மிஷன் இம்பாஸிபிள், பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 'நண்பன்' படத்திற்க்கு காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு
போலாம்னு போனது வீண் போகலை.
காதலுக்கு மரியாதை காலங்களில் இருந்தே விஜய் ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த விஜய் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, நண்பனில். கூடவே, நம்ம ஊரு ஸ்ரீகாந்தும், ஜீவாவும்.
இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா), அவர்களின் கல்லூரி முதல்வரும் (சத்யராஜ்), முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (சத்யன்) சேர்ந்து கலக்கும் படம் நண்பன்.
இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, நண்பன் பார்க்கும்போதும். நண்பன் நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.
கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், விஜய் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, விஜய் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.
ஜென்ட்டில்மேன் புகழ் ஷங்கரின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.
அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?
மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?
படத்துக்கு வருவோம்.
திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.
படத்தில், விஜய் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், விஜய் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் சத்யராஜ் கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.
இலியானா, பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க. ஸ்ரீகாந்த், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, சத்யன். ஸைலன்ஸர் என்ற மாணவனாக வராரு இவரு. தமிழ் படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். விஜய்'யை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை விஜய் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.
விஜய் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, இலியானாவின் அக்காவுக்கு, விஜய் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், விஜய் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. விஜயின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.
ஊட்டியில் படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.
படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.
பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.
டிஸ்கி: 2009ல் எழுதிய 3 Idiots விமர்சனததை, நடிகர்கள் பெயர் மட்டும் மாற்றி, அப்படியே எழுதியது. படமும் அச்சு அசலா அப்படியே எடுத்திருக்காரு ஷங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனா, கூட்டாம குறைக்காம, அழகா கொடுத்திருக்காரு படத்தை. இதை எடுத்ததுக்கே அவருக்கு ராஜமரியாதை கொடுக்கணும்.
விஜய்யை வைத்து எடுக்கலாம் என்று 2009லேயே நான் ஆருடம் சொன்னதை எண்ணி ரொம்பவே புல்லரிக்குது போங்க. ஷங்கருக்கே ஐடியா கொடுக்குமளவுக்கு யாம் வளர்ந்திருப்பது மெத்த மகிழிச்சியாய் இருக்கிறது. ஹீ ஹீ ஹீ. அடிக்க வராதீங்க, மீ த எஸ்கேப் ;)
ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கலாம்.

4 comments:
வெளம்பரம் பண்ணி அலுத்துப் போயிருச்சு. இருந்தாலும், பாக்காதவங்க பாருங்க.. மிலே சுர் வீடியோ, எமது இயக்கத்தில் :)
Mile Sur
//2009ல் எழுதிய 3 Idiots விமர்சனததை, நடிகர்கள் பெயர் மட்டும் மாற்றி, அப்படியே எழுதியது. //
டாப்பு. தழுவி எடுக்கப்பட்ட படத்தை இப்படி விலாவாரியா சிலாகிச்சிருக்கீங்களே என நினைத்தபடி கிர்ர்னு கீழே வந்து வாசிச்சிட்டேன்ல:)!
நல்ல விமர்சனம் ! பகிர்வுக்கு மிக்க நன்றி சார் !
சர்வே,
//மிஷன் இம்பாஸிபிள், பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 'நண்பன்' படத்திற்க்கு//
உல்டா செய்தாலும் கவனமா செய்யனும், மிஷன் இம்பாசிபிள்னு பார்த்ததும் , படம் பார்க்காமலே 3டி க்கதைய வச்சு பீலா விடுறிங்கனு ஒரு முடிவுக்கு போயிட்டேன் ஒரு சின்ன வித்தியாசம் , கொஞ்சம் மாத்தி செஞ்சுட்டிங்க :-))
Post a Comment