எனக்கு நேரடியான தொடர்பு இல்லைன்னாலும், இதன் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் சில பல வீடியோக்கள் யூட்யூபிலும், இவரின் கட்டுரைகள் விகடன்/குமுதங்களிலும் படித்ததாய் நினைவிருக்கிறது.
சாமியார்களுக்கு நம்மூரில் பஞ்சம் இல்லை என்றாலும், தாடி வைத்த சாமியார்களில், ஜக்கி வாசுதேவும், ஆர்ட் ஆஃ லிவ்விங்கின் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் செய்யும் அறப்பணிகள் வித்யாசமானவையாகவும், நல்லவையாகவுமே கண்ணில் படுகிறது.
ஜக்கி வாசுதேவின், எளிமையான தோற்றமும், சாந்தமான புத்திசாலித்தனமான பேச்சும் பெரிய வசீகரம். என்ன பண்றாரோ இல்லியோ, அடிக்கடி, மரம் நடறாரு. இதுவரை பல கோடி மரங்கள் நட்டாச்சாம். இந்த ஒரு விஷயத்துக்கே அவருக்கு சபாஷ் சொல்லலாம்.
சாமியார்கள், நம்மைப் போன்ற சாதா ஆசாமிகள்தான் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், சாதா ஆசாமிகளால், இவ்வளவு பெரிய கூட்டத்தை வசியம் பண்ணி, அதன் மூலம், பணம் ஈட்டி, பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவதில்லை.
நம்மால் நேரிடையாக நல்லது செய்ய முடியாவிட்டாலும், இந்த மாதிரி நிறுவனங்களுக்கு நம்மால் ஆன உதவி செய்வது அவசியம்.
Chase Bank, உலகின் சிறந்த தொண்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவங்களுக்கு $1மில்லியன் தராங்களாம்.
கிட்டத்தட்ட 500,000 நிறுவனங்கள் அலசப்பட்டு, அதிலிருந்து 100ஐ தேர்ந்தெடுத்ததில், ஈஷாவும் முதல் நூறில் இருக்கிறது.
இந்த நூறில், FaceBook வாக்குகளின் அடிப்படையில், முதலாம் இடத்தை பெறும் நிறுவனத்துக்கு இந்த $1மில்லியன் கிட்டும்.
முதல் ஐந்துக்குள் வரும் நிறுவனத்துக்கு $100,000 கிட்டும்.
கீழே உள்ள விவரங்களை அறிந்து, FaceBookல் இணைந்து (இணையாதவர்கள்), ஈஷாவுக்கு உங்கள் பொன்னான வாக்கை போட்டால், முதல் 100ல் இருக்கும் ஒரே இந்திய தொண்டு நிறுவனமான ஈஷா, வெற்றி பெறும் வாய்ப்பிருக்கு.
தற்போது, அவர்கள் நாலாவது இடத்தில்.
வாக்குகள் இன்னும் இரண்டு தினத்தில் மூடப்படும். உங்கள் இரண்டு நிமிஷம், ஈஷாவுக்கும் அதைச் சார்ந்தவர்களுக்கும், பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். உடனே ரியாக்ட்டவும்.
Dear Friends,
Isha Foundation needs your vote in the Chase Community $1 Million contest. It is the only India-based organization in the top 5 of the Final Round and your vote can make a difference to the lives of millions of people in rural villages and towns.
Voting Ends on Fri, Jan 22.
Through its various social outreach projects, Isha has reached out to more than 7 million people in 4,600 Indian villages. It has provided free health care treating over 1.5 million patients in villages, planted more than 8 million tree saplings (Project Green Hands) and provided free education to 1000s of children in the under served areas (with full scholarships through Isha Vidhya). As part of Isha Foundation's community efforts in the US, a free clinic was launched in 2008 offering free healthcare services for the poor and medically under served areas of rural Tennessee (Isha Care). This approach has gained worldwide recognition and reflects in Isha Foundation's special consultative status with the Economic and Social Council (ECOSOC) of the United Nations.
To support Isha Foundation's endeavors, all that is required is a few mouse clicks to vote for Isha and there is no donation involved. You can help Isha Foundation win with just a couple minutes of your time!
CLICK HERE TO VOTE FOR ISHA!
Please spread the word and support this in anyway possible. It is a movement to strengthen the future of these rural children in India and an effort towards a better life.
Lets Make it Happen !
வாழ்க வளர்க!
-சர்வேசானந்தா
பி.கு: சில சாமியார்ஸெல்லாம் ஒரு 'தேஜஸ்'ஸுடன் பாக்கவே சாந்தமா இருக்காங்களே, அவங்களுக்கு கண்டிப்பா ஏதோ சக்தி இருக்குமான்னு dr.ருத்ரன் ஏதோ ஒரு பதிவில் அலசியிருந்தாரு. அதுக்கு பதிலா அவரே சொன்னது, நம்மை சுற்றி ஒரு லட்சம் பேரு நின்னுக்கிட்டு நம்மை கடவுள் மாதிரி பவ்யமா கவனிச்சுக்கிட்டு நாம சொல்றதை கேக்க க்யூவில் நின்னா, தெய்வீக லுக்கு விடரதுக்கு ஒரு கஷ்டம் இருக்காதாம் :)
ஆனா, கோழியா? முட்டையா? எது ஃபர்ஸ்ட்டு வந்துதுன்னு யாருக்கு தெரியும்? :)
35 comments:
உங்களால் இயன்ற விளம்பரத்தையும் கொடுக்கவும். நன்னி!
Done.
வடுவூர், நன்றீஸ்.
Ottu pottachu.
இதோ ஓட்டுபோடத்தான் போயிக்கினு இருக்கேன்
இதையும் படித்துபிட்டு சில ஜன்மங்கள் ஓட்டு போட்டு இன்னும் வியாபாரத்தை வளமாக்கும்..!
போட்டாச்சு போட்டாச்சு.
//அடிக்கடி, மரம் நடறாரு. இதுவரை பல கோடி மரங்கள் நட்டாச்சாம். இந்த ஒரு விஷயத்துக்கே அவருக்கு சபாஷ் சொல்லலாம்.//
கடந்த பொங்கல் விடுமுறையில் அண்ணன் ஜகதீஷ் என்ற ஜக்கியாரின் மடத்திற்கு சென்றிருந்தேன்.
அருமையான மலைப்பகுதியில் இயற்கையாக இருந்த பல ஏக்கர் வனப்பகுதியை அழித்து அங்கிருந்த ஏராளமான தாவரங்களையும், விலங்கு-ஊர்வன-பறவை போன்ற கானுயிர்களையும் அழித்துவிட்டு ஆன்மிக வணிகம் புரியும் திறன் கண்டு பக்தியில் மெய் சிலிர்த்தேன்.
உள்ளூர் நண்பர்கள் சிலரோ, அவரால் கானுயிர்களுக்கு மட்டுமே ஆபத்து என்று குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறினர்.
இது போன்ற மஹா பிறவிகளை நாம் கட்டாயமாக பாராட்டியே ஆக வேண்டும்.
நீங்களும் லட்சகணக்கான பேர்களுக்கு மத்தியில் நின்று பாருங்களேன் சர்வேசன், உங்கள் கண்களில் கருணை வருகிறதா பார்க்க்லாம், ஒருவரை குறை கூறுவது மிக எளிது, அதன் உள் நுழைந்து பின்பற்றி பின் குறை இருந்தால் கூறுங்கள். ஏற்றுக்கொள்கிறோம், மற்றபடி ஈசாவிற்காக ஓட்டு போடச்சொன்னதற்கு மனமார்ந்த நன்றிகள்,
புதுகைத் தென்றல், நன்றி.
Dr.Rudhran,
///இதையும் படித்துபிட்டு சில ஜன்மங்கள் ஓட்டு போட்டு இன்னும் வியாபாரத்தை வளமாக்கும்..!
////
:) அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
personally, இப்படி சேர்க்கும் பணத்தில், 50% நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டா கூட நன்மைதான்.
அநன்யா, நன்னி!
சுந்தரராஜன்,
///உள்ளூர் நண்பர்கள் சிலரோ, அவரால் கானுயிர்களுக்கு மட்டுமே ஆபத்து என்று குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறினர்.///
கயிறு திரிப்பது யாவர்க்கும் ஈஸி :)
////அருமையான மலைப்பகுதியில் இயற்கையாக இருந்த பல ஏக்கர் வனப்பகுதியை அழித்து அங்கிருந்த ஏராளமான தாவரங்களையும், விலங்கு-ஊர்வன-பறவை போன்ற கானுயிர்களையும் அழித்துவிட்டு ஆன்மிக வணிகம் புரியும் திறன் கண்டு பக்தியில் மெய் சிலிர்த்தேன்./////
இந்த விஷயம் ஆச்சரியமா இருக்கு. ஊரெல்லாம் மரங்கள் நட்டு காட்டை வளர்க்கும் அவர், இப்படி செய்திருந்தால் கொடுமைதான். நேர்ல பாத்தேங்கறீங்க. ஹ்ம். ஃபோட்டோ ஏதாவது இருக்கா? தனிப் பதிவா போட்டு அலசுவோம் அதை.
menaka,
////நீங்களும் லட்சகணக்கான பேர்களுக்கு மத்தியில் நின்று பாருங்களேன் சர்வேசன், உங்கள் கண்களில் கருணை வருகிறதா பார்க்க்லாம், ////
நீங்க முழுசா படிக்கலன்னு நெனைக்கறேன். நான் தான், 'கோழியா, முட்டையா' தெரிலன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேனே. ;)
மனுஷனுக்கு எந்த கவலையும் இல்லன்னா, சாந்தம் தானா வந்திடும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஸோ, தாடி சாமியார்களுக்கு, எந்தக் கவலையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பது நாமெல்லாம் தெரிந்த உண்மை தானே. ஜெயிலுக்கு போனா கூட சிரிச்சுக்கினே தான போறாங்க ;)
அடப்போங்க சர்வேசன்! இவங்க நட்டி வளர்த்திட்டாலும்....
//அருமையான மலைப்பகுதியில் இயற்கையாக இருந்த பல ஏக்கர் வனப்பகுதியை அழித்து அங்கிருந்த ஏராளமான தாவரங்களையும், விலங்கு-ஊர்வன-பறவை போன்ற கானுயிர்களையும் அழித்துவிட்டு ஆன்மிக வணிகம் புரியும் திறன் கண்டு பக்தியில் மெய் சிலிர்த்தேன்.
//
சுந்தரராஜன் சார்,
1993 க்கு முன் அந்த இடத்தில் மரங்களாக கொழித்திருந்ததா என கேட்டுப் பாருங்கள் :)
பணக்காரர்கள் விடுமுறையில் மான் மற்றும் பல விலங்குகளை சுட்டு ‘விளையாடும்’ இடமாக இருந்தது அந்த இடம்.
//personally, இப்படி சேர்க்கும் பணத்தில், 50% நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டா கூட நன்மைதான்//
இதுதான் ஒவ்வொரு தேர்தலில்லும் நடக்கிறது. இலாபத்தில் ஒரு பகுதி மக்களுக்கு போகிரது. இதற்கு அரசியல் கட்சிகள் தேவலை.
:-((
>>அரப்பணிகள் வித்யாசமானவையாகவும்
அறப்பணி ?. இது சரியா ?
கிரி,
//// கிரி said...
அடப்போங்க சர்வேசன்! இவங்க நட்டி வளர்த்திட்டாலும்...////
100 மரத்தில் 10 மரம் வந்தா கூட நல்லதுதாங்க. சரியான படி நட்டு வச்சா, மரம் தானா வளந்துக்கும். :)
nandan,
////1993 க்கு முன் அந்த இடத்தில் மரங்களாக கொழித்திருந்ததா என கேட்டுப் பாருங்கள் :)
பணக்காரர்கள் விடுமுறையில் மான் மற்றும் பல விலங்குகளை சுட்டு ‘விளையாடும்’ இடமாக இருந்தது அந்த இடம்////
முன்னுக்குப் பின் முரணா இருக்கே தல. மரம் இருந்திருந்தாதானே மான் இருந்திருக்கும்?
கல்வெட்டு,
/////இதுதான் ஒவ்வொரு தேர்தலில்லும் நடக்கிறது. இலாபத்தில் ஒரு பகுதி மக்களுக்கு போகிரது. இதற்கு அரசியல் கட்சிகள் தேவலை./////
administrative costs எந்த charityக்கும் உண்டு. இவங்க பண்ணலைன்னு வச்சுக்கங்க, சொஸைட்டிக்கு 50%ம் வராம போயிடுமே. அசலூரிலிருந்து, ஒரு சுய அறிப்பை தீத்துக்கவாவது பலரும் டொனேட் பண்றாங்களே இவங்களுக்கெல்லாம்.
பாவக்காய்,
////
அறப்பணி ?. இது சரியா ?///
தெரீலியே. தெளிவா சொன்னீங்கன்னா மாத்திடுவேன். final answer? :)
ஒரு டிஸ்கி போட்டதால், பதிவையே வேற ரூட்ல கொண்டு போயிட்டனோ. :)
எல்லாம் நன்மைக்கே.
//மரம் இருந்திருந்தாதானே மான் இருந்திருக்கும்?//
குரங்கு வேட்டை இல்லை சார். மான் வேட்டை.
சர்வே, அது அறப்பணி தான். நானும் கவனிச்சேன்.
nandan,
////
குரங்கு வேட்டை இல்லை சார். மான் வேட்டை//////
ஓ.கே. ஓ.கே. மொட்டையாயிருந்த இடத்தில் இவரு காடு வளர்ட்திருக்கிறாருங்கறீங்க. நல்லதே நல்லதே! :)
அநன்யா, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். மாத்திட்டேன் ;)
அவர் நட்ட ஒரு கோடி மரங்க எங்க ஸார் இருக்கு? சந்திர மண்டலத்திலா?
ஹ்ம்! :-)
indy, அவரு கண்டிப்பா பல மரம் நட்டிருக்காரு.
அந்த மரங்களெல்லாம் பராமரிக்கப்பட்டதாங்கரது தெரியலை.
ஒரு கோடியில், ஒரு லட்சம் பிழைத்திருக்கலாம்.
கோடி கொடுத்தாலும், கிட்டாத விஷயம் 'நிம்மதி'.
சிலருக்கு, இவரைப் பார்ப்பதாலும், இவரின் பேச்சை கேட்பதாலும், அது தற்காலிகமா கிட்டுதுன்னு, இவர் பணி தொடர்வது நல்லதுதானே சார்?
\\இந்த விஷயம் ஆச்சரியமா இருக்கு. ஊரெல்லாம் மரங்கள் நட்டு காட்டை வளர்க்கும் அவர், இப்படி செய்திருந்தால் கொடுமைதான். நேர்ல பாத்தேங்கறீங்க. ஹ்ம். ஃபோட்டோ ஏதாவது இருக்கா? தனிப் பதிவா போட்டு அலசுவோம் அதை.\\
http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Isha+Yoga+Center,+Tamil+Nadu,+India&mrt=loc&sll=11.0052,76.970711&sspn=0.39767,0.617294&ie=UTF8&hq=&hnear=Isha+Yoga+Center,+Coimbatore,+Tamil+Nadu,+India&t=h&z=14>
You may zoom in and have look at the above link.
பரணீ, டாங்க்ஸ். செக் திஸ்.
http://surveysan.blogspot.com/2010/01/y-y-y-y.html
Esha, Srisri ravishankar ellarum ore kuttayil ooreya mattaigalthan!6 naaal sambhavi mudra classukku 1000 koduthom/Adhil arai mani neram than sambhavi mudra eduthargal,matra nermellam jaggiyin PRO kkal avar pughazh padinarrgal! All these swamijis lead a luxurious life at others expense. please dont encourage them.
வணக்கம், நான் இன்னைக்குத்தான் இந்த பதிவுகளை பார்த்தேன் நல்லாத்தான் இருக்கு, நன்றி.
அப்புறம் ஒரு விஷயம் என்னன்னா ஈஷா செண்டர் காட்டுக்கு நடுவேதான் இருக்கு, பல மரங்கள் அளிக்கப் பட்டு இருக்கும் என்பது உண்மைதான், ஆனாலும் இன்னும் ஒரு விஷயம் என்னன்னா அந்த மரங்கள் எல்லாம் குறுகிய வாழ்வு கொண்ட குறு மர வகையை சேர்ந்தவை. அவைகள் இவர்கள் அழிக்கா விட்டாலும் ஒரு பருவத்தில் தானாகவே அழிந்து முளைக்கக் கூடியவை. எதோ ஒரு கம்பெனிக்காரன் அல்லது அரசியல் வாதி கையில் அந்த இடம் கிடைத்து இருந்தால்? அவர்கள் மரம் நட்டு வைத்து இருப்பார்களா?
யோசிங்க!!
--
bass
Post a Comment