recent posts...

Sunday, January 31, 2010

சிறுத்துப்போன ராஜாவும், கறுத்துப்போன வைரமுத்துவும்

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும், கருணாநிதியையும், ரஜினியையும், கமலையும், இளையராஜாவையும், விஸ்வநாதனையும், ரஹ்மானையும், அவரையும், இவரையும், நம்மில் பலரும், 'அவன்' 'இவன்' என்ற ஏகவசனத்தில்தான் பேசுவோம்.
'என்னடா நடிக்கறான் அவன்', 'இப்படி சொதப்பறானே இவன்' இப்படி.

அதற்கு மனோரீதியான ஞாயம் என்னன்னா, நம்ம செலவு பண்ற காசுலதான அவங்க பெரிய ஆளாகியிருக்காங்கங்கர ஒரு எகத்தாளமாம். (எங்கியோ படிச்ச நினைவு). அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம மரியாதை குடுக்கலைன்னா அவங்க ஒண்ணும் கொரஞ்சுடப் போரதில்லை.
மரியாதை சரி, ஆனா, அவங்களை சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம், விமர்சனம் என்ற பெயரில், அவர்களின் தொழிலை போட்டு கிழித்து தொங்கப் போட்டுவிடுகிறோம். தொழில் மட்டுமல்லாது, அவங்க சொந்த பந்த நிகழ்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும் கூட அலசி ஆராஞ்சு, விரிச்சு கரிச்சுடறோம்.

என்ன இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் சாதனையும் ஹிமாலய அளவிலானது. நாமோ ஒரு சிறு துரும்பு. நமக்கு அவங்களை தூக்கி நிறுத்திப் பார்க்க சுத்தமா தகுதியில்லன்னாலும், நாம் குலைப்பதை நிறுத்துவதில்லை.
சரி, இருந்தாலும், குலைச்சு வைப்போம்.

இளையராஜா. இசை ஞானி. எங்கேயிருந்தவர், என்னெல்லாம் செய்து, இப்ப எங்கையோ நிக்கறாரு. நம்மையெல்லாம் தன் திறமையால் வசியம் செய்து, ஆண்டாண்டு காலமாய் கட்டிப் போட்டவர், இன்னும் கட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர்.
பத்மபூஷன் கொடுத்திருக்காங்களாம், இவருக்கு. 1980களில் கொடுத்திருந்தால், தாரை தப்பட்டையோட கொண்டாடியிருக்கலாம். காலம் கடந்து கொடுக்கப்பட்டது. இவர் அதை வாங்காம ஒரு எதிர்ப்பை காட்டியிருந்திருக்கலாம். சரி, வாங்கிட்டு, ஒரு டாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்த வேலையை பாத்திருக்கலாம்.
எந்தளவுக்கு அற்புதமா இசை அமைக்கறாரோ, அதே அளவுக்கு, பேசத் தெரியாதவர். பேட்டி எடுக்க வந்த மீடியா காரர்கள்கிட்ட ஏதோ வொளரி கொட்டியிருக்காரு.
இந்த விருதை, இவருக்குக் 'கொடுத்தாங்களாம்', அதுவும், 'கேக்காமலையே கொடுத்தாங்களாம்'. மத்தவங்க 'கேட்டு வாங்கராங்கன்னு' குத்திக் காட்டறாரு. ஏன் இந்த அல்பத்தனம் ராசா?
மனசுல என்ன நெனச்சாலும், ஒரு 'ஞானி'யா இருக்கரவரு, அட்லீஸ்ட், வெளியில் பேசும்போதாவது, ஒரு சம்பர்தாய டாங்க்ஸும், விருது பெற்ற மற்ற்வர்களுக்கு ஒரு வாழ்த்தும், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'ன்னு அமைதியா சொல்லிட்டுப் போவலாம்ல?
சின்னப் பசங்க மாதிரி வாய்ல வந்ததையெல்லாம் அபத்தமா வுளரிக் கொட்டி, ஏன் இப்படி சிறுசாயிக்கிட்டே இருக்கீங்க?
உங்களை எந்த அளவுக்கு ரசிச்சோமோ, அதே அளவுக்கு வெறுத்துடுவோம் போலருக்கேய்யா...
இதே பத்மபூஷன் ரஹ்மானுக்கும் கொடுத்திருக்காங்க. அவரின் பெருந்தன்மை, அவர் வாkகில் - I’m overwhelmed that I have received the honour at the same time that music composer Ilayaraja has received it. It is a great personal statement for me. He has played for my father Shekher, and I have played for Ilayaraja Sir. It is a family thing for me.


வைரமுத்து. அற்புதக் கவிஞர். சந்தேகமே இல்லை. ராசாவின் இசையால், வெளிச்சம் காட்டப்பட்டவர். நடுவில் ஏதோ ப்ரச்சனையால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது என்றளவுக்கு அனைவருக்கும் தெரியும். ராசாவும் 'ஈகோ' வளர்ப்பவர். இதில், ரெண்டு பேருக்கும் நட்டமில்லை. நமக்குத்தான் நட்டம் என்றளவில் இன்றுவரை நகர்கிரது.
சமீபத்தில், வைரர் ஒரு கவைதைப் புத்தம் எழுதியிருக்காராம். தன் வாழ்நாளில் தன்னை பாதித்தவர்கள் பட்டியலாம், கவிதை நடையில்.
ராஜாவைப் பற்றியும் ஒரு கவிதை.

அதில் ராசாவின் புகழை பாட ஆரம்பித்து, இடையில் ஒரு யூ-டர்ன் எடுத்து, ராசாவுக்கும் தனக்கும் இருந்த ஊடலை ஹைலைட் பண்ணியிருக்காரு. அதிலும், பொத்தாம் பொதுவா, ராஜா தனக்கேதோ வ்க்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லி, ஒரு தெளிவா எதையும் சொல்லி முடிக்காம, மொத்தத்தில் ராஜாவை villify பண்ணிட்டாரு. தனக்கு வர வேண்டிய வாய்ப்பையெல்லாம், ராஜா நம்பியார் மாதிரி நடுவுல பூந்து கெடுத்ததாகவும் குற்றச்சாட்டு.
குற்றச்சாட்டு எல்லாம் ஓகே தான், ஆனா, நடு நடுவில், நான் மட்டும் நல்லவன், ராஜா எவ்ளவோ கெடுதல் பண்ணாலும், இன்னும் ராஜாவை, நட்புடந்தான் பாவித்து வரென்னு ஒரு உளரல் வேர.
நல்லாருக்குய்யா நீங்க நட்புடன் ராசாவை பாவிப்பது. ராசாவை வில்லனாக்கி, கவிதை எழுதி, அதை புக்காவும் கொண்டு வந்துட்டீங்க. இதுல நண்பன்னு பில்ட்-அப் வேர.
ரொம்பக் கேவலம்.
இதுக்கு, நீங்க இன்னொரு வக்கீல் நோட்டீஸ் திரும்ப அனுப்பி, கோர்ட்டுக்கே இழுத்திருக்கலாம் (பண்ணாமயா இருந்திருப்பீங்க? அதன் முழு விவ்ரம் என்னான்னும் சொல்லலை)


மேன்மக்கள், சறுக்கினா, ரொம்பவே கேவலமா இருக்கேய்யா...

20 comments:

smss said...

சர்வேசன்...

இசைஞானி சொல்வது 100 க்கு 100 சரியானதே........ அவருக்குக் கொடுக்கப்படவேண்டிய அங்கீகாரம் 80களில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்..... காலம் கடந்து கொடுக்கப்பட்டிருக்கிறது....

மத்தவங்க 'கேட்டு வாங்கராங்கன்னு அவர் மறைமுகமாக சொல்வது 100% உண்மை.... உங்களுக்கு இது கூட தெரியாமல போனது எப்படி.......

இது வரை தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கும் லிஸ்டை பார்த்தாலே இது புரியும்......

இசைஞானி சரியாகத்தான் சொல்கிறார்,.

மேலும் ஏஆர் ரகுமான் பெருந்தன்மை என்று சொல்லி ராஜாவை மட்டம்
தட்ட நினைக்கும் தங்கள் கீழ்த்தரமான
எண்ணம் மிகத்தவறானது...... கேவலமானது!

மாற்றிக் கொள்ளுங்கள்!

Unknown said...

அண்ணே, அந்த புத்தகம் வைரமுத்து ரொம்ப நாளுக்கு முன்னாடியே எழுதுனது..


இளையராஜாவைப் பத்தி நீங்க சொன்னது சரியான கருத்து.. ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கினப்போ எம்மெஸ்வில இருந்து எஸ்.ஏ.ராஜ்குமார் வரைக்கும் இதையே தான் சொன்னாங்க - “எனக்கு விருது தேவையில்லை” வேணாம்னா குடுத்துர வேண்டியதுதான?

கோபிநாத் said...

அண்ணே என்ன ஆச்சு..ஆணி அதிகமா!! ;))

\\'கொடுத்தாங்களாம்', அதுவும், 'கேக்காமலையே கொடுத்தாங்களாம்'. மத்தவங்க 'கேட்டு வாங்கராங்கன்னு' குத்திக் காட்டறாரு. ஏன் இந்த அல்பத்தனம் ராசா?
\\

;))))))))))) அவரு தனக்குன்னு தானே சொல்லிக்கவில்லையே...

http://www.envazhi.com/?p=15535

இதுல செய்தி வந்திருக்கு படிங்க...

எப்படிண்ணே இப்படி எல்லாம் யோசிக்ககிறிங்க. யப்பா முடியல ;))

ஸ்வர்ணரேக்கா said...

//மேன்மக்கள், சறுக்கினா, ரொம்பவே கேவலமா இருக்கேய்யா.//

உண்மை தான்.. ரொம்ப கேவலமா அடிச்சுக்கறாங்க

சரவணகுமரன் said...

//சமீபத்தில், வைரர் ஒரு கவைதைப் புத்தம் எழுதியிருக்காராம். //

சர்வேசா, புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தது 1991 இல்.

SurveySan said...

///சர்வேசா, புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தது 1991 இல்.///

சமீபத்தில் is a relative term :)
mistake is yours anyway, 20 varushama padhivu podaama enna panneenga? ;)

SurveySan said...

smss,

/////இது வரை தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கும் லிஸ்டை பார்த்தாலே இது புரியும்....../////

இதுவரை விருது வாங்கியவர்களில் யாரும் சாமான்யமானவர்கள் இல்லை. எல்லாருக்கும் பத்மபூஷனுக்கு வேண்டிய தகுதி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இப்படி பொத்தாம் பொதுவா, மத்தவங்க 'கேட்டு வாங்கினாங்கன்னு' சொல்றது ரொம்ப கேவலமான ஒரு கமெண்ட்டு. ஞானியின் லட்சணமில்லை இது.

இவ்ளோ வருஷமா கொடுக்காத அர்சாங்கம், இந்த வருஷம் இவருக்குக் தூக்கிக் கொடுக்க காரணம் என்னவாயிருக்கும்? தமிழ்நாட்டு அரசின் விருதும், யாரும் கேட்டிராத ஒரு படத்துக்கு இவருக்குத் தரப்பட்டிருக்கே? ஞாயமா, ஹாரிஸுக்கு இல்ல கொடுத்திருந்திருக்கணும் அது?

ராசாவை மட்டம் தட்ட நினைத்து இதைச் சொல்லவில்லை. நாம ரொம்ப ரசிக்கும் ஒரு ஆளு, இப்படி சின்னப் புள்ளதனமா இருக்காரேங்கர ஆற்றாமை. :(

SurveySan said...

முகிலன்,

/////அண்ணே, அந்த புத்தகம் வைரமுத்து ரொம்ப நாளுக்கு முன்னாடியே எழுதுனது.. /////


எல்லாப் புகழும் சரவணகுமாரனுக்கே ;)

SurveySan said...

கோபிநாத்,

நீங்க தந்த சுட்டியில் இருந்து,
கேள்வி: ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே…
பதில்: இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி

என்னங்க பதிலிது? அட்லீஸ்ட் ஒரு வாழ்த்துக்கள்னாவது பொதுவில் சொல்லவேணாமா? :)

SurveySan said...

ஸ்வர்ணரேகா, வருகைக்கு நன்னி.

சரவணகுமரன் said...

//mistake is yours anyway, 20 varushama padhivu podaama enna panneenga? ;)//

ஹலோ பாஸு, இதெல்லாம் ஓவரு! :-)

Nothing said...

I don't understand what is happening here, as I'm a Telugu and I don't understand Tamil at all.
But I'm huge fan of Ilayaraja's music and his exceptional life from a poverty stricken rural dalit from remote TN to one of the greatest musical geniuses.
Can anybody elaborate what is the point of discussion in the blog?

Thanks.

Radhakrishnan said...

ஹா ஹா! நான் கூட ஏதோ என்னமோ என நினைத்தேன். அவர் ஒரு விசயம் சொன்னார் அதை பத்தாக்கி சொன்ன விதம் மிகவும் அருமை. எனக்கு கேட்காமலே தந்தார்கள் என்றால் மற்றவர்களெல்லாம் கேட்டுத்தான் பெற்றார்கள் என்று அர்த்தப்படுமா? மேன்மக்கள் மேன்மக்களே. நாமதேன் ;)

SurveySan said...

Nothing,

nothing much is happening here. its my usual blabber.

Ilayaraja shows his attitude when asked about his Padmabushan.
and vairamuthu has vilified ilayaraja in one of his books.

SurveySan said...

V.Radhakrishnan,


///எனக்கு கேட்காமலே தந்தார்கள் என்றால் மற்றவர்களெல்லாம் கேட்டுத்தான் பெற்றார்கள் என்று அர்த்தப்படுமா///

ofcourse ;)

Ananya Mahadevan said...

சர்வே,
எல்லாம் இருக்கட்டும், ஒரு சின்ன பையனுக்கு இருக்கும் பெருந்தன்மை இவருக்கு இல்லையே?

SurveySan said...

அது இருந்திருந்தா, இந்நேரத்துக்கு தமிழ்நாட்டைக் கடந்து, இந்தியாவை கடந்து, உலகப் புகழ் பெற்றிருப்பாரே ;)

SurveySan said...

டிஸ்கி: நான் ராசாவின் ரசிகன் என்பதில் இம்மியளவும் மாற்றம் லேது. ஆனா, அவரின் இந்த சின்னப்புள்ளைத்தனங்கள்தான் பிடிப்பதில்லை. ;)

STARWIN said...
This comment has been removed by the author.
STARWIN said...

தமிழ் மையம் அமைப்பு தங்கள் செலவில் திருவாசகம் வெளி இட்ட போது மாஸ்டர் காபி கூட கொடுக்காமல் எடுத்து சென்டவர் இந்த பெரிய மனிதர் இது பட்டி ஜூனியர் விகடன் இதழில் இருமுறை வெளி வந்துள்ளது