அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாளே உள்ள நிலையில், இன்னும் பலருக்கு யாருக்கு வாக்களிக்கணுங்கர தெளிவு இல்லியாம்.
ஜான் மெக்கெயின் பாக்க, ரொம்ப கண்டிப்பான, திடமான ஆசாமி மாதிரி தெரிந்ததால், ஜனாதிபதி வேலைக்கு 'சரியான' ஆள் மாதிரி இருந்தது.
ஆனா, சென்ற வாரம் இவரு, டேவிட் லெட்டர்மென் கிட்ட, வழிஞ்ச வழிசலைப் பாத்தா, ரொம்ப சொத்தையா தெரிஞ்சாரு.
அதைத் தவிர, சாரா பாலின், ஒரு பெரிய நெகட்டிவ்!
இந்தப் பக்கம் ஒபாமா பாத்தா, பேசரதெல்லாம், ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆசாமி மாதிரி தெரியல. ஹாலிவுட் தனமாதான் இருக்கு பேச்செல்லாம்.
இப்ப, காலின் பவல், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கரது ஒரு பெரிய விஷயமா படுது.
எட்டு வருஷம், இரண்டு போரும், பல பில்லியன் செலவும், லட்சக் கணக்கில் உயிர் சேதமும் செய்த கட்சி,மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாதுன்னே பட்சி சொல்லுது.
இங்க, இப்பெல்லாம் ரெண்டு பேர் சேந்தாலே, எலெக்ஷன் பத்தின பேச்சுதான். நமக்குதான் அரசியல் அறிவும், வரலாற்று அறிவும் கெம்மியாச்சே. யூ.ட்யூப் அறிவை வச்சு இப்படி அப்படி சமாளிச்சிக்கிட்டு வாரேன்.
பலரும், எந்தப் பக்கம் வோட்டுப் போடுவாங்கன்னு திடமா முடிவு எடுக்கல. யோசிக்கிட்டு இருக்காங்களாம்.
இவங்க, அலசி, ஆராஞ்சு, யோசிச்சு ஓட்டுப் போடரது ஆச்சரியமா இருக்கு.
எம்.ஜி.ஆரு, கத்தி சண்டை போட்டு, வில்லனை அடிச்சதாலும், கருணாநிதி கோர்வையா, உடன்பிறப்புக்கு எழுதர லெட்டராலும், அம்மாவின் பாலுள்ள ஈர்ப்பாலும், இலவச டிவி அரிசி வேட்டி நிலம் மின்சாரம் தொ.காட்சியாலும்தான நாமெல்லாம் யாருக்கு ஓட்டு போடணும்னு முடிவு பண்ணுவோம்.
இப்படி ஆராஞ்சு, ஓட்டுப் போடர இந்த ஊரு மக்களை நெனச்சா பாவமா இருக்கு. ;)
யாராவது (பா.பாலா?) விஷயம் தெரிஞ்சவங்க, ஒரு அட்டவனை போட்டு, இவரு இத சொல்றாரு, அவரு அத சொல்றாரு.
இவரு வந்தா இவங்களுக்கு நல்லது;
அவரு வந்தா அவங்களுக்கு நல்லதுன்னு ஒரு அட்டவனை போட்டா, மனப்பாடம் பண்ணி, இந்த கும்பல்களில் பேசி சமாளிக்க உதவியா இருக்கும்.
மனது வைப்பார்களா, பா.பாலா கோஷ்டிகள்? ;)
something like this:
யாரு ஜெயிக்கணும்னு நீங்க நெனைக்கறீங்க?
( வாக்குப் பெட்டி தெரியலன்னா, இங்க க்ளிக்கிப் போடுங்க )
6 comments:
ஜஸ்ட் 11 வோட்ஸ்?
One more
நீங்கதான் அந்த 'முடிவெடுக்காத வாக்காளரா' ;)
அன்டிசைடட் வோட்டரா... கொக்கான்னு ஜோ, தி ப்ளம்பரை மிஞ்சும் கேள்வி.
இன்னொரு டிபேட் இருந்தால் மெகயின் உங்களுக்கு பதிலளித்திருப்பார் :))
ILA, Danks!
Bala, என்னன்னு பதிலிருப்பாரு?
இப்படியா?
'surveysan the mokkai blogger' will not be benefited by Obamas policies. Under my leadership. surveysan will get a gauranteed 1000 hits per day.
I will personally make sure, all my house members will click his URL before they start their day.
I will extend this generous policy to all of surveysans 'followers', irrespective of their beleifs, caste, creed. ;)
Obamas policy will derail surveysans blog and will reduce his hits drastically in the coming days. Pls remember, democrats are not good URL clickers.
blah blah blah
;)
கலக்கல் சர்வேசன்!
Surveysan is following the 'bloggers' dream and Obama has always been a huge advocate of censorship என்று கூட சேர்த்து விட்டிருப்பார் :))
///Surveysan is following the 'bloggers' dream and Obama has always been a huge advocate of censorship /////
;)))
Post a Comment