recent posts...

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் எப்படி எடுத்திருக்கலாம்?

எல்லாரும் தொவச்சு காயப்போட்டுட்டாங்க. சிலர் நல்லாருக்குன்னு சொல்லி இஸ்திரி போட்டு, பத்திரமா மடிச்சும் வச்சுக்கிட்டாங்க.

'எலிபத்தாயம்'னு ஒரு மலையாளப்(?) படம் அந்த கால b&w தூர்தர்ஷனில், வாராவாரம் போடுவாங்க. ஒருத்தரு காத்தால எழுந்துப்பாரு, எலிப் பொறியில் மாட்டியிருக்கும் எலியை எடுத்துப்பாரு. நடந்து போய் கொளத்துல முக்குவாரு. பல்லு தேப்பாரு. குளிப்பாரு. ஈரக் கோமணத்தோட வீடு வந்து சேருவாரு. இந்த மாதிரி அஞ்சு தபா பண்ணுவாரு. ஒவ்வொரு நாளின் சீனும் பதினைஞ்சு நிமிஷம் ஓடும். கடைசி சீன்ல, குளிச்சதும், கொளத்துலையே முங்கி செத்துடுவாரு. படம் முடிஞ்சுடும்.
அந்தப் படமும் பலராலும் பெரிய லெவலில் புகழப்பட்டு, பலப்பல அவார்டெல்லாம் சம்பாதித்தது.

என்ன சொல்ல வரேன்னா, ரசனைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
எனக்கு பிடிக்கரது உங்களுக்குப் பிடிக்காம போகலாம், உங்களுக்குப் பிடிச்சது எனக்கு பிடிக்காம போகலாம்.
ஆனா, உங்களுக்கும் எனக்கும் பிடிச்சதுதான், சிறந்த படமா, காலத்தை வென்று நிற்கும்.
பொழுது போலன்னா, அந்த டிவிடி எடுத்துப் பாக்கலாமேன்னு, திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படங்கள் இவை.


ஆயிரத்தில் ஒருவன், அந்த வகைப் படம் அல்ல. வெறும் லாஜிக் ஓட்டைகளால் மட்டுமல்ல. பேசிக்கான அபத்தங்களால் அப்படி.
ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம். ரீமா சென், ஒரு கண்டிப்பான அதிகாரியின் பில்ட்-அப்போடு படம் துவங்கும். கார்த்தி ஒரு கூலித் தொழிலாளியாம். ஆனால், அடுத்த அஞ்சாவது நிமிஷம், 'அதோ அந்த பறவை'க்கு கார்த்தியும் ரீமாவும் கெட்டாட்டம் போடுவாங்க.
* 'ஹாலிவுட் தரத்தை' தொடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எடுக்கரவங்க, இந்த மாதிரி அபத்தங்களை தவிர்த்தல் நலம்.

அப்பரம் ரொம்ப முக்கியம் 'வக்கிரம் தவிர்த்தல்'. ஹீரோவும் ரெண்டு ஹீரோயினும் சும்மா நடந்து போகும்போது, ஒரு முன்னறிவிப்பே இல்லாமல், திடீர்னு ரெண்டு ஹீரொயின்ஸும் சண்டை போட்டுப்பாங்க. சென்ஸார் பீப் பீப் போட்டு ஒரு டயலாகும் கேட்காமலேயே, வக்கிரமான தேவையே இல்லாத சொறுகல் இது. என்ன சாதிச்சாரு அந்த சீனாலன்னு தெரியல. நெளிய வைக்கும் மேலும் பல காட்சிகள் படத்தில் இருந்தது (முச்சா, கெட்டாட்டம், கெட்ட பீப் டயலாக்,...)
* 'ஹாலிவுட் தரத்தை' தொடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எடுக்கரவங்க, இந்த மாதிரி வக்கிரத்தை தவிர்த்தல் நலம்.

அப்பரம் ரொம்ப ரொம்ப முக்கியமா, 'புரியர மாதிரி படம் எடுத்தல்'. படத்துக்கு ரொம்ப அருமையான கதைக் கரு இருந்தது. மறைந்து வாழும் சோழர்கள்; திரும்ப தஞ்சைக்கு எப்ப வரலாம்னு ஏக்கத்தோட ஒரு தூதனுக்காக வெயிட்டிங்க்; இந்தப் பக்கம் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள்; நடூல அகழ்வாராய்ச்சிக் குழுவு; ரெண்டு ஹீரோயின்; ஒரு ஹீரோ; அதகளம் பண்ணியிருக்க வேண்டிய கரு. பலப் பல குழப்பத்தாலும், மேலே சொன்ன ரெண்டு மேட்டராலும், படத்துடன் ஒட்டாமல் குழப்பத்துடன் பயணிக்கும் ரசிகன்.
சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருந்திருக்க, இன்னும், கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்கலாம்.
 • முதல் பாதியில் சோழனைத் தேடிச் செல்லும் 'அகழ்வாராய்ச்சிக்' கூட்டம், வழி நெடுகிலும் உள்ள ஏழு அபாயங்களைத் தாண்டிப் போயி, கடைசியில் அவங்க இடம் கண்டுபிடிக்கறாங்க. பிற்பகுதியில் சோழ கும்பலில் சேர்தலும், பாண்டிய கும்பலுடன் மோதலும், புரியாத டமிலில் இழுவையா நடக்குது.


 • காட்சிகளை மாத்தி மாத்தி ஒட்டியிருந்தா, படம் செமயா மெருகேறியிருந்துக்கும். முதல் பாதி, ரெண்டாம் பாதின்னு வெட்டாம, முதல் பாதியிலேயே, 'அகழ்வாராய்ச்சிக்' கூட்டம் ஏழில் முதல் நாலு கட்டத்தை கடப்பதும், நடு நடுவில், சோழர்களையும் மாத்தி மாத்தி காமிச்சிருந்திருக்கலாம். என்னடா நடக்கப் போவுதுன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ரசிகனுக்கு. அப்பரம், மீதி மூணு அபாயங்களைக் கடந்து ஒரு கதவு கிட்ட வந்து, கதவை இடிச்சா, அந்தப் பக்கம் சோழர்கள் இருக்காங்கன்னு ஒரு 'ஷாக்' கொடுத்திருக்கலாம். அம்சமா இருந்திருக்கும்.


 • கிராஃபிக்ஸ்: இந்த மாதிரி கதைக்கு மிக அவசியம்தான். ஆனா, எது ஓரளவுக்கு நல்லா வருமோ, அதை மட்டும் கிராஃபிக்ஸ் செய்யணும். ஓவர் ஏம்பீஷியஸா கண்டதையும் முயற்சி செய்து, 'சப்'னு ஆக்கக் கூடாது. முதல் அபாயம் கடலிலிருந்து வரும் 'நெருப்பு மீன்', மட்டமான கிராஃபிக்ஸ். வெறும் சவுண்ட் எஃபெக்ட்ஸும் காமிரா ஆங்கிளிலுமே இதைவிட சிறப்பாய் செய்திருக்கலாம்


 • முக்கியமான மேட்டரு, சோழர்களை, தேவையில்லாமல், காட்டு வாசிகள் மாதிரி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். மறைஞ்சு வாழறாங்க, நல்லாவே கலாச்சார அடையாளத்துடன் வாழறாங்கன்னு, 'ரிச்சா' காட்டியிருந்திருக்கலாம். கறுப்பு சாயம் பூசி, காட்டுமிராண்டி மாதிரி காட்டியது அருவருப்பு.


 • கடைசி சண்டை துப்பாக்கிக்கும், கத்திக்கும் நடப்பது அருமை. தமிழுக்கு புச்சு. முந்தைய இழுவையால், ஈர்ப்பில்லாமல் செய்துவிட்டது. இதற்கு முன் நிகழ்வதை, crispஆக்கினா, இந்த கிளைமாக்ஸ் சண்டையும் பாண்டியர்ஸின் அட்டூழியங்களும் ஒரு பன்ச்சை கூட்டியிருக்கும். • யோசிப்பாரா செல்வா?

  என் அதிகப் பிரசங்கித்தனத்தை பொறுத்தருள்க. உங்க அதிகப்பிரசங்கித்தனத்தை காட்ட, நீங்களும், யோசனைகளை அவுத்து வுடுங்க.
  காசு கொடுத்து படம் பாத்து பல்பு வாங்கியவர்கள் அனைவருக்கும் இதற்கு உரிமை உண்டு, கடமையும் கூட என்பது அடியேன் கருத்ஸ்! :)

  ஆனா, outside the box யோசித்து, புதுமையான கதைக் கருவை தமிழுக்குத் தந்த செல்வாவுக்கு நன்றீஸ்!

  15 comments:

  SurveySan said...

  நானே நினைத்து புளகாங்கிதம் அடையும் யோசனை இதுதான் :-))


  ////காட்சிகளை மாத்தி மாத்தி ஒட்டியிருந்தா, படம் செமயா மெருகேறியிருந்துக்கும். முதல் பாதி, ரெண்டாம் பாதின்னு வெட்டாம, முதல் பாதியிலேயே, 'அகழ்வாராய்ச்சிக்' கூட்டம் ஏழில் முதல் நாலு கட்டத்தை கடப்பதும், நடு நடுவில், சோழர்களையும் மாத்தி மாத்தி காமிச்சிருந்திருக்கலாம். என்னடா நடக்கப் போவுதுன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ரசிகனுக்கு. அப்பரம், மீதி மூணு அபாயங்களைக் கடந்து ஒரு கதவு கிட்ட வந்து, கதவை இடிச்சா, அந்தப் பக்கம் சோழர்கள் இருக்காங்கன்னு ஒரு 'ஷாக்' கொடுத்திருக்கலாம். அம்சமா இருந்திருக்கும்.////

  சீனு said...

  //நெளிய வைக்கும் மேலும் பல காட்சிகள் படத்தில் இருந்தது (முச்சா, கெட்டாட்டம், கெட்ட பீப் டயலாக்,...)
  * 'ஹாலிவுட் தரத்தை' தொடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு எடுக்கரவங்க, இந்த மாதிரி வக்கிரத்தை தவிர்த்தல் நலம்.//

  அட! இதையெல்லாம் தவிர்த்தால் பின்ன எப்படி ஹாலிவுட் தரத்துக்கு எடுக்குறதாம்...?

  //முக்கியமான மேட்டரு, சோழர்களை, தேவையில்லாமல், காட்டு வாசிகள் மாதிரி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். மறைஞ்சு வாழறாங்க, நல்லாவே கலாச்சார அடையாளத்துடன் வாழறாங்கன்னு, 'ரிச்சா' காட்டியிருந்திருக்கலாம். கறுப்பு சாயம் பூசி, காட்டுமிராண்டி மாதிரி காட்டியது அருவருப்பு.//

  சோழர்களுக்கெதிரான மறைமுக கருத்துயுத்தம் நடைபெறுவதாக இந்த வார ஜு.வி.யில் வந்திருக்கிறது. முதலில் கமல், இப்போ செல்வா...

  "அதுசரி! அதென்ன நமக்கு நாமே திட்டமா?" (முதல் பின்னூட்டத்தை தான் சொல்லுறேன்).

  SurveySan said...

  சீனு,

  ///"அதுசரி! அதென்ன நமக்கு நாமே திட்டமா?" ////

  அந்த யோசனை ரொம்ப சிலிர்ப்பை தந்துச்சு. Night Shyamalan கணக்கா, செம ஜோரா வந்திருக்கும், அப்படி எடுத்திருந்தா.

  பின்னூட்டத்துல போடாலாவது செல்வாவின் கண்ணில் படாதான்னு ஒரு ஐடியால போட்டது ;)

  RamaKarthik said...

  Mr.SurveySan,

  Apdiyae Epdi padam Paathurukalamnu Konjam Kannadi Munnadi Ninnu Ungalukku Neengalae oru Katturai Ezhuthikinga...

  Muthal Thadava ivaloa thooram Output Kudukurathu Evaloa Periya Visayamnu theriyama thayavu senju vimarsanam pannathinga....

  Epdi irunthalum Naan en Panguku innum rendu thadava kandippa paapaen ... padam avaloa worth....

  En sir ipdi irukkinga...

  Ithuku munnadi ipdi oru tamil padam namma theatre screenla paathurukingala..
  ungaluku oru talent aaanavan Tn'la iruka koodathu ellam North'ku poaganum...

  அநன்யா மகாதேவன் said...

  வக்கிரமான தேவையே இல்லாத சொறுகல் இது. என்ன சாதிச்சாரு அந்த சீனாலன்னு தெரியல-இதே மாதிரி எனக்கு செமத்தியா எரிச்சலூட்டிய இன்னொறு சீன் - ஆண்டிரியா கார்த்திக்கு ஊசி போடும் சீன். எதுக்கு இந்த காட்சி? Dint make absolutely any sense to me. கொடுமை.

  Darmaraj(A) Darma said...

  // முக்கியமான மேட்டரு, சோழர்களை, தேவையில்லாமல், காட்டு வாசிகள் மாதிரி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். மறைஞ்சு வாழறாங்க, நல்லாவே கலாச்சார அடையாளத்துடன் வாழறாங்கன்னு, 'ரிச்சா' காட்டியிருந்திருக்கலாம். கறுப்பு சாயம் பூசி, காட்டுமிராண்டி மாதிரி காட்டியது அருவருப்பு.
  //

  ஐயா குகைக்குள் இருப்பவர்கள் "கழுவுவதற்கே" தண்ணி இல்லாமல் இருக்கும் போது...... அவர்கள் எப்படிக்குளிப்பது.. எப்படி 'ரிச்சா' காட்டுறது.. ?? சொல்லுங்க... :(((

  簡單 said...

  知識可以傳授,智慧卻不行。每個人必須成為他自己。..................................................

  SurveySan said...

  RamaKarthik,

  ////Epdi irunthalum Naan en Panguku innum rendu thadava kandippa paapaen ... padam avaloa worth....////

  என்ன சொல்ல வரேன்னா, ரசனைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
  எனக்கு பிடிக்கரது உங்களுக்குப் பிடிக்காம போகலாம், உங்களுக்குப் பிடிச்சது எனக்கு பிடிக்காம போகலாம். :)

  //////En sir ipdi irukkinga...

  Ithuku munnadi ipdi oru tamil padam namma theatre screenla paathurukingala..//////

  இதுக்கு முன்னாடி வேர வந்துதா இல்லியாங்கரது எனக்கு ப்ரச்சனையே இல்லை. என்னைப் பொறுத்தவரை, நான் துட்டு கொடுத்து ஒரு பொருள் வாங்கினா, அந்த துட்டுக்கான தரம் அதிலிருக்கான்னுதான் பாப்பேன்.

  தமிழ் திரையின் எதிர்காலத்தை இவரு பொரட்டிப் போட முயற்சி செய்வது எனக்கு மிக்க சந்தோஷமே.
  நிச்சயமா பாராட்டப் படவேண்டிய விஷயம்.
  அவார்டும் கொடுத்து கவுரவிக்கலாம்.

  ஆனா, இயன்றவரை குறை கண்டு பிடிச்சு, அதை அடுத்த முயற்சியில் ரிப்பீட்டாமல் இருக்கச் செய்யணும் :)

  SurveySan said...

  அநன்யா,

  ////செமத்தியா எரிச்சலூட்டிய இன்னொறு சீன் - ஆண்டிரியா கார்த்திக்கு ஊசி போடும் சீன்///

  செல்வராகவன் டச்சாம்! :)

  SurveySan said...

  Darma,

  ///ஐயா குகைக்குள் இருப்பவர்கள் "கழுவுவதற்கே" தண்ணி இல்லாமல் இருக்கும் போது...... அவர்கள் எப்படிக்குளிப்பது.. எப்படி 'ரிச்சா' காட்டுறது.. ?? சொல்லுங்க... :((/////

  ஐயா, பெரிய அருவி ஒண்ணு வத்தாம எல்லா சீன்லையும் கொட்டிக்கிட்டே இருந்துச்சே, அதில் கொட்டரது என்ன அமிலமா? ;)

  SurveySan said...

  簡單,

  /////知識可以傳授,智慧卻////

  智慧卻 慧 以傳授!! ;)

  SurveySan said...

  யாருமே என் முதல் பின்னூட்ட ஐடியாவை சிலாகிக்கலையே? நல்ல ஐடியா இல்லியா அது? :)

  அநன்யா மகாதேவன் said...

  சர்வே, இந்த ஐடியானால படம் பெருசா மாறிடுமா என்ன? எனக்கென்னமோ ஒன்னியும் தோணலப்பா, அக்கான்.

  செல்வராகவன் டச்சாம்!-அந்த டச் ல இடி விழ.

  RamaKarthik said...

  முதல எனக்கு படம் ரொம்ப பிடிச்சுருக்கு ... உங்களோட தரப்பு படி சரி இல்லன்னு வச்சுக்கிட்டாலும் ...
  விமர்சனம் பண்ணுங்க ஆனா கொஞ்சம் கண்ணியமா ... முதல எல்லா நல்ல விடயத்தையும் பாராட்டிட்டு கடைசியா அடுத்த படைப்பில் திருத்தி கொள்ள வேண்டிய விடயங்கள் அப்டின்னு பண்ணுங்க ...அதுல தப்புல ... நான் வேல பாக்குறது ஒரு வெளி நாட்ல இங்க பல தரப்பட்ட நாட சேந்தவுங்க வேல பாக்குறாங்க ... அவுங்க யாரும் நம்ம படத்த கிண்டல் பண்றது கிடையாது ஆனா முக்கியமா வட இந்தியர்கள் நம்ம தமிழ் படத்த கிழிக்குற கிழி நீங்க அனுபவிச்ச தான் தெரியும் ... ... யாருடா பூனைக்கு மணி கட்டுவான்னு இருக்கும் போது திரு.செல்வா முதல் அடி எடுத்து வச்சு தமிழ் திரை உலகத்துக்கு ஒரு தைரியம் குடுத்துருக்காரு ... ஒரு குழந்தையோட முதல் நடை கொஞ்சம் கோணல் மாநல கூட இருக்கலாம் ஆனா அத நம்ம கை தட்டி உற்சாகம் பண்ணுனா தான் அது மேலும் நடக்கும் ....நடக்க நடக்க தான் நடை சரியாகும் ... எடுத்த வுடனே அத மிரட்டி அதட்டி அதகளம் பண்ணுனா அது நடக்காம ஊனமவே ஆயிரம்... ஹாலிவுட்'எ பொறுத்த வரை நம்ம குழந்தை தான் ... கொஞ்சம் தாங்கி பிடிங்க கண்டிப்பா இந்த தமிழ்க் குழந்தை நிமிர்ந்து நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ...

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - (தமிழ்நாட்டில் )

  ராமகார்த்திக் அழகிரிசாமி . M.Sc . IT,
  பாண்டிய நாடு ( மதுரை).
  தற்பொழுது வாழ்வது "ஒரு தமிழன் ஜனாதிபதியாக இருக்கும் " "தமிழ் மொழியும் தேசிய மொழியாக ஏற்று கொள்ளப்பட்ட திராவிட கோட்டை " சிங்கப்பூர். (என் தற்பெருமைக்காக நான் இந்த விசயங்கள போடல தமிழன் தமிழன கை குடுத்து தூக்கி விடனும் அதுக்காக போட்ருக்கேன் ... உங்க கைகளும் உயரட்டும்

  SurveySan said...

  Ramakarthik,
  ////முதல எல்லா நல்ல விடயத்தையும் பாராட்டிட்டு கடைசியா அடுத்த படைப்பில் திருத்தி கொள்ள வேண்டிய விடயங்கள் அப்டின்னு பண்ணுங்க ...//////

  இது நல்ல யோசனை. அடுத்த படத்தில் கவனத்தில் கொள்கிறேன். :)

  இந்தப் படத்தை பொறுத்தவரை, வடநாட்டவரும் வெளிநாட்டவரும், பாக்காமல் இருத்தலே நலம்.
  முச்சா போரதை பக்கெட்டில் பிடிக்கும் சீன், உலக வரலாற்றிலேயே இது தான் முதல் முறை. பாத்தா பேஜார் ஆயிடுவாங்க :(

  இது என்னங்க புது முயற்சின்னு ஆளாளுக்கு அலப்பரை பண்றாங்கன்னுதான் புரியலை. எனக்குத் தெரிஞ்சு, இந்த மாதிரி போர்/கூட்டம்/ஏழுகடல்/மலை எல்லாம் எவ்வளவோ படத்துல வந்திருக்கே.

  ஆனா, ஒரு புதிய கதைக் கரு தமிழில் துவங்கியிருப்பது, மகிழ்ச்சியே.

  உங்க குழந்தை analogy நல்லாத்தான் இருக்கு. ஆனா, முரண்டு பண்ணும் குழந்தைக்கு, காதைத் திருகினால்தான் தவறு புரிந்து, சரியாய் வளரும் :)