ஈஷாவுக்காக ஓட்டு போடச் சொல்லி பதிவியிருந்தேன். முதல் ஐந்தில் வந்து, $100,000 தொகையை வென்றிருக்கிறார்கள்.. $1மில்லியன் கிட்டாதது வருத்தமே.
அந்தப் பதிவில், ஈஷாவுக்கு எதிராக சில கருத்துக்கள் பதிந்திருந்தன.
பரணீ என்ற அன்பர், ஈஷா, காடுவளர்க்காமல், காடு அழித்தலில் ப்ரசித்தி பெற்றிருப்பதாக ஒரு கூகிள் mapன் நிரலை கொடுத்திருந்தார். அதைப் பாத்தா, பச்சைப் பசேல் காட்டுக்கு நடுவில், மொட்டை அடித்த மாதிரி ஒரு இடத்தில், ஈஷாவின் கூடாரம் தெரிகிறது.
இவங்க மரம் இல்லாத இடத்தில் பலப் பல மரங்கள் நட்டு வைக்கிறார்கள் என்று ஆங்காங்கே செய்திகள் படித்திருக்கிறேன். ஆனா, வச்ச மரத்தை பராமரிக்கறாங்களான்னு சிலர் கேள்வி கேட்டிருக்காங்க.
மரம் வெக்கராங்களோ, பராமரிக்கறாங்களோ, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பச்சைப் பசேல் காட்டுப் ப்ரதேசத்தில் கூடாரம் போட, இருக்கும் மரக்கங்களை வெட்டி அழிப்பானேன்? Y ஈஷா Y?
பணம் படைத்த இந்த மாதிரி 'தொண்டு' நிறுவனங்கள், வளர்ச்சி அடையாத வரண்டு பூமியில், காட்டை உருவாக்கி, அங்கு கூடாரங்கள் அமைத்தால், ஊரும் வளரும், அதைச் சுற்றிய கிராமங்களும் உயருமே?
இல்லியா? Am i missing something?
விளக்கம் தருவார்களா ஈஷா அன்பர்கள்?
நா..ண, நா..ண! :)
4 comments:
$1மில்லியன் அடிக்க எத்தன மரம் வெட்டினாங்கன்னு எதுக்கும் கூகிள்ல தேடிடுங்க மொதல்லயே..:))
..தாரேண்ணா..ண்ண்னா..:)
////$1மில்லியன் அடிக்க எத்தன மரம் வெட்டினாங்கன்னு எதுக்கும் கூகிள்ல தேடிடுங்க மொதல்லயே..:))////
:) hm.
Y survey YY
இதுக்கே இப்படி ஆச்சர்யப்பட்டுப் போறீங்களே, இன்னும் நம் ஊர்ல இருக்கக் கூடிய பெரிய பெரிய சாமியார்களின் சர்வதேச பள்ளிகள், மற்றும் அவர்களுடைய ஆஸ்மரங்களின் அமைவிடமும் - இது போன்ற சாரல் வீசும், அமைதி பூங்கா, சுற்றிலும் மலையும், மலையும் சார்ந்த இடங்களாக இருந்தாத்தான் அதுக்கே உண்டான சிறப்பு எஃபெக்ட் கிடைக்குமென்று அமைந்துப் பட்டிருப்பதை அறிந்தால் என்ன செய்வீர்கள்...
உ. தா: கல்லட்டி, ஆனைகட்டி, காருண்யா... இப்படி - இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா :)
Post a Comment