இணையத்தில் புழங்கும் உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான இணைய தளங்களில் ஒன்று tamilcinema.com.
ஊரை விட்டு வந்த பிறகு, சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கும், ஆரம்ப காலங்களில், குமுதம்களும், விகடன்களும், தினகரன்களும் கை கொடுத்து வந்தன.. ஆனால், சில பல வருடங்களில், குமுதமும், விகடனும், சந்தா வசூலிக்க ஆரம்பித்து எமது பொழுது போக்கில் மண்ணை வாரிப் போட்டிருந்தார்கள்.
ஓசியில் கொடுத்தால் ஃபினாயிலையும் குடிப்போம்.
ஆனா, ஒத்த ரூவா கேட்டா கூட, அமிர்தத்தையும் 'ஐயே கசக்கும்'னு ஓரம் கட்டும் வீரப் பாரம்பர்யம் நம்முளுது.
அந்த இக்கட்டான காலகட்டத்தில் tamilcinema.com தான் சகலரின் பொழுதுபோக்காக இருந்தது. google.com போறோமோ இல்லியோ, மத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு கண்ணு சொறுகி மந்தமாகும் போது, tamilcinema.com பக்கத்துக்கு போயி, கிசு கிசு படிச்சு, ப்ரேக் ரூமில் போய் அலசி ஆராஞ்சாதான் அன்னிக்கு நாள் நகந்த மாதிரி இருக்கும்.
யாரு, யாரு படத்துல நடிக்கப்போறா, யாருக்கு யாரோட லடாய், சுட சுட விமர்சனங்கள்னு பக்கங்கள் களை கட்டும்.
களை கட்டுவதோடு இல்லாமல், தளமும், கூகிள் கணக்கா, சிம்பிளா கண்ணை உறுத்தாம, அழகா இருக்கும்.
ஆணி புடுங்கர நேரத்துல கிசு கிசு படிச்சாலும், தூர நின்னு பாக்கரவனுக்கு, பசங்க ஏதோ முக்கியமான டாக்குமெண்ட்டுதான் படிக்கராங்கன்னு ஒரு பிரமையை ஏற்படுத்தும்.
அப்படி இருந்த டமில்சினிமா.கோம், சமீப காலத்தில், காணச் சகிக்கலை. கசா முசான்னு விளம்பரங்கள், பாப்-அப்பு, பாப்-சைடு, பாப்பு-டௌனுன்னு சுத்தி சுத்தி அடிக்குது அந்த பக்கத்துக்கு போனாவே.
அதுவும், சில விளம்பரங்கள் முக்கிய செய்திக்கு மேல ஒக்காந்துக்கிட்டு போறதுக்கே அடம் பிடிக்குது.
லேப்டாப்பிலேயே இப்படி அடம்புடிக்குதுன்னா, ஸ்மார்ட் ஃபோனில் சுத்தமா உபயோகிக்கவே முடியாத அளவுக்கு விளம்பரங்கள் அழிச்சாட்டியம் பண்ணுது.
இப்பெல்லாம், இணையத்தை அலசுவதற்கு, லேப்-டாப்புகளை விட,, ஸ்மார்ட் ஃபோன் தான் எல்லாரும் அதிகமா பயன் படுத்தறாங்கங்கரது, உபரித் தகவல்.
ஆர்.எஸ்.அந்தணன் அண்ணே, காசு முக்கியம் தான். ஆனால், தங்க முட்டை இடற வாத்தை, அறுத்துட்டா, வாத்து செத்துடும்ணே.
உசாரு. டமில்சினிமா.கோமை, பழைய படி, மேன்மையான, சினிமா தகவல் சுரங்கமாகவும், எளிமையானதாகவும் மாற்றும் படி, மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
-ஆணி பிடுங்குபவர் சங்கம்
நம்ம விளம்பரம் :) பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா? Mile Sur video
8 comments:
சர்வேசன் இதுக்கு போயா அந்தணனை திட்டிட்டு இருக்கீங்க.. :-) https://chrome.google.com/webstore/detail/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb இந்த Ad Block ஐ உங்க க்ரோம் ல இன்ஸ்டால் பண்ணுங்க விசயம் ஓவர் :-)
நல்லா பத்த வெக்கறீங்க கிரி :)
நான் எங்க அவர திட்டறேன். எல்லாம் ஒரு வேண்டுகோள்தான்.
க்ரோமில் பண்ணிடலாம், ஆனா ஸ்மார்ட் ஃபோனில் படுத்துது.
அதைத் தவிர, இது ஒரு பொதுநல வழக்கு, அவர் பார்வைக்கு வரட்டுமேன்னு ;)
:-)
சர்வே,
ரொம்ப தலை போற விஷயத்திற்கு தான் பொதுநல வழக்கு போட்டுக்கீறிங்க :-))
நான் தமிழ்சினிமா.காம் போனதில்லை. ஆனா நீங்க நம்ம பிராபல்ய பதிவர்கள் தளத்துக்கு எதுவும் போனதில்லை போல சடை சடையா விளம்பரம் தொங்கும். ஏதோ பாப் அப் பிளாக்கர் வச்சு சமாளிக்கிறேன். அதுக்கும் சிலர் தண்ணிக்காட்டுராங்க. பின்னூட்டப்பொட்டி பாப் அப் ஆ இருக்கும், சரி னு ,அத தொறந்தா சந்தடி சாக்குல விளம்பரமும் ஓடி வருது.பாப்-அப் பிளாக்கர்,ஆட் பிளாக்கர் எல்லாம் ஒரு அளவு தான் கை கொடுக்குது.
இதை விட தொழில்நுட்ப பிலாக்கர்னு இருப்பாங்க போய்ப்பாருங்க தோரணம் கட்டி தொங்கும் விளம்பரம் :-))
எனக்கு இப்படி ஒரு இடம் இருக்கிறதே இப்பத்தான் தெரியும். நன்றி!.
அலைபேசிதான் உயயோகிக்கிறேன்
வவ்வால், நான் படிக்கர பதிவர்களின் பக்கங்கள், என் பக்கம் மாதிரி சிம்பிளாதான் இருக்கு :)
இளா, நீங்க ஆஃபீஸ்ல உண்மையா ஒழைக்கரவர் போலருக்கு :)
நாங்கெல்லாம் பாதி நேரம் டமில்சினிமா மாதிரி தளங்களில் தான் மேயறோம்.
ஆமா...சர்வேஸ் இது இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.....:)))
Post a Comment