recent posts...

Wednesday, January 13, 2010

போதும் என்ற மனமே...

ஒரு விஷயம் கவனிச்சுக்கிட்டு வரேன். ஒரு டி.ஷர்ட் வாங்கணும்னாகூட மேலையும் கீழையும் பாத்து, பல முறை யோசிச்சு, இந்தக் கடைய விட அந்தக் கடைல கம்மியா கெடைக்குதேன்னு கணக்கெல்லாம் போட்டு வாங்கறேன். கஞ்சத் தனம்னு சொல்ல முடியாது, சிக்கனம்னும் சொல்ல முடியாது. சம்பாதித்த பணம் இப்படி எடுத்து லூஸ்ல விடரதுக்கு முன், ஒரு பொறுப்பான ஆராய்ச்சின்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

ஆனா, இப்பேர்பட்ட என்னை, இந்தப் பங்குச்சந்தை, ரொம்பவே வசியம் பண்ணிடுது.
இம்புட்டு வருஷமா, அதுல நெரைய காசு விட்டும், துளி கூட வலியே தெரியலை.

செலவு பண்ணும்போது, கரன்ஸியாவோ, க்ரெடிட்கார்டோ கைநீட்டி கொடுத்து வாங்கும்போது இருக்கும் ஒரு 'பயம்', இந்த ஆன்லைனில் விளையாடும் பங்குச் சந்தை சூதாட்டத்தின் போது இருப்பதில்லை.

அது பாட்டுக்கு அனாமத்தா போவுது. ஓரிரு மணி நேரத்தில், போட்ட பணம் காணாம போவுது. கொஞ்சம் கூட பகீர் ஆகாம, நெதானமா, அடுத்த ஸ்டாக்கு வாங்க ஆரம்பிச்சட்டறேன்.
கூட்டிக் கழிச்சு பாத்தா, பெரிய பாதகம் வரவில்லை என்றாலும், பைசாகு பிரையோஜனமில்லா, இந்த break-even நெலமைக்கு செலவு செய்யும் நேரம் அதிகம்.

இதுல லாபம் ஈட்ட பல வழி இருக்கு. Covered Calls பாத்திருபீங்க. இது ஒரு வழி.

ஆனா, பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட, மிக மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒரு தேவை DISCIPLINE. அஃதாவது, ஒழுக்கம்!

அதான் நம்ம கிட்ட எதுக்குமே இல்லியே, இதுக்கு மட்டும் எப்படி வரும்?

வரணும்! இல்லன்னா, காசு போட்டதும் தெரியாது, போனதும் தெரியாது.

அமிதாப் பச்சனின் சில பதிவுகள் சுவராஸ்யமானவை. இந்த வயதிலும், அவரின் உழைப்பு ஆச்சர்யம். ஊர விட்டு ஊரு சுத்திக்கிட்டே இருக்காரு. ஏகப்பட்ட புதுப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், திறப்புவிழாக்கள், விளம்பரங்கள்னு துள்ளிக்கிட்டே இருக்காரு.

இந்தப் பதிவில் ( http://bigb.bigadda.com/?p=4289 ), ஒரு விஷயம் மேலோட்டமா சொல்றாரு. 1970களில், பம்பாயின் அருகில் இருக்கும் லோனாவ்லாவில், 20000ரூபாய்க்கு அவர் நிலம் வாங்கி வைத்திருந்தாராம். இந்த காட்டுப் பிரதேசம் எங்க முன்னேறப் போவுதுன்னு நெனச்சு, கொஞ்ச நாள்ளையே வந்த வரை லாபம்னு ஒரு லட்சத்துக்கு வித்துட்டாராம். இன்னிக்கு அந்த இடம் பலப் பல கோடிகள் பெறும். இதை நெனச்சு பெருமூச் விடறாரு.

எப்பேர்பட்ட பணம் கொழுத்த ஆளா இருந்தாலும், 'போதும்'னு நெனைக்க மாட்றாங்க.
20,000 ஒரு லட்சம் ஆனது, 400% லாபம். கிட்டிய வரை லாபம்னு அவருக்கு திருப்தி ஏற்படலை. இன்னிக்கு அது கோடிகள் தான், ஆனா, இதே, அந்த எடம் உருப்படாம போயி, 20,000ரூ 5,000 ஆயிருந்தா, என்னாயிருக்கும்?

பங்குச் சந்தையில், இந்த 'போதும்' என்ற மனம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

1000ரூ கொடுத்து ஒரு பங்கு வாங்கினா, பங்கை வாங்கும்போதே, உங்களுக்கு எவ்வளவு லாபம் வந்தா போதும்னு தீர்மானிக்கணும்.
அதே நேரம், இந்தப் பங்கை வாங்கியதில் எம்புட்டு நஷ்டம் சந்திக்கத் தயார்னும் முடிவு பண்ணிக்கணும்.
10% லாபம் வந்தா போதும்யா..
5%க்கு மேல நஷ்டம் வந்தா தாங்க முடியாதுய்யா...

அஃதாவது, 1000ரூ, 1100ரூ ஆச்சுன்னா, வந்த வரை போதும்னு, காச எடுத்துக்கிட்டு எஸ்கேப்!
1000ரூ 950ரூ ஆயிடுச்சுன்னா, விட்ட வரைக்கும் போதும்னு, காச எடுத்துக்கிட்டு எஸ்கேப்பு!

இந்த மாதிரி ஒரு கணக்கு வச்சுக்கணும். இந்த கணக்கை, சாஷ்டாங்கமா ஃபாலோ பண்ணனும்.

பங்கை வாங்கும் போதே, மேற்கூரிய கணக்கில், ஒரு 'விற்பனையும்' போட்டுடணும். அப்பதான், பெரிய நட்டமும் வராது, வந்த லாபம் சறுக்குவதர்க்கு முன், போட்ட பணத்தையும் லாபத்தையும் எடுக்கவும் முடியும்.

போதும் என்ற மனம் இல்லாமல், ஒழுக்கமும் இல்லாமல், நெக்குலுடன் திரிபவர்கள், பங்குச் சந்தையை தவிர்த்தல் நலமோ நலம்!

இல்லன்னா, டங்குவார் கிழிஞ்சிரும்! அம்புடுதேன்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பி.கு: அமெரிக்க பங்கில், Pfizer (PFE), நல்ல ஸ்டாக்கா தெரியுது.
உங்களுக்குத் தெரிஞ்சத பத்த வச்சுட்டுப் போங்க.

11 comments:

பாவக்காய் said...

தலை, ஆஹா அசத்தல் !! முதல் முறை trade செய்து கொஞ்சம் நஷ்டம் !!
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....

SurveySan said...

பாவக்காய்,
//தலை, ஆஹா அசத்தல் !! ///
Danks! :)

SurveySan said...

அண்ணாமலையான்,

///நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....///

Nanri!

முகிலன் said...

தல அமெரிக்கால ஆன்லைன் ட்ரேடிங்க்குக்கு பெஸ்ட் சோர்ஸ் எது?

SurveySan said...

முகிலன், i use ameritrade. nallaa irukku.

scotttrade is cheaper.

cheena (சீனா) said...

ம்ம் மேல உள்ளதுல எதுவும் சொல்லல - இடுகையிலே உள்ளது அனைத்தும் எல்லோர்ருக்கும் தெரிந்ததே - ஆனாலும் நாம்தான் கடைப்பிடிக்க மாட்டோமே - என்ன செய்வது - என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

நல்வாழத்துகள் சர்வேசன்

SurveySan said...

சீனா,

// ஆனாலும் நாம்தான் கடைப்பிடிக்க மாட்டோமே //

கடைபிடிச்சா, பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் ;)

அன்புடன் மலிக்கா said...

ஆகா நல்ல அசத்தல்.வாழ்த்துக்கள்

நம்மபக்கமும் வந்துபார்த்துவிட்டு போங்க.

http://niroodai.blogspot.com

Ulagalavi said...

Rombba differentana Pongal wishes ..
//ஆனா, பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட, மிக மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒரு தேவை DISCIPLINE. அஃதாவது, ஒழுக்கம்!// ..
True .. en friend day tradera start panan .. apadiye slowa short term trader ..ippa long term trader .. Oru discipline illadhadhala he lost considerably ..

SurveySan said...

PFE நல்ல லாபம் ஈட்டியது.