கேமராவை வெளீல கொண்டு போய் ரொம்ப நாளாச்சு. சமீபகாலமா இன்-டோரிலேயே படங்கள் க்ளிக்கும் சூழ்நிலை உருவாகிடுச்சு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன். (ஹி ஹி).
பிறந்த நாள் விழாக்கள், வளைகாப்பு, ஊருவிட்டு ஊரு போகுதல், ஊருக்குள் வருதல், புதுமணத் தம்பதிகளை வரவேற்றல் என்று அடிக்கடி நண்பர்கள் வட்டத்தில் ஏதாவது ஒன்று அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
எல்லா விழாவிலும், ஒரு இருநூறு க்ளிக்கினா, எப்படியும், ஐம்பது படங்கள் சுமாராவாவது தேறிடுது. GIMP இல்லையேல், அந்த ஐம்பதும் தேறுவது சந்தேகம்தான்.
அப்படியே, மெதுவா, சினிமாட்டாகிராஃபி படிச்சு, பி.சி.ஸ்ரீராம் மாதிரி, சினிமாவுல படம் புடிக்கணுங்கர ரொம்ப நாள் ஆசைய நிறைவேத்திடவேண்டியதுதான். ஹ்ம்.
ம.நெ.கு.நா'ன் அருள் புரியரானான்னு பாக்கலாம்.
சரி மேட்டருக்கு வருவோம்.
இந்த தடவ PIT குழுவின் மாதாந்திர புகைப்படப் போட்டிக்கான தலைப்பு "ஜோடி".
கடற்கரை ஓரத்துல காத்து வாங்கர ஜோடிகளை, பின்னிருந்து, அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னுதான் நெனச்சிருந்தேன். ஆனா, நேரம் ஒத்துழைக்கல.
சரி, வீட்டுக்குள்ளேயே ஜோடிய தேடலாம்னு முடிவு பண்ணி, எல்லாத்தையும் நோட்டம் விட்டேன்.
செருப்பு, உப்பு/பெப்பர் ஜாடி, ரெண்டு முட்டை, பூக்கள், அது இதுன்னு கண்ல பட்டதெல்லாம் இம்ப்ரெஸ் பண்ணலை.
கடைசியா கண்ணுல மாட்டின டீ.கப் தான், இன்னிக்கு நம்ம ஜோடி.
டீ.கப் க்ளிக்கனதும், பல வருஷமா வீட்ல இருக்கும், ரெண்டு கழுதை பொம்மைஸ் கண்ணுல பட்டு, அதையும் க்ளிக்கிணேன்.
அப்பாலிக்கா, இன்னிக்கு வீட்டுப் பக்கத்துல ஒரு மலைக்கு ஹைக்கிங் போனபோது, பின்னாலிருந்து ஒரு ஜோடியையும் க்ளிக்கினேன் ( ஹைக்கிங் பத்தி தனிப் பதிவு அப்பாலிக்கா போடறேன்).
முதல் படம் PIT போட்டிக்கு, மற்றவை பார்வைக்கு.
கருத்ஸ்?
8 comments:
கருத்ஸ்?
//அப்படியே, மெதுவா, சினிமாட்டாகிராஃபி படிச்சு, பி.சி.ஸ்ரீராம் மாதிரி, சினிமாவுல படம் புடிக்கணுங்கர ரொம்ப நாள் ஆசைய நிறைவேத்திடவேண்டியதுதான். //
வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!!
அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
"அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன்"
அட..நிசமாலுமே நீங்க அப்படிதாண்ணா! :))
neenga sonnaa saridhaannaa :)
(ellaam, pottu vaangaradhudhaane ;)
அதெப்படிங்க தனியாகீறாருபா விலிருந்து வலிது இல்ல கடிது கடிது புதுக்குறள் வரை பூந்து விளையாடுறீங்க?
Jodi inna, Tea cup and Sauccer thaane? Cup+cup eppidi jodi aagum??
நட்டு. நன்றி. உ.கு ஏதும் இல்லியே? :)
அனானி, என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. யார்வேணா யாரோட வேணா ஜோடியாகலாங்க. இப்ப அஃபீஷியலாக்கிட்டீங்கா எங்க ஊர்ல.
Post a Comment