recent posts...

Monday, October 06, 2008

சாரு வும் என் CEO வும்

ஹிஹி. வாய்ப்பு கெடச்சா விடக் கூடாதுல்ல. அதான் தொபுக்கடீர்னு குதிச்சுட்டேன்.

வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்திச்சாம்.
அதுக்கு லக்கி "சாரு நிவேதிதா" என்ற எழுத்தாளரை, சாட்ல புடிச்சு, வரீங்களான்னு கேட்டாராம்.
"சாரு நிவேதிதா" அதைப் பாத்து, அங்கையே, வரமுடியாதுன்னோ வரமுடியும்னோ சொல்லாம, தனிப் பதிவா போட்டு, "இப்படியா ஒரு எழுத்தாளரை அழைப்பது", அது இதுன்னு போட்டுத் தாக்கிட்டாரு.

நான் பெரிய ஆளு, என்னை இப்படியெல்லாம் தராதரம் இல்லாம கூப்பிட்டா சரிப்படாதுன்னு எப்ப ஒரு பெரிய மனுஷன் நெனைக்கறாரோ, அப்பவே, அவர் என் பார்வையில் சிறுசா ஆயிடறாரு.

"சாரு நிவேதிதா" யார், எப்படிப்பட்ட எழுத்தாளர்னெல்லாம் எனக்குத் தெரியாது.
புத்தகங்களுக்கும் எனக்கும், அன்னிக்கும் ஒத்துவரலை, இன்னிக்கும் அப்படியேதான் இருக்கு.

எப்பவாச்சும், "for dummies" படிக்கரது உண்டு.
டாக்டரைப் பாக்கப் போனா, அவங்க வெயிட்டிங் ரூமுல இருக்கர, readers digest படிப்பேன்.
National Geography வீட்டுக்கு வருது, அதுல படம் மட்டும் பாப்பேன்.

மத்தபடி, ஆன்லைன்ல, பதிவுகள், செய்திகள், தினகரன், ஹிந்து - இத்தோட என் இலக்கிய அறிவு நின்னு போயிடுது ;)
ஸோ, மொத்தத்தில் நான் ஞானசூன்யம்!

லக்கிக்கு சாரு நிவேதிதா என்பவர்,
எனக்கு, என் CEO மாதிரின்னு வச்சுக்கலாமா?

என் CEO இலக்கியவாதியெல்லாம் கிடையாது. ஆனா, பெரிய அறிவாளி. பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர். உலகத்துக்குத் தேவையான பல விஷயங்களை உருவாக்கியவர். பல குடும்பங்கள் இவரின் நிர்வாகத் திறமையால் வளமாய் வாழ்கிறார்கள். ரொம்ப நல்லவர். வல்லவர். etc... etc...

நல்ல ஒப்புமைதானே இது?

இப்போ, சப்போஸ், இந்த வீக் எண்டுக்கு, நானும், என் நண்பர்கள் அஞ்சு பேரும் சேந்து, இங்க பக்கத்துல இருக்கர காட்டுக்கு கோழி பிடிக்கப் போறோம்னு வச்சுப்போம்.
CEO சாட்ல வராரு. நானும், ஏதேச்சையா பாக்கறேன்.

சரி, சாரும் வராரான்னு சும்மா கேட்டுப் பாக்கலாமே, வந்தா, நான் கூப்பிட்டுதான் அவரு வந்தாருன்னு ஒரு கெத்தா இருக்கலாமே. அதைத் தவிர என் ஆதர்ஷ புருஷராச்சே அவரு, அவருகூட சில நிமிஷங்கள் கோழி பிடிச்சாலும், வாழ்நாள்ள மறக்க முடியாத அனுபவமா இருக்குமேன்னெல்லாம் மின்னல் மாதிரி தோணுது. சரின்னு, சாட்டரேன் அவரு கிட்ட, "hey John, if you are free over the weekend, could you join us for கோழி புடிக்க?"ன்னு கேட்டு வைக்கறேன்.

அப்படி கேட்டா, John என் கொம்பேனியின் மொத்த தொழிலாளிகளுக்கும், ஒரு பெரிய மடல் அனுப்பிச்சு, "How dare this guy surveysan invites me for கோழி புடிக்க on a chat?"ன்னு கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டாரு. சாட்லயே, என் கிட்ட, "No dude. you carry on. I have already committed for ஆடு புடிக்க. Bring me the catch, deep fried"ன்னு வேணா சொல்லியிருப்பாரு.

சாரு நிவேதிதா, அந்தப் பதிவைப் போட பல காரணம் இருக்கலாம். ஆனா, என் மனசுக்கு அது சரியாப் படலை.

சரியாப் படலன்னா, ஏன்யா பதிவப் போட்டு உயிர வாங்கறேங்கறீங்களா?

விஷயம் இல்லாம செய்வேனா?

நீங்க என்ன நெனைக்கறீங்க. சொலிட்டுப் போங்க! :)

btw, சாருவின் நல்ல கதைகளைப் பரிந்துரை செய்யுங்கள், பின்னூட்டத்தில்.

1) பொடியன் Sanjai பரிந்துரை - http://www.charuonline.com/sep08/KuttiKathaigal108(47).html (Adults only?)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)


பி.கு: லக்கியின் லேட்டஸ்ட் 'பம்மல்' -
'அழைப்பின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம். அழைக்கப்படுபவரின் வயது, தகுதிக்கேற்ப அழைப்பின் தன்மை மாறுபடும். ஸ்ரீகாந்த் குறுஞ்செய்தி அனுப்பி கனகசுப்புவை திருமணத்துக்கு அழைத்திருந்தால் அது பச்சை அயோக்கியத்தனம் :-)' - அழைப்பு, படிக்கத் தவறாதீர்கள் ;)

42 comments:

சரவணகுமரன் said...

கோழி பிடி, ஆட்டு பிடி உதாரணம் சிரிப்பை வரவழைத்தது :-)

பரிசல்காரன் said...

விழுகாம சிரிச்சேன் வாத்யாரே!

ambi said...

ஹிஹி, கலக்கல், ஆக பதிவர் சந்திப்பு எல்லாம் கோழி பிடிக்கற மாதிரின்னு சொல்லி இருக்கீங்க. :p

(பத்த வெச்சோம்ல)

கயல்விழி said...

LOL நல்ல பதிவு.

அதுக்கு பதிலாக, "அங்கிள், பெரியவங்க நீங்கதானேஎ அடீச்சீங்க, பரவாயில்லை அடிங்க, நான் தான் பேட் பாய்" என்ற ரீதியில் இருந்த ஒரு பதிவு உங்கள் பதிவை விட சிரிப்பை வரவழைத்தது.

SurveySan said...

நண்பர்காள், நன்னி! நன்னி! நன்னி!

கயல்விழி, என் பதிவு நல்லால்லன்னு சொல்லாம சொல்லிட்டிங்க. ஹ்ம். நீங்க என்ன எழுதினாலும், தேடிப் புடிச்சு, ஓடோடி வந்து பின்னூட்டம் போட்ட என் மனசுல வேலப் பாச்சிட்டீங்க. பரவால்ல, வுடுங்க. கொஞ்ச நாள்ள ஆறிடும்.
ஹிஹி. :)
அந்த உரல் கொடுங்க, படிச்சுப் பாக்கறேன்.

SurveySan said...

சரவணகுமரன், பரிசல், அம்பி,
மெய்யாலுமே வர்க் அவுட் ஆயிடுச்சா. பரவால்லியே ;)

அம்பி, கோழி பிடிக்கரது ஒண்ணும் கேவலமில்லீங்க. எவ்ளோ கஷ்டம் தெரியும்ல? பயங்கரமான திறமை வேணும். பிடிச்சு பாத்திருக்கீங்களா? :)

கயல்விழி said...

அதெப்படிங்க நான் எழுதிய கமெண்டை ரொம்ப கரெக்டா தப்பா புரிஞ்சுகிட்டீங்க?

SurveySan said...

நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா?

///உங்கள் பதிவை விட சிரிப்பை வரவழைத்தது////

எந்த தன்மானமுள்ள வலைப்பதிவனாலும், தாங்கிக்க முடியாத வார்த்தைய சொல்லிட்டீங்களே ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

கயல்விழி said...

//
எந்த தன்மானமுள்ள வலைப்பதிவனாலும், தாங்கிக்க முடியாத வார்த்தைய சொல்லிட்டீங்களே ;)//

தன்மானமா அப்படினா?

விஜய் ஆனந்த் said...

:-))))..

SurveySan said...

கயல்விழி,

///தன்மானமா அப்படினா?////

ஹ்ம். இதுக்கு தனிப் பதிவு போட்டுதான் பதில் சொல்லமுடியும். அப்படியே, ஒரு சர்வேயும் போடுவேன். ;)

உரல் என்னாச்சு?

SurveySan said...

மீ த ஸ்லீப்பிங்!

குட் நைட்!

Sanjai Gandhi said...

செம கலக்கல் பதிவு.. :)

சாருவோட பதிவு செம அநாகரிகம்.. லக்கிக்கு நாகரிகமா மறுப்பு சொல்லி இருக்கலாம்.. அல்லது பதிவு போடா இருந்திருக்கலாம்.. அத விட்டு நான் யார் தெரியுமா? எவரு தெரியுமா? என்ன எப்டி கழுத மேய்க்க அழைக்கலாம் என்பதஎல்லாம் தேவை இல்லாதது. சக மனிதர்களை கழுதைனு சொல்ற இவரெல்லாம் பெரிய எழுத்தாளராம... கொடுமை...

ஞானி மேல் விமர்சனங்கள் இருந்தாலும் அழைக்காமலே வந்திருக்கிறார்.. அது தான் பெருந்தன்மை..

கயல்விழி said...

உரல் என்றால் லிங்கா?

நீங்களே கொடுத்திருக்கிறீர்கள், பம்மல் என்று. :)

☀நான் ஆதவன்☀ said...

சாரு, லக்கி இரண்டு பேரும் பண்ற காமெடிய விட உங்க
கோழி புடிக்க, ஆடு புடிக்க நல்ல காமெடி..:-))))))

கா.கி said...

சாரு எப்பவுமே காமெடி பண்ற ஆள்... "நானும் ரஜினியும் ஒண்ணா தண்ணி அடிச்சோம், சைட் அடிச்சோம்" rangela ஏதாவது ஒளரிகினே இருப்பாரு... ஞானி மாதிரியே அவருக்கும் ஆ.வி and குமுதம் சப்போர்ட் இருக்கு.... அவருடைய பதிவே contradictory...
//பொதுவாக நான், 25 ஆண்டுகளாக கவிதை எழுதி வரும் என் மதிப்புக்குரிய ஒரு கவிஞனையும் நேற்றே எழுதத் துவங்கியிருக்கும் ஒரு இளைஞனையும் தராதரம் பார்க்காமல் சமமான அளவிலேயே பாவித்துப் பழகுவேன்//

HYPOCRITEs...
இது போல தான் நான் ரஜினியோட சிவாஜி படம் 3வது தடவ பாக்கசொல்ல, சத்யம் தியேட்டர்ல ஞானி அவர்கள பார்த்தேன்... :))

திவாண்ணா said...

//எப்பவாச்சும், "for dummies" படிக்கரது உண்டு.//
அட, அப்படியா?
அப்ப என் ப்ளாக் கூடவா?

வீ. எம் said...
This comment has been removed by the author.
வீ. எம் said...

சாரு செய்தது மிகத்தவறு, அவர் எழுதியிருக்கும் விதத்திலேயே அவரின் தலைக்கணம் தெரிகிறது.

அதிலும், நீ கூப்பிட்டால் நான் வந்துவிட வேண்டுமா என்ற ஏன் கேட்டார் என்று புரியவில்லை.. லக்கி எங்குமே நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்று சொல்லவில்லை..

சாருவிற்கு பதிவுலகம் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும், பதிவர் வட்டமும் ஒரு சாதாரண கூட்டம் , அதற்கு போய் வெற்றிலை பாக்கு , போஸ்டர் போட்டா கூப்பிட முடியும்?

பெரிய காமெடி, ரஜினியோடு தன்னை இனைத்து பேசியிருக்கிறார்... நல்ல கூத்து.. தேவையே இல்லாமல் இங்கு ரஜினியை இழுத்திருக்கும் இந்த லூசுதனத்தை என்ன சொல்வது..

அதே போல லக்கியும் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்.. அவரிடம் தேவை இல்லாமல்.. நீங்கள் தான் HOT TOPIC என்றெல்லாம் பேசியிருக்கவேண்டாம்.. கொஞ்சம் முந்திரிக்கொட்டை தனமும் தெரிகிறது..

சாரு அவர்களே, ரஜினியை அழைத்திருந்தால் கூட அவர் நாசுக்காக , வரமுட்டியவில்லை நன்றி என சொல்லி ஒதுங்கி சொல்லித்தான் இருப்பார்.. அவரோடு ஒப்பிட்டால் நீங்கள் எல்லாம் ஜுஜுபி. சிறுபிள்ளைத்தனமாக இப்படி உங்களையே அசிங்கம் செய்துக்கொண்டீர்.. பக்குவமில்லை.. அல்லது ஆணவம்/

தமிழன்-கறுப்பி... said...

:)

Dr.Rudhran said...

very good post. well written. and very correct

SurveySan said...

கயல்விழி,

///நீங்களே கொடுத்திருக்கிறீர்கள், பம்மல் என்று. :)
////

ஓஹோ, அதச் சொன்னீங்களா. நான் ஏதோ, நீங்க இன்னொரு பதிவை பத்தி சொல்றீங்கன்னு நெனச்சு 'பம்மிட்டேன்' ;)

நன்றி! நன்றி! நன்றி! உங்களுக்குத் தொடர்ந்து கமெண்ட்டுவேன் ;)

SurveySan said...

பொடியன், நன்றி.

நீங்க ரெக்கமெண்ட் பண்ண கதை நல்ல கதைதானே? இல்ல லுலுவாய்க்கு அத சொன்னீங்களா?

Kathir said...

பாஸ்,

நான் ஓட்டு போட முயற்சி செஞ்சா, நீ முன்னாடியே ஓட்டு போட்டாச்சு ன்னு சொல்லுது......

யாராவது கள்ள ஓட்டு போட்டுட்டாங்களா....

:(

Kathir

மருதநாயகம் said...

நல்ல ஒப்புமை புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி

Indian said...

//நான் ஓட்டு போட முயற்சி செஞ்சா, நீ முன்னாடியே ஓட்டு போட்டாச்சு ன்னு சொல்லுது......

யாராவது கள்ள ஓட்டு போட்டுட்டாங்களா....//

perils of browsing at workplace.

theevu said...

//"No dude. you carry on. I have already committed for ஆடு புடிக்க. Bring me the catch, deep fried"ன்னு வேணா சொல்லியிருப்பாரு.//

:)

இரசித்தேன்

SurveySan said...

நான் ஆதவன், karthick, திவா,
தமிழன், Dr.Rudhran, மருதநாயகம், Indian, theevu

நன்றி!

வீ.எம்,

/////அதே போல லக்கியும் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்.. அவரிடம் தேவை இல்லாமல்.. நீங்கள் தான் HOT TOPIC என்றெல்லாம் பேசியிருக்கவேண்டாம்.. /////

ஹாட் டாப்பிக்னு சொன்னதெல்லாம், சாருவை வரவைக்க செய்தத விஷயமாய் இருக்கும் பட்சத்தில், அது தவறு லேது ;)

Kathir,

உங்க ஆபீஸ்ல யாராச்சும் ஏற்கனவே வோட்டு போட்டிருப்பாங்க. ஐ.பி பதிவாயிருக்குமோ என்னமோ ;)

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-))))))


இப்போதைக்கு ஹாட் டாபிக் 'இவர்'தானா?

எப்போ சீஸன் மாறும்?

SurveySan said...

துளசி,வருக வருக,

///இப்போதைக்கு ஹாட் டாபிக் 'இவர்'தானா?///

;) ஏதோ நம்மால முடிஞ்ச தொண்டு.

Thamira said...

"No dude. you carry on. I have already committed for ஆடு புடிக்க.// ரசித்துச்சிரித்தேன். பிரமாதம் உங்க ஸ்டைல்.! இவ்ளோ நாள் வராததற்கு ஸாரி. மிஸ் பண்ணுகிறேன்.

SurveySan said...

Thamira,

////ரசித்துச்சிரித்தேன். பிரமாதம் உங்க ஸ்டைல்.! /////

Danks! Danks! Danks!

Unknown said...

//Dr.Rudhran said... //

மருத்துவர் ருத்ரன்,

நான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை வலைப்பதிவுகளில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன் நீங்கள் தமிழில் எழுதக்கூடாது?

Veera said...

ஹா.ஹா.ஹா.

அவங்க ரெண்டு பேரும் கோழி பிடிச்சாங்களோ, இல்ல ஆடு பிடிச்சாங்களோ.. மத்தவங்க நல்லா குழம்பு வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இப்படி தினமும் ஒரு பந்தி நடந்தா சரிதான்! :-))

Truth said...

சர்வேசன்,
கொஞ்ச நாளா உங்க blog-a படிச்சிகிட்டு இருக்கேன். எல்லாமே அற்புதம். இந்த பதிவு என்ன ரொம்பவே சிரிக்க வெச்சுது, கூடவே கொஞ்சம் சிந்திக்கவும், செய்ய வெக்குது.
நீங்க சொன்ன
//நான் பெரிய ஆளு, என்னை இப்படியெல்லாம் தராதரம் இல்லாம கூப்பிட்டா சரிப்படாதுன்னு எப்ப ஒரு பெரிய மனுஷன் நெனைக்கறாரோ, அப்பவே, அவர் என் பார்வையில் சிறுசா ஆயிடறாரு.//
200% கரெக்ட்.
நல்ல இருக்குங்க.

~உண்மை.

ராஜ நடராஜன் said...

சர்வே!கோழி பிடிக்க கூப்பிட்டதும் ஆடு பிடிச்சிட்டுருக்கேன்னு சொல்றதும்தான் சரி:)

Truth said...

//விஷயம் இல்லாம செய்வேனா?

அப்போ விஷயத்த எப்போ சொல்ல போறீங்க?

~உண்மை

Sundar Padmanaban said...

அலோ

இதை நீங்க வேற பதிவா போடணுமா? அவருக்கே இந்தப் பதிவை மின்னஞ்சல்ல அனுப்பிருக்கலாமே? :-)

என்னமோ போங்க!

SurveySan said...

சாருவுக்கும் கொலைவெறி ரசிகர்கள் இருக்கரது ஆச்சரியமா கீது.

http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_07.html

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

:))))))))

சரவணகுமரன் மற்றும் கயல்வழியை ஆமோதிக்கிறேன் !
(இதையும் தன்மானமுள்ள பதிவரா தாங்கிக்க முடியாதே !?)

:))))))))))))

SurveySan said...

அறிவன்,
Danks!