இன்னாடா ஆச்சு இவனுக்கு, கவித்துவமா தலைப்பு வச்சிருக்கானேன்னு டெரர் ஆகவேணாம். உங்கள்ள பலரும் இன்னும் கிருஸ்மஸ்,புதுவருஷ 'ஹாலிடே' மூட்ல இருந்து வெளீல கூட வந்திருக்கமாட்டீங்க. அதன் தாக்கம் PiTல் இம்மாத போட்டிக்கு வந்த படங்களைப் பாத்தாலே தெரியுது. எப்பவும் தோராயமா எழுபது படங்கள் வரும், இந்த மாசம் இதுவரை ரெண்டு வந்திருக்கு :)
என் 'ஹாலிடே' மூடெல்லாம், ஜனவரி 3ஆம் தேதி ஞாயித்திக் கெழமையே காணாமப் போச்சு. அன்னிக்கு புடுங்க ஆரம்பிச்ச ஆணி, ராப்பகலா, தூக்கம் இல்லாம இன்னும் புடுங்கிக்கிட்டே இருக்கேன். பெப்ரவரி வரை இந்த ஆணிப் பிடுங்கல் தொடரும். ரொம்பவே படுத்தறானுவ ஆஃபீஸ்ல.
தலைப்புக்கு வருவோம்.
இம்முறை ஊருக்கு போயிருந்த போது, மரம் பிடுங்கி நட்டல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு மற்றும் துயாய் பார்த்தல் மற்றும் தஞ்சை பார்த்தல், இவற்றையெல்லாம் தவிர உருப்படியாய் செய்த இன்னொரு வேலை, Moser Baer மலிவு விலைக்கு விற்கும் பல பழைய DVDக்களை வாங்கி அடுக்கியது. அநியாயத்துக்கு சகாய வெலைக்கு விக்கறானுவ.
கலைஞர் ஆட்சியில் எல்லாமே சீப்பா கெடைக்குதுன்னாங்க, DVDவாங்கும்போதுதான் அதன் அர்த்தம் புரிந்தது.
40 ரூபாய்க்கு ஒரே டிவிடில அஞ்சு படம் போட்டுத் தரானுங்க.
இங்க இருக்கர ஒரு அம்மணிக்கு பழைய படம் வேணும்னாங்க.
ஒரே டிவிடில, பாசமலர், பச்சைவிளக்கு, படிக்காத மேதை, ராஜபாட் ரங்கதுரை, ஞானஒளி கெடச்சுது. இது அத்தனையும் ஒரே வாரத்துல பாத்து, இப்பெல்லாம் அவங்க சிவாஜி மாதிரிதான் பேசராங்க எல்லார் கிட்டையும். தலைவரின் தாக்கமே தாக்கம்.
என் பங்குக்கு, சலங்கை ஒலி முதல், சுப்ரமணியபுரம் வரை எல்லாத்தையும் புடிச்சாந்தேன்.
மிக முக்கியமாய், ராஜாவின் பழைய பாடல்கள் DVD. முத்தான பாடல்கள். ஒரே கொடுமை, வீடியோல சில பாட்டெல்லாம் போட்டு பாக்கணும்னா, பதிவு எழுதிக்கிட்டே பாட்ட மட்டும்தான் கேக்கணும். ஹிப்பித்தலை ஹீரோவும், பவுடர் பூசிய ஹீரோயினும், லலலலலா கூட்டமும் சகிக்காது.
ஒரே ஆசுவாசம், என் ஆல்-டைம்-ஃபேவரைட், ஜானி படப் பாட்டு 'காற்றில் எந்தன் கீதம்'. ஒவ்வொரு முறை பாக்கும்போதும், ஜானகியின் ஆரம்ப ஆலாபனை ரீவைண்ட் பண்ணி ஒரு பத்து தபா பாக்க வைக்குது. ஸ்ரீதேவி, மழை, ரஜினின்னு அந்த பாட்டு ஒரு சுப்ரீம் மேஜிக்கல்!
இப்ப, நெஜமாவே தலைப்புக்கு வருவோம்.
இந்த பாட்டு கேக்கும்போது பழைய ஞாபகங்கள் பல வந்துது. பள்ளிக் காலங்களில், எங்க தெரு மூலையில் ஒரு நண்பன் இருப்பான். ஸ்ரீதர். அவன் இருக்கும்போது, நானும் இன்னும் இரு நண்பர்களும் பொடி நடையா அவங்க வீட்டுக்கு போவோம். ஸ்ரீதர் எங்களை விட நாலஞ்சு வயசு பெரியவன்.
நாங்க +1 படிக்கும்போது, அவன் நல்ல வேலைக்கு போய் நெரைய சம்பாதிக்க ஆரம்பிச்சிருந்தான்.
எங்களுக்காக பெருசா செலவு பண்ணலன்னாலும், எங்களுக்குப் பிடிச்ச இளையராஜா பாட்டுக்காக கன்னா பின்னான்னு செலவு பண்ணுவான். ஸ்பீக்கர், ஸ்டீரியோ சிஸ்டமெல்லாம் வாங்கவும் செலவு பண்ணுவான்.
ராசா பாட்டு எல்லாத்தையும் வச்சிருப்பான். அதுவும், அ,ஆ,இ,ஈ, க,ச,ப,மன்னு அட்டவனை போட்டு ஒரு ட்ரங்கு பெட்டீல எல்லா கேசட்டையும் பத்திரப் படுத்தி வச்சிருப்பான். அவன் கிட்டயிருந்துதான் எனக்கும், 'ஜானகி' பைத்தியம் வந்துடுச்சு.
அவங்க வீட்டு மொட்ட மாடீல ஸ்பீக்கர போட்டு, 'மாப்ள என்ன பாட்டு கேக்கலாம்'னு ஒவ்வொரு பாட்டா நேயர் விருப்பம் கேட்டுப் போட்டுக் காமிப்பான். ஒவ்வொரு பாட்டிலும் இருக்கும் வயலின் பிட், வீணை பிட், மற்ற பாட்டு சங்கதிகள் எல்லாம் அருமையா எடுத்துச் சொல்லுவான். தளபதி படத்துல வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதிக்கு, 'மச்சி, ராசா இந்த பாட்டுக்கு படத்துல ஒரு மூஜிக்கும், கேசட்டுக்கு வேரயும் போட்டிருக்கணும். படத்துல போர் சீனுக்கு சரியா இருக்கு, ஆனா கேசட்ல அடிக்கடி கேக்கும்போது இந்த போர் மூஜிக் சலிப்பா இருக்கு'ம்பான். இந்த அலசல்களைத் தவிர மத்த அரட்டை விஷயங்களும், அரங்கேறும்.
வெள்ளி இரவுகளி, மொட்டை மாடியில் வானத்தப் பாத்தபடி நாலு பேரும் படுத்துக்கிட்டு, நட்சத்திரம்/நெலாவெல்லாம் பாத்துக்கிட்டு பாட்டு கேப்போம் பாருங்க. அடேங்கப்பா! ரம்யமான நாட்கள் அவை.
இப்ப என்னதான் எல்லா Mp3யும் ஓசியில் கிட்டி, எல்லா பாடல்களும் சுலபமாய் கிட்டி, வீட்டில் விலை உயர்ந்த ஸ்பீக்கரும் சிஸ்டமும் இருந்தாலும், அந்த கேசட் ப்ளேயரில், static சத்தத்துடன் ஒரு ராசா பாட்டை கேட்கும் சுகம் எதிலும் வருவதில்லை.
தொலைந்த இனிமைப் பொழுதுகளை, மீட்க முயற்சிக்கலாம் - மீண்டும் ஸ்ரீதர், மற்றும் நண்பர்களை கூட்டு சேர்த்து. ஸ்ரீதர் இப்ப படிச்சு பெரியாளாகி வேர எங்கையோ போய் செட்டிலாயிட்டான். இந்த அவசர வாழ்க்கையில், ஆளுக்கொரு மூலையில், அவங்கவங்க விஷயத்துல பிசியாயிட்டாங்க. வந்தாலும், அவசரகதியில் பேசி, 'மச்சி டிராஃபிக் இருக்கும். கெளம்பரோம்'னுதான் முடியுது இந்த கால சந்திப்புகள் எல்லாம். மொட்டை மாடியும் போச்சு, வானத்துல நட்சத்திரமும் போச்சு.
ஹ்ம்!
9 comments:
எங்க வீட்டு ரங்கமணியும் அந்த ஸ்ரீதர் மாத்ரீ தான் .. எனக்கு முதல் கிஃப்ட் அவங்களோட பொக்கிஷமான சேமிப்பு கேசட்கள் தான் :)
முத்துலெட்சுமி,
உங்க ரங்கமணி பேரு ஸ்ரீதர் இல்லியே? :)
இல்லைங்க பயப்படாதீங்க..உங்களைக் கண்டுபிடிக்கறதுக்கு அந்த அளவு சான்ஸ் இன்னும் வரலை. :)
தொலைந்த இனிமைப் பொழுதுகள் எல்லோருக்கும் உண்டு. அதுவும், அந்த இனிமை எல்லாம் இளமைப் பொழுதில்தான் இருந்திருக்கும்.
:)) கலக்கல் கொசுவத்தி தல ;))
நான் சலங்கை ஒலி தேடி பார்த்தேன் கிடைக்கல (lanmark) காக்கி சட்டை,இந்திரன் சந்திரன் கிடைச்சது ;))
முத்துலெட்சுமி/muthuletchumi,
////இல்லைங்க பயப்படாதீங்க..உங்களைக் கண்டுபிடிக்கறதுக்கு அந்த அளவு சான்ஸ் இன்னும் வரலை////
:)
பெ.சொ.வி, ///அந்த இனிமை எல்லாம் இளமைப் பொழுதில்தான் இருந்திருக்கும்./////
100% சரி :)
கோபிநாத், ///நான் சலங்கை ஒலி தேடி பார்த்தேன் கிடைக்கல ////
எனக்கு ச.ஒ கெடச்சுது, ஆனா காம்பினேஷன் படம் ஏதோ எனக்கு பிடிக்காத படமா இருந்துது. 40 ரூவாய்க்கு அஞ்சு படம் கொடுத்தாலும், எல்லா படமும் நல்லா இருக்கணும்னு நெனைக்கர அல்பையான குணம் என்னுது, அதனால வாங்கல் ;)
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
Post a Comment