சமீபத்தில், என் சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணு வந்து, தான் கைரேகை பாக்கரதுல தில்லாலங்கடின்னு சொன்னா.
எனக்கு இதுல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை.
நம் மத்தியில் 65% ஆட்களுக்கு ஜாதக நம்பிக்கை உண்டு என்பது எமது முந்தைய சர்வேயின் மூலம் தெரியவந்துள்ளதை அறிவீர்கள்.
ஸோ, எல்லாரும் கவனமா கேளுங்க.
கைரேகை பாத்த அந்தப் பொண்ணு, எல்லாம் நல்ல விஷயமாத்தான் வரிசையா சொல்லிட்டு வந்தா.
கடைசியிலதான் ஒரு பெரிய குண்டப் போட்டா.
அதாவது, என் கைரேகை என்ன சொல்லுதுண்ணா, எனக்கு 'ரெண்டக்கா' தோஷம் இருக்காம்.
ரெண்டக்கா தோஷமா? அது இன்னான்னு புருவத்தை உயர்த்தரவங்க மேலப் படிங்க.
நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு சுக வாழ்க்கைன்னா அதுல என்னென்னங்க இருக்கணும்?
1) நிறைய பணம்
2) மன அமைதி
3) நோயற்ற உடல்
இந்த மூணும் கண்டிப்பா வேணும்ல?
இந்த 'ரெண்டக்கா' தோஷம் இருக்கரவங்களுக்கு மேலே சொன்ன மூணுல ஏதாவது ரெண்டுதான் அமையுமாம்.
ஆனா, அந்த ரெண்டும் கண்டிப்பா அமோகமா இருக்குமாம்.
என்ன கொடுமைங்க இது? மூணுல எல்லாமே ரொம்ப முக்கியமாச்சே.
ஒண்ணு இல்லாம மீதி ரெண்டு மட்டும் இருந்தா மட்டும் பத்துமா?
யோசிச்சுப் பாத்தேன். எந்த ரெண்டு தக்க வச்சுக்க அதீக முயற்சி எடுக்கணும்னு.
ஒண்ணும் புலப்படலை.
இந்த ஜாதகம், கைரேகை, இத்யாதி இத்யாதிலயெல்லாம் நம்பிக்கை இல்லாததால், இரண்டாம் ஐட்டமான மன அமைதி, இப்பவே காணாம போயிடாம தப்பிச்சேன் :)
இப்ப கேள்வி என்னன்னா,
ஸப்போஸ், உங்க முன்னாடி யாராவது வந்து,
"மை டியர், இந்த மூணு ஐட்டம்ல, ரெண்டு மட்டும் உனக்கு இப்பவே தரேன். எந்த ரெண்டு வேணும்? நீ கேக்காத மூணாவது உனக்குக் கிடைக்காது"ன்னு சொன்னா, எந்த ரெண்டுங்க தேர்ந்தெடுப்பீங்க?
நம்பிக்கை இருக்கரவங்களும், இல்லாதவங்களும், சும்மா லுலுலுவாய்க்காகவாவது, நல்லா யோசிச்சு ஒரு ஆப்ஷனை கீழுள்ள சர்வேயில் குத்துங்க.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரெண்டு உங்கள் வாழ்வில் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்காத மூணாவதும் கிடைக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும் ;)
நம் மத்தியில் இருக்கும் ஜோதிட நிபுணர்கள் யாராவது இந்த ரெண்டக்கா மேட்டர் பத்தி ஒரு பதிவ போட்டீங்கன்னா, நன்னாருக்கும்.
இனி குத்துங்க. ஹாப்பி வெள்ளி!
பி.கு: வ.வா.ச வின் ரெண்டாம் ஆண்டு போட்டிக்கு இத்த அனுப்பிருக்கலாமோ?
கருத்ஸ்?
12 comments:
நான் தான் முதல் வாக்கு...
:)
ஜெகதீசன்.
10ல எட்டு பேருக்கு பணம் வேண்டாமாமே. நீங்களும் அததான் குத்திருப்பீங்கன்னு நெனைக்கறேன் :)
சந்தேகம் என்ன?
நிம்மதியும், ஆரோக்யமும்தான் அவசியம் வேண்டும்!
மற்றது இருந்தும் பிரயோஜனம் இல்லை!
சுப்பையா சார், வருகைக்கு நன்றி.
பணம் இல்லன்னா, சென்னைல நிம்மதியா வாழ முடியுமாங்க?
இந்த ரெண்டக்கா தோஷம் பத்தி என்னா நெனைக்கறீங்க? இதெல்லாம் மெய்யா சாத்யமா?
\\சந்தேகம் என்ன?
நிம்மதியும், ஆரோக்யமும்தான் அவசியம் வேண்டும்!
மற்றது இருந்தும் பிரயோஜனம் இல்லை!\\ ரிப்பீட்டேய்
ஓரக்க தோஷம் உண்டா?
ஏன்னா மன நிம்மதி ஒண்ணே போதுமே!
சரி சாய்ஸ் இல்லைங்கிறதால என் வோட்டு 2&3
ஆமா குத்தற இடத்தை காணோமே!
//பணம் இல்லன்னா, சென்னைல நிம்மதியா வாழ முடியுமாங்க?//
அட நிம்மதிதான் உண்டுன்னு சொல்லியாச்சே? அப்புறம் என்ன கேள்வி?
this is a no-brainer....
ஆரோக்யம் மற்றும் அமைதிக்கு என்னுடைய வாக்கு..
திவா,
//ஓரக்க தோஷம் உண்டா?
ஏன்னா மன நிம்மதி ஒண்ணே போதுமே!//
நிம்மதி போதும்தான். ஆனா, டப்பும், ஆரோக்யமும் இல்லன்னா எப்படிங்க?
ஆனா, ஒரு வாதத்துக்காக பாத்தா, காசே இல்லாத (நல்ல) சன்யாசியும், கோமாவில் கிடக்கும் நோயாளியும் கண்டிப்பா சந்தோஷமாதான் இருப்பான் :)
//ஆமா குத்தற இடத்தை காணோமே!//
காணுமா? இருக்கேங்க. 46 பேர் குத்தியிருக்காங்களே. எந்த ஊரு நீங்க? வாக்குப்பெட்டி தடை செய்யப்பட்டிருக்கோ என்னவோ?
//this is a no-brainer....
//
really? if someone is giving a choice, it does require meticulous tihnking ;)
//ஆரோக்யம் மற்றும் அமைதிக்கு என்னுடைய வாக்கு..//
ஓ.கே.
அமைதி இருந்தாலே, மத்ததெல்லாம் சரியா வர வேண்டிய இடத்துக்கு வந்துடும் :)
நி.ஆ
//நிம்மதி போதும்தான். ஆனா, டப்பும், ஆரோக்யமும் இல்லன்னா எப்படிங்க?//
சரி ரெண்டும் இல்லைன்னு வெச்சுப்போம்.
அதனால ஏற்படற விளைவு என்னன்னு தொடர்ந்து யோசிச்சா, சந்தோஷம் இல்லை என்கிறதுதான். மனநிம்மதி இருந்தா சந்தோஷம் வந்துதானே ஆகனும்!
//ஆமா குத்தற இடத்தை காணோமே!//
//காணுமா? இருக்கேங்க.//
கொஞ்சம் எங்கேன்னு சொல்லறீங்களா? எங்க ஊர் கடலூருங்க மோசமான ஊரு. வாக்கு பெட்டியை கட்சிக்காரங்க தூக்கி போயிருக்கலாம்.
:-))
சீவீஆர் அண்ணாவை வழிமொழிகிறேன். :))
Post a Comment