்சி. டுமீல் டுமீல் டுமீல் டுமீல்னு சுட்டுக்கினே இருப்பாரு. திடீர்னு குண்டு காலியாயிடும். வில்லன், அந்த நேரம் பாத்து, கேரட் சாப்பிட்டுக்கினு இருப்பான். டக்னு, கிட்டப் போய், காரெட்டுக்கு ஒரு குத்து விடுவார். காரெட், வாய்ல குத்தி, மண்ட வழியா வெளில வந்து, வில்லன் சாவான். ஸ்ஸ்ஸ் :)

 • வில்லனை விமானத்தில் சந்தித்து விட்டு, பாராசூட்ல கீழ குதிச்சு, உடன் குதிக்கும் வில்லன்களை, பறந்து பறந்து ஹீரோ சுடுவாரு.

 • இதுக்கெல்லாம் சிகரம் வச்சா மாதிரி ஒரு மேட்டரு. வில்லன் கிட்ட மாட்டிப்பாரு ஹீரோ. வில்லன், ஹீரோவோட, எல்லா வெரலையும், டபக் டபக்னு ஒடச்சிடுவாரு. வளைஞ்சு கொழைஞ்சு போன வெரல வச்சுக்கிட்டு, க்ளைமாக்ஸ்ல வில்லன எப்படி சுடரது? சுடாம சாகடிச்சா, தெய்வ குத்தம் ஆயிடுமே. அதனால, ஹீரோ என்னா பண்ணுவாருன்னா, துப்பாக்கியிலிருந்து புல்லட்டை எடுத்து, அஞ்சு விரலிடுக்கிலும் சொறுகிப்பாரு. அப்பாலிக்கா, மெதுவா நகந்து நகந்து, அங்க எரியர ஒரு நெருப்பு கிட்ட கைய கொண்டு போவாரு. புல்லட் பத்திக்கிட்டு, துப்பாக்கியிலிருந்து போவது போல், விர்ர்ர்ர்னு பறந்து போய் வில்லன போட்டுத் தாக்கிடும்.

  இப்படிப் பட்ட, ஜெகஜால சீன்கள் நிறந்த படத்தை, அண்ணன் விஜயகாந்தை வைச்சு யாராச்சும் சீக்கிரம், ரீ.மேக் பண்ணி,யூ.ட்யூப்ல போட்டா பாக்கலாம் ;)

  சரி, இனி, மத்த கேள்விகளை, டக் டக்னு பாக்கலாம் ;)
  1). எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
  ஓரளவுக்கு ஞாபகம் இருக்கரது, நாலாங்கிளாஸ் படிக்கர போது, பாபு-கோபுன்னு ஒரு படத்துக்கு, பல்லாவரம், லக்ஷ்மி தியேட்டருக்கு, ஸ்கூல்ல கூட்டிக்கிட்டு போய் காட்டினாங்க.. அண்ணாநகர் டவர்ல, பாபுவும்-கோபுவும் சர்ர்னு, பைக்ல கீழ எறங்கர சீன் ஞாபகம் இருக்கு. பம்மல், ஷண்முகா டாக்கீஸில், மண் தரையில் அமர்ந்து பாத்த, 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', நாலாவது படிக்கும் போது பாத்தது, லேசா ஞாபகம் இருக்கு. 50 காசு டிக்கெட்டும், அந்த 'சில்' மணலின், ஸ்பரிசமும் இன்னும் ஞாபகம் இருக்கு.
  ஒண்ணும் 'உணர்ந்த'தா ஞாபகம் இல்லை. 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'ல வர பாட்டெல்லாம் ரொம்ப பிடிச்சதா, அப்பவே அதெல்லாம் முணுமுணுத்த ஞாபகம் இருக்கு. படத்தை விட, பாட்டில் ஈர்ப்பு இருந்துச்சுன்னு நெனைக்கறேன்.

  அப்பரம், அஞ்ஞாவது படிக்கும்போது, நானே நடிச்ச அன்புள்ள ரஜினிகாந்த் பாத்ததெல்லாம், சொன்னா, ஓவர் தம்பட்டம் ஆயிடுமோ?

  'ராஜா சின்ன ரோஜா, பூந்தளிரே, இன்பக் கனியே'ன்னு அந்த அம்மா, ஆவியா பையன் பின்னால பாடிக்கிட்டே போனது, இன்னும் பசுமையா ஞாபகம் இருக்கு.

  2). கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

  பலரைப் போலவே, நானும், சரோஜா தான்.

  3). கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

  ஒரு வாரத்துல, எப்படியும், மூணிலிருந்து, ஆறு படம் வரைக்கும் பாத்துடுவேன். இதில், பாதி தமிழ்படம் தான்.
  போன் வீக்-எண்ட் பாத்தது, தாம்-தூம்.
  செம போர். விறு விறுப்பா எடுக்கணும்னு நெனச்சு, சூடு போட்டுக்கிட்ட மாதிரி இருந்துச்சு. ஆனா, விஷுவலா, கலக்கலா இருந்தது. ஜீவாவுக்கு சொல்லித் தரணுமா, எல்லா காட்சியூம் கண்ணுல ஒத்திக்கர மாதிரி இருந்தது.
  கல்யாணம் நிச்சயம் ஆன, ஹீரோ, நைட் க்ளப்புக்கு போய் கண்டவுள்டன் ஆடிய பின், ஆபத்தில் மாட்டிக் கொண்டதால், நமக்கு பெரிய அனுதாபம் எல்லாம் வரலை.

  4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

  கமலின் 'சத்யா'வைச் சொல்லலாம். ஜாலியான ஸ்கூல் வயசில் பாத்ததால் இருக்கலாம். அந்த தாடிக் கமலை, மறக்கவே முடியாது. பஸ்ல, அவரு ஃபுட்போர்டு போன அழகே, பல மாசம், என் கும்பலை, 'தாக்கியது' :)

  5அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

  'டமில்'ல பேரு வச்சா, இனாம் தரோம்னதும், எல்லா பரதேசிகளும், தேடி ஆராஞ்சு, டமீல்ல பேரு வெக்கர கேவலமும்.
  டமில் மொழிய, தாங்கிப் பிடிக்க, இந்த மாதிரியெல்லாம் திட்டம் போட்டாதான் உண்டுன்னு நெனைக்கர அரசியல் கேவலமும்.

  5ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

  இதயத்தை திருடாதே படம் +1 படிக்கறேன்னு நெனைக்கறேன். நண்பர்கள் 20 பேரு, ஒரே வரிசையில் ஒக்காந்துக்கிட்டு பாக்கறோம்.
  ஒரு சீன்ல, நாகார்ஜுன், ஜன்னல்ல வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரூ.
  நாயகி, கதவை திறப்பாங்க.
  கதவின் வழியாக, பனிப்புகை படர்ந்து போய், ஹீரோவின் காலை வருடும். அப்ப, ஹீரோ திரும்பிப் பாப்பாரு.
  பி.சி.ஸ்ரீராம் என்ற ஸ்டார் சினிமாட்டோகிராஃபர் செஞ்ச மாயாஜாலம், போட்டுத் தாக்கிச்சு.
  அதே படத்தில், ஷூவிலிருந்து, தண்ணி சொர் சொர்னு வருமே? ஆஹா, மறக்கவே மூடியாத தாக்கு அது!

  6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

  யெஸ்! அடிக்கடி!

  7.தமிழ்ச்சினிமா இசை?

  Ofcourse! ராஜாவின், பரம வெறியன். ஏ.ஆர்.ரஹ்மானின், வெற்றியை ஒத்துக் கொள்ளவே மனசில்லாமல், சமீபத்தில்தான், 'நல்ல இசை எங்கேருந்து வந்தாலும் ஏத்துக்கணும்'னு ஒரு முடிவுக்க வந்தேன் ;)
  'காதல்' படத்தில் வரும், 'உனக்கென இருப்பேன்' பாட்டுக்கு, கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன். கெரகம் புடிச்ச ராகத்த பாடத்தான் முடியலை. அவ்ளோ 'சங்கதி' இருக்கு இந்த பாட்டுல.
  சின்ன வயசுல, MSV சிவாஜிக்கு போட்ட பாட்டெல்லாம், 'அறுவை'ன்னு ஒதுக்கி இருந்தேன். வேலைக்கு போக ஆரம்பிச்சப்பரம்தான், MSV பாடல்களின் ஆளுமையும், qualityம் புரிகிறது. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டு மாதிரி ஒரு pathos, இனி வராது. பாரதியாரின் வரியில் ஆரம்பித்து, கண்ணதாசன் தீட்டிய கவிதைக்கு, அந்த சோக கீதம் தந்தது, இப்ப கேட்டாலும் இனிக்குது. Simply Superb!

  உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
  என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

  ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
  வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

  முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்
  பிள்ளைக் குலமடியோ பேதமை செய்ததடி


  9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

  க்க்க்ம்! (அன்புள்ள ரஜினிகாந்த்தில்) 'நடித்த' அனுபவம் உண்டுன்னு, எவ்வளவு தடவதான் அலப்பரை பண்றது :)
  ஆணி புடுங்கர வேலை போதும்னு முடிவு பண்ணிட்டா, அது, அட்லீஸ்ட், ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராபராவது ஆகமுடியுமான்னு பாக்கணும்.
  நட்பு வட்டாரத்தில், 'இவனோடு ஃப்ரெண்டு' அஸிஸ்டெண்ட்டு டைரக்டர், அவனோட ஃப்ரெண்டு டைரக்டர்னு பேச்சு அடிப்படும்.
  ஒரு 'பாப்புலர் டைரக்டர்' என் நண்பனுக்கு நண்பன். ஆனா, அவருக்கு என்ன தெரியுமான்னு தெரீல.
  இன்னொருத்தர், ஒரு படம் டைரக்ட் பண்றாரு, அடுத்த மாசம் ரிலீஸாம்.
  நெறைய பேர் இருக்காங்க. ஆனா, பலருக்கும் என்னை தெரியாது ;)

  பிற்சேர்க்கை: "நீங்க ஏன் தொடர்ந்து நடிக்கலைன்னு", சேட்டிலும், ஈமெயிலிலும் கேட்ட அன்பு உள்ளங்கள்ளுக்கு இந்த பதில்:

  ரஜினி பாக்கதான் நல்லவரா தெரியறாரு. சக நடிகர்களை வளர்த்து விடும் பக்குவம் அவருக்கு இல்லை. எங்கே நான் அவரை பின்னுக்கு தள்ள்ளிவிடுவேனோ என்ற எண்ணத்தில் எனக்கு சரியான காஸ்ட்யூம் கூட கொடுக்கலை படத்துல.
  ப்ளாஸ்டிக் கண்ணாடியில், மை தடவி, கூலிங்கிளாஸ் மாதிரி போட்டுக்கச் சொன்ன கொடுமை எல்லாம் கூட எனக்கு நடந்தது.
  நாலாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த எனக்கு, ரஜினியின் அரசியல் அப்ப புரீல.
  ஒரு நல்ல நடிகனை, தமிழ் திரையுலகம் இழந்தது.
  வேறென்ன சொல்ல?


  10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  50 மொக்கை வந்தா, ஒரு நல்லது வருது. இந்த ரேஷியோ மாறும் வரைக்கும், கமல், மணி, பாலாவை நம்பி மட்டும்தான் இருக்கு நம்ம உலகம். சமீபத்தில் மில்ட்டன் ரொம்பவே கவர்ந்தாரு. அப்பரம், 'காதல்' பாலாஜி சக்திவேல்.

  11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

  தமிழர்களுக்கு நல்லதா இருக்கலாம். என் கதி அதோ கதிதான்! இப்பவே கண்ண கட்டுதே.
  சினிமா இல்லன்னா, வெட்டி நேரத்தை என்னாதான் பண்றது?
  ;)

  தொடர்ந்திழுக்க யாரக் கூப்பிடலாம்னு யோசிச்சு தமிழ் மண முகப்பில் பாத்தப்ப, சட்டுனு மாட்ன அஞ்சு பேரு:
  1. வாத்தியார் - எந்திரன் ஓடுமா வாத்தியார்? நல்ல நேரத்துல ஆரம்பிச்சிருக்காங்களா படப்பிடிப்பை? :)
  2. கிரி - பின்னூட்டத்தில் காட்டும் கொலை வெறியை, வேர எங்கையாவது காட்டினா, இவரு பெரிய ஆளா வருவாரு :)
  3. அமல் - நல்லா படம் பிடிப்பீங்கன்னு தெரியும். படம் பாப்பீங்களா?
  4. ஷ்யாமளி அத்தை - "Jeeves, PiTல் இருக்கர, படங்களை தொடச்சு தொங்கப் போடுங்கன்னா", ஷ்யாமளி அத்தைக்கு ஸ்டெனோ வேல பாத்துக்கிட்டு இருக்காரு. :)
  5. செந்தழல் 'ஷர்லாக் ஹோம்ஸ்' ரவி - ரெண்டு பதிவர்கள் ஃப்ரெண்டிலியா இருந்துடக் கூடாது, அதுக்குள்ள ஸ்ப்லிட் பர்சனாலிட்டி அது இதுன்னு, கொண்டைய தேடிப் போயிடறீங்களேய்யா? என்ன நியாயம் இது? ;)

  6. வேர யாராவது எழுத ஆசப் பட்டீங்கன்னா சொல்லுங்க, பேர சேத்துடறேன். ;)

  ஹாப்பி வெள்ளி!

  ;)
 • 36 comments:

  Dhamodharan said...

  me the first !!!

  Happy Deepavali Survey-SA!!!

  Truth said...

  நல்ல இருக்கு சர்வேசன். நல்ல எழுதறீங்க.

  ~உண்மை

  Karthick Krishna CS said...

  இந்த (shoot em up) இயக்குனரோட படம்தான் "WANTED" தெரியுமோ???
  ரெண்டுமே, நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்.....

  பதிவு எழுதுனவுடனே படிக்கறதில்லையா ???
  //புல்லட் பத்திக்கிட்டு, துப்பாக்கியிலிருந்து போவது போல், விர்ர்ர்ர்னு பறந்து போய் ஹீரோவ போட்டுத் தாக்கிடும். //

  SurveySan said...

  dhamodharan,

  Danks! wish you the same.

  ///me the first/// உங்களையும் அந்த கும்பல்ல இழுத்துட்டாங்களா?? :)))

  SurveySan said...

  truth,

  உண்மைய மட்டுமே சொல்லர உங்க வாயால, புகழுரை கேக்க குளிர்ச்சியா இருக்கு ;)

  SurveySan said...

  karthick,

  ///பதிவு எழுதுனவுடனே படிக்கறதில்லையா ???
  ///

  இது படிக்க வரவங்களுக்கு ஒரு டெஸ்ட். முழுசா படிக்கறாங்களான்னு பாக்க ;)
  நன்றி!

  SurveySan said...

  "நீங்க ஏன் தொடர்ந்து நடிக்கலைன்னு", சேட்டிலும், ஈமெயிலிலும் கேட்ட அன்பு உள்ளங்கள்ளுக்கு இந்த பதில்:

  ரஜினி பாக்கதான் நல்லவரா தெரியறாரு. சக நடிகர்களை வளர்த்து விடும் பக்குவம் அவருக்கு இல்லை. எங்கே நான் அவரை பின்னுக்கு தள்ள்ளிவிடுவேனோ என்ற எண்ணத்தில் எனக்கு சரியான காஸ்ட்யூம் கூட கொடுக்கலை படத்துல.
  ப்ளாஸ்டிக் கண்ணாடியில், மை தடவி, கூலிங்கிளாஸ் மாதிரி போட்டுக்கச் சொன்ன கொடுமை எல்லாம் கூட எனக்கு நடந்தது.
  நாலாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த எனக்கு, ரஜினியின் அரசியல் அப்ப புரீல.
  ஒரு நல்ல நடிகனை, தமிழ் திரையுலகம் இழந்தது.
  வேறென்ன சொல்ல?

  Radha Sriram said...

  என்ன சர்வேசன் தலைப்புல என் பேரெல்லாம் போட்டு......ஒரு நிமிஷம் கலவரமாயிட்டேன்..:) shoot em up என்னால ரசிக்க முடியுமா தெரியல.விஜய்காந்துக்கென்ன ரஜினிக்கு கூட பொருந்தி வரும்போல இருக்கே..??

  சத்யா திரைபடத்துல "வளையோசை" பாட்டு படமாக்கியிருக்கும் விதம் அருமையா இருக்கும்.அமலா கொள்ளை அழகு..:)

  மேலும் பதிவ போட்டதுக்கு ஒரு நன்றி..:)

  கயல்விழி said...

  //இன்னொரு காட்சி. டுமீல் டுமீல் டுமீல் டுமீல்னு சுட்டுக்கினே இருப்பாரு. திடீர்னு குண்டு காலியாயிடும். வில்லன், அந்த நேரம் பாத்து, கேரட் சாப்பிட்டுக்கினு இருப்பான். டக்னு, கிட்டப் போய், காரெட்டுக்கு ஒரு குத்து விடுவார். காரெட், வாய்ல குத்தி, மண்ட வழியா வெளில வந்து, வில்லன் சாவான். ஸ்ஸ்ஸ் :)


  வில்லனை விமானத்தில் சந்தித்து விட்டு, பாராசூட்ல கீழ குதிச்சு, உடன் குதிக்கும் வில்லன்களை, பறந்து பறந்து ஹீரோ சுடுவாரு.


  இதுக்கெல்லாம் சிகரம் வச்சா மாதிரி ஒரு மேட்டரு. வில்லன் கிட்ட மாட்டிப்பாரு ஹீரோ. வில்லன், ஹீரோவோட, எல்லா வெரலையும், டபக் டபக்னு ஒடச்சிடுவாரு. வளைஞ்சு கொழைஞ்சு போன வெரல வச்சுக்கிட்டு, க்ளைமாக்ஸ்ல வில்லன எப்படி சுடரது? சுடாம சாகடிச்சா, தெய்வ குத்தம் ஆயிடுமே. அதனால, ஹீரோ என்னா பண்ணுவாருன்னா, துப்பாக்கியிலிருந்து புல்லட்டை எடுத்து, அஞ்சு விரலிடுக்கிலும் சொறுகிப்பாரு. அப்பாலிக்கா, மெதுவா நகந்து நகந்து, அங்க எரியர ஒரு நெருப்பு கிட்ட கைய கொண்டு போவாரு. புல்லட் பத்திக்கிட்டு, துப்பாக்கியிலிருந்து போவது போல், விர்ர்ர்ர்னு பறந்து போய் வில்லன போட்டுத் தாக்கிடும்.//

  Gapடனுக்கு இப்படி ஐடியா கொடுத்தால் அப்புறம் அந்த கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கும்.

  அன்புள்ள ரஜினிகாந்தில் நீங்க நடித்திருப்பது நிஜமா?

  SurveySan said...

  ராதா,

  ////என்ன சர்வேசன் தலைப்புல என் பேரெல்லாம் போட்டு......ஒரு நிமிஷம் கலவரமாயிட்டேன்..:) ////

  இப்படியெல்லாம் கலவரப் படுத்தினாதான், ஒருத்தர் ரெண்டு பேராவது, வந்து எட்டி பாப்பாங்க ;)

  தொழில் ரகசியம்.

  btw, அழைப்புக்கு நன்னி!

  SurveySan said...

  ///சத்யா திரைபடத்துல "வளையோசை" பாட்டு படமாக்கியிருக்கும் விதம் அருமையா இருக்கும்.அமலா கொள்ளை அழகு..:)
  ///

  oh yeah! அம்சமான பாட்டு. அம்சமா எடுத்திருப்பாங்க. ஃபுட்போர்டு அந்த பாட்டுலதான வரும் :)
  அமலா, சூப்பர்ப்!

  SurveySan said...

  கயல்விழி,

  ////அன்புள்ள ரஜினிகாந்தில் நீங்க நடித்திருப்பது நிஜமா?////

  அதை 'நடிச்சிருக்கேன்'னு சொல்றது கொஞ்சம் ஓவர்தான்.
  வந்துட்டுப் போவேன்னு தான் ஞாயமா சொல்லியிரூக்கணும் ;)

  'கடவுள் உள்ளமே' பாட்டு தெரியும்ல??

  கயல்விழி said...

  தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். அதில் நீங்க ப்ளைண்ட் பாயா?

  Sridhar Narayanan said...

  சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்கீங்களா? :-)

  Naked Gun கூட இப்படித்தான் செம காமெடி ஸ்டோரி.

  எப்ப பாத்தாலும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருப்பேன்.

  அன்புள்ள ரஜினிகாந்த்ல நடிச்சிருக்கீங்களா? வெளிகண்டநாதர், பாபாவுக்கு அடுத்து இன்னொரு குழந்தை நட்சத்திர ப்ளாக்கர் :-)

  SurveySan said...

  //தெரியும், ஆனால் அதில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். அதில் நீங்க ப்ளைண்ட் பாயா?///

  ஏக்சுவலி, ஒவ்வொரு சீன்ல, ஒரு கெட்டப் பண்ணதா ஞாபகம்.
  ப்ளைண்ட், காலில்லாதவன், இப்படி.

  டபுள்-ஏக்ட், ட்ரிபிள்-ஏக்ட்டெல்லாம் எப்பவோ பாத்த நடிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

  ;)

  SurveySan said...

  sridhar,

  ///சார்லி ஷீன் நடிச்ச Hot Shots பாத்திருக்கீங்களா? :-)
  Naked Gun கூட இப்படித்தான் செம காமெடி ஸ்டோரி.////

  hotshots, naked gun, airplane எல்லாம் தனி லெவல். அத்தோட, இத்த ஒப்பிட்டா தெய்வ குத்தம்.

  இது, ஒரு மாதிரி, கலீஜ், டார்க் காமெடி ;))

  ////வெளிகண்டநாதர், பாபாவுக்கு அடுத்து இன்னொரு குழந்தை நட்சத்திர ப்ளாக்கர் :-)/////

  பாலா, வெ.நாதர் எல்லாம், ட்ரிபிள்-ஏக்ட் பண்ணிருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்க ;)

  கயல்விழி said...

  //டபுள்-ஏக்ட், ட்ரிபிள்-ஏக்ட்டெல்லாம் எப்பவோ பாத்த நடிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

  //

  உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது. :)

  SurveySan said...

  //உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது///

  indha vishayam avarukku therinjaa, aamaam, naandhaan munnodi :)

  Karthick Krishna CS said...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  SurveySan said...

  Danks Karthick!

  Anandha Loganathan said...

  //கமலின் 'சத்யா'வைச் சொல்லலாம். ஜாலியான ஸ்கூல் வயசில் பாத்ததால் இருக்கலாம். அந்த தாடிக் கமலை, மறக்கவே முடியாது. பஸ்ல, அவரு ஃபுட்போர்டு போன அழகே, பல மாசம், என் கும்பலை, 'தாக்கியது' :)
  //

  Bingo....

  அப்புறம் அந்த உருட்டு கட்டை விட்டுடீங்களே ??. அது போல பண்ணினது இல்லையா ??

  SurveySan said...

  //அப்புறம் அந்த உருட்டு கட்டை விட்டுடீங்களே ??. அது போல பண்ணினது இல்லையா ??//


  ;) Veeram vandhudhu, but i get inspired only by the good things in a movie ;)
  hee hee hee

  கிரி said...

  Shoot 'em Up! பார்த்து என் நண்பர் பீதியாகி விவரித்தால் படம் பார்க்கும் ஆசையை தவிர்த்து விட்டேன் :-))

  //ஒரு வாரத்துல, எப்படியும், மூணிலிருந்து, ஆறு படம் வரைக்கும் பாத்துடுவேன்//

  நீங்க ரொம்ப நல்லவரு :-)

  //ஷூவிலிருந்து, தண்ணி சொர் சொர்னு வருமே? ஆஹா, மறக்கவே மூடியாத தாக்கு அது!//

  ஆமாம்..நல்லா இருக்கும்

  //ரஜினி பாக்கதான் நல்லவரா தெரியறாரு. சக நடிகர்களை வளர்த்து விடும் பக்குவம் அவருக்கு இல்லை. எங்கே நான் அவரை பின்னுக்கு தள்ள்ளிவிடுவேனோ என்ற எண்ணத்தில் எனக்கு சரியான காஸ்ட்யூம் கூட கொடுக்கலை படத்துல//

  :-)))))))))))))))

  //பின்னூட்டத்தில் காட்டும் கொலை வெறியை, வேர எங்கையாவது காட்டினா, இவரு பெரிய ஆளா வருவாரு :)//

  :-)))))

  வேற எங்கயாவதா! கொஞ்சம் விளக்குங்க :-)) அப்புறம் பின்னூட்டத்துல என்ன கொலை வெறி எனக்கே தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  //கயல்விழி said...
  உலகநாயகனுக்கே நீங்க தான் முன்னோடி போலிருக்கிறது. :)//

  வழிமொழிகிறேன் :-)))

  SurveySan said...

  கிரி,

  ////பின்னூட்டத்துல என்ன கொலை வெறி எனக்கே தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ////

  நீங்க அந்த 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்ட தீவிரவாத கும்பல்ல ஒரு ஆளு இல்லியா? ;)

  கிரி said...

  //நீங்க அந்த 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்ட தீவிரவாத கும்பல்ல ஒரு ஆளு இல்லியா? ;)//

  இல்லைங்க சர்வேசன். நான் அந்த மாதிரி போட மாட்டேன், என்னோட பதிவுகள்ள கும்மி பின்னூட்டமும் இருக்காது. ஆனா வர கமெண்ட் எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்து விடுவேன்

  SurveySan said...

  கிரி, எனக்குதான் ஆள் மாறிப் போச்சு போல. ஐ ஆம் சாரி.

  ;)

  வேர கிரி யாராவது இருக்காங்களா?

  லக்கிலுக் said...

  //இதயத்தை திருடாதே படம் +1 படிக்கறேன்னு நெனைக்கறேன். //

  அங்கிள்!

  நீங்க 1972லே பொறந்தவருன்னு நெனைக்கிறேன் :-)

  SurveySan said...

  லக்கி மச்சி,

  யூ ஆர் ராங்! :)

  எங்கூர்ல ஒரு படம் ரிலீஸ் ஆகி, நாலஞ்சு வருஷம் கழிச்சுதான் எங்க தியேட்டருக்கு வரும்.

  நோட் தி பாயிண்ட்!

  Karthick Krishna CS said...

  நான் குடுத்த tag சின்னபுள்ளதனம்னு சொல்லிட்டு, இப்போ நீங்க tag taaga பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க... :) .... விதி வலியது....

  SurveySan said...

  karthick,

  :) விதி வலியதுதான்.
  ஆனா, எழுத சரக்கில்லாத நேரங்களில், டாக் கை கொடுக்கும்.

  sri said...

  ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANUNGALA KOLVARE HERO.ATHA VITTUTINGA?WHAT A GREAT COMEDY FILM.

  sri said...

  ANTHA SEX SCENELAYUM THUPPAKKI VACHU SUTTU VILLANUNGALA KOLVARE HERO.ATHA VITTUTINGA?WHAT A GREAT COMEDY FILM.

  sri said...

  antha sex scene shooting pathi onnum sollalayae.what a great comedy film.

  SurveySan said...

  sri, yes yes yes :)

  அத சொல்லாததுக்கு காரணம், நம்ம பக்கம், rated 'PG', not rated R/A :)

  sri said...

  ATHUKKAGA ILLA FRIEND.THUPPAKKIYODA UBAYOGATHA PATHI NAMA HOLLYWOOD DIRECTORSKITTA IRUNTHU THAN THERINJUKKANUM POLA.ENGA ELLAM 'GUN'NA NULAKKIRANGA PARUNGA.

  Anonymous said...

  福~
  「朵
  語‧,最一件事,就。好,你西.............................................................................................................
  ..................