recent posts...

Monday, May 12, 2008

Awesome California - Rancho San Antonio reserve

எல்லா வாரமும் சனி, ஞாயிறுகள், பாதி தூக்கத்திலும், மீதிப் பாதி, படங்கள் பார்ப்பதிலுமே சரியாய்ப் போகும்.
ஆடிக்கொரு தடவைதான், வெட்டியா பொழுதை கழிக்காம, எங்கையாவது வெளீல போகலாமேன்னு முடிவு பண்ணி போவேன்.

நான் வசிக்கும் நகரத்தைச் சுற்றி இயற்கை வளம் பொங்கும் காடுகள்,மலைகள்,கடற்கரைகள், ஏரிகள், திராட்சைத் தோட்டங்கள் என்று பஞ்சமே இல்லாமல் பல இடங்கள், தடுக்கி விழுந்தால் இருக்கும் தூரத்தில் உண்டு.

இந்த எல்லா இடங்களையும் ரொம்ப அழகா பராமரிச்சு, எல்லாரும் சுலபமா வந்து போக ஏதுவா பல வசதிகள் செஞ்சு வச்சிருப்பாங்க.
குறிப்பா சொல்லணும்னா பார்க்கிங் வசதிகள், சாப்பிட வசதிகள், குடி தண்ணீர், கழிப்பறைகள், வழித்தடங்கள் என்று பக்காவா திட்டம் தீட்டி ஒவ்வொரு இடத்தையும் சும்மா 'நச்'னு வச்சிருப்பாங்க.

இதில் மேலும் சிறப்பு, இந்த இடங்களில் பலவும், ஓ.சியில் கட்டணம் இல்லாமல் சென்று பார்க்கக் கூடிய விதத்தில் அமைத்திருப்பது.

இதில் மேலும் மேலும் சிறப்பு, இந்த இடங்களுக்கு வரும் பொது மக்கள், எந்த அசுத்தமும் செய்யாமல், சுத்தமாக வைத்திருப்பது.

இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம். என்னத்த சொல்ல? தொரை தொரைதான்.
அவன் ஊர சூப்பரா வச்சிருக்கான்.

கடந்த ஞாயிறன்று எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கர Rancho San Antonio reserve என்னும் ஒரு Hiking Trailக்கு மலையேரச் சென்றோம்.

ஒரு அழகான பச்சைப் பசேல் மலையில் காடுகளுக்கிடையில், வழித்தடம் செய்து, மக்கள் சுற்றிப்பார்க்க வசதி பண்ணி வச்சிருக்காங்க. இங்க வர முக்கால் வாசி பேரு, இந்த காட்டுக்குள்ள நடக்கரது ஒரு உடற்பயிற்சியா செய்யராங்க.
ஜிங்கு ஜிங்குனு மலை மேல எல்லாரும் ஓடரத பாத்தா எனக்குதான் மூச்சு வாங்கிச்சு.

நான் ஓட மெனக்கெடல. பொறுமையா வனப் பகுதியை ரசிச்சமா, மரஞ்செடிகொடிகளை படம் புடிச்சோமான்னு இருந்தேன்.

செம அழகான இடம். சில இடங்கள் கேரளாவை நினைவு படுத்தின.
சின்ன ஓடம், பச்சைப் பசேலென நெடுக வளர்ந்த மரங்கள், குருவிச் சத்தம், ஆங்காங்கே தென்பட்ட நரிகள், பட்டாம்பூச்சி... அப்பப்பா, கண்ணுக்கும், காதுக்கும், உடம்புக்கும் குளிர்ச்சியூட்டிய அருமையான இடம்.

இந்தப் பக்கம் (வ.கலிபோர்னியா) வந்தீங்கன்னா, கண்டிப்பா போய் பாருங்க.

ட்ரிப்பில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. க்ளிக்கினா Flickr பக்கத்தில் பெருசா பாக்கலாம்.


Flickrல் படங்கள் பார்க்க முடியா பதிவர்களுக்கு, கொசுறு படம் இங்கே :)


கருத்ஸ்?

8 comments:

SurveySan said...

டெஸ்ட்.

மீ த ஸ்லீப். ஸீ யூ டுமாரோ.

SurveySan said...

சொல்ல மறந்த கதை.

இந்த மாதிரி Hiking trails எங்க வூட்ட சுத்தி ஒரு முப்பது நாப்பது இருக்கு.
ஒவ்வொண்ணா ஏறி படம் புடிக்கோணும் ;)

நெல்லை சிவா said...

"என்னத்த சொல்ல? தொரை தொரைதான்.
அவன் ஊர சூப்பரா வச்சிருக்கான்."

நான் கூட இங்க லண்டன் மேம்பாலம் பார்க்க போனேன், ஆனா, போற பாதை படியில அசிங்கம் பண்ணி வச்சுருக்காங்க.. போறவங்க, வாரவங்க எல்லாம் மூக்கப் புடிச்சுகிட்டு, திட்டிகிட்டே போனாங்க..

ம்..ம்..இந்தத் தொரை இப்படி இருக்காரு..

ராஜ நடராஜன் said...

நம்ம ஊர்லருந்து ஊட்டி,வால்பாறைப் பக்கமெல்லாம் சைக்கிள் ஓட்டித் திரியும்போதெல்லாம் இந்த பசுமையோட அருமை தெரியல.இப்ப இந்த மாதிரிப் படங்களைப் பார்த்து மனசத் தேத்திக்க வேண்டியிருக்கு.

SurveySan said...

nellai siva,

//ம்..ம்..இந்தத் தொரை இப்படி இருக்காரு..//

meyyaalumaa? aachariyamaa irukku. London Dhorai, enga dhorayavida suththamnu illa nenachirundhen. ellaam maayayo?

SurveySan said...

Nattu,

//இப்ப இந்த மாதிரிப் படங்களைப் பார்த்து மனசத் தேத்திக்க வேண்டியிருக்கு.//

:) ooty innum irukkulla? oru cycle trip erpaadu panna vendiyadhudhaan.

Unknown said...

Is this place is near to SFO? (after the golden gate bridge)

SurveySan said...

nakul, its near Sunnyvale,ca.

almost 40 miles from SFO.