recent posts...

Wednesday, January 27, 2010

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?


Goodnewindia மற்றும் PointReturn பற்றியெல்லாம் நான் ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.

சுருக்கச் சொல்லணும்னா, ஸ்ரீதரன் என்பவர், இந்தியாவின் பலப் பல மூலைகளுக்குச் சென்று, பிரபல ஊடகங்கள் முன் நிறுத்தாத, 'வெற்றியாளர்கள்' பலரை goodnewsindia.com தளத்தின் வழியாக நமக்கு அறிமுகப்ப்டுத்தினார். வெறும் அறிமுகத்தோடு மட்டுமல்லாமல், அந்த வெற்றியாளர்களின், குட்டிச் சுயசரிதையையும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் முழு விவரங்களுடன் அழகாக பதிந்து வந்தார். தளத்தை படிச்சுப் பாருங்க, உங்களுக்கே மேட்டர் புரியும்.

சில வருஷங்களுக்கு முன், ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருந்தார் ஸ்ரீதரன். ஜமீன் எண்டதூர் என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் வரண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.

அவரின் தளத்தையும், ட்வீட்டுகளையும் அடிக்கடி பார்ப்பதுண்டு.

68 வயதான ஸ்ரீதரன் அவ்வப்பொழுது, 'புலம்புவது', இவர் ஒரு வேகத்தில் துவங்கி நடத்திக் கொண்டிருக்கும் விஷயம், தொடர்ந்து, தான் திட்டமிட்டபடி நடந்து முடியுமா என்பது.
கிட்டத்தட்ட, தனி ஆளாக, சொந்தப் பணத்தில் இப்படி அகலக் கால் வைத்ததும், தனக்கு வயதாகிறது என்ற யதார்த்தமும், எளிதில், தன்னார்வலர்கள் இந்த மாதிரி விஷயங்களுக்குக் கிட்டாத நிலையும் அவரிடமிருந்து இந்த மாதிரி கவலைகள் வரக் காரணமாயிருந்திருக்கும்.

அவர் தளத்தில் இன்று கண்ட நல்ல செய்தி, மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உருதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம்.
படித்ததும், வாவ்வ்வ்வ்வ்னு உள்மனது சொன்னது.
மேலும் படித்தால், இருவரும் முப்பதுகளில் இருப்பர்வர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

அத்தனையும் விட்டு, இயற்கையின் மேல் இருக்கும் ஒரு ஈர்ப்பில், இப்படி வாழ்க்கை முறையையும் எதிர்காலத்தையும் தலை கீழாக புரட்டிப் போட்டு மாற்றிக் கொள்ள முடிகிறதே இவர்களால். எப்படிங்க இதெல்லாம்?
ஒரு வேலை விட்டு இன்னொரு வேலைக்குப் போகவே, என்னமா அலசறோம்.

இப்படி, மத்தவங்களுக்காக, சொகுசு வாழ்க்கையை உதறித் தள்ளி, எளிமையான எதிர்பார்பற்ற வாழ்க்கை முறைக்கு மாற, எந்த கடைல அரிசி வாங்கணும்?

கண்டிப்பா இந்த மேட்டரை முழுசா படிங்க.
நம்மாலான மானசீக வாழ்த்துக்களை மட்டும் தாராளமா அள்ளி வீசுவோம்.

kudos to Karpagam and Sriram.
I truly wish, one day, i can be as selfless as they have become. well, இந்த ஜென்மமான்னுதான் தெரியல்ல. :(

5 comments:

SurveySan said...

எனக்குக் கேட்டு பழக்கமில்ல, கொடுத்துத்தான் பழக்கம். இருந்தாலும் கேக்கறேன்... :)

தமிழ்மண டூல்பாரில், வாக்கினை குத்துங்கோ, அஞ்சு பத்து பேரு அதிகமா, கற்பகம் ஸ்ரீராமை தெரிஞ்சுக்கட்டும்.


தமிழ்மணம் லோகோ ஏன் இம்புட்டி கேவலமாயிடுச்சு? யாரும் சொல்லலியா? :)

pudugaithendral said...

அருமையான பகிர்வு. வாழ்த்துக்களைபதிகிறேன்.

அப்புறம் முதல் ஓட்டு என்னுடையதுதான்

Paleo God said...

நிதர்சனம் கடைசி வரிகள்.. :(

நல்ல பகிர்வு.

☀நான் ஆதவன்☀ said...

+ :)

SurveySan said...

danks everyone.