recent posts...

Monday, July 19, 2010

நச்னு ஒரு புகைப்படம்

சில படங்கள் பாத்தா, 'ஆ'ன்னு தொறந்த வாய் மூடுவதர்க்கு கொஞ்ச நேரமாகும்.
National Geography புத்தகத்தில், அநேகம் பக்கங்கள் இந்த ரகமானதாய் இருக்கும்.
அதுக்கேத்த உழைப்பும், நேர்த்தியும் அந்த படங்களில் இருக்கும்.

உழைப்புன்னா உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை, உலகமகா உழைப்பு. ஒரு மிருகம் கொட்டாவி விடரத எடுக்கணும்னா, கிட்டத்தட்ட மாசக் கணக்கா, காட்டுல கூடாரம் போட்டு, புகைப்படக் காரரும், கொட்டாவி விட்டுக்கிட்டு, தக்க தருணத்துக்காக காத்துக் கிடப்பாராம். பல மாதங்கள் தங்கள் கண்காணிப்பில் இருக்கும் மிருகம், அடுத்த நிமிஷம் என்ன செயல் செய்யும்னு ஊகிக்கும் அளவுக்கு இவங்களும் தங்களை பழக்கப்படுத்திக்குவாங்க. அப்படித்தான், 'நச்'னு பல படங்களை எடுத்து விடமுடியுது.

சமீபத்திய அலாஸ்கா பயணத்தில், 'எங்கள்' கப்பலின் ப்ரத்யேக கவன ஈர்ப்பு விஷயம், ஒவ்வொரு மாடியிலும், லிஃப்ட்டுக்கு எதிரில் (மொத்தம் பதினைந்து மாடி கட்டிடம் கொண்ட கப்பல்), ஒரு மிக அருமையான புகைப்படம், ஆளுயர அளவில் பெரிதாய் ஒட்டியிருந்தார்கள்.

அதில் ஒரு படம், கீழே உள்ள படம்.
படத்தில் மொத்தம் ஏழெட்டு சிங்கங்கள். ஒரு ஆண் சிங்கம், மற்றவையெல்லாம் பெண் சிங்கங்கள். குட்டையில் தண்ணீர் குடிக்கும் காட்சி.
ஒரு யானையும் அதே குட்டையில் தண்ணீர் குடிக்கிரது. யானையின் துதிக்கை மட்டும் தெரியும் படி படம்.
ஒவ்வொரு சிங்கமும், தண்ணீரை குடிக்கும்போது, கவனமாய் யானையின் மேல் ஒரு பார்வை பார்த்தபடி இருக்கிறது.
யானையிடம் பயமா? இல்லை, யானை எத்தனை கிலோ தேறும்னு ஒரு கணக்கு கூட்டலான்னு புரியாத ஒரு பார்வை.
மிக முக்கியமாய், எல்லா சிங்கமும், ஒரே நேரத்தில் நாக்கை வெளியில் விட்டு தண்ணீரை பருகும் கணம் க்ளிக்கப்பட்டிருக்கிறது.
முழு யானையை காட்ட வேண்டிய அவசியம் இல்லாம, வெறும் துதிக்கை மட்டுமே படத்துக்கு யானை பலம் சேர்க்கிறது.

ஹ்ம். இன்னும், அளந்துக்கிட்டே போவலாம். பெருமூச் தான் வருது, படத்தை பாக்கும்போது.
புகைப்படத்துறைக்கு நோபெல் பரிசு இருந்தால், இந்த படத்த்தை எடுத்த புகைப்படக்காரருக்கு தாராளமா ஒரு பத்து கொடுக்கலாம்.

கீழே, அந்த படத்தை, நான் க்ளிக்கியது. படத்தை க்ளிக்கினா, ஒரிஜினல் படத்தினை இன்னோரு வலை தளத்தில் காணலாம் (அந்தத் தளமும், ஒரிஜினல் ஃபோட்டோகிராஃபரின் பெயரை போடவில்லை). இதன் ஒரிஜினல் தளம் எதுன்னு யாருக்காவது தெரிஞ்சா தெரிவியுங்கள். காசு கொடுத்து வாங்கி வீட்ல மாட்ட அவா!

note: the following photograph, is a shot of a wallpaper i saw in Norwegian Pearl cruise. i am not the original photographer. if you know of the URL where the orig pic is and the photographers name, let me know. danks! :)
a BIG kudos to the original photographer. he deserves a Nobel prize, if there is a Nobel category for photography.

6 comments:

SurveySan said...

my best wild life moment was this, but unfortunately, out-of-focus.

http://2.bp.blogspot.com/_ZEDdS10HD4g/TD1UFh_sM1I/AAAAAAAACSc/CfhEr-RVFgE/s1600/al_+1144.jpg

Anonymous said...

unmaiyilaye attagasamana padam than :)

pagirvukku nandringa :)

SurveySan said...

நன்றி kanaguonline.

Anonymous said...

Make yourself necessary to someone.......................................................................

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/07/blog-post_21.html

தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்

ராமலக்ஷ்மி said...

அருமையான படம். அதுவும் தும்பிக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கம் பார்க்கும் பார்வை...

/a BIG kudos to the original photographer. he deserves a Nobel prize, if there is a Nobel category for photography./

Repeat!!!!!