recent posts...

Thursday, October 09, 2008

Mixture - கமாண்டர் சுவாமிஜி, தற்கொலை

வணக்கம் நண்பர்களே! ஹாப்பி வெள்ளி!

அமெரிக்க அட்லாண்டாவில் ஒரு சுவாமிஜி இருக்காரு. ஆள் பாக்கவே சூப்பரா டி.வி சீரியல் ஹீரோ மாதிரி இருப்பாரு. இந்த ஊர்ல கிடைக்கிர எந்த பத்திரிகை பாத்தாலும், ஸ்டைலா சிரிச்சுகிட்டே ஆசீர்வாதம் பண்ற போஸ்ல இருப்பாரு.
குடும்ப பிரச்சனைகள்,மன உளைச்சல்கள் மாதிரி ப்ரச்சனைகளுக்கும், கேன்ஸர் மாதிரி உடல் ரீதியான கோளாறுகளுக்கும், இவரிடம் சென்றால் 'குணம்' கிடைக்கும்னு, அந்த விளம்பரங்கள் எல்லாம் முழுப்பக்கத்துல, நல்ல காமெடியா இருக்கும் படிக்க.
மேலும் இருபத்தி நாலு மணி நேரமும், பக்தகோடிகளுக்காக தொலைபேசி வழி customer serviceம் இருக்கிறதாம்.
பல கோடி ரூபாயில், இவர் சொந்த செலவில் ஒரு சர்ச்சை வாங்கி, அதை கோயில் ஆக்கியிருந்தாராம்.
புதிய காருக்கு பூஜை, புதிய வீட்டுக்கு பூஜை, அதுக்கு பூஜை, இதுக்கு பூஜை, என, எல்லாத்துக்கும் ஒரு ஃபிக்ஸட் கட்டணத்துக்கு இவரின் 'கோயிலில்' சேவை உண்டு.
வீட்டுக்கே, ஃப்ளையிங் விஸிட் அடித்து ஸ்பெஷல் பூஜை செய்யவும், இவரின் கோயில் பூசாரிகள், எப்பொழுதும், தயார் நிலையில் இருப்பர்.

இப்பேர்பட்ட கமாண்டருக்கு வந்தது சோதனை.
இவரின் serviceஐ உபயோகிக்கும் பக்த கோடிகள் கொடுக்கும், க்ரெடிட் கார்டை, அடிக்கடி தேய்த்து, அதிலிருந்து பணத்தை உருவுவாராம்.
இதை யாரோ, ஜார்ஜியாவில் இருக்கும் பக்தர், உள்ளூர் தொலைக்காட்சிக்கு போட்டுக் கொடுக்க, அவங்க நிருபரும், தான் படித்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸத்தை பரீட்சனை செய்து பார்க்க, குட்டிக் கேமராவுடன், மாறுவேஷத்தில், சுவாமிஜியை பாக்க போயி சுவாமிஜியின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்திவிட்டுட்டாரு.
பேட்டியின் போது, கோயிலின் ஹாலை, ஒரு பார்ட்டிக்கு வாடகை கேட்டிருக்காரு. பார்ட்டியில் சரக்கடிப்போம் பரவாயில்லையான்னு கேட்டதுக்கு, அதெல்லாம் பரவால்லன்னுருக்காரு. சுவாமிஜி.
துட்டு வந்தா போதும் போல.
ஒவ்வொரு பார்ட்டி முடிந்ததும், பியர் பாட்டில்களும், நான்-வெஜிடேரியன் உணவு வகைகளும் பரவலாய்க் காணக் கிடைக்குமாம்.
சுவாமிஜியின் வீடு மில்லியன் டாலர் பெருமானம் உள்ளதாம்.
இப்படி, அடுக்கிக்கிட்டே போராங்க.

அட்லாண்டா வாசிகளே, உஷாரு!

சுவாமி, தூண்லயும் இருக்கார், துரும்புலயும் இருக்காரு, மறக்காதீங்க.
கோயிலுக்கு போயே ஆகணும்னா, போயிட்டு, ஃப்ரீ சாப்பாடு சாப்பிட்டுட்டு, உண்டியல்ல, $1 போட்டுட்டு திரும்ப வந்துருங்க. க்ரெடிட் கார்டெல்லாம் கொண்டு போவாதீங்க ;)

அமெரிக்கால மட்டுமில்லை, உலகம் முழுவதும், சாமிய காட்டி, காசு சம்பாதிக்கரது ஜாஸ்தி ஆகிட்டே வருது.

___/\___ ___/\___ ___/\___ ___/\___

உயிரோட ஆரோக்யமா இருக்கரவங்க யாரும் சாவுக்கு பயப்பட மாட்டாங்க. ஆனா, சாவின் விளிம்புல நிக்கும்போது, கன்னாபின்னான்னு பயம் வரும்.
பஸ்ல ஒருதடவ ஃபுட்போர்டுல தொங்கிக்கிட்டு போவும்போது, கை வழுக்க ஆரம்பிச்சு, இப்ப விழுவேனா அப்ப விழுவேனான்ற நெலம. பஸ் ஃபுல் ஸ்பீட்ல போவுது.
"அண்ணா, கை வழுக்குதுண்ணா, கையப் புடிங்கண்ணா. பஸ்ஸ நிறுத்த சொல்லுங்கணா"ன்னெல்லாம் கத்த, தன்மானம் இடம் கொடுக்காத தளிர் மீசை வயசு அது.
நெஞ்சு பக் பக் பக்குனு அடிச்சுது.
அதுதான் முதலும், கடைசியுமா வந்த மரண பயம்.

இப்பேர்பட்ட மரண பயத்தை, துச்சமா மதிச்சு, தற்கொலை பண்ணிக்கரவங்கள நெனச்சா வியப்பாவும் குழப்பமாவும் இருக்கு.

தற்கொலை, கிட்டத்தில் அனுபவித்தது, சில வருஷத்துக்கு முன்னாடி, அலுவலக நண்பர் ஒருவர் (அமெரிக்கர்) தற்கொலை செய்து கொண்ட போது.
ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். குடும்பம் குட்டியெல்லாம் இருந்தது. எங்க கும்பலோட ரொம்ப நல்லா பழகுவாரு. என் நண்பனின் திருமணத்துக்கு சென்னைக்கு வந்து, டான்ஸெல்லாம் ஆடி, இலையில் சோத்த போட்டு, கையால பிசைந்து சாப்பிட்டாருன்னா பாத்துக்கங்களேன். தங்கமான ஆளு.

தற்கொலை செய்து கொண்ட ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட என் கிட்ட ரொம்ப சாதாரணமா சிரிச்சிக்கிட்டேதான் பேசினாரு.
என்ன காரணமோ தெரீல, அன்னிக்கு காத்தால, துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல காரணங்கள் சொல்லப்பட்டது.
ஆனா, அப்பேர்பட்ட அமைதியான நல்ல மனுஷனுக்கெப்படி துப்பாக்கியெல்லாம் எடுத்து, இந்த முடிவு எடுக்க முடிஞ்சுதுன்னு, எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியலை.
ஒவ்வொரு முறை செய்தியில், தற்கொலைங்கர வார்த்தைய பாக்கும்போதும், அவரின் முகம் நினைவில் வந்து போகும்.

என்ன தேவை இவங்களுக்கு? சுத்தியிருக்கரவங்ககிட்ட மனம் விட்டு பேசினா, எந்தப் ப்ரச்சனையாயிருந்தாலும் தீத்து வச்சிருக்க மாட்டாங்களா என்ன?

மூணு நாளைக்கு முன்னாடி, லாஸ் ஏஞ்சல்ஸில், ஒரு நடுத்தர வயது, இந்தியத் தந்தை, தன்னை தானே சுட்டுக் கொண்டதோடில்லாமல், தன் மூன்று குழந்தைகள்,மனைவி, மாமியார், எல்லாரையும் மொத்தமா சாகடிச்சிட்டாராம்.
பண நெருக்கடி காரணமாய் சொல்லப் படுகிறது. சில மாதங்கள் வேலை கிடைக்காமல் இருந்தாராம். இத்தனைக்கும், இவரு அமெரிக்கால வந்து 20 வருஷத்துக்கும் மேல ஆச்சாம். வாழரது, பணக்காரர்கள் புழங்கும் ஊரில். மூத்த பையனுக்கு 19 வயது. பெரிய படிப்பு படித்த, கெட்டிக்காரச் சிறுவன்.

சில நாட்களாவே, இதை யோசித்து செயல் படுத்தியிருக்காராம். தான் மட்டும் தற்கொலை செய்து கொள்ளலாமா, இல்லை குடும்பத்தில் எல்லோரையும் கொன்ற பின், தற்கோலை செய்யலாமான்னெல்லாம் யோசிச்சதில், குடும்பத்தையும் பலியிடுவதுன்னு முடிவு பண்ணாராம். தார்மீக ரீதியில் அதுதான் சரின்னு பட்டுதாம் அவருக்கு. எல்லாம் விலாவாரியா கடிதத்தில் எழுதி வச்சுட்டு போயிருக்காரம்.

இங்கையும், இவரின் நண்பர்கள் வட்டத்தில், யாருக்கும் எந்த் அறிகுறியும் தெரியலையாம். அன்பான குடும்பம், நல்ல மனுஷன்னுதான் எல்லாரும் சொல்றாங்களாம்.

நான் நெனைக்கறேன், இந்த 'அன்பான நல்ல அமைதியான' மனுஷன்னாலே, உள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருக்கும்னு. வெளீல, தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்க முடியாத ஏதோ ஒரு 'ஷெல்' இவங்களூக்கு இருக்கு. புழுங்கி புழுங்கி, இந்த மாதிரி முடிவு எடுத்துடராங்க.

மக்களே, எல்லா கஷ்டத்துக்கும் ஒரு வழியிருக்கு.
கலகலப்பா இருங்க!
வாழ்க்கை வாழ்வதர்க்கே!

___/\___ ___/\___ ___/\___ ___/\___

இதுக்கு மேல எழுத இன்னிக்கு மூடில்லை. ஸோ, அப்பீட்டு!

ஹாப்பி வெள்ளி!

___/\___ ___/\___ ___/\___ ___/\___

பி.கு: வ.கலிப்போரினியா வாசகர்களுக்கு - வரும் சனி 6 PMக்கு, hariprasad chaurasia, guitar prasanna, habih khan ஆகியோரின் "Do you Feel?", Polio ஒழிப்புக்கான, Rotary Club சார்பில் நடக்கும், வாத்திய விருந்து இருக்கு. $20, $35, $100 டிக்கெட்டுகளின் விலையாம். கண்டிப்பா நல்லா இருக்கும். ஏரியால இருந்தா போய் பாருங்க.
Hariprasad Chaurasia யாரு தெரியும்ல? நம்ம ராசாவின் nothing but wind வாசித்த, புல்லாங்குழல் maestro!
கிட்டார் ப்ரசன்னா தெரியும்ல? ஜூலை மாசம் வந்தால் ஜோடி சேரும் மனசு பாட்டுல ஒரு கிட்டார் பிட்டு வருமே, அதை வாசிச்ச தில்லாலங்கடி இவரு.
விளம்பரம்: ( guitar prasanna பேரு சொல்லலையே விளம்பரத்துல. வர மாட்டாரா?)

14 comments:

கோவி.கண்ணன் said...

//சுவாமி, தூண்லயும் இருக்கார், துரும்புலயும் இருக்காரு, மறக்காதீங்க.
கோயிலுக்கு போயே ஆகணும்னா, போயிட்டு, ஃப்ரீ சாப்பாடு சாப்பிட்டுட்டு, உண்டியல்ல, $1 போட்டுட்டு திரும்ப வந்துருங்க. க்ரெடிட் கார்டெல்லாம் கொண்டு போவாதீங்க ;)

அமெரிக்கால மட்டுமில்லை, உலகம் முழுவதும், சாமிய காட்டி, காசு சம்பாதிக்கரது ஜாஸ்தி ஆகிட்டே வருது. //

கோவி சொன்னால் நாத்திகம், சர்வேசன் (சர்வ ஈஸ்வரன் ?) சொன்னால் ஆன்மீகமா ?

:)))))

கயல்விழி said...

அந்த சாமியார் பெயரை சொல்லாமல் விட்டுட்டீங்களே?

தற்கொலை செய்துக்கொள்பவர்கள் அதற்கு முன் பல முறை முயற்சித்து தோல்வியடைந்திருப்பார்களாம். மனம் விட்டு பேச ஆள் இல்லாததும், மன அழுத்தமும் முக்கியமான காரணங்கள். தற்போது அமரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

SurveySan said...

கோவி,

நான் எங்க நாத்திகம் பேசரேன்?
ஃப்ராடு ஆசாமிகளிடம் இருந்து என் ஆன்மீக அன்பர்களை காப்பாத்தறேன். அம்புடுதேன் ;)

SurveySan said...

கயல்விழி,

///அந்த சாமியார் பெயரை சொல்லாமல் விட்டுட்டீங்களே?////

உரல் கொடுத்திருக்கேனே. அவரு பேர நான் சொல்லி, என் பேர்ல ஏதாவது 'மான'நஷ்ட வழக்கு போட்டுட்டாருன்னா? :)

///தற்கொலை செய்துக்கொள்பவர்கள் அதற்கு முன் பல முறை முயற்சித்து தோல்வியடைந்திருப்பார்களாம்./////

ஹ்ம். இருக்கலாம்.

///மனம் விட்டு பேச ஆள் இல்லாததும், மன அழுத்தமும் முக்கியமான காரணங்கள். தற்போது அமரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.////

அவரைப் பொறுத்தவரை, வேலை கிடைக்காதது ஒரு காரணமா சொல்றாங்க. ஸ்டாக் மார்க்கெட் போகும் நிலையை பார்த்தால், அதுவும் காரணமாய் இருக்கலாம்னே தோணுது. லம்ப்பா நெறைய பேருக்கு போவுது ;)

rapp said...

me the 5th

கோவி.கண்ணன் said...

//SurveySan said...
கோவி,

நான் எங்க நாத்திகம் பேசரேன்?
ஃப்ராடு ஆசாமிகளிடம் இருந்து என் ஆன்மீக அன்பர்களை காப்பாத்தறேன். அம்புடுதேன் ;)
//

நீங்க நாத்திகம் பேசுறிங்கன்னு நான் சொல்லவில்லை. நான் அப்படி பேசுறதா தானே சொல்றிங்க

rapp said...

:(:(:(

ஆயில்யன் said...

//நான் நெனைக்கறேன், இந்த 'அன்பான நல்ல அமைதியான' மனுஷன்னாலே, உள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருக்கும்னு. வெளீல, தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்க முடியாத ஏதோ ஒரு 'ஷெல்' இவங்களூக்கு இருக்கு. புழுங்கி புழுங்கி, இந்த மாதிரி முடிவு எடுத்துடராங்க.//

சில பல சம்பவங்களினை கொண்டு பார்க்கும் போது நீங்க சொல்லும் விசயங்கள் “அன்பான நல்ல அமைதியான” வற்றுக்குள் ஒளிந்துகொண்டுத்தான் போகின்றன!

ஒரு ஸ்டேட்டசுக்கு வந்தப்பிறகு நாம் போய் இது போன்ற பிரச்சனைகளினை பிறருடன் பகிர்ந்துக்கொள்வதில் நமக்கு ஏற்படும் ஸ்டேட்டஸ் குறைபாடுகளினை பற்றியே கவலைப்பட்டு பெரும் பிரச்சனைகளினை கூட உறவுகளிடமும் நட்புகளிடமும் ஆலோசிக்க மறந்து இப்படி அநியாயமாக உயிர் துறத்தல் நினைத்தால் அவர்கள் மீது பயங்கர கோபத்தினையே கொண்டு வருகிறது!
:((
20 வருட அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தும் கூட ஒரு நெருக்கடியான சூழலினை சமாளிக்க இயலாது,
இளம் சிறுவர்களினையும் அந்த வயதான பெண்மணியினையும், மனைவியையும் சாகடித்து செத்த அந்த மனிதன் நினைக்கையில் வெறுப்பே மேலிடுகிறது :(((

கா.கி said...

தற்கொலை செய்யறவங்க எப்பவுமே emotionally வீக்கானவங்கங்கறது என் கருத்து... கூட பழகும்போது ஜாலியா/அமைதியா காணப்பட்டாலும், உள்ளுக்குள்ள நீங்க சொல்ரதப்போல அவங்கள சுத்தி ஒரு shell இருக்கும்...அப்படிப்பட்ட தற்கொலைகள நெறைய கேள்விப்பட்டிருக்கேன்...

p.s. //19 வயது. பெரிய படிப்பு படித்த, கெட்டிக்காரச் சிறுவன்//
19 வயசு இளைஞர, சிறுவன்னு சொல்ரத வெச்சி, உங்க வயச ஓரளவுக்கு ஊகிக்க முடியுது....

Robin said...

இப்படி மதத்தை வைத்து மக்களை ஏமாற்றி கோடீஸ்வரர்களாகியவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர். என்னை பொறுத்தவரை எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களே உண்மையான சாமியார்கள், ஆடம்பர வாழ்கை நடத்தி ஆன்மீகத்தை பரப்புகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகளே.

Anonymous said...

நல்ல பதிவு .ஆசிர்வாதம் .

SurveySan said...

karthick,

/////p.s. //19 வயது. பெரிய படிப்பு படித்த, கெட்டிக்காரச் சிறுவன்//
19 வயசு இளைஞர, சிறுவன்னு சொல்ரத வெச்சி, உங்க வயச ஓரளவுக்கு ஊகிக்க முடியுது....////

believe it or not, I thought about this, when I entered that word :)

கா.கி said...

//believe it or not, I thought about this, when I entered that word :)//

wise men and வயசான men think alike...
im the former and u the later..
:)

kankaatchi.blogspot.com said...

tarkkolai vivagaaram.
Peraasai peru nashttam
Panam oru aatkolli
pothumenra maname pon seiyyum marunthu.
Inthe vithigalai meerinal saavuthaan

2.Bandha saamiyaargal vaazhvu avvalavuthaan.kadavulin peyarai sollikondirunthaal pothum. Kadavulir peyaraal kaasu parippavargal vazhippari kollaikaarargalai vida mosamaanavargal. enna seivathu.kurukku vazhiyil athayam theda ninaikkiravargal ippadipatta aasaamigalidam maattikondu iruppathaiyum izhanthu thavippathai thavira veru vazhiyillai.