நந்தலாலாவுக்கு விமர்சனமும் எழுதியாச்சு, மிஷ்கினை திட்டவும் திட்டியாச்சு.
இப்பத்தான் மிஷ்கினின் இந்த பேட்டி கண்ணில் பட்டது.
தெளிவா, கிக்குஜீரோவின் பாணியில் எடுக்கப்பட்டது என்றும், அந்தப் படத்தின் காட்சியமைப்பையும் அப்படியே இந்தப் படத்தில் வைத்திருப்பதாகவும் தெளிவாய் கூறியிருக்கிறார். மானசீகக் குருவுக்கான நன்றி நவில்தல் மாதிரி இதை செய்திருக்கிறாராம்.
பட டைட்டிலில் போடாத ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் போடுவது ஏதாவது சட்டச் சிக்கலை உண்டாக்குமோ என்னமோ?
ஆனாலும், அவசரப்பட்டு அவரைத் திட்டிட்ட(னோ)மோ?
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்
ஐ ஆம் தா சாரி மிஷ்கின்.
Keep up the good work. More originality requested.
14 comments:
"Life Above All "எனும் தென் அமெரிக்கப் படத்தைப் பார்த்தபின் எழுதுகிறேன். அவர்களால் எப்படி சுயமாக இப்படியான தம் பிரச்சனைகளை வைத்து சொந்தச் சிந்தனையுடன் படமெடுக்க முடிகிறது.
நாம் பெரிய சினிமாப் பாரம்பரியம் மிக்கோர் இன்னும் யாரிடமோ கடன்படுகிறோம். கடன் பட்டதென்பதைக் கூட யாரவது கூக்குரலிட்டபின்னே ஒத்துக்கிறோம்.
நந்தலாலா - பார்த்தேன்....நிச்சயம் நான் ஜப்பான் படம் பார்க்கவில்லை, பார்த்துப் புரியுமா? நந்தலாலா ஒன்ற முடிந்தது. அதற்காக மிஷ்கினுக்கு நன்றி!பல காட்சிகள் இந்தியாவா? தமிழ்நாட்டிலா? இவ்வளவு அழகு என வியக்கவைத்தது.
சர்ச்சைக்கு முன் இது ஜப்பானியப் படம் பார்த்ததால் வந்த பாதிப்பில் உருவான தமிழ்ப்படம் எனக் கூறியிருக்கலாம்.
இனிமேல் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பார்களென நம்புகிறோம்.
மிஷ்கினின் கதாநாயகி, குத்துப்பாட்டு, பறந்தடித்தல், பஞ் வசனம்,தமிழ்ப்படத்தின் முக்கிய அடையாளமாம் 'தொப்புள்' இன்றிப் படம் எடுத்த துணிவைப் பாராட்ட வேண்டும்.
தயவு செய்து இப்படத்தைப் பார்த்து வெற்றி கொடுங்கள்
கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ !!
யோகன், life above all இன்னும் பார்க்கவில்லை. பார்க்கிறேன். தகவலுக்கு நன்னி.
எனக்கு அதே ஆதங்கம்தான். நம் மண்ணின் ஒரிஜினாலிட்டியை சொந்தச் சிந்தனையை செதுக்கி படமாக்க என்ன தயக்கம் இவங்களுக்கெல்லாம்? 2010 அந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. மண்மணம் மிக்க பலப் பல படங்கள் இவ்வருடம் வெற்றி அடைந்துள்ளது நல்ல டானிக்.
பார்வையாளன். யெஸ்! :(
//ஆனாலும், அவசரப்பட்டு அவரைத் திட்டிட்ட(னோ)மோ?//
உங்களுக்கு எப்பவும் இதே வேலையாப்போச்சு...அவரசப்பட்டு திட்டறது..அப்புறம் உக்காந்து ஃபீல் உடறது...
அன்னிக்கு பிஸ்கோத்து $20 க்கு நீங்க வுட்ட ஃபீலிங இருக்கே...யப்பா.......:))
நாஞ்சில்,
தப்பு செஞ்சப்பரம், தப்பு செஞ்சுட்டமேன்னு சொல்லி மன்னிப்பு கேட்கும்போது இருக்கர சுகமே தனி.
அதுக்கேதாவது குறள் இருக்கா? ;)
நன்றி தலைவா.
@ நாஞ்சில் பிரதாப்,
//உங்களுக்கு எப்பவும் இதே வேலையாப்போச்சு...அவரசப்பட்டு திட்டறது..அப்புறம் உக்காந்து ஃபீல் உடறது...//
நீங்க அவசியம் பார்க்க வேண்டிய இன்னொரு பதிவு:
இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!
http://surveysan.blogspot.com/2008/12/blog-post_22.html
@ சர்வேசன்,
ஐ ஆம் வெரி சாரி:)))!
என்ன பாஸ் நீங்க ஒரு சீனியர் பதிவரா?
நான் பதிவு போட்ட பிறகு தன்நிலையை மாற்றிக்கிட்ட மிஷ்கின் என்று பதிவு போட்டிருக்க வேண்டாமா?:))இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு:((
நர்சிம், டாங்க்ஸ் பாஸ்.
ராமலக்ஷ்மி, அவ்வ்வ்வ் ;)
குசும்பன், சாரி கேக்கும்போது ஆத்மார்த்தமா கேக்கணும், அப்பதான் பரலோகத்தில் கதவு திறக்கும் :)
பி.கு: நானும் அப்படி ஏதாவது சால்ஜாப்பு பண்ணலாம்னு பாத்தா, யூட்யூப் வீடியோல, படம் வரதுக்கு முன்னாடி வந்த பேட்டின்னு தெளிவா சொல்லிடறாங்க ;)
இப்படி எங்கயாவது லைட்டா சொல்லிட்டுப்போனா மிஷ்கின் உத்தமனாயிட முடியாது. நேர்மையில கொஞ்சம் நேர்மை,பெரும்பாலும் நேர்மை-ன்னு ஒன்னும் கிடையாது. நேர்மை இல்லாட்டி கயமை, அவ்வளவுதான்.கதை-மிஷ்கின்னு டைட்டில் போட்டுக்கிட்டு லொல்லப்பாரு,எகத்தாளத்த பாரு..பிச்சிபுடுவேன் பிச்சி.(கடேசி வரி மிஷ்கினுக்குத்தான்.)
@வானம் கதையில் தத்துனூண்டு ஒரிஜினாலிட்டி இருக்கத்தான் செஞ்சுது.
மிஷ்கின் கேரக்டர் இதுல புதுசா இருக்கு. மிஷ்கினின் தாய் கேரக்டரும் புச்சு கதைப் பின்னணியும் கூட புச்சு.
Post a Comment