அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.
கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.
கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய விஷ்ணு கோயில் உள்ளதாம். கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்டதாம். சமீபத்தில் இந்த கோயிலைப் பற்றிய டாக்குமெண்டரி ஹிஸ்டரி சேனலில் வந்ததைக் கண்டு ரசித்தேன்.
அந்த கோயிலின் பிரமாண்டம் வியக்க வைத்தது. குறிப்பா அதைக் கட்டிய விதம்.
முழுக் கோயிலையும் கல்லால் கட்டி முடித்தபின், ஒவ்வொரு சிலையையும் செதுக்கினார்களாம்.
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து சென்று இப்படி கலக்கியிருக்காங்க நம்மாளுங்க.
நம்மளும், ஆணி புடுங்க, கடல் கடந்து தான் போறோம், ஆனா, சோழனும் பல்லவனும் கலக்கின அளவுக்கு கடந்த ஆயிரம் ஆண்டில் எந்த இந்தியனும் கலக்கின மாதிரி தெரியலை.
யாம் பெற்ற இன்பம், பெறுக நீங்களும். பொறுமையா பாருங்க.
( செம பிரமாண்டமா இருக்கு அந்த இடம். யாராவது ஒரு க்ரூப் டூருக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா வந்து கலந்துக்குவேன் ;) )
கம்போடியாவின் தேசியக் கொடியில் பெருசா இந்தக் கோயில்தான் இருக்குது. ஆனா, கவனிக்க ஆளில்லாம இன்னிக்கு இந்துக் கோயில் கொஞ்சம் கொஞ்சமா பாழடஞ்சுகிட்டே வருதாம். யாராவது கொஞ்சம் கவனிங்கய்யா. லேசுல, அழிய விடக் கூடாது இதையெல்லாம்.
புல்லரிக்கல?
பி.கு: இன்னிக்கு என்னடான்னா ஒரு ஏர்போர்ட் கூட நம்மளால டக்குனு கட்ட முடியல;
ஒரு ப்ரிட்ஜு கட்ட ஏழு வருஷம் ஆகுது;
கடல்ல தூர் வாரி வழி பண்ண ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டை;
குடிக்கர தண்ணிக்கு ஏற்பாடு பண்ண இழுத்துத் தள்ளுது;
ஒரு சின்ன ரோடு கூட ஒழுங்கா போட மாட்ராங்க்ய;
எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?
ஹ்ம் :(
16 comments:
shiva temple or vishnu temple?
இப்போ நல்லாத் தான் கவனிக்குறாங்க ..கம்போடியாவின் சுற்றுலாத் துறையே இதை நம்பித் தான் இருக்கிறது .
ஆமா! கானா பிரபா சமீபத்தில் கம்போடியா பற்றி எழுதிய பதிவுகளை நீங்க படிக்கல்லியா ?
தமிழகத்திலேயே 6 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் வரவில்லை (அல்லது கலைச்சிறப்புக்கள் வரவில்லை)..மாமல்லபுரம் 7ஆம் நூற்றாண்டை ஒட்டியது...
இரண்டாம் நூற்றாண்டு என்பதுக் கொஞ்சம் குழப்புகிறதே...புதசெவி
//
கி.பி இரண்டாம் ஆண்டின் (2 A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.
//
தப்பு பண்ணவது ஜகஜமப்பா.. :))))))
தமிழ் சிறப்பு ழகரத்தை காப்பாற்றுங்கள்..
//சோஷனும் பல்லவனும்//
ஜோ,
//கவனிக்குறாங்க ..கம்போடியாவின் சுற்றுலாத் துறையே இதை நம்பித் தான் இருக்கிறது .//
தகவலுக்கு நன்னி. கவனிச்சா நல்லதுதான். போட்டோவுல எல்லாம், கோயிலை மரங்கள் கபளீகரம் செய்யரது பாத்தேன். இப்ப வெட்டிட்டாங்களா மரத்தைன்னு பாக்கணும்.
//ஆமா! கானா பிரபா சமீபத்தில் கம்போடியா பற்றி எழுதிய பதிவுகளை நீங்க படிக்கல்லியா ?//
ஓஹோ. பாக்கறேன்.
tbcd,
//இரண்டாம் நூற்றாண்டு என்பதுக் கொஞ்சம் குழப்புகிறதே...புதசெவி//
அங்க இங்க மேஞ்ச போது, சில இடங்களில் போட்டிருந்த விஷயம் தான்.
கி.பி 2ஆம் ஆண்டில் கம்போடியாவின் அரசன், காஞ்சியை ஆண்ட ஏதோ ஒரு பல்லவனாம்.
tbcd,
//இரண்டாம் நூற்றாண்டு என்பதுக் கொஞ்சம் குழப்புகிறதே...புதசெவி//
அங்க இங்க மேஞ்ச போது, சில இடங்களில் போட்டிருந்த விஷயம் தான்.
கி.பி 2ஆம் ஆண்டில் கம்போடியாவின் அரசன், காஞ்சியை ஆண்ட ஏதோ ஒரு பல்லவனாம்.
/தமிழ் சிறப்பு ழகரத்தை காப்பாற்றுங்கள்..
///
:)
ஏதோ சொதப்பன மாதிரி தெரிஞ்சுது.
இதான் மேட்டரா.
பிக்ஸிட்டேன் ;)
2ஆம் ஆண்டு லேது.
2ஆம் நூற்றாண்டாம்.
இதன் படி.
At the beginning of the 2nd century AD, Pallava prince Kaundinyan of Kanchipuram became the first king of Cambodia. Much of the historical accounts of the time can be seen in bas reliefs (carvings on walls similar to Mamallapuram wall carvings) at sites like the Angkor Wat and Angkor Thom. The fighting arts and styles can be clearly seen on these walls. At the Prambanan and Borobodur temples of Java Indonesia the same can be seen in the bas reliefs of the Tamil martial arts fighting skills used by ancient warriors.
இங்கயிருந்து சுட்டது.
http://www.tamilnation.org/heritage/martial.htm
//தமிழகத்திலேயே 6 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் வரவில்லை (அல்லது கலைச்சிறப்புக்கள் வரவில்லை)..மாமல்லபுரம் 7ஆம் நூற்றாண்டை ஒட்டியது...//
TBCD, சரிதான்.
பல்லவர்கள் ஆட்சி தமிழகத்தில் வரலாற்று ஆதாரங்களுடன் 6 இல்லை 7ல் தான் தொடங்குகிறது.
2ம் நூற்றாண்டு என்பது முன்பு தவறுதலாக கணக்கிடப்பட்ட விஷயம்.
இது பெரிய வரலாற்றூக் குழப்பத்தில் கொண்டு வந்துவிடும் போலிருக்கே..
ஆனா..குழப்பம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்..[அடிக்கடி புதசெவி போடலாமே..]
வட இந்தியாவை கம்போஜர்கள் ஆண்டதாகவும் வரலாறு உண்டு. இதே காம்போஜர்கள் தான் பின்னாளில் 7 ஆம் நூற்றாண்டுகள் வரை கம்பூடியாவில் ஆட்சி செய்ததாக விக்கி சார் செய்தி கூறுகிது.
நீங்க கொடுத்த சுட்டி, லெமூரிய காண்டம் பற்றி எல்லாம் சொல்லுது.
கடல் வழி பாதையயை மறைத்த அந்த நிலபரப்பு தேற்றம் (லெமூரியா)சரியானது அல்ல என்று படித்ததாகவும் நினைவு. அந்த சுட்டியின் தகவல்களின் நம்பகத்தன்மை..?????
கானா பிரபா..எங்கியிருந்தாலும் உடனடியாக வரவும்.... :))))))))))
///
SurveySan said...
2ஆம் ஆண்டு லேது.
2ஆம் நூற்றாண்டாம்.
இதன் படி.
At the beginning of the 2nd century AD, Pallava prince Kaundinyan of Kanchipuram became the first king of Cambodia. Much of the historical accounts of the time can be seen in bas reliefs (carvings on walls similar to Mamallapuram wall carvings) at sites like the Angkor Wat and Angkor Thom. The fighting arts and styles can be clearly seen on these walls. At the Prambanan and Borobodur temples of Java Indonesia the same can be seen in the bas reliefs of the Tamil martial arts fighting skills used by ancient warriors.
இங்கயிருந்து சுட்டது.
http://www.tamilnation.org/heritage/martial.htm
///
கானாவின் சூட்டி.
http://ulaathal.blogspot.com/2008/04/blog-post.html
tbcd, ஆராய்ச்சி நாளைக்கு பண்ணி சொல்றேன். இப்ப தூக்கம் வருது. குட் நைட் :)
kayams.
//kayams.//
?
இது தமிழர்களால் கட்டப்பட்டதுன்னு எங்க சொல்றாங்க. இல்லை நான் சரியா கவனிக்கலையா?
//கானா பிரபா..எங்கியிருந்தாலும் உடனடியாக வரவும்.... :))))))))))//
வந்துட்டேஏஏஏஎன் ;-)
கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆட்சி தான் இருந்திருக்கின்றது. அந்த பல்லவ மன்னர்களின் பரம்பரையில் பதிவிலும் இட்டிருக்கின்றேனே. இன்னும் விரிவாக அதுபற்றி தொடரும் பதிவுகளில் தருவேன்.
Post a Comment