recent posts...

Sunday, January 08, 2012

2011 சிறந்த தமிழ் படங்கள்

2010ஐப் போல் 2011ல் வந்த திரைப்படங்கள் மிளிரவில்லை என்பது என் எண்ணம்.

மைனா, நந்தலாலா, விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன் என சுவாரஸ்யமான ஆண்டாக 2010 அமைந்திருந்தது. 2011ல என்னை தியேட்டருக்குச் சென்று பார்க்க இஸ்தந்து ஒரே படம் மட்டுமே. அவையாவன, மயக்கம் என்ன.

அவன் இவன், ஏழாம் அறிவு, தெய்வத் திருமகள் எல்லாம் தியேட்டரில் பார்த்திருக்க வாய்ப்பிருந்தும், கேபிளார் மாதிரி நல்லவங்க டக்குனு எழுதும் விமர்சனங்களை பார்த்து சுதாரித்து, $10 டாலர்களை பல முறை சேமிக்க வாய்ப்பு கிட்டியிருந்தது. அவங்களுக்கு ஒரு பெரிய கும்புடு ஃபர்ஸ்ட்டு.

நாங்களும் ரவுடிதான்னு சொல்லிக்கர அளவுக்கு, நானும் ஒரு 'படத்தை' சென்ற ஆண்டில் இயக்கி முடித்திருந்ததால் (வலது மூலையில் காண்க),

இப்பெல்லாம் ஒவ்வொரு படத்தையும் ரொம்பவே ரசிச்சு ரசிச்சு பாக்க முடியுது. ஒவ்வொரு காட்சிக்காகவும் பின்னணியில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு புரியுது. ஒரு தவம் மாதிரி ஒரு முழுப்படம் எடுப்பது. ரொம்பவே மொக்கையான படமாக இருந்தாலும் கூட, அதிலும் கூட பெரிய அளவில் உழைப்பு கொட்டப்படுகிறது என்பதே உண்மை.

ரொம்ப நீட்டி முழக்காம, சொல்ல வந்ததை சொல்லிட்டு எஸ்கேப்பிடறேன்.அதாகப்பட்டது, நான் சென்ற ஆண்டில் தியேட்டரிலும்,இணையத்திலும், டிவிடியிலும் பார்த்த வரையில் என் மனதுக்கு பிடித்திருந்த படங்கள்.




டாப்பு1: மயக்கம் என்ன?
டாப்பு2: ஆடுகளம்
டாப்பு3: கோ
டாப்பு4: பயணம்
டாப்பு5: காஞ்சனா
டாப்பு6: ஏழாம் அறிவு
டாப்பு7: சிறுத்தை
டாப்பு8: தெய்வத் திருமகள்
டாப்பு9: வேலாயுதம்
டாப்பு10: மங்காத்தா

நல்ல படம் எடுங்க பாஸு. தியேட்டருக்கு வர வைங்க.

நன்றீஸ்!.

tags: மொக்கை, திரைப்படம், 2011 சிறந்த தமிழ் படங்கள் ;)

6 comments:

SurveySan said...

மங்காத்தா சுத்தமா பிடிக்கலை. ரசிக சிகாமணிகளுக்கு பயந்து லிஸ்ட்டில் ஏற்றப்பட்டுள்ளது.
அந்த இடத்தை காவலன், எடுத்துக் கொள்ளட்டும் :)

SurveySan said...

ஏதாவது நல்ல படம் மிஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க. பாத்துடறேன்.

எங்கேயும் எப்போதும் பாத்தேன். ஓகே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாகை சூடவா, மௌனகுரு

☀நான் ஆதவன்☀ said...

ஆரண்ய காண்டம் மிஸ்ஸிங்

SurveySan said...

yet to watch

வாகை சூடவா, மௌனகுரு, ஆரண்ய காண்டம்

thanks for the info :)

விழித்துக்கொள் said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/