recent posts...

Tuesday, July 27, 2010

பட்டையைக் கிளப்பும் ஸ்டாலினும் சென்னை மாநகராட்சியும்

சமீபத்திய சென்னை விசிட்டில், கத்திப்பாரா ஜங்க்ஷனை பார்த்து, ஆனந்தக் கண்ணீர் விட்டது, நினைவுக்கு வருகிறது.
அதைத் தவிர, மற்ற வளர்ச்சிப் பணிகள், MIT மேம்பாலம், விமான நிலைய மேம்பாலம், மெரீனா சீரமைப்பு எல்லாம் கூட வியப்பைத் தந்தது.
இன்னும் புதுசா புதுசா விஷயங்கள் படிக்கும்போதும் திருப்தியா இருக்கு.
என்னதான் இருந்தாலும், நம்ம மெட்ராஸாச்சே. அங்க இங்க திரிஞ்சாலும், கடைசியில் இங்குட்டுதான வந்தாகணும். பாலிஷ் போட்டுக்கிட்டே இருந்தா மகிழ்ச்சிதான்.

சென்னையின் உட்புறங்களில், சாலைகள் அமைக்கும்போது, ஏற்கனவே இருக்கும் சாலையை நோண்டி எடுக்காமல், சாலை மேலேயே புதிய சாலை அமைப்பதால், சாலையின் உயரம் கூடிக் கொண்டே போய், சைடில் இருக்கும் வீடு/கடையெல்லாம் கீழே கீழே போகும் அவல நிலையைக் கண்டு பதிவியிருந்தேன்.

மாநகராட்சி, அதுக்கு, பேவர் என்னும் இயந்திரத்தை முடக்கி விட்டிருக்காங்களாம். பழைய சாலையை தோண்டி எடுத்து, புச்சா போடுவாய்ங்களாம். நல்லவங்க. நல்லாருக்கட்டும்.
(தகவல் தந்த AlexPandianக்கு நன்றீஸ்)


இந்த மாதிரி ஏதாவது செய்யலன்னா, திருவொற்றியூரில் நான் பார்த்து திகிலடைந்த தெருக்கள் போல், சென்னை எங்கும் உருவாகியிருக்கும். திருவொற்றியூரில், பல தெருக்களின் வீடுகள், தெருக்களின் உயரத்தை விட, நாலைந்து அடி கீழே இருக்குது. 'நான் கடவுள்' பாதாள வீடுதான் ஞாபகத்துக்கு வருது.

இதை, அவரவர்கள் குடியிருக்கும் தெருக்களிலும், சுற்றத்திலும், சாலை போடும்போது, கராரா பேசி, கவுன்சிலர்களையும் காண்ட்ராக்டர்களையும் செய்யச் சொல்லி வற்புறுத்தணும். செய்யலைன்னா, புகார் கொடுக்கணும். அட்லீஸ்ட் பதிவாவது போடணும்.

வாழ்க பேவர் இயந்திரம்! much needed improvement for our infrastructure!
ஐ லவ் மை சென்னை!

நன்றீஸ் டு மு.க.ஸ்டாலின், இதை செயல் படுத்துவதர்க்கு.

4 comments:

Anonymous said...

Chennai la nalla than panranga.. aana thiruvotriyur apdiye than irukku enbathai thazmaiyudan therivithu kolgiren :) :)

SurveySan said...

kanaguonline, திருவொற்றியூர் கவுன்சிலருக்கு மனு எழுதிப்போடவும்.
ஒரு நகலை, ஸ்டாலினுக்கு அனுப்பவும். :)

வடுவூர் குமார் said...

Paver இயந்திரம் எப்பவோ வாங்கியிருக்கனும்!!! அப்ப கையில பணம் இல்லை போல் இருக்கு.

SurveySan said...

காசு ஒரு பொருட்டா இருந்திருக்காது; இதெல்லாம் இப்படித்தான் செய்யணும் என்ற 'தொலை' நோக்கு மிஸ்ஸிங்கா இருந்திருக்கும். இப்ப இருக்கரவங்களில் சிலருக்காவது அந்த எண்ணம் இருப்பது நம் லாபம். :)