வெளிச்சத்தை விட வேகமாய் பயணிக்கக் கூடியது, நம்மாளுங்க கெளப்பி விடர புரளி.
புள்ளையார் பால் குடிச்ச வெவரம், 'சுவாமி'ஜி கெளப்பி விட்ட, ஆறு மணி நேரத்துக்குள்ள, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, பக்த கோடிகளை அல்லோலப்படுத்தியது.
1996/97ல், ஒரு சில ஃபைனான்ஸ் கம்பேனி காரர்கள், ஊரை ஏய்த்ததால், எல்லாரும் அப்படிதான்னு, கெளப்பி விட்ட கதையால், மக்களாகிய நாம் கொதிச்சுப் போய், மொத்த பணத்தையும் ஒரே நாள்ள திருப்பிக் கேட்டு, எல்லா ஃபைனான்ஸ் கொம்பேனியர்களையும் கல்லா கட்டி திவாலாக்க வைத்தோம்.
கொஞ்ச வாரத்துக்கு முன்னாடி, ICICI ATMல் பணமெடுக்கப் போன ஒரு குடிமகன், அந்த ATMல் பணமில்லைன்னு வந்த மெசேஜைப் படித்து, திகிலுற்று, மோத்த ICICI வங்கியிலும் பணமில்லைன்னு, புரளியக் கெளப்பி விட்டுட்டான்னு எங்கையோ படிச்சேன்.
எப்பேர்பட்ட வங்கியானாலும், ஒரே நாள்ள, எல்லாரும் போய் நின்னு, அவங்கவங்க பணத்தை குடுய்யான்னு கேட்டா, வங்கி திக்குமுக்காடிப் போய் திவாலாயிடும்.
நல்ல வேளையா, ICICI, உடனே சுதாரிச்சு, எல்லாருக்கு, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி, சமாளிச்சிருக்காங்க. அதனால தப்பிச்சுது.
இன்னிக்கு, அவங்க வங்கியின் பக்கத்தில், இதில் கண்ணில் பட்டது. RBIயே, ப்ரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க. புரளிகளை புறந்தள்ளுவோம்!
சரிதானே?
ஹாப்பி வெள்ளி!
September 30, 2008
RBI Statement on ICICI Bank's Financial Position
There are reports in some sections of the media that based on rumours regarding the
financial strength of ICICI Bank, depositors are withdrawing cash at its ATMs and branches in some locations.
It is clarified that the ICICI Bank has sufficient liquidity, including in its current account
with the Reserve Bank of India, to meet the requirements of its depositors. The Reserve Bank of India is monitoring the developments and has arranged to provide adequate cash to ICICI Bank to meet the demands of its customers at its branches/ ATMs.
The ICICI Bank and its subsidiary banks abroad are well capitalised.
Alpana Killawala
Chief General Manager
வெளம்பரம்:
அ. அமெரிக்க நீதிமன்றத்தில் நானு.. நியாயத்துக்காக போராட்டம்
ஆ. தசாவதாரம் - டிவிடி பார்வை
இ. விடியலை அறிவிக்கிறான் சிலம்பரசன்
ஃ. 'குறும்' போட்டி - Rehearsal!
4 comments:
நல்ல சேதி அண்ணாச்சி!
பாக்குறவன் எல்லாம் எலேய் ஐசிஐசிஐ ஊத்தி மூடிட்டானுங்கடா எதாச்சும் எழவு தெரியுமாடான்னுத்தான் கேக்குறானுங்க :((
ஆயில்யன்,
//எலேய் ஐசிஐசிஐ ஊத்தி மூடிட்டானுங்கடா//
அதோட சீரியஸ்னஸ் தெரியாம, வெளையாட்டா ஊதிவிடரதுதான் இதெல்லாம். கேக்கறவங்களுக்கு வெளையாட்டு, பணம்ம் போட்டவன் நெலமைதான கஷ்டமாயிடுது. :(
ஐசிஐசிஐ, நல்லா handle பண்ணிருக்காங்க. CEO வந்து விளக்கம் எல்லாம் கொடுத்து. good job.
ஆமாங்க, நான்கூட பயந்துட்டேன்.
rapp, neenga enga bayappadanum.
ungalukkuththaan 200 comments podara kolai-verip-padai irukkey ;)
Post a Comment