recent posts...

Sunday, January 29, 2012

சென்னையில் இளையராஜா

அநேகம் மேடைக் கச்சேரிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்தில் சென்னையில் அரங்கேறிய இளையராஜாவின் இசை ராஜாங்கம் போல் எதுவும் கண்டதில்லை.

source: DG's Art Gallery
நேரில் பார்க்கமுடியாவிட்டாலும், ஜெயாடிவியில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியை யூ.ட்யூபில் பலப்பல முறை பார்த்து அனுபவித்து சிலாகித்து மெய்சிலிர்த்து உடல் பூரித்து ஆனந்தத்தில் திளைத்து பிறந்த பயன் அடைந்த ஃபீலிங்கில் உறைந்து போய் கிடக்கிறேன் சில நாட்களாய்.

பள்ளிக் கல்லூரிக் காலங்களில் வாழ்வின் ஒவ்வொரு அத்யாயத்திலும் உடன் பயணித்ததாலோ என்னமோ, ராஜா பாட்டைக் கேட்டால் மனதில் எழும் ஒரு துள்ளல் வேறு பாடல்களில் கிடைப்பதில்லை.

கிட்டார் படிக்க விரும்பிய நாட்களில், 'Zen Guitar' என்று ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. கிட்டார் எப்படி வாசிப்பது என்றெல்லாம் அதில் சொல்லித் தரவில்லை. ஆனால், ஒரு கலையை கற்றுக் கொள்ள எப்படி அணுகுமுறை இருக்கவேண்டும்னு அழகா சொல்லியிருந்தாங்க அந்த புக்குல. கண்ட கிட்டாரையும் 'சீப்பா' கிடைக்குதேன்னு வாங்கக் கூடாதாம். ஓரளவுக்கு விலை  கொடுத்தாலும், சிறந்த நேர்த்தியான படைப்பாளியின் கையால் செய்யப்பட்ட தரமான கிட்டாரையே வாங்க வேண்டுமாம். ஏன்னா, அநத கிட்டாரை செய்கையில் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி அந்த உன்னதமான படைப்பாளியின் அக்கரையான உருவாக்கத்தில் உருவாகி, அந்த கிட்டாரின் உடனேயே பயணிக்குமாம். அப்பேர்பட்ட கிட்டாரை கையில் எடுத்து வாசித்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரியாம்..

ராஜாவின் ஒவ்வொரு படைப்பிலும், அவரின் இசைத் திறமையை விட இசையின் மேல் அவருக்கு இருக்கும் பற்று, பாஸிட்டிவ் எனர்ஜியை பாய்ச்சி பாய்ச்சி நம்மை இன்றளவிலும் கேட்கும்போது கிறங்க அடிக்கிறது.

ராஜாவின் சமீபத்திய மேடை நிகழ்ச்சியை பாக்காதவங்க, காலம் தாமதம் செய்யாமல், உடனே பாருங்க. ஜென்ம சாபல்யம் கிட்டும்.

இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய பலம், பாடல்களின் தேர்வு.

ரசிகனை குஷியாக்கறேன் என்ற பெயரில், 'சொர்கமே என்றாலும்..' போன்ற டான்ஸு நம்பரை நம்பாமல், ஒவ்வொரு ரசிகனும் ஏன் இன்னும் ராஜாவை தலையில் வைத்துத் தாங்குகிறான் என்ற பல்ஸை உணர்ந்த பாடல்களின் வரிசை.

ஐம்பது வயலனிஸ்ட்டுகள், அஞ்சு செலோ, ரெண்டு மூணு ட்ரம்மர்ஸ், மூணு நாலு பியானோ, ஃப்ளூட்டுடன் அருள்மொழி, கண்டக்டர் புருஷோத்தமன், டாப் க்ளாஸ் கோரஸ் பாடகர்கள், ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என மேடை வியக்க வைத்தது.
தொகுப்பாளராக ப்ரகாஷ்ராஜ்.
பார்வையாளர்கள் வரிசையில் பாலுமகேந்திரா, பால முரளி கிருஷ்ணா போன்ற மகானுபாவுலுக்கள்.

இசை நிகழ்ச்சியை பாத்து ரசிச்சு புளகாங்கிதம் அடஞ்சுக்கோங்க. கிட்டத்தட்ட நாலு மணி நேர நிகழ்ச்சி. ரெண்டு மூணு தபா பார்க்கத் தூண்டும்.

ஆணி பிடுங்குவதில் பிசியாக இருப்பவராயின், உங்களுக்காக,, சில டிட்.பிட்ஸை கீழே அடுக்கியுள்ளேன். கண்டிப்பாய் காண்க.

- ஆரம்ப ஜனனி ஜனனி
- அம்மா பாட்டுடன் யேசுதாஸ் துவங்கினாலும், SPBயின் அம்மா பாட்டு டாப்பு.
- புத்தம் புதுக் காலையின் இசைக் கோர்வையை கேளுங்கள்
- பருவமே பாடல் பிறந்த கதையும் பாடலும்
-  Zupertனு ஏதோ ஒரு பெருந்தகையின் சிம்ஃபொனி இசையை வாசித்து அதன் தாக்கம் 'இதயம் போகுதே' பாடலில் வந்த கதை
- ஏதோ மோகம் ஏதோ தாகம், இசைக் கோர்வை
- பூங்கதவே தாழ்திறவாய் வயலின் பிட்டு
- எளங்காத்து வீசுதேயில் அருள்மொழியின் ஃப்ளூட்டு
- பூவே செம்பூவே இசை
- நான் தேடும் செவ்வந்தைப் பூவிது
- யேசுதாஸ், SPB medley
- evergreen இளமை இதோ இதோ

ராஜா, எப்பவும் அவரு ராஜா!

Scintillating show! Salute!




12 comments:

கோபிநாத் said...

ரொம்ப நளைக்கு அப்புறம் இசை தெய்வத்தோட பெயரை பதிவுல பார்த்தவுடனே ஆகா என்ன ஆச்சுன்னு ஓடிவந்தேன் ;-)

எல்லாம் சுபம் ;-))

நேரில் ஆசிர்வதிக்கப்பட்டவன் ;-)

http://gopinath-walker.blogspot.com/2012/01/blog-post.html

pudugaithendral said...

நான் டீவியிலே பார்த்து ரசித்தேன்.

உயிரிலே கலந்தது.... பாட்டு ரொம்ப நாளைக்கப்புறம் அன்னைக்குத்தான் கேட்டேன்.

pudugaithendral said...

சாரி விழியிலேயே மலர்ந்தது உயிரிலே கலந்தது பாட்டு

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நானும் பார்த்தேன்.. இணையில்லாத ஷோ..!

Unknown said...

அருமையான முழு நிகழ்வையும் பதிவு செய்து பகிர்ந்ததற்கு நன்றி பல!

SurveySan said...

Thanks Gopinath. just read your post. amazing details :)
thankssssssssssssssssss! :)

SurveySan said...

Pudhugaith Thendral,

thank you. vizhiyile kalandhadhu SPB kuralil amakkalamaa irundhadhu.

SurveySan said...

Ananthi, nanri.

unknown, nanri.

பிரசன்னா கண்ணன் said...

அருமை.. இசைஞானியை உள்ளார்ந்து ஆத்மார்த்தமாக ரசித்ததிருக்கின்றீர்கள்..
நானும் இந்த நிகழ்வை பற்றிய என் அனுபவங்களை எழுதியிருந்தேன்.. நேரமிருந்தால் படித்து பார்க்கவும்..

தனிமரம் said...

நல்ல ஒரு இசை விருந்தை நேரில் பார்த்திருப்பீங்க அருமையான விடயத்தை பதிவாக இட்டதற்கு நன்றி நண்பரே.
ராஜா எப்போதும் தாலாட்டும் ராகதேவன்.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா காலத்திற்கும் ஏற்ற பாடல்கள் ! எப்போது கேட்டாலும் நன்றாக இருக்கும் ! பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

கைப்புள்ள said...

Arumaiyaana Post. Padikka padikka orey pullarippu dhaan ponga.

Neenga sollirukkara andha composer peru "Schuberth". Idhai paarunga...

http://en.wikipedia.org/wiki/Ludwig_Schuberth_(composer)