இயக்குனர்களுக்கான பாராட்டு விழா ஒன்று சன்.டிவியில் ஒளிபரப்பக் கண்டேன். நல்ல நிகழ்ச்சி.
தமிழ்/தெலுகு திரைப்பட உலக ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்ததாகத் தெரிந்தது.
கங்கை அமரன் சில சுவாரஸ்யமான பகிர்வுகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும், ஆயிரம் தாமரை மொட்டுக்கள், தன் தாயார் பாடும் கிராமியப் பாடல்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்படி பல கிராமியப் பாடல்கள் 'சுட்டதை' சொன்னார். அதற்குப் பிறகு வந்த வெங்கட் பிரபு, யுவனும் கூட, 'ஏதோ மோகம் ஏதோ தாகம்' என்ற கங்கை அம்ரன் பாடலில் இருந்து, 'யாரோ யாருக்குள் யாரோ' என்ற சென்னை28 பாடலை உரிவிய விதத்தைச் சொன்னார்கள்.
திடுதிப்புன்னு பாரதிராஜாவும் இளையராஜாவும் மேடை ஏறினார்கள்.ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நண்பேன்-டான்னு மூச்சுக்கு ஒரு தடவை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டாலும், இவங்களுக்கு இடையில் விழுந்திருக்கும் 'ஈகோ' விரிசல் அப்பட்டமா தெரிந்தது. குறிப்பா, ராசா, தன் 'ஞானித்'தனத்தை மைக்கில் விளம்ப, என்ன சொல்ல வராருன்னே தெரியாம சில நொடிகள் போச்சு.
சுவாரஸ்யமான விஷயம், இவங்க கிராமத்து கால வாழ்க்கையைப் பத்திப் பேசும்போது வந்தது. பாரதிராஜா இளையராஜா அரை டிராயர் வயதில் தன் கிராமத்தில் (அல்லிபுரம்)தன் அண்ணன் தம்பிகளுடன் வந்து, கம்யூனிச பாடல் அரங்கேற்றிய ஒரு நாளில் பார்த்தாராம். அதுக்கப்பரம் தன் நாடகத்துக்கு ராஜா குழுவை இசை அமைக்க வைப்பாராம்.
ஒரு நாடகத்தின் போது, பாரதிராஜா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ராசாவின் சட்டையை பிடுங்கி போட்டுக்கிட்டு நடிச்சாராம்.
பாரதிராஜா அந்த நாடகத்தில் பூட் பாலிஷ் போடும் பையனா நடிச்சாராம்.
அடுத்த நாளு இளையராஜா அதே சட்டையுடன், நாடகம் நடக்கும்போது, திடுதிப்புன்னு நடுவில் மேடையேறி எனக்கு பாலிஷ் போடு பாலிஷ் போடுன்னு, நாடகத்தில் வராத டயலாக்கை சொல்லிக்கிட்டு இருந்தாராம். ஏன் அப்படிப்பண்ணாருன்னு இப்ப விளக்கம் சொன்னாரு. அதாவது, தன் சட்டையை பாரதிராஜா பிடுங்கிக்கிட்டு நாடகத்தில் அதைப் போட்டு நடிச்சாராம். மறுநாள் அந்த சட்டையை ராசா போட்டுக்கிட்டு நடந்தா, ஏதோ பாரதிராஜாவின் சட்டையை இவரு போட்டுக்க்கிட்டு சுத்தரதா ஊர் மக்கள் நெனச்சுருவாங்களாம். அதனால, இப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக தன் சட்டையை போட்டுக்கிட்டு மேடையில் தோன்றினாராம்.
அந்த வயசுலையே இன்னாம்மா யோசிச்சிருக்காரு :)
பண்ணையபுரம் , அல்லிபுரம்னு ஏதேதோ குக் கிராமங்களில் பெரிய படிப்பறிவெல்லாம் இல்லாம வளந்தவங்க, இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது, ஆச்சரியாமான அட்டகாசமான பிரமாண்டமான கலக்கலான பெருமைப்படவேண்டிய போற்றப்படவேண்டிய மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு விஷயம்.
27 comments:
நானும் பார்த்தேன். ரசித்தேன்:)!
//பண்ணையபுரம் , அல்லிபுரம்னு ஏதேதோ குக் கிராமங்களில் பெரிய படிப்பறிவெல்லாம் இல்லாம வளந்தவங்க, இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது,//
அதே!
நானும் பார்த்தேன் தல...
பாரதிராஜா..ஏலேய்ன்னு உரிமையோட சொல்லும் போது என்ன ஒரு அழகுல்ல ;)
உண்மையில் அவர்களை பற்றி பலகதைகள் இருந்தாலும் பாரதிராஜா சொன்னது போல நண்பேன்டா தான் இவரும் ;)
அது "அல்லிப்புரம்" இல்லை. "அல்லி நகரம்"
உண்மை அந்த வயசுலயே அவ்ளோ ஈகோவோடயும் யோசிச்சிருக்கார் சரி.. ஆனா இப்பவும் அதே மாதிரி பேசுவது :(
எனக்கென்னமோ ரசிக்கவேமுடியல அந்த ஈகோ க்ளாஸை.. ஞானிங்கறோம்..அவரு இவ்ளோ சின்னபிள்ளயாட்டம் போட்டிபோட்டுக்கிட்டு பதில் சொல்றார். எனக்கென்னமோ பாரதிராஜா கொஞ்சம் இறங்கிவந்து பேசினாப்பல இருந்தது..அப்பக்கூட இளையராஜா :((
@ அக்கா
\\ ஞானிங்கறோம்..அவரு இவ்ளோ சின்னபிள்ளயாட்டம் போட்டிபோட்டுக்கிட்டு பதில் சொல்றார். \\
போட்டிபோட்டுக்கிட்டு பதில் சொல்றதுக்கு தானேக்கா மேடைக்கு கூப்பிட்டாங்க.அப்புறம் பதில் சொல்லாம் இருந்தால் எப்படி.
தன்னோட விளக்கத்தை தான் தானே கொடுக்கனும் அதனால தான் அப்படி சொன்னர் "இசைஞானி" ;)
\\.அப்பக்கூட இளையராஜா :((\\
அதான் ராஜா இறங்கி போயிட்டாரே மேடையை விட்டு ;)))
மன்மதன்அம்பு படத்துல ஒரு வசனம் வரும்
"நேர்மையாக இருக்குறவனுக்கு திமிர் தான் கவசம்.ன்னு" ;-) இங்க ஞாபகம் வருது ;)
நம்புங்க முத்துலெட்சுமி:)!
தற்செயலாய் இன்று எங்கேயோ வாசித்தேன் ‘சாதித்தவர்களுக்கு எப்போதும் ஒரு கர்வம் இருக்கும். அந்தக் கர்வமே அவர்களுக்குக் கவசம்’ என்று. உடனே அப்போது இளையராஜாவின் நீங்கள் குறிப்பிட்ட அடமோ, ஈகோவோ ஏதோ ஒண்ணு.. அதுதான் நினைவுக்கு வந்து சென்றது!
இப்போ உங்கள் கமெண்ட் பார்த்து நினைத்தது நினைவுக்கு வந்து விட்டது:))!
//இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது, ஆச்சரியாமான அட்டகாசமான பிரமாண்டமான கலக்கலான பெருமைப்படவேண்டிய போற்றப்படவேண்டிய மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு விஷயம்//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபபப்பபபபபபா..... அவ்ளோதானா இன்னும் இருக்கா??? :)))
நேர்மை ,பண்டித்யம் ,சாதிச்சது சாதிக்காது ல்லாம் எனக்கு பெரிய விசயமாப்படல
நண்பர்களுக்குள்ள ஈகோவுக்கு கர்வத்துக்கும் இடம் இருக்குமா இருந்தாலும் ஒரு பொதுமேடையில் அதை எவ்ளோ நாசூக்கா போடனும்ன்னு வரலையேன்னு தான்..மைக் கிடைச்சா பேசவாராத சிலரில் இவர்களும் இருக்கலாம்.. என்ன செய்வது..
@ முத்துலெட்சுமி,
//நண்பர்களுக்குள்ள//
ம்ம், இது சரிதான்.
@ராமலக்ஷ்மி டாங்க்ஸு.
@கோபிநாத் (how to put periya Na in ekalappai?)ணீங்க உள்குத்து புரியாம ணிகழ்ச்சிய பாத்து ரசிச்சிருக்கீங்க போலருக்கு. 'ணன்பேன்டா' மனசார பாரதிராஜா சொன்னப்பல தெரிஞ்சது. ஆனா, ராசா இன்னும் பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டே பேசினாப்பல இருன்தது. :)
@உண்மைத் தமிழன்(15270788164745573644) அண்ணே, டாங்கஸு. இன்த னிகழ்ச்சி பற்றிய உங்க பழைய பதிவு னினைவில் வருது. ணேர்ல பாக்க கொஞ்சம் மண்ட காஞ்சிருக்குமே ஆட்டமும் அறுவைகளும்?
@முத்துலெட்சுமி/muthuletchumi exactly. எனக்கும் அப்படித்தான் தோணிச்சு.
@கோபிநாத் திமிர் வேர எகத்தாளம் வேர ;)
ரொம்ப அப்பட்டமா அவரின் சிறுபிள்ளைத்தனம் தெரியுது. இவ்ளோ பெரிய மேடைல அடக்கி வாசிச்சு யோசிச்சுதான் பேசியிருப்பாரு. அப்படி இருக்கும்போதே இவ்ளோ வெளியில் தெரிஞ்சிருக்குன்னா, ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் அதகளம்தான் போங்க ;)
@நாஞ்சில் பிரதாப்™ மேன் மக்கள் மேன்மக்களே. எவ்ளோ வேணாலும் சொல்லலாம். க்ளாஸிக் டாலண்ட் ;)
'பத்த வச்சுட்டியே பரட்டை'ன்னு யாரும் சண்டைக்கு வராம ஆக்கபூர்வமான கருத்துக்கள் பகிர்ன்தமைக்கு னன்றீஸ் ;)
(ச, ணெனச்சது ணடக்கலையே ;)
பி.கு: somebody help: how to put periya Na. Na as in Naai. i have ekalappai 3.0. danksu.
நா வரலையா.. டபிள்யூ தானே அதுக்கு .. ட்ரை செய்யுங்க..
@முத்துலெட்சுமி/muthuletchumi நன்றீஸ் நன்றீஸ் நன்றீஸ் :)
பழைய வெர்ஷனில் na அடிச்சாலும் வரும். மாத்திட்டாங்க போலருக்கு. மிக்க நன்றீஸ். :)
\\உள்குத்து புரியாம ணிகழ்ச்சிய பாத்து ரசிச்சிருக்கீங்க \\
மிக சரியாக நீங்களே சொல்லிட்டிங்க தல ;)
tamil99ன்னா "p" = ண வரும்
இளையராஜாவுக்கு எப்போதுமே பெருந்தன்மை குறைவு, ‘தான்’ங்கிற தன்மை இன்னமும் அவரை விட்டுப் போகல. அவர் வளர்ந்த காலத்தில், MSV பாடல்களோடு கம்பேர் பண்ணியபோதும் சரி, ரஹ்மான் காலத்தில் ராஜாவின் இறங்குமுகம் ஆரம்பித்த போதும் சரி, அது குறையவே இல்லை. பழசை மறக்கிற இளகிய நெஞ்சம் இல்லை ராஜாவுடையது. தவிரவும், அவர்களின் பிரிவுக்குக் காரணமாய் இருந்த ‘வாயினாற் சுட்ட புண்’ காரணாமாகவும் இருக்கலாம். யார் கண்டது? ஒரு காலத்திய நண்பர்களாய் இருந்தாலும், மோசமான வடுக்கள், மன்னிக்க முடியாதது.
மனக்குதிரை said..
//ஒரு காலத்திய நண்பர்களாய் இருந்தாலும், மோசமான வடுக்கள், மன்னிக்க முடியாதது.//
நட்பு உண்மையாக இருந்திருந்தால் மன்னிக்க மறந்திருக்க முடிந்திருக்கும். அதை பின்னுக்குத் தள்ளிக் கொண்டல்லவா ஈகோ முன் நிற்கிறது. இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா இந்தக் கூட்டணி கொடுத்த பிரமாதமான பாடல்களை தமிழ் உலகம் மறக்காது. பிரிவால் பேரிழப்பு திரையிசைக்கு. காரணமாய் முன்னவரே சொல்லப் படுகிறார். உண்மைதானோ என நினைக்க வைக்கிறது சொந்த சகோதரருடனுமான பிணக்கு.
@கோபிநாத் ;)
@மனக்குதிரை அந்த வாயினாற் சுட்ட வடு பத்தி பதிவு போட்டீங்கன்னா நல்லா பொழுது போகும். :)
@ராமலக்ஷ்மி சந்தேத்துக்கு இடமின்றி தெரியுது, யாரால் ப்ரச்சனை அப்படியே இருக்குன்னு. ஆனாலும், நம் இழப்பு பெரும் இழப்பே. :|
பெரிய பெரிய விஷயமா பேசிக்கிட்டு இருக்கீங்க. நான் ஓரமா நின்னு வேடிக்கை பாத்துட்டு போயிடுரேன்.
ஓஹ்.. நிஜமாவே அதன் சொன்னாரா ராஜா, நான் என்னடா இதுல என்ன நட்புத்தனம் இருக்குன்னு திருப்பி திருப்பி படிச்சு பார்த்தேன் நீங்க ஏதோ டைப்பிங் மிஸ்டேக் பண்ணிட்டீங்களாட்டு இருக்குன்னு.. :)))
(சர்வேசன்.. ஆக்கியவன் அல்ல அளப்பவன்னா இருந்துது முன்னாடி?)
2011ல் மேலுன் சிறப்பாக 'அளக்க' என்னுடைய வாழ்த்துக்கள்! :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
Post a Comment