recent posts...

Thursday, October 02, 2008

அமெரிக்க நீதிமன்றத்தில் நானு.. நியாயத்துக்காக போராட்டம்...

அன்பே சிவம் படத்துல மாதவன், 'பாங்கு' எனும் போதை உருண்டையை சாப்பிட்ட பிறகு, இப்பெல்லாம் அடிக்கடி சிரிப்பும் அழுகையும் வருதுன்னு ஒரு டயலாக் சொல்லுவாரு. பாங்கு, மனதை இளக்கி விட்டுடுது போல :)
எனக்கு, இப்பெல்லாம், அடிக்கடி எரிச்சல் வருது. வயசாவரதால இருக்குமோ?
குறிப்பா, நம்மூருக்கு லீவுல போகும்போது, NRIக்கே உண்டான, தார்மீகக் கோபம் நெறய வருது. என்னடா, ரோட்டப் போடாம, சாக்கடைய தேங்கவிட்டுக்கிட்டு, தண்ணி வராம, எதை எடுத்தாலும், லஞ்சத்தைக்க் கேட்டுக்கிட்டு, etc.. etc.. உங்களில் பல பேரும், same pitchவீங்கன்னு தெரியும் ;)

அமெரிக்காவுக்கு வந்து, சில பல காலமாயிடுச்சு. இங்க, நம்மூருல இருக்கர மாதிரி சாமான்யனுக்கு லஞ்சப் ப்ரச்சனையெல்லாம் கிடையாது. எல்லாமே, clock work மாதிரி வரிசையா நடக்கும். சில பல நேரங்களில் மட்டும், சில தனியார் இயந்திரங்களுடன், டீல் பண்ணும் போது, லேசா மண்ட காயும். ஆனா, அதிலும், பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம், இயன்றவரை, கஸ்டமருக்கு தொல்லை தராத மாதிரி, வளஞ்சு நெளிஞ்சு அனுசரிச்சு போவாங்க.

இங்க வந்த சில வருஷங்களில், silicon valleyயில்தான் என் பெரும்பான்மை நாட்கள் செலவிடப்பட்டன. நடூல, லாஸ் ஏஞ்சல்ஸில் சில காலம் இருந்திருக்கிறேன்.
நடுவில், சில வருடங்கள், கொம்பேனியார் செலவில் ஓ.சி வீடு கிடைத்ததால், சொந்தமா வீடு வாங்கணுங்கர எண்ணம் உதிக்காமயே போயிடுச்சு. இப்ப இருக்கர சருக்கல் மார்க்கெட்ட்டில், ஒரு விதத்தில், அது நல்ல விஷயமாவே அமஞ்சுடுச்சு.

சமீபத்தில், ஒரு வருஷம் தங்கியிருந்த, apartmentஐ விட்டு, புதிய வீட்டுக்கு மாறினோம்.
இங்க, வாடகைக்கு ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு (flat) போவதர்க்கு முன், பெரிய lease எல்லாம் கையெழுத்து போட்டு, security depositஆ ஒரு தொகையும் கொடுக்கணும்.
நானும், கடந்த வருடம், அந்த அபார்ட்மெண்ட்டுக்கு, $1000 காப்பீடாக கொடுத்திருந்தேன்.

சாதாரணமா, என் சிலப் பல வருடகால lease அனுபவத்தில், வீட்டைக் காலி செய்யும்போது, இந்தத் தொகையில், ஒரு $500 கிட்ட கழித்துக் கொண்டு, மிச்சத்தை கொடுத்திடுவாங்க.

ஆனா, இந்த முறை, நான் கொடுத்திருந்த, $1000 பத்தலை, இன்னும் $500 அதிகப்படியா வேணும்னு நோட்டிஸ் வந்திருந்தது. அதுக்கான, கணக்கெல்லாம் போட்டு அனுப்பியிருந்தாங்க. அதன் விவரங்களைப் படிக்கும்போதே, ஆஹா, இது பணம் கறக்கும் ஏற்பாடு. இளிச்சவாயனுக்கு, மிளகாய் அரைக்கும் ஏற்பாடுன்னு புரிஞ்சது.

குறிப்பா, நான் அந்த வீட்டுக்கு குடிபுகும் முன், சில விஷயங்கள், அந்த வீட்டுக்குள் சரியில்லை என்று, leaseல் தெரியப் படுத்தியிருந்தேன். அதாவது, கார்ப்பெட்ல, அழுக்கு இருக்கு, ஜன்னல் ஸ்க்ரீன் லேசா கிழீஞ்சிருக்கு, இந்த மாதிரி விஷயங்கள்.
அவங்களும், அதையெல்லாம் வாங்கி, ஃபைல் பண்ணி வச்சுக்கிட்டாங்க.

இப்ப, கொடுத்த நோட்டீசில், அந்த விஷயமெல்லாம், என்னமோ நான் வந்தப்பரம் ஒடச்சதாகவும், அதுக்கெல்லாம் நான் தான் காசு கொடுக்கணும்னும் போட்டிருக்குது.

அநீதிக்கு வளஞ்சு கொடுக்கரதான்னு, எனக்கு தார்மீகக் கோபம் பொசுக்குன்னு வந்துடுச்சு.
300 வீடுகளுக்கு மேல் உள்ள பெரிய கொம்பேனி அது. ஏரியாவில், இதைத் தவிர, வேறு பலப் பல குடியிருப்புகளும் இவர்களுக்கு உண்டு.

கண்டிப்பா, அவங்க கேட்கும் அதிகத் தொகையை கொடுக்கப் போவதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அதைத் தவிர, அவங்க கிட்டயிருந்து, ஞாயமா, எனக்குத் தான், $500 திரும்பக் கிட்டணும்னும் தோணிச்சு.

இங்க தான் எல்லாத்துக்கும், கச்சிதமா சிஸ்டம் செஞ்சு வச்சிருக்காங்களே. ஞாயத்தை எடுத்தச் சொல்ல சுலபமா ஏதாவது வழியிருக்கும்னு நெனச்சேன். இணையத்தில் தேடியதில், அது உண்மைன்னே தெரிஞ்சது.
Project Sentinel னு ஒரு தன்னார்வ நிறுவனம் இருப்பது தெரிந்தது. இவங்க, இந்த மாதிரி லடாய்களில், நடுவில் புகுந்து, இரு தரப்பிலும் பேசி, சுமுகமாய் தீர்த்து வைக்க முயல்வார்கள்.

நான் அவங்கள் கூப்பிட்டு சங்கதி சொல்ல, அவங்களும், அபார்ட்மெண்ட் ஆளுங்கள கூப்பிட்டு பேசிப் பாத்தாங்க, ஆனா, எதுவும் படியலை.

Sentinelமூலமா தெரிஞ்ச விஷயம், $7500 கீழே உள்ள லடாய்களை தீர்த்துக் கொள்ள, small dispute நீதிமன்றங்களை அணுகலாம் என்பது. ஒவ்வொரு நகரத்திலும் ஒரு நீதிமன்றம் இருக்கு.

அங்க போய், $30 கட்டி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவங்க கிட்ட கொடுத்திடணும்.
அவங்க, அதை அபார்ட்மெண்ட்டின் மேனேஜருக்கு அனுப்பி, ஒரு தேதியில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகணும்னு சொல்லிடுவாங்க.

மேட்டர் சிம்பிளா இருக்கேன்னு, நானும் கோதால எறங்கிட்டேன்.

ஆகஸ்ட் 15ல், சமத்தா போய், விண்ணப்பமெல்லாம் கொடுத்துட்டு வந்தாச்சு.
நீதிமன்றமும், அக்டோபர் 2ஆம் தேதி, விசாரணைக்கு குறிச்சுக்கிட்டாங்க. அபார்ட்மெண்ட்டுக்கும் ஆணையை அனுப்பிட்டாங்க.

இந்த மாதிரி வழக்கு விசாரணைகளுக்கு, வக்கீல்கள் எல்லாம் வேணாம், நாமே நமது பக்க நியாயத்தை, ஆதாரங்களுடன், எடுத்துக் கூறலாம்,
நீதிபதி, இருபக்க நியாயத்தையும் கேட்டு, அதே நாள், தீர்ப்பை வழங்கி விடுவார்.

ஆகஸ்ட் 15 - புகார் அளித்த் நாள்
October 2 - விசாரணைக்கான நாள்னு, அமஞ்சது, பெரிய co-incidence தான்.
வாய்மையே வெல்லும்னு உள்ளூர ஒரு இது இருந்தது.

என்னிடம், பெருசா, proofனு ஒண்ணும் இல்லை. அபார்ட்மெண்ட்டுக்குள் போனது, ஃபோட்டோ வெல்லாம் எடுத்து வச்சுக்கல. என் கிட்ட இருந்ததெல்லாம், அந்த lease check listதான்.

எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இன்னிக்கு கோர்ட் வாசப்படியை மிதித்தேன்.
ஒரு மணிக்கு வரச் சொல்லியிருந்தாங்க. 12:00 மணிக்கே நான் ஆஜர். வேர, யாருமே இல்ல. 12:45க்கு தான் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க.

ஏழு வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளதாக, bailiff கூறினார். ஒவ்வொருவரையும் அழைத்து, ஒரூ ஃபாரத்தில் கையெழுத்து இடச்சொன்னார்.

நானும், அபார்ட்மெண்ட் சார்பா, யாரு வராங்கன்னு பாக்க ஒரு எதிர்பார்ப்புடன் எழுந்து போனேன்.
அழகான, ஒரு இளவயது, (1/2 சைனாக்கார?),அழகான, வக்கீலம்மா, ஹை சொல்லிக்கிட்டே என் கூட நடந்து வந்தாங்க.

bailif: (வக்கீலம்மாவிடம்) oh,you came fully prepared (அவங்க, எல்லா ஃபாரமும் ஏற்கனவே ஃபில் அப் பண்ணி கொண்டு வந்துட்டாங்களாம்)
வக்கீலம்மா: oh yeah, i have been doing this for 15 years (என்னப் பாத்து நெக்குலா ஒரூ சிரிப்பு வேர)

ரெண்டு பேரும், கையெழுத்து போட்டதும், bailiff, எங்களைப் பாத்து, நீதிபதி வருவதர்க்குள், நாங்களே பேசித் தீத்துக்க முடிஞ்சா ப்ரச்சனைய தீத்துக்கலாம்னு சொன்னாரு.
மீடியேட்டர்ஸ் ரெண்டு பேரு, ஃப்ரீயா உபயோகிச்சுக்கலாம்னு கை காமிச்சு விட்டாங்க.

சரின்னு, நானும், வக்கீலம்மாவும், கோர்ட் ரூமை விட்டு வெளீல போய் ஹாயா ஒக்காந்து பேச ஆரம்பிச்சோம்..

-தொடர்ச்சி இங்கே

18 comments:

SurveySan said...

//அமெரிக்க நீதிமன்றத்தில் நானு.. நியாயத்துக்காக போராட்டம்..."//

ஓவர் பில்டப்போ? :)

gulf-tamilan said...

ஹாயா ஒக்காந்து பேச ஆரம்பிச்சோம்//
ம் அடுத்து என்ன ஆச்சு?

SurveySan said...

gulf-tamilan,

அதான் தொடரும் போட்டிருக்கனே. :)

வரும்.

வருகைக்கு நன்றி!

rapp said...

நாம வளரும் நாடுகள் லிஸ்ட்ல தான இருக்கும், பொறுங்க:):):)

rapp said...

பயங்கர திரில்லிங்கா கொண்டுபோறீங்க, என்னை மாதிரியே:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சொல்லவந்ததை சொல்லாம என்ன திரில்லிங் வேண்டிக்கிடக்கு இதுல இந்த ராப் வேற ... சப்போர்ட்..

SurveySan said...

rapp, விவரத்துக்கு நன்னி. சீக்கரம் வளந்தா சரி ;)

முத்துலெட்சுமி, மொத்தத்தையும் சொன்னா, பெரூஊஊஊஊசா போயிடும். அப்பரம், யாரும் படிக்கமாட்டாங்க, அதான் ;)

ILA said...

கலக்கல். அடுத்த பகுதி எப்போ?

SurveySan said...

ILA, koodiya viraivil.

probably Monday :)

வீணாபோனவன் said...

எப்படியும் நீங்கதான் தண்டம் கட்ட போறிங்கன்னு பட்சி சொல்லுது ;-) உங்களுக்குசரி பாதி டெமேஜ் டெபோசிட் வருது... இங்க முக்கால்வாசி அதுவும் இல்ல :-( அதுக்காகவே ஒரே அப்பர்ட்மென்ட்ல 6 - 7 வருஷம் இருந்திடுவேன் :-)

-வீணாபோனவன்.

SurveySan said...

Veenaponavan,

////எப்படியும் நீங்கதான் தண்டம் கட்ட போறிங்கன்னு பட்சி சொல்லுது ;-) ////

really? lets wait & see. 2nd part on Monday ;)

Senthil said...

nice, anything about US, UK are always catching,
eagerly waiting for next part

CVR said...

nicely written!! :-)

சயந்தன் said...

October 2//

சத்திய சோதனை!

SurveySan said...

senthil, cvr, Danks!

சயந்தன், ஆமாங்க, பெரிய சோதனைதான் ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.............................................................................................................
..................

தருமி said...

//ஒரு இளவயது, (1/2 சைனாக்கார?),அழகான, வக்கீலம்மா,//

//i have been doing this for 15 years//

ஒதைக்குதே .........

SurveySan said...

தருமி,

முப்பதுகளில் இருப்பவர்கள் இளவயது இல்லீன்னு சொல்றது வில்லத்தனம் ;)